Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mana (na) m Purinthom - 7

Advertisement

Shwetha

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 7

தன்னை இறுக பற்றியிருந்த கைகள் யாருடையது என்று பாரத்தாள் யாமினி.
"நிகில் நீ.... இங்க.." என்று தொண்டைக்குள் இறங்கிய சத்தத்தில் கேட்டாள்.
அவன் முகத்தில் கடுகளவு கூட உணர்ச்சிகளை அவளால் பார்க்க முடியவில்லை. மனது வேதனையில் அழுதது. அது கண்கள் வழியே வெளியில் வழிந்தது.
அது பார்த்தும் நிகிலின் கோபம் குறையவில்லை. மாறாக கூட தான் செய்தது. தனக்கு வேண்டாத ஏதோ உதறி விடுவது போல் அவளை உதறி விட்டான்.
நிகிலின் இந்த புறக்கணிப்பை தாங்க முடியாமல் யாமினியின் கண்களிலிருந்து கண்ணீர் அணை உடைத்து வரும் வெள்ளம் போல் நிற்காமல் வந்து கொண்டே இருந்தது.
நிகில் திரும்பி நடக்க ஆரம்பித்தான். அவளின் கண்ணீர் அவனை ஏனோ வதைத்தது. ஆனால் அவன் தன்னை கட்டுபடுத்தி கொண்டு திரும்பி பாற்க்காமல் நடந்தான்.
அவன் போகிறதை பார்த்து யாமினியால் தன்னை கட்டுக்குள் வைக்க முடியவில்லை.
"ஏன் இப்படி பண்ணற நிகில்? நீ என்னை புறக்கணிக்கிறது எனக்கு மரண வேதனையை கொடுக்கிறது. ப்ளீஸ்.. என்னை பாரேன்.. என்கிட்ட பேசேன்.. ப்ளீஸ்.." என்று சொல்லிக்கொண்டே மயங்கி விழுந்தாள்.
கொஞ்சம் தூரம் நடந்து சென்ற நிகிலுக்கு அவன் பின்னால் கத்தி கொண்டிருந்த யாமினியின் சத்தம் கேட்காமல் போக மிக சிரமபட்டு தன் கோபத்தை அடக்கி திரும்பி பார்த்தான்.
பார்த்ததும் அதிர்ந்தான். ஒன்றும் யோசிக்காமல் அவளை அலேக்காக தூக்கி பக்கமிருந்த பெஞ்ச்சின் மேல் கிடத்தினான். ஓடி போய் தண்ணீர் எடுத்து வந்து அவளின் முகத்தில் தெளித்தான். யாமினி மெதுவாக அசைய ஆரம்பித்தாள். நகுலை அலைபேசியில் அழைத்து உடனே தானிருக்கும் இடத்தில் வர சொன்னான். அடுத்த பதினைந்து நிமிடத்தில் நகுல் தங்கள் காரில் வந்து நின்றான். காலை ஆனதால் அதிகம் ஆள் அருவம் இருக்கவில்லை. அவளை தூக்கி கொண்டே காரில் கிடத்தினான்.
"என்னாச்சு டா யாமிக்கு..?" நகுல் நிகிலிடம் கேட்டான்.
"தெரியலை நகுல். பேசிகிட்டே மயங்கி விழுந்திட்டா.." அவளின் தலையை தன் மடியில் கிடத்தியபடியேச் சொன்னான் நிகில், பகுதி உன்மை பகுதி பொய்..
நகுல் அவனை முழுவதும் நம்பாவிட்டாலும் யாமினியின் உடல் நிலையை கருத்தில் எடுத்து நிகிலிடம் வேறொன்றும் கேட்கவில்லை.
"ஹோஸ்பிடல் போகலாமா நிக்ஸ். "
"நோ டா.. லெட்ஸ் கோ டு ஹெர் ப்ளேஸ். நான் நிதுவ கோல் பண்றேன்."
நிகில் நித்யாவிற்கு அழைத்தான் ஆனால் நித்யா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் அவள் அழைப்பெடுக்கவில்லை.
"என்னாச்சு நிக்ஸ்.? அந்த கும்பகர்ணி ஃபோன் எடுக்கைலையா? இவள..... "
விடு நகுல்.. சீக்கிரம் போ.."
யாமினியுடைய வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான் நகுல்.
நித்யா கதவு திறப்பாள் என்று நினைத்தால் ருக்மணி கதவை திறந்தார்.
நிகிலும் நகுலும் அதிர்ச்சியடைந்தநர். இவர்களை பார்த்து மலர்ச்சியடைந்தவர் நிகிலின் கையில் துவண்டு கிடந்த யாமினியை பார்த்ததும் பதறி போனார்.
"என்னாச்சு யாமிக்கு..?"
"நகுல்.. நீ அம்மா கிட்ட நடந்ததை சொல்லு நான் இவளை உள்ளே போய் படுக்க வைக்கிறேன்." நிகில் அவளின் அறைக்குள் போகவும் நித்யா எழுவதும் சரியாக இருந்தது.
"நிக்ஸ்.. என்னாச்சு..?"
