Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

meera anjali's En Mannan Engae Endru Sollu 1

Advertisement

meera anjali

Member
Member
hi sisters and friends....

i am meera, ithu en 1st story

padichu paarunga, like pannunga.... comments pannunga

EMEES 1 UD


என் மன்னன் எங்கே என்று சொல்லு 1



ஹாய்... ஹலோ... இது உங்கள் ராயல் சேனல். நான் உங்க விஜே. ஆலியா, இப்போ நாம எங்க இருக்கோம் தெரியுமா மெரினா பீச்ல, கடல் காற்றுல தங்களையே மெய் மறந்து அமைதியான கடலும், அழகான காதல் ஜோடிகளும் உலா வர்ர நேரத்துல நீ எதுக்கு இங்க வந்தேனு எல்லாரும் என்னை முறைச்சு பார்க்குறதுலயே தெரியுது.
இன்னைக்கு ராயல் சேனலோட டாபிக் என்ன தெரியுமா. என்று அவள் வீடியோ கேமிராவின் முன் அசைந்து, கைகளை ஆட்டி, கண்களை அங்குமிங்கும் அலையவிட்டு அவள் பேசுவது அவளது ரசிகரக்களுக்கும், ரசிகைகளுக்கும் மிகவும் பிடிக்கும்.




லைவாக அவள் பேசுவதும், அதை மற்றவர்கள் பார்த்து கமெண்ட்ஸ் போடுவதும் என அனைத்து டிவியில், செல்பேசியில் பார்ப்பவர்கள், ‘அட டாபிக் என்னனு சொல்லும்மா’ என அலுத்து போகும் வரை அவள் பேசுவாள்.




’காதல் ப்ரேக்கப்’ இது தான் டாபிக், வாங்க எத்தனை காதல் ஜோடி இதுல சிக்குறாங்கனு பார்ப்போம். என அவள், மற்றும், கேமிராமேன் சுரேஷூடன் முதல் காதல் ஜோடியை நோக்கி சென்றனர்.



ஒரு மிக சுவாரசியமாக கடலில் கால் நனைத்துகொண்டும். அவர்களின் காதல் உலகத்தில் இருந்தனர். அவர்களை கலைத்தது விஜே.ஆலியாவின் குரல் ‘ஹாய் லவ் ஜோடி... நான் விஜே. ஆலியா...’ என் தன்னை அறிமுகம் செய்துகொண்டாள்.




”ஹாய்... ஆலியா...”



ராயல் சேனல் பார்க்காம யாரும் இருக்கமாட்டாங்க. நீங்களும் அப்படிதான். இன்னைக்கு என்ன டாபிக் தெரியுமா.



”தெரியாது” என அந்த காதல் ஜோடி சொல்ல.



லவ் பிரேக்கப், உங்களுக்கு லவ் பிரேக்கப் ஆச்சுனா எப்படி பீல் பண்ணுவீங்க. என கேட்க



“பிரேக்கப்பா... அப்படினா எப்படி இருக்கும்.” என அவர்கள் துடுக்காக கேட்க



இன்னொரு ஜோடியிடம் கேட்க, ‘பிரேக்கப் ஆனா, அவள் நல்லா இருக்கட்டும் சொல்லி வாழ்த்திட்டு போவேன்’ என அவன் சொல்ல.



மற்றொரு பெண்ணிடம் கேட்க, ‘லவ் பிரேக்கப்பா...’


ஆமா, உங்களுக்கு லவ் பிரேக்கப் ஆனா என்ன செய்வீங்க.



“ அது எல்லாம் ஆகாது...”




எப்படி சொல்லுறீங்க...




“இதோ அவனே வரானே... டேய் இங்க வா” என அந்த பெண் தன் காதலனை அழைக்க


சொல்லுங்க உங்க காதல் பிரேக்கப் ஆனா என்ன செய்வீங்க.




” என்ன லவ் பிரேக்கப்பா... அக்கா, லைவ் போயிட்டு இருக்கு, வீட்டுக்கு தெரிஞ்சா அடிச்சே கொல்லுவாங்க. ஆளா விடுங்க.”



