Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Morpheus 1

Advertisement

Meenaloshini

Tamil Novel Writer
The Writers Crew
Morpheus

பங்களூர் பயபனஹள்ளி மெட்ரோ நிலையம் வார நாளின் வழக்கமான பரபரப்புடன் காணப்பட்டது.அந்த பரபரப்பு தொற்றியபடியயே வேகநடையுடன் வந்து கொண்டிருந்தாள் ரோஹினி.ரோஹினி கிருஷ்ணன் மதுரை அருகே ஒரு சிற்றூரைச்சேர்ந்தவள்.இப்போது பெங்களுரின் புகழ் பெற்ற ஒரு மருத்துவக்கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவி.

நீண்ட வரிசையின் நீளத்தை சபித்து சலிப்போடு நின்று டிக்கட் வாங்கி ,எக்ஸ்கலேட்டர் வழியே கீழே செல்லும் போதே ரயில் வந்து விட்டிருந்தது.அவசரமாய் ஒரு படி விட்டு விட்டு தாவி ஓட்டமும் நடையுமாய் ரயில்கதவுக்கு அருகே செல்வதற்குள் கதவு மூடப்பட்டு விட்டது.

அவ்வளவு தான் அடக்கி வைத்த மொத்த ஆத்திரமும் ஒரு சேர வெளி வந்தது .காலினை தரையில் உதைத்து "ச்சே என் நேரமே சரியில்ல" என 100வது முறையாக தன் விதியை நொந்துகொண்டாள் .

இது ரோஹினியின் தன்மை அல்ல.அவளுக்கு அனைத்துமே "எல்லாம் நன்மைக்கே" தியரி தான்.வில்லன்களும் கெட்டவர்களும் திரைப்படத்திலும் கதைகளிலும் மட்டுமே என நினைத்தாள்.அனைத்தும் அந்த காதல் தோல்வி நேரும் வரைதான். அதன்பின் எல்லோரும் தீயவராகிப்போயினர்.எங்கும் குறைகளே யாவும் குறைகளே..

எப்போதும் படிப்பது பிடிக்கும் தான்,இப்போது அவை போதை ஆகின.புத்தகத்தை படித்துக்கொண்டே உறங்குவதும் அதைத் தேடிக்கொண்டே எழுவதும் வழமை ஆகின புத்தகம் அதிகம் படிப்பதனால் மனிதர்களை அதிகம் கற்றதாய் ஒரு தோற்றம்,ஒரு பிரம்மை.சரியாகச் சொன்னால் ஒரு கர்வம்

சுற்றி தன் பார்வையை ஓட்டினாள்.ரயில் வருவதற்கு இன்னும் 7 நிமிடம் இருந்தது.ஆங்காங்கே ஆட்கள் இருந்தனர்.சற்று தூரத்தில் தன் 50 களின் இறுதியில் ஒரு மதிக்கத்தகு மனிதர் இருந்தார்.சற்று வெளிரிய பேண்ட் சர்ட்,கையில் வெறும் கறுப்புக் கயிறு,துணியால் ஆன பை,என்னைக் கொஞ்சம் மாற்றக்கூடாதா என இரைஞ்சும் காலணிகள்.இவையெல்லாம் அவருக்கு ஏதோ அறியாமையின் சாயல் தருவதுபோல் தோற்றம்.இவள் வெகு நேரமாய் பார்ப்பதை உணர்ந்து அவர் சிநேகமாய் புன்னகைத்தார்.அவா் புன்னகை அவளையும் தொற்றியது..சரியாய் அடுத்த ரயில் வரவே வேகமாய் விரைந்தனர்.அருகருகே தான் அமர்ந்தனர்.எப்போதும் போல கைப்பையிலிருந்து ."ஆல்சிமிஸ்ட்"என்ற புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தாள். ஏதோ உந்துதல் தோன்ற திரும்பிப் பார்த்தாள்.அவர் புத்தகத்தை பார்ப்பதை உணர்ந்து

"இது ஃபாலோ கொய்லோன்னு ஒரு இங்கிலிஷ் ரைட்டர் எழுதின புக்"என்று அவள் முடிப்பதற்குள்

"ம்ம் ஆமா ஆல்சிமிஸ்ட் ஒரு ஆடு மேய்க்ற பையன பத்தின கதை.பிரம்மிடுக்கு கீழ புதையல தேடுவானே அது தானே.ரொம்ப நல்ல புக் ,இல்லையா?



