Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mezhugup Poovae 5

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் – 5

அன்பரசியின் பக்கத்தில் வந்து உட்கார்ந்த வினோத்திற்கு, எப்படி அவளிடம் பேச்சை ஆரம்பிப்பது என்று ஒரு நிமிடம் யோசித்துபடி நின்றான். இவன் அருகில் இருப்பது கூட தெரியாமல் எங்கேயோ வெறித்துப் பார்த்தப்படி, சோபாவில் படுத்துக் கொண்டிருந்தாள்.

அவள் தலையில் வினோத் கை வைக்கவும் தான், அவன் வந்ததை உணர்ந்தாள். பார்த்ததும் கை தானாக கண்களை துடைத்தது! வாய் தானாக எப்போதும் கேட்கும் கேள்வியை கேட்டது…

“பசிக்குதாடா? எதாவது சாப்பிடுறியா?” கேட்டவளோ அவள் முகத்தினையே பார்க்க, அவனோ கைகளை கட்டி இவளையே கண்களுக்குள் ஊடுறுவிக் கொண்டிருந்தான். அவன் பதில் கூறப் போவதில்லை, என்று புரிந்தார் போல், சமையல் அறைக்குள் புகுந்தாள் அன்பு.

அம்மாவின் திதி நெருங்க நெருங்க, அவரின் நினைவுகள் அதிகமாவதால், அவள் இப்படி சோர்ந்து போவது நடப்பது தான். ஆனால், இன்று அழுவதை பார்த்தால், வேறு எதோ நடந்திருக்கிறது என ஊகித்தான் அந்த நண்பன்.

குட்டிப் போட்ட பூனை போல், பின்னாலையே சென்று அவளை கேள்விகளால் துளைத்து எடுத்தான் வினோத். எல்லாவற்றுக்கும் மௌனமே!!! ஒரு நிலை மேல் பொறுக்க முடியாமல், “ஹே இப்போ என்ன நடந்துச்சுனு சொல்ல போறியா இல்லையா? ஓவரா பண்ற சொல்லிட்டேன்…” என்று உச்சக் கட்ட கோபத்தில் கத்தினான்.

கூடவே இடை சொறுகளாக அவனே பதிலை யூகித்தவன் போல பேச்சு வேறு! “உடனே, ‘உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்ல போறேன் வினோ? அப்புறமா சொல்றேன்…’ இந்த மாதிரி எதாவது பேசாம ஒழுங்கா ஆன்சர் பண்ணு!”

இவனின் இந்த பதிலே அவளின் உதட்டில், புன்னகையை அணிவித்தது. “சிரிச்சா சரியா போயிடுமா? சொல்லு…”

“கடவுளே!! சொல்றேன் அப்புறமா… இப்போ சாவடிக்காத… போ, பசங்களோட இரு. நான் சமைக்கனும்!”

கை எடுத்து அவள் கும்பிட்டு கேக்கவும் தான், வினோத் அவளை விட்டுவிட்டு பசங்களிடம் சென்றான். முறைத்துக் கொண்டே தான்!!

சரி நிலேஷ் மூலம் எதாவது கிடைக்கிறதா பார்ப்போம் என்று யோசித்து, “நிலு குட்டி, எப்போ வீட்டுக்கு வந்தீங்க? பாட்டி எப்போ கிளம்புனாங்க வீட்டுலயிருந்து?” என்று வினவினான்.

நிலேஷும் உடனே அவன் மடியிலிருந்து துள்ளி எழுந்து கைகளை ஆட்டி, அன்பரசியின் தண்டவாளத்தை வண்டவாளம் ஏத்தினான். “மாமா… பாட்டி கலியாணதுக்கு போயிட்டாங்க. டாடி எங்கள பீச்சுக்கு கூட்டிட்டு போனாறே! அம்மா பீச்சுக்கு வந்தாங்க. அப்பொறம் டாடியோட பேசிட்டு, வீட்டுக்கு வந்துட்டோம்”

இதையெல்லாம் சத்தமாக கூறிவிட்டு, அதன்பின் வினோத்தின் காதருகில் சென்று ரகசிய குரலில் முணுமுணுத்தது குட்டி... “அப்பாவும் அம்மாவும் சண்ட போட்டாங்க மாமா!” குழந்தை கூறியதை கேட்டு வந்த கோபத்தையும் குழப்பங்களையும் ஒரு சேர அடக்கி, பசங்களிடம் கவனத்தை திருப்பினான்.

