Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mana (na) m Purinthom - 4

Advertisement

Shwetha

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 4
அஸோஸியேட்ஸ் முழுவதும் பரபரப்பானது. ஷில்பா மயங்கி விழுந்த உடனே நித்யா அவளை தாங்கி பிடித்து கொண்டாள்.
"என்னாச்சு இவங்களுக்கு..? நிக்ஸ் உடேன இவங்களை ஹோஸ்பிட்டலில் சேர்ககணும். "
"யெஸ். இப்பவே இவங்களை கூட்டிட்டு போகலாம்." என்று நிகில் சொல்லி கொண்டே கார் பார்க் செய்த இடத்திற்கு சென்றான்.
"நகுல்.. மரம் மாதிரி நிற்க்காம எனக்கு ஹெல்ப் பண்ண போறியா இல்லயா.?"
"ஓஹ்.. ஸோ ஸோரி நிது.." என்று சொல்லி கொண்டே நகுல் ஷில்பாவை அலேக்காக தூக்கி கொண்டான்.
"உன்னை உதவ தான் சொன்னேன்..." முகம் சுழித்து கொண்டாள் நித்யா.
"இவளுக்கு என்னாச்சு..?இவள் இப்படி பேசும் ரகம் அல்லவே. " என்று மனதில் நினைத்துக் கொண்டே நகுல் நடந்தான்.
காரில் ஏறியதும் தான் நித்யாவிற்கு யாமினியை பற்றிய ஞாபகம் வந்தது.
"ஹேய்.. யாமி எங்க கய்ஸ்?"
நிகில் வண்டியை செலுத்தி கொண்டே "தெரியாது நிது.. நான் அவளை கோல் பண்ணினேன். ஆனால் அவள் கட் பண்ணிட்டா."
"என்னாச்சு இவளுக்கு..? காலைல சரியா தானே இருந்தா." நித்யா யோசித்தாள் என்றால்
நகுலோ "நம்ம ஆஃபிஸில் இருக்கும் பொண்ணுங்களுக்கு என்னமோ ஆச்சு.." என்று வாய் திறந்து சொல்லியே விட்டான்.
நகுலை பார்த்து நித்யா முறைத்தாள்.
நிகில் எதுவும் பேசவில்லை. காரை மருத்துவமனையின் வாயிலில் நிறுத்தினான். நகுல் ஷில்பாவை தூக்கி கொண்டே மருத்துவமனைக்குள் நுழைந்தான். அவனை முறைத்து கொண்டே நித்யாவும் உள்ளே சென்றாள். நிகில் அதற்குள் மருத்துவரை போய் பார்த்தான். அவர் ஐம்பது வயதை தொட்ட ஒரு பெண்மணி. ஷில்பாவை அவர் அறையில் இருக்கும் கட்டிலில் கிடத்த சொன்னார்.
அவர் அவளை பரிசோதித்து பார்த்த பிறகு அவளை ஓய்வெடுக்க விட்டார்.
"ஷீ இஸ் ப்ரக்னன்ட். ரொம்ப மன உளைச்சலில் இருக்கா போல பாவம். அது தான் மயங்கி விழ காரணம். உங்களுக்கு இந்த பொண்ணு என்ன வேணும்.?"
"டாக்டர்.. ஷீ இஸ் அவர் கிளையன்ட். இவர் கணவரின் கேஸ் நாங்க தான் பார்க்கறோம்." என்று நிகில் விளக்கமளித்தான்.
அதானே பார்த்தேன்.. நகுல் கல்யாணம் பண்ணினா அவன் அம்மாவாகிய எனக்கு எப்பவோ தெரிஞ்சிருக்கணமே.."
"ஹ..ஹ..ஹ.. டாக்டர்.." என்று சொன்ன நிகிலை முறைத்தார் பத்மாவதி.
" எவ்வளவு தடவை சொல்றது.. டாக்டர் இல்லை.. அம்மா.. "
" யெஸ்.. ஸோரி அம்மா.." அசடு வழிந்தான் நிகில். "
"அவங்க எப்படி இருக்காங்க? "
"ஷீ ஹாஸ் டு டேக் கேர். அதர்வைஸ் திங்க்ஸ் வில் கெட் கோம்ப்ளிகேடட். நீங்கள் அவளை இங்க விட்டு போங்கள். நாளைக்கு வந்து கூட்டிட்டு போங்க."
"ஓ.கே.. அம்மா.. அப்ப நாங்க கிளம்பறோம்."
" வாங்க.."
இவர்கள் வெளியே வருவதும் ஸலீம் அங்கு
வருவதும் சரியாக இருந்தது.
"எங்கடா இருந்த நீ? " நித்யா கோபமாக கேட்டாள்.
"ஹேய் நித்து, ஏன் இந்த கோபம்?" நகுல் கேட்டான்.
நித்யா தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தாள்.
"ப்ச்.. ஐ அம் ஸோரி டா ஸலீம். டென்சனாயிட்டேன்." நித்யா வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னதும் ஸலீமுக்கு என்னவோ போல் தோன்ற
மெரிசலாயிட்டேன் என்கிறது போல் டென்சனாயிட்டேன் என்று பாட போகிறீர்களா நித்யா மேடம்.." நித்யாவை கிண்டல் செய்தான் ஸலீம்.
" ரொம்ப தான்.. போடா.." சலித்து கொண்டாள் நித்யா.
" யாமி எங்க ஸலீம்?" நிகில் கேட்டான்.
" பாஸ். யாமினி மேடம் அந்த புதிய கேஸ் வந்திருக்கே.. அத பத்தி இன்வெஸ்டிகேட் பண்ண போயிருக்காங்க."
"ஏன் ஸலீம். அவ இத பத்தி எங்களுக்கு தெரியபடுத்தவில்லை."
"நான் உங்களுக்கு தெரிந்திருக்கும்னு நினைச்சேன்."
"சரி.. பார்த்துக்கலாம் விடு. வாங்க.. ஆஃபிஸ் போய் பேசுவோம். ஸலீம் நீ எப்படி வந்த?"
"நான் என் வண்டீல தான் வந்தேன்."
"சரி.. நீ வீடு கிளம்பு.. நாங்களும் நாளைக்கு வர பெயில் அப்ப்ளிக்கேஷனை சரி பார்த்து கிளம்பிடுவோம்." நிகில் சொன்னதை கேட்டு ஸலீமும் கிளம்பினான்.
" என்ன யோசிக்கற நிக்ஸ்..?"
"ஒன்னுமில்ல"
ஆனால் அவன் சொன்ன ஒன்னுமில்லைக்கு பல அர்த்தங்கள் இருக்கும் என்று அவன் உயிர் நண்பர்களான இவர்களுக்கா தெரியாது.
இவர்கள் அஸோஸியேட்ஸ் வருவதும் யாமினியும் அங்கு வந்து சேர்ந்தாள்.
இவர்களை பார்த்தும் பார்க்காதது போல் நடந்து அவள் அறை சென்று விட்டாள்.
நிகிலுக்கு அப்படி ஒரு கோபம் யாமினி மேல்.
அவள் அறைக்கு சூறாவளி என சென்றான்.
 
Top