Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mana (na) m Purinthom - 8

Advertisement

mibrulz

Active member
Member
அத்தியாயம் 8

நீ என்னுடையது என்று சொல்லி வெளியே வந்து விட்டான். ஆனால் அவனுக்கு தீரஜை பற்றி தெரிய வேண்டும். எப்படி என்று யோசித்து கொண்டே வீட்டின் வாசலில் வந்தான். நித்யா கோஃபி கோப்பையும் கொண்டு யாமினியறையில் சென்றாள். யாமினியை பார்த்தபோது அவள் ஏதோ பிரமிப்பில் இருக்கிறது போல் தோற்றமளித்தாள்.
"நீ எப்ப எழுந்தாய் யாமி..? நிக்ஸ் எங்கே..?
"என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி இருக்க..?"
ஏதோ கேட்பதாக திரும்பி வந்த நிகிலின் காதுகளில் இது விழ அவனோ யாமினியை வம்பிழுக்கிறதுக்காகவே அவளை பார்த்து
"சொல்லு யாமி.. உனக்கு மூச்சடைந்ததை பத்தி சொல்லு.."
"என்ன சொல்ற நிகில்..?" நித்யா நிகிலை பார்த்து கேட்கவும், யாமினி அவனை முறைத்தாள். பிறகு நித்யா யாமினியை பார்க்கும்போது நிகில் அவளை பார்த்து கண்ணடித்தான். அவன் கண்களில் அவன் சிரிப்பில் குறும்பு படர்ந்திருந்தது.
இந்த நிகில் யாமினிக்கு புதுசு. நிகில் ரொம்ப சீரியஸ் டைப். அவளை போலவே.. ஏன் இந்த மாற்றம் அவனில். அவனுக்கு தான் காதல் நோய் வந்திருக்கிறேத.. சித்தர்களை பித்தர்களாக்கும் நோய்.
"ஒன்னுமில்லை நிது.. அது மயக்கத்திலிருந்து வெளி வரும்போது கொஞ்சம் மூச்சு விட முடியாமலிருந்தது. அவ்வளவு தான்.. நீ போய் பத்மாம்மாவை ஃபோண் பண்ணு.. " என்று நிலைமையை சமாளித்தான் நிகில்.
"சரி டா.. இவளை பார்த்துக்கோ.. " என்று சொல்லி நித்யா தன் அலைபேசியெடுக்க சென்றாள்.
"இனி அது மட்டும் தான் என் வேலை.." யாமினிக்கு மட்டும் கேட்குமாறு சொன்னான் நிகில். யாமினி திடுகிட்டு அவனை பார்த்தாள்.
நிகில் அவளை நோக்கி நடந்து வந்தான். குனிந்து அவளின் காதோரமா அவனின் மூச்சு காற்று படும் படி " வாட் யூ ஹர்ட் இஸ் ரியல். யூ ஆர் மைன். அன்ட் நீயே அதற்கு எதிரியென்றால்.. பிலீவ் மி.. உன் சம்மதம் இல்லாமலே உன்னை என்னுடையதாக்கி கொள்வேன். " என்று சொல்லி யாமினியின் பட்டு போலிருக்கும் இதழ்களை தன் விரல்களால் வருடிய பின் சென்றான்.
யாமினிக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.
வெளியில் நித்யா உட்கார்ந்திருந்தாள்.
"நிது.. உனக்கு தீரஜை பற்றி ஏதாவது தெரியுமா..?"
"நம்ம புது க்ளயன்ட் தீரஜ் தானே.. இல்லை நிக்ஸ்.. உன்னளவு தான் எனக்கும் தெரியும். என்னாச்சு டா..?"
"இல்லை.. நதிங்க். இன்னிக்கு அவருடைய கேஸிருக்கே.. அதனால் தான் ஏதாவது தகவல் தெரிஞ்சுக்கலாம்னு நினைச்சேன்."
"ஓ.. கே.. ஸோரி டா.. ஐ டோண்ட் நோ.."
அந்த நேரம் பார்த்து பத்மாவதி அங்கே வந்தார்.
"எங்கே யாமினி..?"
"உள்ள இருக்காம்மா.."
"சரி.. நிது நீ பார்த்துக்கோ.. நான் கிளம்பறேன். கேஸ் வேற இருக்கு. "
"சரி.. வீ சால் மீட் இன் ஓஃபிஸ்."
சிறு தலையசைப்புடன் தன் வீட்டிற்கு செல்ல புறப்பட்டான் நிகில். அப்போது தான் நகுலின் ஞாபகம் வந்தது.
