Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

meera anjali's En Mannan Engae Endru Sollu - 5

Advertisement

meera anjali

Member
Member
hiiii friends.... today ud... EMEES 5...

Padichuttu comments, and like pannunga....




என் மன்னன் எங்கே என்று சொல்லு 5



ஜாக்கிங்க் சென்று கொண்டிருந்தவனின் மனம் உலைகலனாக கொத்தித்துகொண்டிருந்தது. நேத்து வந்த அஜய்க்கு, வருடக் கணக்கில் காதலித்த என் தாராவை விட்டுகொடுக்க முடியுமா? மாட்டேன்... அவனுக்கு விட்டுகொடுக்கவ அவளை உயிருக்கு உயிராக நேசித்தேன். வெளிநாட்டிற்க்கு சென்றவன் அங்கயே வெள்ளைகாரியை கல்யாணம் செய்திருக்க வெண்டியது தானே ஏன் திடீரென இங்கே வந்து, என் காதலியையும் என் காதலை பறிக்க முயற்சி செய்வான். அவனிடம் என் காதலை தேற்க விட மாட்டேன், பார்க்கலாம் தாராவுடானான கல்யாணம் எனக்கா, அவனுக்கா என்று. சுரேன் மனம் சவால் விட்டுகொண்டிருந்தது.


இரவெல்லாம் உறங்காமல் விடியும் பொழுது கண் அசந்தால் தாரா. சுரேனின் மனம் என்ன மாதிரியான வலிகளை சுமந்துகொண்டிருக்கும் என அவளுக்கு தெரியும். அனைவரின் முன் சுரேனிற்க்கு ஆதரவாக பேசாமல் பெற்றோரிடம் முடிவை ஒப்படைத்த என்னை வெறுத்திருப்பான் என அவளே ஏதேதோ எண்ணிக்கொண்டே
இறுதியில் உறங்கி போனாள்.


தன்னை யாரோ உற்று பார்ப்பது போல உணர்வு அவள் உறங்கும் போதும் அவளை தொடர, அவளோ ஒரு வேளை சுரேன் தான் வந்திருப்பாரோ. நான் தூங்கிக்கொண்டிருப்பதால் என்னை எழுப்பாமல் பார்த்துகொண்டிருப்பாரோ. என அவள் உறக்கத்திலும் நினைக்க. அதை பொய்யாக்குவது போல் அவள் இன்று அஜயின் முகத்தில் விழித்தால். தன் முன் அஜய் அமர்ந்திருப்பதை பார்த்து திடுகிட்டு எழுந்து அமர்ந்தால்.


“ஏன் அதுக்குள்ள முழிச்சிட்ட... இன்னும் நேரம் இருக்கும் நீ தூங்கு அனி.” அவளின் பதட்டத்தால், அவன் சொல்ல


“இல்லை... நான் எப்போவும் எழும்பு நேரம் தான்...” அவனிடம் ஒட்டுதல் இல்லாமல் பேச


“நான் சீக்கிரம் எழுந்துட்டேன் அனி... ஜாக்கிங் போகலாம்னு வெளிய வந்தேன். அப்போ தான் அத்தை உன் அறைக்கு காஃபி கொண்டு வந்து வைத்துவிட்டு போனாங்க. நானும் உன்னிடம் சரியாக பேசவில்லை.. விசாரிக்கலையா அது தான் உன் அறைக்கு வந்தேன், ஆனா நீ நல்லா தூங்கிட்டு இருந்த. அப்படியே பார்த்துட்டு உக்கார்ந்துட்டேன்.” அவன் ஆசையாகவும் அல்லாமல், காதலாகவும் அல்லாமல் அவளிடம் சொல்ல.


“ம்ம்...”


“எப்படி இருக்க அனி... உன்னை பார்த்து வருஷக் கணக்காச்சு. எப்படி போகுது உன் படிபெல்லாம்.”


“நல்லா இருக்கேன் மாமா... நல்லா போகுது ஸ்டடீஸ்” அவள் தயங்கி பேச


“சரி வாயேன் ஜாக்கிங் போகலாமா??”