அதன்பின் அவன் அன்பரசியிடம் எதுவும் கேக்கவில்லை. இரவு உணவு உண்ட பின்னர், குழந்தைகளும் தூங்கிவிட, அன்பரசியை கூப்பிட்டு பேசினான் வினோத். “என்ன சொன்னான் அந்த ஜீவா?”

அவனை ஒரு பார்வை பார்த்து, உள்ளே பொங்கிய அழுகையை கட்டுப்படுத்தி பதிலளித்தாள் அன்பு. “என்னை இப்போ எதுவும் கேக்காத வினோ. கொஞ்ச நாள் போகட்டும்… நானே சொல்றேன்!”

அந்த குரலை மீறும் வல்லமை இன்னும் பெறாதலால், அவளை ஒரு முடிவுடன் பார்த்து, “ஓகே.. இன்னும் ரெண்டு நாள் தான் டைம். அதுக்குள்ள சொல்ற வழிய பாரு!” என்றான்.

அவளை கதவை பூட்டிக் கொள்ள சொல்லிவிட்டு, அவன் தங்கும் எதிர் வீட்டிற்க்கு சென்றுவிட்டான். ஆம், வினோத் இருப்பது அன்பரசியின் வீட்டிற்க்கு எதிர் ஃபிளாட்டில் தான். அங்கு குடியிருக்கும் ஒரு வயதான தம்பதியரிடம், பேயிங் கெஸ்ட்டாக இருக்கிறான். பெயருக்கு தான் ஒரு வீடு அது! மற்றப்படி சாப்பாடு அரட்டை எல்லாம் அன்பரசியின் வீட்டில் தான்.

அன்றைக்கும் அவனை அனுப்பிவிட்டு, தன் குழந்தைகளுடன் படுத்தவளின் மனதில் என்றைக்கும் இல்லாத அளவில் ஒரு வெற்றிடம் உருவானது! என்றைக்கு தான் தன் பிரச்சனைக்கு ஒரு முடிவு வருமோ? நினைத்தவளின் துக்கம் கூடி, தூக்கம் பறந்தோடியது!

அடுத்த நாள், வீட்டிலேயே இருந்து இரண்டு பேரும் பசங்களை கவனித்துக் கொண்டிருந்தனர். இல்லை இல்லை வினோத் தான் கவனித்துக் கொண்டான்... அன்று இருந்த ஒரு ரத்த தானம் மூகாமில், பங்கெடுத்துக் கொள்வதற்காக கிளம்பினாள் அன்பு.

ஆனால், பசங்களும் கூடவே வருவோம் என அடம் பண்ணியதால், கடைசியில் வேறு வழியில்லாமல், அவர்களையும் அழைத்துக் கொண்டு சென்றனர். அதனால், குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பு வினோத் ஏற்றான்.

அங்கும் அன்பரசி பேசாமல், உம்மென்று இருக்கவும் வினோத்தால் தாங்க முடியவில்லை! “ஹே லவ்ஸ்… இங்க பாரு. நீ இந்த மாதிரி சைலென்ட் மோட்ல இருக்கறது எனக்கு சுத்தமா பிடிக்கல!

கொஞ்சமாவது வைப்ரேஷன் மோட்டுக்கு வா… அப்போ தான் பேச முடியும்.” இவனின் பேச்சுக்கு, லவ்ஸிடம் எந்த வித ரியாக்ஷனும் இல்லை…! கடைசியில் தன் ஆயுதத்தை பயன்படுத்துவதை தவிர அவனுக்கு வேறு வழி தெரியவில்லை…

“சரி உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லலாம்னு பார்த்தேன். நீ தான் மூட் அவுட்டா இருக்கியே… அப்புறமா சொல்றேன்.”

வீட்டிற்க்கு வரும் வழியில் வினோத் இப்படி கூறவும், என்னவாக இருக்கும் என அவன் முகத்தையே உற்று நோக்கினாள் அன்பு. எதுவும் புரியாததால், வீடு திரும்பியவுடன் அவனை நிறுத்தி, “என்னடா விஷயம்? சொல்லு…” என்று கண்களில் ஆவலுடன் கேட்டாள்.

அவளை பார்த்து சந்தோஷமாக சிரித்தபடியே குண்டை அலுங்காமல் குலுங்காமல் போட்டான். “நேத்து மலர்விழியை பார்த்தேன்.” கேட்ட அன்பரசி தான் வாயை பிளந்தாள்.

