Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mana (na) m Purinthom - 6

Advertisement

Shwetha

Tamil Novel Writer
The Writers Crew
யாமினி-நித்யாவின் வீடு.
இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். அதனால் இருவரும் பெங்களூரில் இரு படுக்கையறை கொண்ட ஒரு வீடு வாடகைக்கு எடுத்திருந்தனர். சமயல் மற்றும் வீடு சுத்தம் செய்வது எல்லாம் நித்யாவும் யாமினியும் தான்.
அழுது அழுது யாமினி சோர்வடைந்திருந்தாள். நித்யாவும் அவளை புண்படுத்தும் வகையில் ஒன்றும் கேட்கவில்லை. வீட்டுக்குள் நுழைந்ததும் யாமினி சோஃபாவில் சரிந்தாள். நித்யா ஒன்றும் பேசாமல் குளியலறைக்குள் புகுந்தாள். திரும்பி வந்து பார்த்த போது யாமினி தன் அறையில் இருந்தாள். நித்யா சமையலறைக்குள் போய் இரவு சாப்பாடுக்காக உப்புமா கிளற சென்றாள். அவளுக்கும் மனது ஒரு நிலையில் இல்லை. இவர்கள் வாக்குவாதம் பண்ணுவார்கள் ஆனால் ஒரு போதும் பேசாமல் இருந்ததில்லை. இன்று ஓர் சூறாவளி வந்து தாக்கியது போலிருந்தது. ஒரு வழியாக சமயல் பண்ணி முடித்து அவள் வந்து பார்த்தால் யாமினி தூங்கியிருந்தாள். அவளை தொந்தரவு செய்ய நித்யாவிற்கு பிடிக்கவில்லை. அவளுக்கும் சாப்பிட பிடிக்காமல் எல்லாவற்றையும் ஃப்ரிட்ஜில் வைத்தாள். விளக்குகளை அணைத்து தன் அறைக்கு அவள் போக எத்தனிக்கயில் அழைப்பு மணி ஒலித்தது.
"இந்த நேரத்தில் யாராயிருக்கும்.?" என்று யோசித்தபடியே கதவின் பக்கம் வந்தாள்.
கதவிலிருக்கும் சிறு துவாரம் வழியாக யார் என்று பார்த்தாள். யாமினியின் அம்மா மற்றும் அப்பா.
"இவர்கள் இந்த ராத்திரியில்..?" மனதில் யோசித்தவாரறே கதவை திறந்தாள் நித்யா.
"அம்மாடீ, தூங்க புறபட்டீங்களா..? நாங்க இன்னிக்கு காலைல தான் பெங்களூர் வந்தோம். யாமிக்கு ஸர்ப்ரைஸாகட்டும்னு தான் அவ கிட்ட நாங்க ஒன்னும் சொல்லல."
என்று சொல்லி கொண்டே உள்ளே நுழைந்தார்கள்; க்ரிஷ்ணனும் ருக்மணியும்.
பேருக்கேத்தார் போலேற்ற ஜோடி. புரிதலுக்கேற்ற உதாரணம் இவர்கள் என்று யாமினி எப்பொழுதும் சொல்லுவாள். அதை அவளின் மற்ற மூன்று நண்பர்களும் ஆமோதிப்பார்கள். இவர்களுக்கு யாமினி ஒரே பெண். யாமினிக்கு அவள் அப்பாவின் குணம். தன் மனதில் இருக்கிறது வெளிப்படுத்த தெரியாது. அவள் அப்பா
எப்பவும் சொல்வார்" ருக்குவானதால நான் பிழச்சேன். நான் சொல்லாமலே அவளுக்கு தெரியும் நான் என்ன நினைக்கிறேன்னு"
ருக்மணி ஒரு சிரிப்பை மற்றும் பதிலாக கொடுப்பார்.
"வாங்கம்மா.. வாங்கப்பா... அவளை விட எனக்கு இது ப்ளஸன்ட் ஸர்ப்ரைஸ்." நித்யா சந்தோஷமாக கூறினாள்.
" சந்தோஷம் கண்ணா.. யாமி எங்கே..?" என்று ருக்மணி கேட்டதற்கு நித்யாக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. நடந்தது எல்லாம் யாமினி தான் சொல்லணும். அதனால் பொய்யுரைத்தாள்.
"ஆமாம்மா.. அவள் இன்னிக்கு சீக்கிரமே தூங்கி விட்டாள். எழுப்பவா..?"
"வேண்டாம்மா.. தூங்கட்டும். நாளைக்கு காலைல பேசிக்கலாம்." என்று சொன்னார் க்ரிஷ்ணன்.
அவர்களுக்கு படுக்க இன்னொரு அறையை சரி செய்து கொடுத்த பின் தானும் உறங்க எத்தனித்தாள்.
அங்கே நிகிலுக்கு தூக்கம் மருந்துக்கு கூட வரவில்லை. தன் அறையில் அங்கும் இங்கும் நடை பயின்று கொண்டிருந்தான். அவனுக்கு இன்னும் கோபம் தணியவில்லை.
"இன்னாள் வரைக்கும் யாரும் என்னை இப்படி புறக்கணித்தது இல்லை. அதுவும் யாமினி என் தோழி. அவள் ஏன் இப்படி பண்ணினாள்." இதுதான் அவன் மனதில் ஓடி கொண்டே இருந்தது. காலை விடிந்தது ஆனால் அவன் தன் கோபத்தை கைவெடியவில்லை. ஜோகிங்க்கு புறபட்டு விட்டான்.
யாமினி அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து விட்டாள். முந்தைய நாள் நடந்ததெல்லாம் படமாக கண் முன்னே ஓடியது. கூட கண்ணீரும் பட்டு கன்னங்கள் வழியே வழிந்தோடியது. மனதின் பாரம் ஏறியது. தூங்க பிடிக்காமல் யாமினி தன் ட்ராக் பான்ட்- டீ சர்ட்டை அணிந்து ஜோகிங்க்கு கிளம்பி விட்டாள். தன் வீட்டிலிருந்து சுமார் இரண்டு கி.மீ தள்ளி ஒரு மைதானத்தில் ஒரு வருடமாக யாமினியும் நித்யாவும் ஜோகிங்க் போய் வந்தார்கள். இன்று தனியே கிளம்பினாள். அங்க அவள் நேர இருக்கும் நிகழ்வை பற்றி தெரியாமல்.


