Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Morpheus 4

Advertisement

Meenaloshini

Tamil Novel Writer
The Writers Crew
டாக்டர் நரசிம்ஹா எம். பி.பி.எஸ்,எம்.டி., ஹெட் ஆப் தி டிபார்ட்மென்ட் ஜெனரல் மெடிசின் என்ற பதாகை ஏந்திய கதவின் முன்புறம் நின்றிருந்தாள் ரோஹினி.இதயம் தடதடவென அடித்துக் கொண்டது.



சற்று நேரத்திற்கு முன்பு …

ஒரு வழியாய் ஒத்தையா ரெட்டையா போட்டுக் கொண்டிருந்தவள் புத்தகத்தை படிக்க தொடங்கினாள்…(வேறு எங்கே வகுப்பு நடந்து கொண்டிருந்த போதுதான் .இது தினசரி நடக்கும் ஒன்று தான்) முதல் முப்பது பக்கங்கள் வெறும் கோட்பாடுகள் ஏதோ இவள் முதலாம் ஆண்டு புத்தகத்தை படித்தது போல இருந்தது.



ப்ருயெட் தியரி : அடிமனதில் தேக்கி வைத்த எண்ணங்கள்,சிறு வயதின்

ஏக்கங்கள்,புதைத்து வைத்த பயங்கள் இவற்றின் பிரதிபலிப்பபே கனவுகள் மற்றபடி அவை எதிர்காலத்தை எந்த வகையிலும் காட்ட வல்லவையல்ல



அரிஸ்டாடில் தியரி:உடலி்ன் வேதியல் மாற்றங்களின் அணிவரிசைதான் கனவுகள் ,நமக்கு வரும் கனவுகளை வைத்து நம் உடற்பிணியை அறியலாமே அன்றி எதிர்காலத்தை அறிதல் சாத்தியபடாது .



இவற்றை தான் விளக்கோவிளக்கென விளக்கியிருந்தனர்.

அந்த முப்பது பக்கங்கள் அப்படி ஒரு வறட்சி ஏதோ சயன்ஸ் புக்கோ தப்பா வாங்கிட்டமோ என்று தோன்றியது .அந்த அறிவியல் ஆங்கில நடையை தட்டி தடுமாறி வாசித்து முடித்து 31வது பக்கம் திருப்புகையில் வறண்ட பாலையில் சாரல் போல மென்மையாய் வருடியது அந்த தமிழ் எழுத்துக்கள்.ஆனால் அச்சடிக்கப் படவில்லை கையெழுத்திலேயே இருந்தது இப்போது தான் ஒன்றை கவனித்தாள் எல்லா புத்தகங்களில் இருப்பது போல் பதிப்பக தகவல்,நன்றியுரை,ஏன் ஆசிரியர் பெயர் கூட இல்லை.புத்தகத்தை திருப்பிப் பார்த்தாள் ஏதோ வினோதமாக இருந்தது .ஒரு குழப்ப முடிச்சுடனே 31வது பக்கத்திற்கே மீண்டும் வந்தாள்



−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

31





நேரம்:10:26p.m

நாள்:09-01-2019



நம்ம எல்லாருக்குமே கனவு வரும்,எனக்கும் வந்தது ஆனா எல்லாரையும் மாதிரி என்னால கடந்து போகத்தான் முடியாது.ரொம்ப அபூர்வமாதான் எனக்கு கனவுவரும் ஆனா வரும்போது என் தூக்கத்தை கெடுத்திடும்.எதார்த்தமானதுதான்னு வரையருக்க முடியாத அளவு அதிகமான இழப்பை குடுத்த கனவுகள்.