யாமினியின் அம்மாவை பார்த்து கொள் என்று சொல்லி இவன் நகுலிடம் சொன்னது ஞாபகத்தில் வர அவனை அலைபேசியில் அழைத்தான். திரும்பி வீட்டிற்குள் சென்றால் யாமினியை பார்க்க தோன்றும். பார்த்தால் தன்னை கட்டுப்படுத்த முடியாது என்று அவனுக்கு நன்றாக தெரியும்.
அழைப்பை எடுத்த நகுல்" என்னாச்சு டா.. ஒரே வீட்டிலிருந்து ஃபோன் கோல் போடுவாயா டா..?"
"டேய் நகுலா.. நான் வெளிலதானிருக்கேன். கிளம்பனும் டா. கேஸ் வேறயிருக்கு.."
"நான் கேஸ பத்தி மறந்துட்டேன்.. இரு வரேன்."
நகுல் வந்ததும் இருவரும் கிளம்பினார்கள்.
"அம்மா எப்படி இருக்காங்க..? அப்பா கிட்ட சொல்லியாச்சா..?"
"பாவம் அவங்க.. ரொம்ப கவலைப்பட்டாங்க.. தைரியம் சொல்லி வந்திருக்கேன். சரி... நீங்க ரெண்டு பேரும் எப்படி அந்த க்ரவுண்டுக்கு போனீங்க..?"
"நாங்க ஜோகிங்க் போனோம்.."
"சேர்ந்தா..?"
"இல்லை..
" தென்.. ?"
"இப்ப தெரிஞ்சே ஆகனுமா..கேஸிருக்கு. "
அவனை நகுல் வற்புறுத்தவில்லை. கேஸ் கொஞ்சம் சிக்கலானதால் அது தான் இப்ப முக்கியம் என்றதால் வாயைத் திறக்கவில்லை.
இருவரும் தங்கள் வீட்டிற்கு சென்று தடபுடலாக ஒரு குளியல் போட்டு தங்களுடைய நிறுவனத்திற்கு சென்றனர்.
நிறுவனத்திற்கு வந்ததும்
"கேஸ் ஃபைலெடு நகுல்.. கிளம்பலாம்.."
"டேய்.. கடவுள் கூட பொறுக்க மாட்டாரு டா.. பசிக்குது.."
"டேய் நகுல்.. எது இம்போர்டன்ட்னு தெரிய வேண்டாம்.. கிளம்பு.. இன்னிக்கு மி. சர்மாவிற்கு பெயில் கிடைக்கனும். கேஸ் முடிஞ்சு எனக்கு யாமினிகிட்ட பேசி நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க வேண்டியதிருக்கு. கமோன்..."
நகுலுக்கும் இவர்களுக்கு மத்தியில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டியதால் ஒரு சிறு தலையசைப்புடன் ஃபைலெடுத்துக் கொண்டு கிளம்பினான்.
நீதிமன்ற அறையில்
" யுவர் ஓனர்.. என்னுடைய க்ளயன்டுக்கு ஜாமின் அளிக்குமாறு நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். " தன் கணீர் குரலில் நிகில் பேசவும் நீதிபதிக்கு அவனுடைய குரலிலோ தோரணையிலோ அது தெரியவேயில்லை. நகுலை பார்த்தால் அவன் இவரை துளைத்து விடும் பார்வையை வீசினான். ஏதோ ஜாமின் கொடுத்தே ஆக வேண்டும் என்ற பார்வை அது. இவர்களை நன்கு அறிந்தவர் சிறு புன்னகையுடன் நிகிலை பார்த்து
"இட்ஸ் அ நோன் பெயிலபில் ஒஃபன்ஸ் கௌன்ஸெல். எப்படி நான் ஜாமின் அளிக்கிறது.?"
அரசு தரப்பு வழக்கறிஞரோ ஏளன புன்னகை ஒன்றை தன் உதடுகளில் விரிய வைத்தார்.
"வெரி வெல் ஸெட் யுவர் ஓனர்.. ஆனால் அ க்ளயன்ட் அந்த கொலையை பண்ணவில்லை என்று நான் நிரூபித்தால் ஜாமின் கொடுத்து தான் ஆகனும்."
இது கேட்டவுடன் தன் இருக்கையிலிருந்து சடாரென எழுந்தார் அரசு தரப்பு வக்கீல்.
"இது நாடகம் போடும் இடமில்லை நண்பரே.. கொலை நடந்த இடத்தில் இருந்து இவரை பொலீஸ் கைது பண்ணி இருக்கிறார்கள். அப்போ எப்படி இவர் கொலை பண்ணவில்லை என்று நீங்கள் சொல்லலாம்."
 
Top