அந்த நிகழ்வு சுகமானதா இல்லையா என்று படித்ததுக்கப்புறம் கருத்து பகிருங்கள். எபி இங்கு முடியவில்லை.

நிகில் தன் வீட்டிலிருந்து ரொம்ப தூரம் ஓடி வந்துவிட்டான். காரின் ஹோரன் சத்தத்தில் தான் அவன் தன்னை மீட்டு கொண்டான். அக்கம் பக்கம் பார்த்த பின் தான் அவனுக்கு புரிய வந்தது அவன் நிறைய தூரம் ஓடி வந்துவிட்டான் என்று. மனதில் உள்ள கோபம் அவனை அழுத்த பக்கத்தில் இருந்த மைதானத்தினுள்ளே நுழைந்தான்.
ஒரு ரவுண்டு ஓடி வந்தவன் இளைப்பாற ஒரு பெஞ்சில் அமர்ந்தான்.
தன்னுடைய ஐந்து கி.மீ ஓடி முடித்தவள் இளைப்பாற கூட பிடிக்காமல் மறுபடியும் ஓட ஆரம்பித்தாள். அவளின் கால்கள் வலுவிழந்து துவண்டு போக அவள் விழ போனாள். அவள் கீழே விழாமல் இருக்க இரு கரங்கள் அவளை தாங்கியது.
 
யாரு யாமினியை தாங்கி பிடித்தது?
நிகிலா இல்லை நகுலா?
இல்லை வேறொரு மூன்றாவது
நபரா, ஸ்வேதா டியர்?
 
Top