கனவைப்பத்தின என் கேள்வியின் அறிவியல் ரீதியான பதில்தான் முதல் முப்பது பக்கங்கள் ஆனால் ஹிந்து,கிறிஸ்தவ,இஸ்லாமிய,சீக்கிய புராணங்களின் படி கனவுகள் கடவுளின் செய்திகளாக பார்க்கப்படுகிறது ,எடுத்துக்காட்டுகள் பல இருந்தும் சான்றுதான் எதுவும் இல்லை.இப்படியாக பலவாறு என் தேடல் நீண்டு கொண்டிருந்த போது என் கண்ணில் பட்டவன் தான் −−"மார்பியஸ்"



கிரேக்க வரலாற்றின் கனவின் கடவுள்.கம்பீரமானவன்,தலையில் கொம்புடன்,பரந்து விரிந்த சிறகுடன் காட்சியளிப்பான்.அவனைப்பற்றி படித்த அந்த நொடி முதல் அவன் கண்களைதான் பார்க்க வேண்டும் போல இருந்தது ஆனால் அந்த பாக்கியம் கிட்டவேயில்லை.கிரேக்க புராண வரைபடங்கள்,புத்தகங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்தாயிற்று ….பயனில்லை



கடவுள் நமக்கு செய்யவிருக்கும் வினைகளை மார்பியஸ் இரகசியமாய் கனவில் சொல்லிச் செல்வானாம்.இஜிப்டியர்கள் பிரம்மிட்டின் கீழ் கோவில் கட்டி கனவுபடுக்கை என்ற மஞ்சம் அமைத்து இவனை வேண்டி உறங்கினால் நமக்கு சொல்ல விரும்பும் செய்தியை சொல்லி செல்வான் என நம்பினர்.கனவின் உட்பத்தியாளன்,எந்த மனித உருவையும் எடுக்க வல்லவன்,ஹிப்னோஸ் பசீத்தியே காதல் தம்பதியரின் புதல்வன்.



-------------------32------------------------------------






கனவினை தேடிச்சென்ற என் தேடல்கள் திசை மாற்றி அவன் திசை செல்லலாயிற்று .கண்ணன் மேல் காதல் கொண்ட கன்னிகையரின் கதை கேட்கும் போதெல்லாம் இவையெல்லாம் சாத்தியமா?வெறும் கற்பனைகதைகள் என்றுதான் நினைத்தாள்.அவள் மார்பியஸ் மேல் காதல் கொள்ளும் வரை…

நான் மிளிரொளி..என் உலகம் மிகவும் சிறியது நான்,என் தாத்தா,எங்கள் பூந்தோட்டம் ,எங்கள் ஊர் நூலகம் என் தாத்தா ஒரு ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் அந்த நூலகம் அவர் வாழ்நாள் கனவு தமிழ்,ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் இலக்கியம்,அறிவியல்,பொருளாதாரம்,கணினியியல் இப்போது மார்பியஸ் புண்ணியத்தில் இந்த வரிசையில் கிரேக்க சரித்திரங்களும் சேர்ந்துவிட்டது .பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மேல் கல்லூரிக்கு போக பிடிக்காமல் தாத்தா உடன் உதவிக்கு இருந்துவிட்டேன்.தாத்தா தோட்டத்தையும் ,நான் நூலகத்தையும் பொறுப்பெடுத்துக் கொண்டோம் .அந்த பொல்லாத ஆறு வயது முதல் எனக்கு தாயுமானவர் என் தாத்தா .எத்தகைய கொடிய நாள் அது.இன்னும் கூட நினைவில் உள்ளது



ஆறு வயதாய் இருக்கும் போது ஒரு நாள் என் பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென காற்று வேகமாய் அடிக்கத் தொடங்கியது.தூசி கண்ணில்பட என் கையிலிருந்த பொம்மை கைநழுவி கீழே விழுந்தது.கண்ணில் தூசி உருத்த ஒரு கண்ணை கசக்கிக் கொண்டே பொம்மை புறம் போக, காற்றில் அது உருண்டு கொண்டே போனது .நான் விளையாடிக் கொண்டிருந்த பாறையின் ஓரத்தை நெருங்கி விட பொம்மை கீழே விழுந்துவிட்டது .என் பொம்மை கீழே தனியாய் இருப்பதை பார்த்த நான் அதை நோக்கி கைநீட்ட என் கால் பாறை முனையிலிருந்து சரியலாயிற்று.என் பொம்மையை நெருங்கிக் கொண்டே செல்ல……...