சும்மா, சொல்லுங்க இது ப்ராங்க் ஷோ.



“கேக்குறாங்கள்ல சொல்லு, நம்ம லவ் பிரேக்கப் ஆனா என்ன பண்ணுவ” அவனின் காதலி கேலியாக சொல்லச் சொல்ல



”அதெல்லாம் ஆகாது...”



பிரேக்கப் ஆனா, எப்படி பீல் பண்ணுவீங்க... இது ஷோ தான்.




“ஆனா, என்ன பண்ணுவேன், அழுவேன், அவகிட்ட கெஞ்சுவேன், காலுல விழுந்து வாழ்க்கை பிச்சை போடு, என்னை கல்யாணம் பண்ணிக்கோனு.”




நீங்க சொல்லுங்க லவ் பிரேக்கப் ஆனா எப்படி பீல் பண்ணுவீங்க. அவளிடம் கேட்க



“அப்படியெல்லாம் ஆகாது... ஆகாதுல டா” அவளின் காதலனிடம் உறுதியாக சொன்னாள்.




இன்னொரு பெண்ணிடம், ‘லவ் பிரேக்கப் பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க’



“ஆல்ரெடி நான் லவ் பிரேக்கப் ஆனா பொண்ணு தான்.”



என்னங்க நீங்க சாதாரணமா சொல்லூறீங்க, ஒகே அதை எப்படி பீல் பண்ணுறீங்க.




“ஏன் என்னைவிட்டு போனானு யோசிப்பேன், நாங்க லவ் பண்ணனதை நான் அப்போ அப்போ நினைச்சு பார்த்துப்பேன். ஆனா இன்னும் நான் அவனை லவ் பண்ணிட்டு தான் இருக்கேன். அவன் தான் பிரேக்கப் சொல்லிட்டு போனான் நான் இல்லை. அதனால மறுபடியும் என்னை தேடி வந்தா நான் ஏத்துபேன்”.





இப்படியாக பல பெண்கள், ஆண்கள் என ஒவ்வொருவரும் தங்களின் காதல் பிரேக்கப், மற்றும் அது போல் நடக்காது, அப்படி நடந்துவிட்டால், என ஒவ்வொரு கோணத்தில் தொகுப்பாளினியாக அவள் கேள்விகளும், அதற்க்கான பதில் சொல்பவர்களிடமும் வருத்தம், மகிழ்ச்சி என அனைத்தையும் அவளும், அவள் கேமிராமேன் சுரேஷூம் அழகா படம்பிடித்தனர்.




காதல் செய்பவர்கள் தங்களின் காதலை வெளிபடுத்தும் முறைகள் இன்றைய காலத்தில் போனில் வைக்கும் ஸ்டேட்டஸ் வரையிலும் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. ஆனால் அதே காதல், அதே காதலித்த பெண், காதலித்த ஆண் ஆனால் வெளிப்படுத்து விதம் மட்டும் வேறாக இருந்தது.




”சொந்தமே ஒரு வானவில்
அந்த வண்ணம் கொஞ்சம் நேரம்.
பந்தமே முள்ளானதால் இந்த
நெஞ்சில் ஒரு பாரம்...
பணங்காச கண்டுப்புட்ட புலி கூட
புல்லை திங்கும் கலிகாலம் ஆச்சுதடி
கண்மனி என் கண்மனி
அடங்காத காளை ஒன்னு அடிமாட
போனதடி கண்மனி... கண்மனி...”




தன் வாட்ஸப் ஸ்டேட்டஸில் ரஜினியின் சோகப்பாடலை வைத்துகொண்டிருந்தான் இளமாறன். அந்த பாடல் வாட்ஸப்பில் செட் ஆகிவிட்டதா, இல்லையா என்று மீண்டும் ஒரு முறை அதை ஓடவிட்டு பாட்டின் சத்ததை அதிகபடுத்தி தன் தாயின் காதில் விழுமாறு வைத்தான்.



சமையலில் மூழ்கிருந்த கண்மனி, தன் மகன் வைத்தை பாட்டை கேட்டு, கையில் தோசை கரண்டியுடன் அவனை நோக்கி வந்தார்.