ரோஹினியின் கர்வத்தில் முதல் விரிசல் விழுந்தது .நிச்சயமாக இதனை எதிர்பார்க்க வில்லை.அதுவும் அதில் இருக்கும் ஆங்கில நடை இவளுக்கே சற்று கடினம் தான்.அவளின் கண்கள் அப்பட்டமாய் அதிர்ச்சியைக் காட்டின

"என்னம்மா இவருக்கு இவ்வளவு தெரியுதேன்னு ஆச்சரியமா இருக்கா?"

"இல்ல..இல்ல..அப்டீ இல்ல "உண்மையில் சிறு அவமான கன்றல் தோன்றியது தான் ஆனாலும் ஊண்மையை ஒத்துக்கொள்ள மனமின்றி "நான் நிறைய புக் படிப்ப வேகமா எல்லாரையும் கணிச்சிடுவேன்.உங்க விசயத்துல மட்டும்..கொஞ்சம்.."என அசடு வழிந்தாள்..

"படிக்கிற பழக்கம் ஒருத்தர கணிக்க சொல்லிக் கொடுத்ததா கேள்விப்பட்டதில்லை,யாரையும் கணிக்க கூடாது அவங்க வாழ்கை அவங்களோட ங்கிற எண்ணத்த தான் குடுக்கும்னு கேள்வி பட்டிருக்கேன்" என சொல்லிச் சிரித்தார்.

கிலுக் என அவள் கர்வம் உடைந்த ஒலி அவளுக்கே கேட்டது.ஏனோ அவர் சொன்ன ஒற்றை பதிலில் அவளுள் பல கேள்விகள் எழுந்தது.

"நீங்க என்ன பண்றீங்க" என சட்டென கேட்டாள்.

"நான் எம்.ஜி.ரோடுல புக் ஸாப் வச்சிருக்கேன்..பி.ஏ.தமிழ் படிச்சிருக்கேன்" என சேர்த்துச் சொன்னார்.

அடுத்த நிறுத்தம் எம்.ஜி.ரோடு என அறிவிப்பு வந்தது …

இவரிடம் தன் அறிவாற்றலை காட்டியே ஆகவேண்டும் போன்ற உந்துதல்.."நான் கூட புக் வாங்கதான் போய்ட்டு இருந்தேன்.உங்க கடையை ட்ரை பன்றேனே"என சொன்னாள்

ஒரு சன்ன சிரிப்புடன் தலை அசைத்தார்.

எம்.ஜி.ரோடு மெட்ரோற்கு மிக அருகிலேயே இருந்தது அந்த கடை.கடையின் தோற்றம் சற்று ஏமாற்றம்தான்.மிகவும் பெரிதாக எதிர்பார்க்க வில்லை என்றாலும் இவ்வளவு சிரிதாய் எதிர்பார்க்க வில்லை.

அதிக பட்சம் ஒரு பத்து முதல் பதினைந்து அடி இருக்கக் கூடும் என தோன்றியது.

"மூனு தளம் இருக்கு மா,பார்த்து சரியானதா செலக்ட் பண்ணு"என குரல் கொடுத்தார்.

மூனு தளமா?.என சுற்றிப் பார்த்தாள்.கொஞ்சம் உட்புறமாய் பார்த்தபோது ஒரு இரும்பு படி தெரிந்தது.

"ஓ" என மட்டும் சொல்லி படியை நோக்கி நகர்ந்தாள்

"டோண்ட் ஜட்ஜ் எ புக் பை இட்ஸ் கவர்"என்று சேர்த்து சொல்லவும்

டக்கென திரும்பி அவர் முகத்தை ஆராய முற்பட்டாள் "புக்கையா சொன்னீங்க என்பது போல்" .ஒன்றும் தெரியவில்லை அதே சன்ன சிரிப்பு மட்டுமே ..

"தெய்வீக சிரிப்பையா உமது"என கவுன்ட்டர் சொல்லலாமா என்று கூட தோன்றியது."எதுக்கு வம்பு ..சும்மாவே ரொம்ப டேமேஜ் பன்றார்.வேகமா புக் எடுத்து ஓடிருவோம் என்று தோன்றியது."

" ஹி..ஹி.." என மீண்டும் அசடு வழிந்து படியேறி சென்றுவிட்டாள்.அதன்பின் இவர் ஏற்கனவே அங்கே புத்தகத்தின் அட்டைகளில் எண்குறியீடு செய்து கொண்டிருந்த உதவியாளரிடம் பேசலானார்"

மேலே வந்த ரோஹினி அங்கு புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்ட பாங்கினை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்.சிலவற்றை அலமாரிகளிலும் ஒரு சிலவற்றை தரையிலேயே அவள் இடைவரை அடுக்கிவைத்திருந்தன.