மலர்விழி! வினோத்தின் தூக்கத்தை சில நாட்களாக மிகவும் சோதிப்பவள். முதலில் அவளை ஒரு எதிர்பாராத சந்தர்பத்தில் தான் பார்த்தனர் இருவரும். கிட்டதட்ட ஒரு மாதம் முன்பு, அன்று குழந்தைகளும் வீட்டில் இருந்ததால் நால்வருமாக படத்திற்க்கு சென்றுக் கொண்டிருந்தனர்.

சிக்னலுக்கு நிற்கும் வேலையில் பின்னாலிருந்து பெரும் சத்தத்துடன் யாரோ அவர்களின் காரை இடித்ததில், கார் தூக்கி போட்டு குலுங்கியது. அவசர அவரசமாக குழந்தைகளை சரி பார்த்து, அனைவரும் இறங்கினர்.

பின்னால் சென்று பார்த்தால், ஒரு பெண் ஸ்கூட்டியில் அவனின் காரை இடித்து விட்டு, ஸ்கூட்டியுடன் விழுந்து இருந்தாள். காரின் பின்பக்கம் நன்றாகவே அடிவாங்கியது!! பக்கத்தில் இருந்த சிலர், அவளை தூக்கி நிறுத்தி, “பார்த்து வரக் கூடாதாமா?” என்று அறிவுறித்தினர்.

அன்பரசியும் அந்த பெண்ணை நோக்கி, “அடி ரொம்ப பட்டுடுச்சாமா?” என்று கரிசனையுடன் வினவ, அன்பரசியை அன்பு பொங்க பார்த்தாள் மலர்விழி… வினோத் அவள் மனதில் நின்றானோ இல்லையோ, அன்பு அவள் மனதில் அன்றே பச்சக்கென்று ஒட்டினாள்!

மலருக்கு சில சிராய்ப்புகள் தவிர, பெரிதாக அடியென்று ஒன்றும் இல்லை. வினோத்தின் கண்கள் அவளை ஒரு முறை ஆராய்ந்து, பெரிதாக அடி என்று எதுவும் படவில்லை என்பதை உணர்ந்து, கடைசியாக தன் காரில் அவளால் ஏற்பட்ட பென்டிலேயே வந்து நின்றது.

ஆசை ஆசையாக, பார்த்து பார்த்து வாங்கிய கார்…! சிறுகசிறுக செமித்தது எல்லாம் நினைவு வர, வந்ததே கோபம் வினோத்துக்கு!

“ஹலோ.. உங்க ஸ்கூட்டியில பிரேக் எல்லாம் இல்லையா? இப்படியா வந்து இடிப்பீங்க? கொஞ்சம் கூட அறிவே இல்லை போல… உங்களுக்கு எல்லாம் யாரு தான் லைசன்ஸ் கொடுத்தாங்கனே தெரியல…

என்னோட காரை நான் எப்படியெல்லாம் பார்த்துப்பேனு தெரியுமா…?” மேலும் என்னவெல்லாம் பேசி இருப்பான், சாரி சாரி திட்டியிருப்பான் என தனியாக வேறு சொல்ல வேண்டுமா? இவன் பேசும் போது தடுக்க வந்த அன்பரசியை அவன் காதில் வாங்கியதாகவே காணோம்!

ஒரு நிலை மேல், அனைவரின் முன்பும் இப்படி திட்டு வாங்குவது தாங்க முடியாமல் மலர்விழி தேம்ப ஆரம்பிக்க, அதுவே அவனின் திட்டை நிப்பாட்டியது! அன்பரசிக்கு வினோத்துக்கு காரின் மேல் உள்ள காதல் தெரியுமாதலால், ஒன்றும் கூற முடியாமல் தடுமாறினாள்.

‘அந்த பொண்ணை பார்த்தாலும் ஒண்ணும் பணக்கார வீட்டு பொண்ணு மாதிரி எல்லாம் தெரியல… தெரியாம மோதிட்டா போல. பாவம், ரொம்ப திட்டிட்டான் வினோ’ என்று அவள் நினைத்த நிமிடம் டிராபிக் கூடியதால் மக்கள் ஒதுங்க சொல்ல, மலர்விழி அவள் அருகில் வந்தாள்.

“சாரிங்க… எப்படி இடிச்சேன்னு எனக்கே புரியல! ப்ளீஸ், இப்போ என்கிட்ட பணமில்ல. இரண்டு நாள்ல உங்ககிட்ட கொடுத்தறேன்.” மலர்விழி சொல்லியதை கேட்டு, தலையசைத்து அவளிடம் தன் மொபைல் நம்பரை கூறி, அவளிடம் பார்த்து போகச் சொன்னாள் அன்பரசி.