இப்போ எதுக்கு டா என் அண்ணே குடும்பத்தை குறி வச்சு இந்த பாட்டை ஏன் போட்ட.



“யம்மா, உன் அண்ணே குடும்பத்தை தான் குறி வச்சு இந்த பாட்டை போட்டேனு நீ பார்த்தயா?”



பின்ன எதுக்கு, சொந்தமே ஒரு வானவில்னு போடுற.




”இது என் போன் நான் என்ன பாட்டை வேணா போடுவேன். அது ஏன் நீங்க கேக்குறீங்க திருமதி. கண்மனி இளங்கோவன்.” என வெளியில் பொய் சொன்னாலும், உண்மையில் தாயின் அண்ணங்களை குறி வைத்து தான் இந்த பாடலை செட் செய்தான் என்று அவனுக்கு மட்டுமில்லை, அவன் வாட்ஸ்ப்பில் இருக்கு அவர்களின் குடும்பத்திற்கே தெரியும்





என் அண்ணன் குடும்பம்னா உனக்கும், உன் அப்பாக்கு அவ்வளவு இழப்பமா போச்சுல. என் அண்ணனுங்கனா எனக்கு உயிர், அவங்க என்னமோ செய்யட்டும், ஆனா அவங்க பாசத்துக்கு ஈடா வேறெதும் இல்லை.



“ஆமா, ஆமா... உன் அண்ணனுங்க பாசம் தான் நல்லா தெரியுதே. பலகோடி சொத்தும், அஞ்சு தலமுறைக்கும் சேர்த்து வைச்சுருக்குற சொத்தும் இருக்கு. ஆனா, நரேன் கல்யாணத்தை யாருக்கும் தெரியாம பண்ணிட்டு வராங்க. கேட்டா, சொந்த விஷயம் சொல்ல முடியாதுனு நம்ம அப்பாக்கிட்ட சத்தம் போட்டுறுக்காங்க, அதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியாது. நான் உன் அண்ணன் குடும்பத்தை பத்தி ஏட்டிக்கு போட்டியா பாட்டு வச்சது உன் கண்ணுக்கு தெரியுது.




“ரொம்ப பேசாத இளா, இனி ஒரு முறை என் குடும்பத்தை பேசாத. பேசுனா, என் அண்ணன் வீட்டுல உனக்கு பொண்ணு இல்லை.” என அவனின் தாய், அவனின் வீக் பாயிண்டில் கைவைத்துவிட்டு சென்றார்.



அய்யோ, அவ இல்லாம நான் எங்க போவேன்... டேய் இளா, மாமன் மகளை கல்யாணம் பண்ணற வரைக்கும் கொஞ்சம் அமைதியா இரு. அவனுக்கு அவனே சொல்லிகொண்டான்.




சமையலில் கவனம் இருந்தாலும், மகன் சொன்ன விஷயமும் அவருக்கு புரிந்து தான் இருந்தது. ஏன் யாருக்கும் தெரியாமல் நரேனின் கல்யாணம் நடக்க வேண்டும். முக்கியமாக, எனக்கு ஏன் தெரியகூடாது என அவர்கள் நினைக்க வேண்டும். என அவரும் பல முறை யோசித்தார்.




ஆனால், இப்படி ஒரு கோணத்தில் அவர் யோசிக்கவில்லை. தனக்கு ஒரு மகள் இருக்கிறாள் அவளை அண்ணன் மகனுக்கு கொடுக்கலாம் என்று துளியும் யோசிக்கவில்லை. ஏன் கண்மனிக்கே அதில் பிடித்தம் இல்லை. இளாவுக்கு மட்டும் அண்ணன் மகளான சாரிகாவை மணம் முடிப்பது என அவர்கள் ஏற்கனவே பேசிகொண்டாது.