"இதே கேள்வியை எத்தனை பேர் தான் கேட்ப்பீங்க.."
"சொன்னால் தானேடா தெரியும்." நித்யா குறைபட்டாள்.
" நீ பத்மா அம்மாவை கூப்பிடு.. அவர் இங்க வந்து பார்கட்டும்.."
"சரி.."
நித்யா அவர்களை அலைபேசியில் அழைத்தாள். அவரும் வறேனென்று சொல்லி வைத்தார்.
நகுல் அதற்குள் ருக்மணியிடம் அவனுக்கு தெரிந்ததை சொல்லி முடித்தான்.
அவரும் நகுலும் பெண்களின் அறைக்குள் நுழைந்தார்கள்.
"நிக்ஸ்.. நான் போயி அம்மாவை கூட்டிட்டு வறேன்.."
"வேண்டாம் நகுலா அம்மாவே வறேன் என்று சொன்னார்கள். " நித்யா அவனிடம் சொன்னாள். கூடவே கண்களாலே என்ன நடந்ததென்று கேட்டாள்.
அவன் தனக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை என்று இரு தோளையும் குலுக்கினான்.
"நிது போய் கொஞ்சம் தண்ணி எடுத்துகிட்டு வா.. நகுல் நீ அம்மாவை கொஞ்சம் பார்த்துக்கோ.. அம்மா இவளுக்கு ஒன்றுமில்லை. ஷீ இஸ் ஜஸ்ட் டயர்ட். சரிய்யிடுவா. நீங்கள் அப்பா கிட்ட போங்க.. அவருக்கு தெரிய வேண்டாம். அவரை சமாளியுங்கள்."
எல்லோருக்கும் தெரியும் க்ரிஷ்ணனுக்கு யாமினி என்றால் எவ்வளவு பாசமென்று. அதுவும் அவருக்கு இதயம் கொஞ்சம் பலவீனமானது கூட. அதனால் ருக்மணியும் நிகிலின் பேச்சை கேட்டு சரியென்று சொல்லி போனார்கள். எல்லோரையும் சமாளித்த நிகிலால் தன்னை சமாளிக்க முடியவில்லை.
"என்னாச்சு உனக்கு யாமி..? ஏன் இப்படியாகி விட்டாய். நான் உனக்கு ஒன்றுமில்லையா.."
இதை யாமினி கண் திறந்திருந்தாள் என்றால் அவன் ஒருபோதும் சொல்லியிருக்க மாட்டான். அப்படி சொன்னால் அவன் அவனில்லையே..
அவள் அசைய ஆரம்பித்தாள். அவன் அவளையே கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டே இருந்தான். அவளின் நெற்றியில் ஆரம்பித்து அவளுடைய கண்கள்.. அதில் வெளி வர வேண்டுமா வேண்டாமா என்றிருந்த கண்ணீர் துளியும் அவளுடைய எடுப்பான நாசியும் சாயம் பூசாமலே சிவந்திருக்கும் அதரங்களும் அவனை அவளில் மூழ்கிட அழைத்தது.அவளை விழாமல் தடுத்தபோது அவளின் மார்பகங்கள்அவனை உராய அவன் தன்னையே துலைத்தான். இப்போது அது ஞாபகம் வருகையில்அவனால் தன்னை கட்டுபடுத்த பெரும்பாடுபடவேண்டியது. அவனை அதிகம்சோதிக்காமல் நித்யா தண்ணி கொண்டுவந்தாள்.
“நிது, யாமி அசைய ஆரம்பித்துவிட்டாள்.நீ அவளை பார்த்துக்கோ.நான் கிளம்பறேன்.”
“ஏன் நிக்ஸ்.. கொஞ்சம்நேரம் இரு.. நான் காஃபி எடுத்து கிட்டு வரேன்.”
அவனுக்கும் அது தேவயாகஇருக்க சரி என்றான்.
யாமினி மயக்கத்தில் ஏதோ பிதற்ற ஆரம்பித்தாள்.
“ஸோரி தீரஜ்.. என்னால் உன்னை காபாற்ற முடியவில்லை. என்னை காதலிச் சதப்புக்காக நீ நிறைய போராடியிருக்காய்.. ப்ளீஸ் ஃபொர்கிவ் மி.“
அதுவரை மென்மையாயிருந்த நிகிலின் முகம் உணர்ச்சிகளை துடைத்தெறிந்து இறுகிவிட்டது.
ஆனால் அவன் ஒன்றுமட்டும் இறுதியாக மனதில் நினைத்திருந்தான். இனி யாமினி அவனுடையது மட்டுமே. அதன் விளைவாக யாமினியின் இதழ்லகளி்ல் வன்மையாக தன் இதழ்களை பதித்தான். அப்படி இதழ்கள் இதழ்களோட சிறையில்அடைக்கப்பட்டதில் யாமினியின் கண்களிலிருந்து கண்ணீர்வழிய ஆரம்பித்தது. நிகில் தன்னை அறியாமலே அதை துடைத்தான்.
யாமினி மூச்சுவிட முடியாமல் திணறியபோது தான் நிகில் அவளை விட்டான். அவளும் மயக்கத்திலிருந்து வெளியேவந்துவிட்டாள்.அவள் நடந்ததை நம்பும் முன் நிகில்அவளிடம் ஒன்றுமட்டும் கூறினான்..
“யாமி... யூ ஆர் மைன்...”
 
Top