“தாங்க்ஸ்கா தாங்க்ஸ்கா” என்று பல முறை கூறிவிட்டு, வினோத்தை ஒரு பயந்த பார்வையுடன் பார்த்துவிட்டு, ஸ்கூட்டி எடுத்து சென்றுவிட்டாள் மலர்விழி. தீராத கோபத்துடன் வண்டியை எடுத்து ஓட்டினான் வினோத்.

ஆனால், அவனால் படத்தில் கவனத்தை பதிக்க முடியவில்லை… நேரம் செல்லச் செல்ல கோபம் குறைந்து புத்தி வேலை செய்தது. மனது முழுக்க அந்த மலர்விழியே நின்றுக் கொண்டிருந்தாள். ‘ரொம்ப திட்டிட்டோமோ’ என அவன் அடுத்த இரண்டு நாளுக்கு புலம்பி தள்ளினான் அன்பரசியிடம்!

“டேய், அப்போ நல்லா திட்டிட்டு இப்போ எதுக்கு என்கிட்ட வந்து புலம்புற? அந்த பொண்ணு பிரேக் புடிக்கலனு திட்டுன… உண்மை சொல்லனும்னா நீ தான்டா பிரேக்கே போடாம திட்டுன அவளை! சின்ன ஸ்பீட் பிரேக் கூட இல்லனா பாரேன்!!”

இவளின் கலாய்ப்பை கேட்டு கடுப்பு மன்னனாகி நின்று, “நீ எல்லாம் கலாய்க்கிற அளவுக்கு வந்துட்டேன் பார்த்தியா? அத தான் என்னால தாங்க முடியல!” என்று அலுத்துக் கொள்ள மட்டுமே முடிந்தது.

இவனின் புலம்பலை நிறுத்தவே மலர்விழி கால் செய்து, எவ்வளவு பணம் தர வேண்டும் என கேட்கவும், ஏற்கனவே முடிவு செய்தது போல அன்பரசியும், பணம் எதுவும் தேவை இல்லை, தாங்க பார்த்துக் கொள்வதாக கூறவும், மலர்விழி திகைத்து நின்றாள்.

அவளுக்கு வினோத்தின் திட்டுகளே ஞாபகத்தில் நிற்க, மீண்டும் தான் பணம் தருவதாக வற்புறுத்தினாள். அன்பரசி எவ்வளவோ எடுத்து கூறியும், மலர்விழி அதையே திரும்ப திரும்ப சொல்லவும், வினோத்தே நொந்து போனான்.

“இந்த பொண்ணு என்ன லவ்ஸ், இதையே ரிப்பீட் மோட்ல சொல்லுது?” என்று அவன் கூறியதை கேட்டு மலர்விழியும் அந்த பக்கம் புன்னகைத்தாள். கடைசியில், அவள் வழிக்கே வந்து, அடுத்த ஞாயிறு அவளை ஒரு ஹோட்டலில் சந்தித்து, ஆயிரம் ரூபாய் மட்டும் வாங்கினர்.

எதோ வாங்க வேண்டுமே என்று காசை வாங்கி விட்டு, அன்பரசி அவளிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள். வினோத்தோ அன்று அவளை திட்டியதற்க்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, மலரையே கண் எடுக்காமல் பார்த்தபடி இருந்தான்.

‘பரவாயில்லை சார்’ என்று கூறிவிட்டு, அன்பரசியிடம் கவனத்தை திருப்பினாள் மலர். வினோத் குறுகுறுவென பார்ப்பது, ஒரு பக்கம் உறுத்த ரொம்ப நேரம் இல்லாமல், சிறிது நேரத்திலேயே கிளம்பினாள் மலர்விழி.

அன்பரசிக்கு அன்று முதல் வினோத்தை கிண்டல் செய்வதே பகுதி நேர வேலையாகி போனது. வினோத்திற்க்கு மலரை பிடித்து இருந்தாலும், இன்னும் அவனுக்கே முழு முதல் நம்பிக்கை வரவில்லை.

காதாலா இல்லையா என அவன் மனம் சடுகுடுவாட, இப்போது மலர்ந்த முகத்துடன் அவனின், “நேத்து மலர்விழியை பார்த்தேன்” என்ற வாக்கியத்தை கேட்டு அன்பரசி குறும்பான பார்வையை தாங்கி நின்றாள்.