இளமாறனின் ஸ்டேட்டஸ் பாட்டை பார்த்துவிட்டு, அவர்கள் வீட்டு பெரியவர்கள் முதல் சிறியவர் வரை அவனுக்கு பாட்டுடன் சேர்த்து ரிப்ளேயும் செய்தனர்.
பெரியவர்களான, அங்காம்மாள், சேனாதிபதியும் சேர்ந்து “சூப்பர்” என்றும். அவனது மாமன்ங்கள் மூவரும் “கோவமான ஸ்மைலியும்”. அத்தைகள் மூவரும் “அடி தூள்” என்றும். சிறியவர்களான, அத்தை மகள்கள், மகன்கள் “டேய் எப்படி டா இவ்வளவு தைரியம் வருது” என மகிழ்ச்சியாக ஸ்மைலியும் போட்டு ரிப்ளே செய்தனர்.



ஆர்வமாக அவர்களுக்கு பதில் அனுப்பிகொண்டிருவன் அருகில் வந்தார் இளங்கோவன். ‘என்ன இளா, கம்பெனி போகனும் ஐடியா இல்லையா.’ அவர் குரல் கேட்டவுடன் தனது போனை தவறவிட்டு பிடித்தான்.



“ப்... போ... போகனுப்பா...”




அப்போ ஏன் இன்னும் குளிக்காம இருக்க, போய் குளிச்சுட்டு கிளம்புற வழியப்பாரு, நீ எல்லாம் ஒரு கம்பெனிக்கு முதலாளி, போ... போய் கிளம்பு. என அவர் கோவமாக சொல்லுகிறார... இல்லை அவரின் குரலே அது தானா என அவனுக்கு இன்றளவிலும் பிரித்து பார்க்கமுடியவில்லை.




கண்மனி... கண்மனி... என மனைவியை அழைத்தார்.



“சொல்லுங்க... வாக்கிங் போயிட்டு வந்துட்டேங்களா. இதோ, காஃபி எடுத்துட்டு வரேன்.” அவர் வாய் திறந்து கேட்டுக்கும் முன் அவர் சொல்லிவிட்டு சென்றார்



இளங்கோவன் – கண்மணி இவர்களுக்கு இரு பிள்ளைகள். மூத்தவன் இளமாறன், இளையவள் அனித்ரா. இளங்கோவன் ஆட்சியர் அலுவலகத்தில் தாசில்தாரக வேலைப்பார்க்கிறார். அவரின் காலத்தில் அரசாங்க வேலை என்பது மிகப்பெரியது. கண்மணி வீட்டில் குடும்பரசி, ஆனால் அவரின் தாய் வீடு மிகபெரிய பணக்கார வர்க்கம். இளங்கோவின் குடும்பமும் பணக்கார வர்க்கம் தான் என்றாலும், அவருக்கு அந்த பணத்தின் மீது இருக்கும் ஆர்வம் கொஞ்சமும் இல்லை. தான் வேலை பார்த்து, அதில் வாங்கும் பணம் மட்டுமே என் குடும்பத்திர்க்கு என அப்போதே சொல்லியவர்.





”என்ன உன் முகம் வாடி இருக்கு...” காஃபி கொடுக்கும் மனைவியின் முகத்தை அவர் எப்பொழுது கவனித்துகொண்டே தான் இருப்பார்.




‘எல்லாம் இளா தான் காரணம்...” என காலையில் அவனிடம் சத்தம் போட்டதை சொல்லி முடித்தார்.



அவன் சொன்னதுல என்ன தப்பு இருக்கு. என அவர் கேட்க
நீங்களும், அவனுக்கு சப்போர்ட்டா என் அண்ணன் மகனுக்கு சொல்லாம கல்யாணம் செஞ்சதுக்கு எதாவது காரணம் இருக்கும். என கணவரிடம் கூட பிறந்தவீட்டை விட்டகொடுக்கவில்லை.




“கண்மணி, எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனா சின்ன பசங்க முன்னாடி பெரியவங்க சண்டை போட்டா, அதனால பாதிக்கபடுறது நீயோ, நானோ இல்லை. நம்ம பசங்க தான், அவங்க மூளையில அது நல்லா பதிஞ்சிரும். உன் அண்ணனுங்க ‘உங்ககிட்ட சொல்லிட்டு செய்யனும் அவசியம் இல்லைனு’ என்கிட்ட சத்தம் போட்டதை இளா பார்த்தான் அதான் அவன் இப்படி எல்லாம் ரியாக்ட் பண்ணுறான். நான் அவன்கிட்ட பேசுறேன் நீ கவலையா இருந்தா எந்த வேலையும் பார்க்க முடியாது”. மனைவியையும், மகனையும் விட்டுகொடுக்காது அவர் பேசியது கண்மணிக்கு பிடித்திருந்தது.