”எனக்கு பழக்கமில்ல மாமா... நீ... நீங்க போயிட்டு வாங்க”


“சரி... போயிட்டுவரேன்... ஆனா நம்ம மேரேஜ் பின்னாடி நீயும் என்னோட ஜாக்கிங் வர பழகிக்கனும்.” அவளுக்கு ஒரு கட்டளையாக சொல்லிவிட்டு அவள் அறையில் இரு அவன் வெளிவர சரியகா அஜயின் எதிரில் சுரேன் வந்துகொண்டிருந்தான்.
சுரேனோ அனியின் அறையில் இருந்து அஜய் வெளிவருவதை பார்த்து மனதில் இருந்த கோவம் அப்படியே வெறியாகியது. அஜயோ சுரேனை ஒரு நக்கல் பார்வை பார்த்துகொண்டு, “என்ன சுரேன் என்னையும் ஜாக்கிங் அழைச்சிட்டு போயிருக்கலாமே. இப்போ நான் மட்டும் தனியா போகனும் இனி என்னையும் சேர்த்தே அழைச்சிட்டு போ.” அவனிடம் சொல்லிவிட்டு படியில் கீழே இறங்கி போனான்.


சுரேனோ நேரே அனியின் அறைக்கு சென்று, “தாரா எதுக்கு அஜய் உன் அறைக்கு வந்திட்டு போனா. அவனை உன் அறைக்கு உள்ளேயே நீ விட்டுருக்க கூடாது. என்ன சொல்லிட்டு போரான் அவன்.” வந்த வேகத்தில் அவளிடம் சத்தம் போட


அஜய் வெளியேருவதை பார்த்துவிட்டு, தலையில் கை வைத்து அமர்ந்திருவளிடம் திடீரென சுரேனின் கோவமான குரல் கேட்க்கவும் அவளுக்கு பயமாகிவிட்டது.


”நான் கேட்க்குறதுக்கு கூட நீ பதில் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம் சொல்லு.” அவளின் இரு தோள்களையும் பிடித்து இறுக்கினான்.


“சுரேன் வலிக்குது...” அவள் முகம் வலியில் சுருங்குவதை பார்த்து நிதானத்திற்க்கு வந்தான்.


“நீ என்னைவிட்டு போனா எனக்கு தான் வலிக்கும்டி... நேத்து அஜய் கேட்டதுக்கு பதில் சொல்லிருக்கலாமே தாரா. நாமா ஏற்க...” சொல்லவந்தவனின் வாயை கை வைத்து முடியவள்.


”என்னைக்கும் இந்த விசயம் யாருக்கும் தெரியக்கூடாது மாமா. கடவுள் இருக்காரு நம்ம காதல் உண்மையா இருந்தா நம்ம குடும்பமே சேர்த்து வைக்கும். அதுவரைக்கு நீங்க இதை பற்றி யாருக்கும் சொல்லகூடாது.” அவள் கண்ணீர் வலிய அவனிடம் சொல்ல


“விதியையும் மீறி நீ அஜய்க்கு சொந்தமான அடுத்த நிமிஷம் நான் உயிரோட இருக்க மாட்டேன் தாரா. உன்னை யாருக்கு விட்டுகொடுக்குற அளவுக்கு நான் தியாகி இல்லை. ஓரளவுக்கு தான் பொறுத்து போவேன், என்னையும் மீறி உண்மைகள் வெளிவரலாம்.” அவளிடம் சொல்லிவிட்டு வேகமாக அனியின் அறையில் இருந்து வெளியேறினான்.


முதலில் அஜயும், அடுத்து சுரேனும் அனியின் அறையில் இருந்து வெளியேறுவதை இருவர் பார்த்துவிட்டனர். அவர்களுக்குள் சந்தேகம் முளைவிட தொடங்கிவிட்டது.


இன்று புதுப்பெண் சமையல் என்பதால் அனைவரும் ஆவலோடு நிவியின் சமையல் பதார்த்தங்களை எதிர்ப்பார்த்துகொண்டிருந்தனர். சுமார் இருபது நாற்காலிகள் கொண்ட உணவு மேஜையில் சேனாதிபதியின் குடும்பம் முழுவதும் அமர்ந்திருந்தது.


”நிவி, நீங்க மாமா பக்கத்துல உக்காருங்க, நானும் சுஜியும் எல்லாருக்கும் பரிமாறுறோம்.” என அனி சொல்ல.