“என்னடா, ஒரே லவ் மூட்ல இருக்க போல… சொல்லு என்ன நடந்துச்சுனு?”

“ஹுக்கும்.. லவ் மூட் ஒண்ணு தான் குறைச்சல்! அவ என்னடான்னா ஒரு ரியாக்ஷனும் காட்ட மாட்றா. இதுல லவ் பண்ணிட்டாடாடாலும்! நான் நேத்து கோவில் போனப்ப தான் அவள பார்தேன்.

ரொம்ப எல்லாம் இல்ல. எப்படியிருக்க, என்ன ஏதுனு பேசிட்டு வந்துட்டேன்… அவ்வளவு தான்…!!” அவனின் சலித்த குரலில், சிரித்துவிட்டு யோசனையுடன் மீண்டும் அவனை கேள்வி கேட்டாள்.

“வினோ, உனக்கு மலர ரொம்ப புடிச்சிருக்குல…. எப்போ சொல்லப் போற அவ கிட்ட? சீக்கிரமா சொல்லுடா அவகிட்ட… அவங்க வீட்டுல நான் போய் பேசறேன்.”

“போய் பேசி..? என்ன கல்யாணம் பண்ணி வைக்க போறீயா? கல்யாணத்துக்கான என்னோட கண்டிஷன் அப்படியே தான் இருக்கு! நீ எப்போ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கறயோ அன்னிக்கு தான் நானும் கல்யாணம் பண்ணிப்பேன். இத யார் நினைச்சாலும் மாத்த முடியாது”

சட்டென்று ஸ்விச் ஆப் ஆகியது போல், அன்புவின் முகம் இருண்டு போனது. அவள் எதையோ சொல்ல வர, அதை கேட்காமல் கையமர்த்தி, மீண்டும் வினோத் அதையே கூறவும், தாங்காமல் வெடித்தாள் அன்பு.

“என்ன எல்லாரும் இன்னோரு கல்யாணம், இன்னோரு கல்யாணம்னு சொல்லிட்டே இருக்கீங்க? என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? இன்னோரு கல்யாணம்னா என்ன பொம்ம கல்யாணமா? இல்லைல?? சும்மா இதையே சொல்லிட்டு இருக்காதடா! கோவமா வருது…”

அவளின் முதல் பாதி வாக்கியத்தை மட்டும் கருத்தில் கொண்டு, வினோத்தின் மூளை அழகாக முடிச்சு போட்டது. இவளின் கோபத்திற்க்கும் அழுகைக்கும் காரணம் அந்த ஜீவா தான், என முதலிலேயே அவனுக்கு தெரிந்தபடியால், என்ன நடந்திருக்கும் என்பதை புரிந்துக் கொள்ள ரொம்ப நேரமாகவில்லை.

“உன்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னானா?? இல்லை, அவன் இன்னோரு கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னான்னா?? ஃபர்ஸ்ட் சொன்னது நடந்திருக்க வாய்பேயில்ல… சோ, செகன்ட் தான் நடந்திருக்கனும்!”

அடுத்த சில நொடிகள் அன்பரசியின் மௌனமும், பிறகு வந்த அழுகையுமே அது தான் நடந்தது என்பதை தெளிவுப்படுத்தியது.

தோள் கொடுப்பான் தோழன் என்பதற்க்கு இனங்க, அவளை தோள் சாய்த்து தேற்றினான் வினோத். மடை திறந்த வெள்ளமாக, எல்லாவற்றையும் அவனிடம் சிறுபிள்ளை போல் ஒப்பித்தாள் அன்பு.

அன்று அவன் மனதில் உதித்த கோபத்தை எப்படி தீர்ப்பது என வழியையும் கண்டுபிடித்தான். அடுத்த நாள் ஞாயிறு என்பதால், நல்ல பிள்ளையாக இருந்துவிட்டு, திங்கள் அன்று காலையிலேயே அவனின் அன்னையின் திதியை செலுத்தி, மதியம் ஒரு வேலை இருப்பதாக அன்பரசியிடம் பொய் சொல்லி, எஸ்கேப் ஆனான் வினோத்.

அவன் நேராக சென்று நின்ற இடம் ஜீவாவின் தலைமை அலுவகம். ரிசப்ஷனிஸ்ட் யாரை பார்க்க வேண்டும் என்று கேட்க, இவனோ அசால்டாக ஜீவாவின் பெயரை கூறினான்.

ஒரு வினோத பார்வையை அவன் மேல் செலுத்தி, அவனை சிறிது நேரம் காத்திருக்க சொன்னாள்.