இளமாறன், ஆர்கிடெட் கம்பெனி வைத்து நடத்துகிறான். கம்பெனி தொடங்கி மூன்று வருடம் தான் ஆனது. அவனது கம்பெனிக்கு ஆர்டர் கொடுக்கும் அனைத்து வாடிக்கையாளர்களின் மனம் திருப்த்தி அடைவது போல் அவனது கட்டிடகலை மற்றும் மார்டன் வீட்டிற்க்கு எந்தமாதிரி டிஷைன் செய்வது என அனைத்து அவர்களுக்கு பிடித்த மாதிரியும் செய்துகொடுப்பான்.




உணவு மேஜையில் ‘இனி இப்படி பண்ணகூடாது இளா. அம்மா வருத்தப்படுறாங்க. உன் வேலையில மட்டும் நீ கவனம் செலுத்து, மற்ற விஷயத்தை எல்லாம் உன் மூளைக்குள்ள எடுக்காத’ மகனுக்கு அறிவுரை கூறினார்.




“சரிங்கப்பா... சாரிம்மா...’’ தந்தையிடம் தலையசைத்து, தாயிடம் மன்னிப்பு வேண்டினான்.





மீனாட்சி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ். மிக பிரம்மாண்டமான அந்த கல்லுரியின் வாயில் கால்கடுக்க காத்திருந்தாள் நம் கதையின் நாயகி, அனித்ரா. அனைவரும் அவளை பார்த்து சிறிதாக புன்னகைத்துவிட்டு செல்ல, சிலர் மட்டும் இவள் ஏன் இங்கு நிற்க்கிறாள், என யோசனையுடம் கடந்து சென்றனர்.



‘படுபாவி... இப்படி என்னை எல்லாரும் ஷோ பொம்மைய பார்க்கமாதிரி வச்சுட்டாளே. வரட்டும் அந்த நாய் என் கையாள அடி வாங்க போற. என்னை சீக்கிரம் வரசொல்லிட்டு அவ மட்டு லேட்டா வர்ரா.’ என காலேஜ் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் அனித்ரா எப்பொழுதும், கல்லூரி ஆரம்பிக்கும் நேரத்திற்க்கு தான் வருவாள். ஆனால் வேதா சீக்கிரம் வரசொல்ல காலையில் ஏழு மணிக்கே கல்லூரிக்கு வந்துவிட, வரசொன்னவளோ இன்னும் வரவில்லை.




ஹே அனி... ஏன் இங்க நிக்குற, வா க்ளாஸ்க்கு போகலாம். அவள் நிற்பதை பார்த்து அவளின் வகுப்பு தோழன், தீனா அழைக்க.



“வேதா வருவா... அவளுக்கு தான் வெயிட் பண்ணுறேன் தீனா, நீ போ, நான் அவளோட வரேன்.”



ஒகே அனி.



“என்மேல உனக்கு எம்புட்டு பாசம் அனி, தோழனுக்கு தோள் கொடுப்பாங்கனு கேள்விப்பட்டுருக்கேன் ஆனா, எனக்கா காலேஜ் வாசல்ல கால்கடுக்க காத்திருக்கியே உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு அனி.” அவளின் நெருங்கிய தோழன் ராஜேஷ் அவள் நிற்பதை பார்த்துவிட்டு, தனக்காக தான் காத்திருக்கிறாள் என நினைத்துகொண்டு அவளிடம் பேசினான்.