“ஆமா நிவி முதல் முதலா என் பேரன் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடு. இந்த வீட்டோட இரண்டாவது மருமகளா வந்திருக்க, புது இடம் அதனால அவங்க பரிமாறட்டும் நீ நரேன் பக்க்த்துல உட்க்காரு.” அங்குவும் சேர்ந்து சொன்னதால் அவள் அமைதியாக கேட்டு அமர்ந்தால்.


“நீ மட்டும் ஏன் உட்காருந்திருக்க... நீயும் போய் அவங்ககூட சேர்ந்து பரிமாறு சாரிகா அவங்க இரண்டு பேர் மட்டும் எப்படி மேனேஜ் பண்ணுவாங்க.” தன் பக்கத்தில் அமர்ந்திருந்த சாரிகாவை எழுப்பிவிட்டான் இளா.


”சரிங்க...”
ஸ்வீட் வகையறாக்கள், மற்றும் காலை உணவு என்பதால், சப்பாத்தி பன்னீர் பட்டர் குருமா, பூரி வெண்பொங்கல் சாம்பார், தேங்கய் சட்னி, உளுந்த வடை என பாதி உணவுகள் இவர்களின் வீட்டில் மினி ஹோட்டலாக இருந்தது.


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாய் வைத்து வந்த அனியும் அவளை பின்பற்றி சுஜியும் சாரிகாவும் உணவு பதார்த்தங்களை வைத்துகொண்டே வந்தனர்.


சுரேனின் அருகில் வந்தவள், அவனுக்கு பிடித்த ரசமலாய், குலோப்ஜாமூனையும் அதிகமாய் வைத்துவிட்டு சென்றாள். சுரேனும் அவள் தன்னை கோவத்தில் இருந்து வெளிகொண்டு வருகிறாள் என புரிந்துகொண்டு சின்ன சிரிப்புடன் ரசமலாயை உண்ண ஆரம்பித்தான்.
இதை எல்லாம் கவனித்து கவனிக்காத மாதிரி இருந்தான் அஜய். ஓ... சாரோட கோவத்தை மேடம் குறைக்குறாங்களா?? என அவன் மனம் நினைக்க.


அடுத்த பதார்த்தங்களில் சுரேனுக்கு பிடித்தவையே வைத்துவிட்டு சென்றாள். மூன்று சுற்று உணவு வகைகள் அனைத்து சுரேனுக்கு பிடித்த மாதிரியே அவள் வைத்துவிட்டு சென்றாள்.


”எல்லாமே அருமையா இருக்கு, ருசியாவும் இருக்கும். எதுலையும் குறையே கண்டுபிடிக்க முடியலை. நிவியோட சமையல் சூப்பரா இருக்கு.” என அங்கு பாராட்டு பத்திரம் வாசித்தார்.


“பின்ன என் மருமகளாச்சே அத்தை அசத்திட்டாளா...”கண்ணின் மனைவி பெருமை கொள்ள.
நிவி, நரேனின் முகத்தை பார்த்தாள், அவனோ மற்றவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்தான். அவனிடம் இருந்து வரும் வார்த்தைக்காக அவள், அவன் முகம் பார்க்க அவனோ, உண்பதே எனக்கு முக்கியம் என்னும் ரீதியில் இருந்தான். மற்றவர்களின் பாராட்டில் மகிழ்ச்சியில் அவளது புன்னகை விரிந்தது.


”பாட்டி, இன்னைக்கு சமையல் சூப்பர்... அதனால நிவிக்கு உங்க கையில இருக்குற வைர வளையலை பரிசா நீங்க கொடுக்கனும்.” அஜய் சொல்ல.



“தாராளமா... இங்க வா நிவி” அவளை அழைத்து தன் இருகையில் அணிந்திருந்த ஆறு ஆறு வளையலில் ஒவ்வொன்றை எடுத்து நிவியின் கையில் அணிவித்தார்.


”அனி, நாளை உன் சமையல். எப்படி இருந்தாலும் நீயும் நாளைக்கு என் மனைவியாக வரப்போகிறவள் தானே. அதனால் நாளையே உன் சமையல் எனக்காக மட்டும் சமைக்க வேண்டும். எனக்கு பிடித்த உணவுகளை பின் சொல்கிறேன்.” அனைவரின் முன் அவளுக்கு ஒரு அதிர்ச்சியை வைத்துவிட்டு சென்றான்.


