Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mana (na) m Purinthom - 3

Advertisement

Shwetha

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 3

"என் பேர் ஷில்பா தீரஜ் ஷர்மா. என் ஹஸ்பன்டுடைய கேஸ் நீங்கள் தான் பார்க்கறீங்க மிஸ்டர். நிகில். "

"நீங்கள் மிஸ்டர்.தீரஜ் ஷர்மாவுடைய மனைவி என்று எனக்கு தெரியவில்லை."
என்று நிகில் சொல்ல

"ஹௌ கம் நிகில்? இவங்க அப்போ உன்னை அப்றோச் பண்ணலியா?" நித்யா நிகிலை கேட்டாள்.
"நோ.. ஹிஸ் ஃபாதர் கோண்டாக்டட் மீ.. அவர் உங்களை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. ஏன் என்று நான் தெரிஞ்சுக்கலாமா.?"

நித்யா நிகிலை முறைத்தாள். அவர்கள் வேலை செய்யும் முறையை நிகில் வழிபடவில்லை. அவர்கள் ஒரு கேஸ் வந்தால் அந்த கேஸை பற்றி தீவிரமாக விசாரித்த பிறகே அந்த கேஸை எடுப்பவர்கள். இன்று அப்படி நடக்கவில்லை.

நித்யா நிகிலை ஏறிட்டாள். நித்யா ஏதும் பேசும் முன் ஷில்பா இடைமறித்தாள்.
"இஃப் யூ டோண்ட் மைன்ட் நீங்க உங்க பேச்சை பிறகு கண்டின்யு பண்ணி கொள்கிறீர்களா. " துடுக்காக பேசினாள் ஷில்பா.

நித்யா நிகிலை முறைத்தாள்.
"சொல்லுங்க மிஸஸ் ஷர்மா. வாட் கான் வீ டூ போர் யூ?"

" என் ஹஸ்பன்டை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியே கொண்டு வரணும்."

" வீ வில் ட்ரை அவர் பெஸ்ட்" என்று நித்யா கூறியதற்கு

"நீங்கள் தான் பெஸ்ட் என்று கேள்வி பட்டேன். நீங்களே ட்ரை பண்றோம் என்று சொன்னால் எப்படி. "

"எனக்கேவா" என்று யோசித்தாள் நித்யா.

" மிஸஸ்.ஷர்மா. ஃபர்ஸ்ட் ஓஃப் ஓள் உங்களை பற்றி ஏன் உங்கள் மாமனார் எங்களிடம் சொல்லவில்லை. அன்ட் நிகில், இந்த கேஸ் எடுக்கும் முன்னே வை டிட்ன்ட் யூ செக் ஓன் அதர் மாட்டர். ஏன் இதை பற்றி எனக்கு ஒன்றும் சொல்லவில்லை நிகில்? "

"எனக்கு இன்னிக்கு காலைல யாமி கால் பண்ணி இருந்தா. அவ எனக்கு கேஸோட ஃபுல் டீடெயில்ஸ் மட்டும் தான் கொடுத்தா. லைக் வாட் ஹாப்பன்ட், வென் டிட் இட் ஹாப்பன் அப்புறம் அவஸரமா ஜாமினில் தீரஜை வெளியே கொண்டு வரணும் என்று சொன்னா.யாமி சொன்னதால நான் ஒன்னும் யோசிக்கல. ஐ எம் ஸாரி."

இதையெல்லாம் அமைதியாக கேட்டு கொண்டிருந்த நகுல் ஷில்பாவை பார்த்து ஒரு கேள்வி கேட்டான்.

"நீங்கள் தீரஜுடைய மனைவி என்றால் ஏன் நீங்கள் இவ்வளவு நேரம் கழித்து எங்கைள பார்க்க வந்தீர்கள்? "

"அது..அது வந்து எனக்கு கொஞ்சம் முன்னாடி தான் தெரிய வந்தது. " இதை கேட்ட மூவரும் அதிர்ந்தனர்.

"வாட்? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க. "

"நானும் அவரும் கொஞ்சம் நாளாக தனி தனியா வாழ்கிறோம். என் ஃப்ரன்ட் சொல்லி தான் எனக்கு தெரிய வந்தது. அதனால் தான் இவ்வளவு தாமதமாக வந்தேன்."

நீங்கள் தனியா இருப்பதற்கு காரணம் நாங்கள் தெரிந்து கொள்ளலாமா? " என்று நகுல் கேட்டதற்கு ஷில்பாவின் கண்களில் நீர் தேங்கி விட்டது.

நித்யாவிற்கு அதை பார்க்க முடியவில்லை.

"தயவு செய்து அழாதீர்கள். நீங்கள் காரணம் சொன்னால் தான் எங்களால் சீக்கிரம் மிஸ்டர் தீரஜை வெளியே கொண்டு வர முடியும். அதற்கு முன் கேஸென்ன நிகில் ."

" ஃபாக்ட் ஓஃப் த கேஸ் என்னவென்றால் மிஸ்டர் தீரஜ் வந்து அவர் ஸெக்ரட்டரியை கொன்று விட்டார். மிக சிக்கலான ஒரு விஷயம். நமக்கு சாட்சி சூழ்நிலை எல்லாம் எதிரா இருக்கு."

"உனக்கு உறுதியாக தெரியுமா நகுல்?" நிகில் கேட்டான்.

"ஐ டோண்ட் திங்க். ஹீ ஹாஸ் பீன் ஃப்ரேம்ட். அவரை யாரோ மாட்டிவிட்டிருக்காங்க."

" ஆமாம்.. அவரை யாரோ மாட்டி விட்டிருக்காங்க.." என்று சொல்லி கொண்டே அழ துவங்கினாள் ஷில்பா.

" மிஸஸ் ஷில்பா.. நீங்கள் இதுவரை உங்களின் பிரிவிற்கான காரணத்தை சொல்லவில்லை. எங்களுக்கு காரணம் தெரிந்தால் தான் இந்த கேஸை பற்றி ஒரு ஐடியா வரும். " நகுல் அழுத்தம் திருத்தமாக சொன்னான்.

"யெஸ்.. ஐ கான் அண்டர்ஸ்டான்ட். நான் சொல்கிறேன். "

நித்யா ஷில்பாவிற்கு குடிக்க தண்ணீரை கொடுத்தாள்.

தண்ணீர் அருந்திவிட்டு அவள் சொல்ல ஆரம்பித்தாள்.

" என் கணவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். நான் தில்லியில் பிறந்து வளர்ந்தவள். அவர் படித்த பிறகு அவர் அப்பாவுடன் பிஸிநஸில் ஈடுபட்டார். அவர் ஒரு பெண்ணை காதலித்தார். ஆனால் ஏதோ காரணமாக அவர்கள் பிரிந்து விட்டார்கள். தீரஜ் மனமுடைந்து போனார். ஏன் என்றால் அவர்கள் பிரிவிற்கு அந்த பெண் தான் காரணம். பாவம்.. ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ண ஆரம்பித்தார். அப்ப அவர் அப்பா அவரை தில்லியில் மேற்படிப்பு படிக்க அனுப்பினார்... " என்று சொல்லி கொண்டே ஷில்பா திடீர் என்று மயக்கமடைந்தாள்.
 
Last edited by a moderator:
தன்னோட செகரெட்டரியையே
தீரஜ் கொன்று விட்டானா?
என்ன காரணம்?
 
Last edited:
Top