த்தூ... உனக்கு யாருடா வெயிட் பண்ணது, விதுர்சனாக்கு வெயிட் பண்ணுறேன். என அவள் போட்டு உடைக்க



”கொஞ்சம் நேரம் என்னை சந்தோஷமா இருக்கவிடமாட்ட. ஆமா, அவளுக்காக எதுக்கு நீ வெயிட் பண்ணுற, அவ ஆளு தான வெயிட் பண்ணனும்.” என அவன் சொல்லும் போது, சரியாக வேத விதுர்சனா அவளின் அத்தை மகன் விஜயுடன் வந்திரங்கினாள்




அனியும், ராஜேஷூம், வேதாவையே பார்த்துகொண்டிருந்தார்கள். இது புதிது, எப்பொழுது வேதா காரில் வந்து தான் இறங்குவாள். ஆனால் பைக்கில் வந்து இறங்கியது முதல் முறை. வேதாவை இறக்கிவிட்டவனின் பார்வை, அனித்ராவின் மீது விழுந்தது. ஆனால் அவள் வேதாவின் வருகையை உணர்ந்து அவளிடம் பேசிகொண்டே மூவரும் கல்லூரிக்குள் சென்றுவிட்டனர்.




வகுப்பில் அமர்ந்திருந்த வேதாவின் முகம் சற்று கவலையில் இருந்தது. அதை கவனித்தாலும், அவளாக சொல்வது தான் சரி என அனியும், ராஜேஷூம் அவர்களுக்குள் பேசிகொண்டனர்.



அப்பொழுது வகுப்பில் உள்ள ஸ்பீக்கரில், அந்த கல்லூரியின் சேர்மேன், மற்றும் பிரின்சியும் ஒவ்வொரு வகுப்பிற்க்கும் வருவதாக அறிவிப்பு வர, அனைத்து பேராசிரியர்களும், தங்களது வகுப்பிற்க்கு சென்று, அட்டனென்ஸ் சரியாக இருக்கிறதா, வகுப்பறை சுத்தமாக உள்ளதா எனவும், சிலர் முடிக்காத பாடங்களையும் எடுத்துகொண்டிருந்தனர்.




எம்.பி.ஏ பிஸ்னெஸ் மேனேஜ்மெண்ட் படிக்கும் இவர்களது வகுப்பில் நுழைந்துகொண்டார்கள் சேர்மேன் சுரேந்தேர், ப்ரின்சியுமான, சுபாஸ்ரீ. அனைவரும் எழுந்து அவர்களுக்கு வணக்கம் தெரிவிக்க. அவர்களோ, அதை ஏற்றுகொண்டு, ஒரு மாணவியை எழுப்பி, இங்கு அனைத்து வசதியாக உள்ளதா என சுரேந்தர் கேட்க.



”எல்லாம் வசதியாக உள்ளது... சார், ஆனால் கேண்டினில் மட்டும் உணவு வகைகளை மாற்றலாமே.” என அந்த மாணவி சொல்ல



குறும்புகார மாணவனோ, “சார் நெட் கனெட்க்ட் ஆகுது ஆனா, எங்களால புதிய படப்பாடல் பார்க்க முடியலை அதை கொஞ்சம் என்னனு கேளுங்க சார்.”



ஓகே... நான் கேக்குறேன். ஆனா, சார் எத்தனை அரியர் வச்சுருக்கீங்கனு சொல்லுங்க, அதுக்கேத்த மாதிரி நெட்வொர்க் சரியா கொடுக்க சொல்லுறேன். என சுரேந்தர் அவனின் படிப்பில் கைவைக்க, அம்மாணவனோ, தலையை சொரிந்துகொண்டே அமர்ந்தான்.



அனியின் அருகில் வந்து நின்றவனை நிமிர்ந்துகூட பார்க்காமல் மேஜையில் விரித்திருந்த புத்தகத்தில் பார்வையை பத்தித்திருந்தாள். ப்ரின்சியிடம் மற்றவர்களின் குறைகளை கேட்க சொன்னவன், அனியின் புத்தகத்தில் மேல் அவன் ஒரு கடித்ததை வைத்துவிட்டு சென்றான்.



இதை யாரும் கவனிக்கவில்லை என அவன் நினைக்க, அவளின் நண்பர்கள் இருவரும் கவனித்துவிட்டனர்.



தொடரும்………….






 
உங்களுடைய "என் மன்னன்
எங்கே என்று சொல்லு"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
மீரா அஞ்சலி டியர்
 
Last edited:
Top