அங்கே சுவற்றில் பெரிதாக





"""புத்தகங்களை நாம் தேர்வு செய்வதில்லை..புத்தகங்கள்தான் நம்மை தேர்வு செய்கின்றன""



என ஆங்கிலத்தில் எழுதி இருந்தது.அலமாரியில் உள்ள புத்தகங்களை அளந்த படியே வந்த அவள் விரல்கள் அப்படியே நின்றது.அவள் கையில் அணிந்திருந்த அலங்கார பிரேஸ்லெட்டின் மணி ஒன்று அங்கேயே சிக்கிக்கொண்டது.ஏதோ சுவாரசியம் உந்த அது சிக்கிய புத்தகத்தை எடுத்துப் பார்த்தாள்.அந்த புத்தகத்தி்ன் அட்டைப் படம் அவளை வெகுவாய் ஈர்த்தது"மார்ப்பியஸ்−கனவுகளின் கடவுள்"என்ற தலைப்பின் கீழ் தேவதையா ராட்சசனா என கனிக்க முடியாத உருவம்.கம்பீரமான இரக்கையுடன் தலையில் கொம்புடன் விவரிக்க முடியா ஓவியம்.நிச்சயம் ஈர்க்கக்கூடியது

புத்தகத்தை புரட்டிப் பார்த்தாள்..ஒரு முப்பது பக்கங்களுக்கு மேல் அனைத்தும் தமிழில் எழுதப்பட்டிருந்தது.தலைப்பை படித்து ஏதோ கிரேக்க வரலாறு பற்றிய கதையோ என தான் நினைத்தாள்.தமிழை எதிர்ப்பார்க்க வில்லை.தோராயமாக ஒரு பக்கத்தினை பிரித்தாள் அதில் எழுதப்பட்ட வரிகள்





"அடர் கருப்பில் ,பார்த்ததும் சில்லிட வைக்கும் தோற்றத்துடன் எலிகள் அவை என்னை கடித்தது போன்ற கனவு..அந்த கனவு வந்த 10வதுநாள் அவர் என்னை விட்டு பிரிந்து விட்டார் நிரந்தரமாக" அதற்கு மேல் ரோஹினி படிக்கவில்லை.சுவாசிக்க கூட மறந்து உரைந்து நின்றாள்."எலிகள்"அதே கனவு.இந்த புத்தகத்திற்கும் இவளுக்கும் ஏதோ ஒற்றுமை இருந்தது போல் தோன்றியது.கால்களிலும் கைகளிலும் ரோமம் மயிர்க்கூச்செழுந்திருந்தது…..கையில் மெலிதான நடுக்கம் கூட ….



யோசிக்கவேயில்லை சட்டென புத்தகத்துடன் கீழே இறங்கிச் சென்றாள்.

"நான் இந்த புக் வாங்கிறேன்"என்று அந்த ரயில் அங்கிளிடம் நீட்டினாள்.



"இங்க இருக்க எந்த புக்கும் விற்கிறதுக்கு இல்ல மா..சந்தா கட்டி எடுத்து படிச்சிக்கலாம்..ஒரு மாதத்துக்குள்ள திருப்பி குடுத்திடனும்.."என சொன்னார்



சரியென சொல்லி உடனே சந்தா பணம் கட்டி..பதிவேட்டில் கையெப்பம் இட்டு நிமிர்ந்து பார்க்க எதிரில் இருக்கும் சுவற்றில்



"சில புத்தகங்கள் வாழ்க்கையை புரட்டிப்போட வல்லவை"என எழுதியிருந்தது.



தன்னை மீறி பார்வை மேசை மேலிருந்த புத்தகத்தை பார்த்தது.அதில் இருந்த அட்டைப்படம் .இவளைப் பார்த்து சிரித்தது போல் ஒரு பிரம்மை



தொடர்வோம்
 
உங்களுடைய "மார்ப்பியஸ் -
கனவுகளின் கடவுள்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், கிரிஷி
@ மீனலோஷினி டியர்
 
Last edited:
இந்த ஸ்டோரியில் கொஞ்சம்
என்னைப் பார்ப்பது போலவே
இருக்கு
எனக்கும் நிறைய கதைகள்
படித்து கொஞ்சம் கர்வம்
வந்துவிட்டது போல தோணுது,
மீனலோஷினி டியர்
 
Last edited:
Top