தட் என தலையில் பலமாய் ஏதோ பட "ஸ்ஆஆ"என கத்தி நிமிர்ந்து பார்த்தாள்.நரசிம்ஹா சார்தான் சாக்பீஸை எரிந்திருந்தார் ."அய்யோ மன்சு சிங்கம் வேற கர்ஜிக்க ஆரம்பிச்சிடுமே" .என இவள் அவளுக்குள்ளே பேசிக்கொள்ள பயத்தில் தானாக எழுந்துவிட்டாள்."கடைசியா நான் என்ன சொன்னேன்னு எக்ஸ்ப்ளெய்ன் பண்றிங்களா மிஸ்.ரோஹினி"என அவர் கேட்க இவள் எங்கே கவனித்தாள் பின்னே இருந்த கரும்பலகை பார்க்க "நீரிழிவு நோய்"என எழுதியிருக்க அதையே சொல்ல."ஓ நீங்க ரொம்ப ஸ்மார்ட் இல்லையா ,சரி முற்றிய நீரிழிவு நோயாளியின் தோற்றம் எப்படி இருக்கும் சொல்லுங்க".."சார்.. அது வந்து...கால் வீக்கம் அதிகமா .கண்ணுக்கு கீழ வீங்கி ...அப்றம்.." என விழிக்க "க்ளாஸ் முடிஞ்சதும் என் ரூம் வந்து பாருங்க இப்போ உட்காருங்க"என சொல்ல அப்போது ஆரம்பித்த படபடப்பு .



கதவைத்தட்டி உள்ளே செல்ல இவளைப் பார்த்ததும் பொரித்தெடுத்து விட்டார் ,"மருத்துவம் அவ்ளொ ஈஸியா போச்சா,உயிரோட வேல்யு தெரியுமா,இது விளையாட்டா படிக்ற பாடம் இல்ல ஒரு அற்பணிப்பு வேணும்,இல்லனா எதுக்கு காலேஜ் வரிங்க,இந்த மாசம் முழுக்க உங்களுக்கு சண்டே லீவ் கிடையாது.சனி கிழமை சாயங்காலத்துல இருந்து ஞாயிறு மதியம் வரை வார்ட்ல போய் ட்யூட்டி பார்க்கனும் தவறுனா அந்த வாரம் முழுக்க அட்டன்ட்டன்ஸ் கிடையாது,இப்போ போங்க "என்றார் சிங்கம் .அவள் மேல் தவறிருப்பது ரோஹினிக்கு புரிந்தது அவர் சொன்ன அனைத்தும் சத்தியம் தான் என தோன்ற.'சாரி சார்' என சொல்லி விடை பெற்று திரும்பினாள்.சுவற்றில்





"வாழ்வில் எதுவுமே எதார்த்தமாய் நடப்பதில்லை ,காரணமின்றி அணுவும் அசையாது"என்ற வாசகம் ஏந்திய படம் இருந்தது .



"nothing in life is an accident.every atom has its aftermath"
 
(y)இந்த மாதிரி ஸ்டெயிலில் படித்து ரொம்ப நாள் ஆகுது சில எழுத்தாளரை நியாபகப்படுத்துகிறது படித்து கொண்டே போக எண்ணம் எழுகிறது interesting waiting
 
(y)இந்த மாதிரி ஸ்டெயிலில் படித்து ரொம்ப நாள் ஆகுது சில எழுத்தாளரை நியாபகப்படுத்துகிறது படித்து கொண்டே போக எண்ணம் எழுகிறது interesting waiting
Thanks poovizhii
 
Top