Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mana (na) m Purinthom - 2

Advertisement

Shwetha

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 2

வை3என் அஸோஸியேட்ஸ். இவர்கள் நால்வரும் சேர்ந்து ஆரம்பித்த சட்ட நிறுவணம். இவர்கள் பங்களூரில் பேர் கேட்ட வழக்கறிஞர்கள்.

"ஹேய் ஸலீம், என்ன நீ குட்டி போட்ட பூனை மாதிரி அங்கிட்டுக்கும் இங்கிட்டுக்கும் நடந்து கொண்டிருக்கே."
"சும்மா இருங்க நித்யா மேம்.. உங்களுக்கு எப்பொழுதும் கிண்டல் தான்." ஸலீம் குறை பட்டான்.

ஸலீம் இவர்களுடைய ஜூனியர். இவர்களுடைய வலது கை. இப்போது அவனுக்கு என்ன பிரச்சனை என்றால் அவனுடைய அருமை காதலி ஸுல்தானாவின் அப்பாவுக்கு இவர்களுடைய விஷயம் தெரிந்து விட்டது. அவர் அவனை பார்க்க ஆஃபிஸ் வருவதாக ஸுல்தானா எச்சரித்திருக்கிறாள்.

" அடேய்.. காதலிக்கும் பொழுது நல்லா தான்டா இருந்தே.. இப்போ கை கால் எல்லாம் உதரிகிட்டிருக்கே.." நித்யா மேலும் கிண்டலடித்தாள்.

"யாமினி மேம்.. உங்க ஃப்ரன்டுகிட்ட கொஞ்சம் சும்மா இருக்க சொல்றீங்களா..?" என்று ஸலீம் கேட்டதுக்கு யாமினி பதில் சொல்லவே இல்லை.

"இவளுக்கு என்னாச்சு.?" என்று யோசித்து கொண்டே "யாமி.. ஏன் நீ டல்லா இருக்கே.. ?" நித்யா கேட்கவும் திடுக்கிட்டாள் யாமினி.

"இல்லை. ஒன்றுமில்லை நிது. ஏதோ யோசனையில் இருந்தேன்.. அதான்.." என்று இழுத்தாள்.

"இவள் ஒருநாளும் இப்படி இருந்து பார்த்ததே இல்லை. என்னவாயிருக்கும்..?" என்ற யோசனையில் ஆழ்ந்தாள் நித்யா.

"நான் தான் ஒன்றுமில்லை என்று சொன்னேன் ல.. வா.. நாம இப்போ நகுல் காபினுக்கு போகலாம்.. ஆஃபிஸ் வந்து உருப்படியா ஒரு வேலை கூட பார்க்கலை."

யோசனையை கை விட்டு யாமினி கூட சென்றாள் நித்யா.

"லவ்லி லேடீஸ். என்ன இந்த பக்கம்? இன்னிக்கு கேஸ் ஏதும் இல்லையா? " நகுல் ஒரு ஃபைலை மூடிக்கொண்டே கேட்டான்.

"இன்னிக்கு எங்களுக்கு கேஸ் ஏதும் இல்லை. நிகிலுக்கு தான் ஒரு பெயில் அப்ளிகேஷன் ப்ரஸந்ட் பண்ண காலைல கால் வந்தது. உனக்கு ஏதும் இல்லையா? " நித்யா நகுலிடம் கேட்க நகுல் யாமினியை கூர்ந்து கவனித்து கொண்டிருந்தான்.

"என்னாச்சு யாமி? இன்னிக்கு நீ ஏன் இப்படி அமைதியாக இருக்கே? யூ ஆர் நாட் பீயிங்க் யுவர்ஸெல்ஃப் டுடே.."

"சரியான கேள்வி.. ஏய் பதில சொல்லு டீ.." கில்லி படத்தில் வரும் விஜயின் தங்கை போலவே டயலோக் அடித்தாள் நித்யா.

நகுல் வாய்விட்டுச் சிரிக்க யாமினி அப்பொழுது தான் இவங்களை பார்த்தாள்.
"ஏய்.. என்னாச்சு..? ஏன் சிரிக்கறே நகுல்?"

"அய்யோ.. முதலிலிருந்தா.." சலித்தாள் நித்யா.

"ஒன்னுமில்லை தாயி.. நான் யார் என்று எனக்கே தெரியாது. " நகுல் யாமினியை வம்பிழுத்தான்.

போடா என்று சொல்ல தான் யாமினியால் முடிந்தது.

அதற்குள் நிகில் தன் வேலையை முடித்து விட்டு வந்தான்.

"என்னடா நடக்குது இங்க? " வடிவேலு பாணியில் கேள்வி கேட்டு கொண்டே.

"என்னத்த சொல்ல. " என்று நித்யா ஆரம்பிக்கும் முன் யாமினி இடைமறித்தாள்.

"எப்படி போச்சு கேஸ்? பெயில் அப்ளிக்கேஷன் அனுமதிக்கபட்டதா? அந்த கேஸ் ஃபைல் நான் பார்க்க வேண்டும்."

" ஓ சுவர். ஐ வில் கெட் த ஃபைல்." நிகில் தனக்கென்று அமைக்கப்பட்ட அறையிலிருந்த அந்த கோப்பையை எடுத்து வந்தான்.

அவன் கிட்ட இருந்து ஃபைலை வாங்கியவள் யாருடனும் ஒன்றும் பேசாமல் தன் அறைக்கு சென்றுவிட்டாள்.
"என்னாச்சு இவளுக்கு? " என்று மூவரும் யோசனையில் மூழ்கினர்.

"உனக்கு ஏதாவது தெரியுமா நித்யா?" என்று நிகில் கேட்டு கொண்டு இருக்கும் பொழுது ஸலீம் வந்தான்.

"ஸர். உங்களை பார்க்க மிஸஸ் ஷர்மா வந்திருக்காங்க. ஷால் ஐ ஸென்ட் ஹர் இன்?"

யாமினியை பற்றிய யோசனையை கைவிட்டு "சரி அவங்களை வர சொல்லு."

"ஓ.கே.."

ஒரு இருபத்திமூன்றுவயதான இளம்பெண் அறையினுள்வந்தாள்.பார்க்கலட்சணமாக இருந்தாள்.தழய தழய ஒரு ஜார்ஜட் புடவையை கட்டி இருந்தாள்.

அவளைசெய்கையால்அமரச்சொன்னான் நிகில்.

“உங்கள் பெயர்?” என்றுநகுல்கேட்க,

“ ஐ எம் ஷில்பா தீரஜ் ஷர்மா. “
 
Last edited by a moderator:
Top