Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Morpheus 2

Advertisement

Meenaloshini

Tamil Novel Writer
The Writers Crew
அறையில் அமர்ந்த ரோஹினி முகத்தில் என்னவென்று பிரிக்க முடியாத ஒரு உணர்ச்சி.



இன்று கல்லூரிக்கு கிளம்பி, போகும் வழியிலே ஒரு அங்கிளை பார்த்து.அவரிடம் ஏதோ பெரிதாய் தன் அறிவாற்றலை நிரூபிக்கிறேன் பேர்வழி என்று பாதியிலேயே இறங்கி.ஏதோ புத்தகத்தை பார்த்து...அதற்கு ஒரு பி.ஜி.எம். எபக்ட் வேற போட்டு...எப்பா …



இவையெல்லாம் காலை 9 மணி முதல் இதோ 11:30 தான் ஆகிறது.வெறும் 2:30 மணி நேரத்தில் நடந்த கூத்து இது.நினைக்க நினைக்க "என்னடி நீ"என்று இருந்தது."அவர் என்ன உனக்கு அறிவில்லன்னு நினைக்கிறது,நானே சொல்றேன் அரை ஸ்பூன் அறிவிருந்தா கூட இப்டி க்ளாஸ் கட் அடிச்சி,எல்லா முக்கியமான வேலைய விட்டுட்டு,புக் வாங்க போவயா?சரி அதை வாங்கினயே பிரிச்சாச்சும் பார்த்தயா?"என அவள் மைன்ட் வாய்ஸ் வசைபாடி கொண்டிருந்தது.



உண்மையில் அதனை திறக்க துணிவில்லை.ஒரு ஆண்டு முழுவதும் கஷ்டப்பட்டு ஆற்றிய காயத்தை,அது கீறி விட்டுவிடுமோ என்று பயம்.அந்த வல்லமை அதற்கு இருக்கும் என தான் தோன்றியது.அவளே பார்த்தாளே இரண்டு வரி படிப்பதற்குள் ,அவள் மறந்தவற்றை….. ஊகும்... மறந்ததாய் நினைத்த வற்றை,ஒரு ஒளிவில்லைக்காட்சி(slideshow) போல் படமாய் காட்டி விட்டது.



இந்த அனைத்தையும் மனதில் ஓடிக்கொண்டிருந்தாலும் ஒரு ஈர்ப்பு விசைபால் அவள் ஈர்க்கப்பட்டாள்,மெதுவாக அந்த அட்டைப்படத்தை தொட்டுப்பார்த்தாள்,இரண்டு தோள்ப்பட்டைகளிலிருந்த கம்பீரமான சிறகுகள்,மிகவும் பிரம்மாண்டமாக,பின்னனியில் இருள் இருக்க,இமைகளை மூடியபடி,இதோ அந்த இதழ்களின் ஓரத்து சிரிப்பு



ஓர் ஆண்வடிவமா இத்தனை வசிகரம் ஏந்தி நிற்கிறது.அந்த படத்தைப் பார்க்க பார்க்க ரோஹினி துகள்களாய் கரைந்து அதனை நோக்கி பாய்வது போல் தோன்றியது..சிறுவயதில் படித்த பைடு பைப்பர் கதை நினைவிற்கு வந்தது.இந்த மயக்கத்தை எதிர்க்க மனமின்றி,அந்த படத்தினையே பார்த்து அமர்ந்தாள்



நானும் இங்குதான் இருக்கிறேன் என நினைவூட்டியது அவள் அலைபேசி.



.−−காதலா காதலை காதலால் சொல்லடா….மௌனமாய் கொல்வது நியாயமல்ல டா..−−−−

அதைக் கேட்டவுடன் முதலில் தோன்றியது மொத இந்த லவ்ரிவ் டோன் வைக்கிறத மாத்துனும் என்று தான். ஜோஸ்னா தான் அழைத்திருந்தாள் ,ஜோஸ்னா,ஹனிஷா என ரோஹினிக்கு இரு தோழிகள்...ஹாஸ்டல் சாப்பாடு சரியில்லை,அது இது என ஏகப்பட்ட காரணம் சொல்லி மூவரும் அப்பார்ட்மென்ட்டில் தங்கியுள்ளனர்.அவர்களுக்கு காலை சிறப்பு வகுப்பு என சீக்கிமே சென்றிருந்தனர்.