அனைவரும் அங்குவை பார்க்க, “அவன் இப்போ தான வெளிநாட்டுல இருந்து வந்திருக்கான் அதான் அவனுக்கு பிடித்த சமையல் வேண்டும்னு நினைக்குறான். அனி நாளைக்கு உன் சமையல் தான், அஜய்க்கு என்ன பிடிக்கும்னு கேட்டு செய்துகொடு.” அனைவரின் அதிர்ச்சிக்கு முற்று புள்ளி வைத்துவிட்டு சென்றார்.


ஆனால் சுரேன் மட்டும் அஜயின் செயலில் கோவம் கொண்டு இருந்தான். அஜயின் குணம் சுரேனுக்கு அவ்வளவாக தெரியாது. ஏழு வயதிலே அவனது பெரிய தாத்தா அவனை வெளிநாட்டிற்க்கு அழைத்து சென்று அவருடனே வைத்துகொண்டார். முதலில் தாயை பிரிந்து செல்வது அவனால் முடியவில்லை, அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிட்டான் விமான நிலையத்தில். அதன் பின் அவர் இறந்து அவன் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வர விருப்பம் இல்லை. ஆனால் அனியை பிறந்தது முதல் பார்த்து பழகி பிடித்து போனது அஜய்க்கு. அந்த நினைவை மட்டும் அவனால் மறக்க முடியவில்லை.


”நாளைக்கு நீ சமையல் பண்ணகூடாது தாரா... அவனுக்கு நீ சமைச்சு போடனுமா... அவன் வைச்ச வேலைக்காரியா நீ...” தாராவின் அறையில் இருந்து அவளை சமையல் செய்யகூடாது என்று கட்டளையாக சொல்லிகொண்டிருந்தான்.


“எப்படி நான் பண்ணாம இருக்க முடியும் சுரேன்... பாட்டியே சொல்லிட்டாங்க நான் தான் சமையல் செய்யனும்னு.”


“ஓ... அப்போ பாட்டி சொன்னா கேட்ப்ப... நான் சொன்னா கேட்க்க மாட்ட.” அவன் விதண்டவாதம் புரிய


“எல்லாருக்கும் என்னை கண்டா எப்படி இருக்குனு தெரியலை. ஒருத்தர் செய்யினு சொல்லுறாங்க, இன்னொருத்தர் செய்யாதேனு சொல்லுறேங்க. நான் என்ன நீங்க ஆட்டி வைக்குற பொம்மையா.” அவள் அழுதுகொண்டே சொல்ல


அவளின் கண்ணீரில் அவன் தான் இழகி போனான். “சரி தாரா அழத... நீ சமையல் பண்ணு, ஆனா கேவலமா பண்ணு.” அவளை சிரிக்க வைக்க அவன் சொல்ல


”ம்ம்ம்...ஏன் நான் நல்லா சமையல் செய்ய மாட்டேனா”.


“நீ சூப்பரா பண்ணுவ... ஆனா அஜய்க்கு மட்டும் கேவலாமா மிளகா பொடி அதிகம், உப்பு அதிகமா போட்டு பண்ணு.”


”பாட்டி திட்டிட்டா.’’


“திட்டுனா, அடுத்து உன்னை சமைக்க விடமாட்டாங்க.”


“போங்க மாமா... எப்போவும் என்னை கேலி சொல்லிட்டே இருங்க.” அவன் தோளில் சாய்ந்து கொண்டே பேசிகொண்டிருப்பதை மிதுனா பார்த்துவிட்டாள்.


ஷாப்பிங்கில் பிஸியாக இருந்தனர் பெண்கள் ஐவரும். புது பெண்ணுடம் ஷப்பிங் பொழுது போக்கிற்க்காக பிரபல மாலில் ஷாப்பிங்க் வந்திருந்தனர். ஆளுக்கொரு மூளையில் பிடித்ததை ஷாப்பிங்க் செய்துகொண்டிருந்தார்கள். சுஜியும் தனக்கு பிடித்த உடைகளையும் மற்ற உடைகளையும் தேர்வு செய்துகொண்டிருந்தாள்.
அப்பொழுது டிஸ்ப்ளேவில் உள்ள சுடிதார் அவளை கவர்ந்தது. அதை பணியாளரிடம் காட்டி தனக்கு வேண்டும் என சொல்லி எடுத்து வரச்சொன்னாள். விளக்கு ஒளியில் அந்த சுடிதார் அழகாக இருந்தது. சுடிதாரை தடவி பார்த்து பில் போட சொல்லும் போது,