ஜீவாவிடம் ஃபோனில், அவனை காண்பதற்காக வினோத் என்பவன் வந்திருக்கிறான் என சொல்லப்பட்டது. உடனே, சி.சி.டிவி கேமரா வழியாக யார் என்று பார்த்த ஜீவாவிற்கு ஆச்சரியம்.

‘இவன் காரணமில்லாம வர மாட்டானே… ஒரு வேளை அன்னிக்கு அவ கிட்ட பேசுனதுக்கு, திட்ட வந்திருக்கானா?’ ஆயிரம் எண்ணங்கள் நொடியில் பிறக்க, சிறிது நேரம் கழித்து அவனை உள்ளே அனுப்புமாறு கூறிவிட்டு வேலையில் மூழ்கினான்.

காத்திருந்த ஒவ்வொரு நிமிடமும் பழைய காலங்களின் நினைவுகள் கண் முன்னே கடந்து சென்றது வினோத்திற்கு. கோபமும் ஆற்றாமையும் பொங்கி, அவனின் பொறுமையை சோதித்த வேளையில், அவன் அரை மணி நேரம் கழித்து உள்ளே அனுமதிக்கப்பட்டான்.

உள்ளே சென்ற நிமிடம், வினோத் ஜீவாவையே முறைத்துப் பார்க்க, ஜீவாவோ ஒன்றும் நடக்காதது போல, பேசலானான். “வா வினோத். உக்காரு” அவன் காட்டிய இருக்கையில் உட்கார்ந்தவன், அப்போதும் ஒன்றும் பேசாமல், முறைக்க மட்டுமே செய்தான்.

“இவ்வளோ நேரம் வெயிட் பண்ணிட்டு, இப்போ பேசாம முறைச்சுட்டு இருந்தா எப்படி?? சீக்கிரமா சொல்ல வேண்டியதை சொல்லு… எனக்கு நிறைய வேலையிருக்கு!”

நக்கல் கொப்பளித்த வார்த்தைகளில், வினோத்தின் மனதில் எழுந்த எரிமலை வெடித்தது. “இந்த திமிர்…. இது தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்!”

“திமிரா?? எனக்கா? அப்போ உன்னோட ஃபிரண்ட் கிட்ட இருக்கறதுக்கு பேர் என்ன? தைரியமா? இல்ல வேற எதாவதா?”

அன்பரசியை பற்றி பேசத் தான் அவன் வந்தான். ஆனால், ஜீவாவே அவளை பேச்சில் இழுக்கவும், வினோத்தால் தாங்க முடியாமல் போயிற்று.

“ஹே அவள பத்தி நீ பேசாத. உனக்கு எந்த ரைட்ஸும் கிடையாது!!! நான் இங்க பேச வந்ததுக்கு காரணமே அவகிட்ட நீ பீச்சுல சண்டை போட்டது தான்.

நீ கல்யாணம் பண்ணிக்கோ, பண்ணாம போ! அத எதுக்கு அவகிட்ட சொல்லி கஷ்டப்படுத்துற? தேவையில்லாம அவகிட்ட பேசாத சொல்லிட்டேன்.”

இதை கேட்டு ஆச்சரியமாக புறுவத்தை உயர்த்தி, இளக்காரமாக புன்னகைத்தான் ஜீவா.

“ஹோ… எனக்கு கல்யாணம்னா அவளுக்கு எதுக்கு கஷ்டமா இருக்கு? புரியல எனக்கு… ஒரு வேளை, என்னை இன்னும் மறக்காம நினைச்சுட்டு இருக்காளா? இல்ல, திரும்ப வந்து ஜாயின்ட் அடிக்கலாம்னு எதாவது பிளான் போடுறாளா? ஆமா, அவளுக்குனு ஒரு டிக்னிட்டியே இல்லையா? ஏன்..”

ஜீவாவின் பேச்சு அந்தரத்தில் தொங்க காரணம், வினோத் தாங்க முடியாமல், அவனின் சட்டையை பிடித்திருந்தான். “என்னடா நீ என்ன வேணும்னா பேசுவியா? நான் பார்த்துட்டு சும்மா இருக்கனுமா?”

வினோத் ஜீவாவின் சட்டையை உலுக்கி, கத்திய சமயத்தில் தான் அந்த குரல் கேட்டது. “வினோத்” என கத்திக் கூப்பிட்ட அந்த குரலுக்கு சொந்தக்காரி நம் அன்பரசியே…!!
 
Top