"சொல்லுடி"

"எங்கடி இருக்க"

"வீட்டுலதான்...இன்னக்கி காலையில காலேஜ்க்கு வந்திட்டு இருந்தனா அப்போ..." என அனைத்தையும் கூறி முடித்தாள்

"லூசாடி நீ.. இன்னக்கி மதியம் ஹெட்ச்.ஓ.டி. க்ளாஸ் மிஸ் பன்னா என்னாகும் தெரியும்ல இப்போ கிளம்பினா கூட வரலாம் வந்து சேரு "என வைத்து விட்டாள்.நேரத்தை பார்க்க மணி 12.20தான் ஆனது 2மணிக்கு தான் வகுப்பு தன் கைப்பையை எடுத்து கொண்டு புறப்பட்டாள்.ஒரு நிமிடம் யோசித்து புத்தகத்தையும் எடுத்து கொண்டே புறப்பட்டாள்.

"அதான பாத்தேன் எவ்வளவு அவசரத்துலயும் இத மறந்துராத" என மன்சு குட்டி கூற .அதாங்க மனசாட்சி. ரோஹினி அதற்கு வைத்த செல்லப் பெயர். அவள் தங்கியிருந்த அபார்ட்மெட்டிற்கு என்று தனியே கேப் வசதி இருந்தது.அதன் ஓட்டுனரை அழைத்து விவரம் சொல்லிக்கொண்டே கீழே சென்றாள்.பத்து நிமிட காத்திருப்பின் பின் கேப் வந்தது.ஓட்டுனரிடம் புன்னகை புரிந்த படியே ஏறி உக்கார்ந்தாள் வண்டி புறப்பட வில்லை.என்ன என்று பார்க்க.

"பாப்பா..அது இப்போதான் அப்பார்ட்மென்ட் செக்ரட்ரி பேசினாரு இன்னொரு சார பிக்அப் பண்ணனும் அர்ஜன்ட்னு இன்னக்கி மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி வேற கேப்ல போறயா "என கேட்க

"ண்ணா என்ன ணா நீங்க இத முன்னமே சொல்ல வேண்டியது தான ..இப்போ பாருங்க இப்பவே லேட் ஆய்டுச்சு.இனி எப்போ நான் புக் பண்ணி ,எப்போ வண்டி வந்து,நான் போக,முக்கியமான க்ளாஸ் ணா" என பேசிக் கொண்டிருக்கும் போதே சன்னல் கதவு தட்டப்பட்டது.



திரும்பிப் பார்க்க கையில் லேப்டாப் உடன் ஒரு ஜென்டில்மேன் லுக்குடன் ஒரு ஆண் இவருதானா அந்த மோர்ர்ர்ரு..சரியான தீவட்டி தடியன் என்று முனகிக் கொண்டே கீழே இறங்கினாள்.இவளை கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் உடனே ஏறி அமர்ந்து கொண்டான்.

அவனை முறைத்து பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள்.டிரைவர் இவளைதான் பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருந்தார்.அவரும் தான் என்ன செய்வார் செக்ரட்ரி சொல்லி அதை செய்யாவிட்டால் இவர் பாடு திண்டாட்டம் தான் அது ரோஹினிக்கும் புரியதான் செய்தது ஒரு இயலாமையில் நின்று கொண்டிருந்தாள்.

மூக்கு விடைத்து,கண்கள் எரிவதுபோல் தோன்றியது"ஐயையோ அழுக வர சிம்டம்ஸ் தெரியுதே..ரோஹி கெத்து..கெத்து.."என திரும்பி நடக்கத் துவங்கினாள்
 
Superb epi meena . Attai padame vaseekramai irukka. Hod class attend panna poituvala . Manasatchi ku chella peyar nalla irukku
 
Top