“இது வேண்டாம் சுஜிமா... இந்த ஸாரீ நல்லா இருக்கு பாரு இதை எடுத்துக்கோ இது தான் உனக்கு ஏற்றார் போல இருக்கும்.” என அவளின் பின் வந்த சத்ததில் திடுகிட்டு திரும்பினாள்.


”வி..ஜய்...” அவள் மெல்லியதாக அழைக்க.

“எப்படி இருக்க சுஜிமா... ஃபங்க்‌ஷன் நல்லபடிய முடிந்ததா”
அவளோ பதில் சொல்லாமல் உடையை தேர்வு செய்வதில் முனைப்பாக இருந்தாள். “இந்த உடையை பில் போட்டுவிடுங்க.” என அவள் சுடிதாரை பணியாளரிடம் கொடுத்துவிட்டு அவனை விலகி நடந்தாள்.

“சுஜி நான் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்... இப்படி பேசாம போனா என்ன அர்த்தம்.”

“பிடிக்கலைனு அர்த்தம்.” அவனை தவிர்த்து வெளிய சென்றவள் மிதுனாவிடம் சேர்ந்துகொண்டு வேறு ஷாப்பிங்கில் இரங்கிவிட்டாள்.


”போகலாமா...” நிவி கேட்க


“எங்க அனி?...” சாரிகா கேட்க


“அவ, அப்போதே ஷாப் பண்ணிட்டு கீழே இருக்கேனு சொன்னா.” என்று சுஜி சொல்ல


“அப்போ கீழ போகலாம்..”
அனைவரும் கீழே வர அங்கே அனி, விஜயுடன் பேசிகொண்டிருந்தாள். அதை மற்ற பெண்கள் பார்த்துவிட்டு யாருடன் இப்படி சிரித்து பேசுகிறாள் என ஒருவரை ஒருவர் பார்த்து கேள்வி கேட்டனர்.
சுஜிக்கு மட்டும் தான் தெரியும் எதற்க்கு இவன் அனியிடம் பேசிகொண்டிருக்கிறான் என.


”ஒகே விஜய் நான் வரேன்... கம்மிங் சண்டே நான் கோவை வந்திருவேன் அங்க மீட் பண்ணலாம்.” அவனுடம் விடைபெற்று அவர்கள் இருக்கும் இடத்துக்கு வந்தாள்.

“யாரது அனி அவங்க...” நிவி கேட்க


“எனக்கு தெரிந்தவர்...”

”அப்படியா...”

வீட்டிற்க்கு சென்றதும் அவரவர் அறைக்கு செல்ல. அனி, சுஜியை நிறுத்தினாள். “அண்ணி, இது உங்களுக்கானது...” என அவள் கையில் பெரிய கவரை கொடுத்தாள்.


“என்ன... எனக்கானது... புரியலை”


“விஜய் உங்களுக்கு எடுத்த சாரீ... உங்ககிட்ட கொடுக்க சொன்னாங்க.” அவளின் கையில் திணித்துவிட்டு சென்றாள்.


”இது உங்களுக்காக நான் எடுத்த சார்ட்... நல்லா இருக்கா?”


“ஏன் நல்லா இல்லைனா தூக்கி குப்பையில போடுவியா.” நரேன் சொல்ல


“ஏன் இப்படி...”


“என்னை தொந்திரவு பண்ணாத நிவேதா... ஆல்ரெடி உன்னால என் குடும்பத்துல எதுவும் பிரச்சனை வந்திருமோனு நான் பயப்படுறேன்... இதுல நீ வேற இது நல்லா இருக்கா இல்லையானு.” அவளிடம் கோவம்கொண்டு வெளியேறினான்.


அவனின் பதிலில் அவள் தான் கலங்கி போனாள்... இனி என் வாழ்க்கை இப்படியே போய்விடுமோ என்று பயத்தில் அவள் அழுது கரைந்தாள்.



தொடரும்………….


 
Top