Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MALARE MOUNAMAA? - 23

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அன்பு வாசக தோழமைகளே!!

கதைக்கு நீங்கள் கொடுத்து வரும் கருத்துக்களை படித்துக்கொண்டு தான் இருக்கிறேன். மிக்க நன்றி நன்றி!! கதையை தொடர்ந்து படித்து உங்கள் விருப்பங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள். தனி தனியே பதில் அளிக்க முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன். உங்கள் பொன்னனான நேரத்தை எனக்காக செலவிட்ட அத்துனை நல் இதயங்களுக்கும் நன்றி.

இதோ அடுத்த அத்தியாயம்..



அத்தியாயம்: 23
கோவிந்த், தன் தாய் சுமித்ராவுடன் சமர்த்தின் அறையில் இருந்து வெளியேறியதும் அங்கே இருந்த மற்றொரு அறையினுள் நுழைந்தான்.
அவன் பின்னாலேயே சுமித்ராவும் வந்தார்.

"கோவிந்தா!! அவா அவா பிரச்சினையை அவாளே தான் பேசித் தீர்த்துக்கணும்! இனிமே மீரா கூட கொஞ்சம் பொறுமையா பேசு! நாளைக்கே மீரா சமர்த்தோட ஆம்படையாளானா ஒருத்தருக்கொருத்தர் எந்த முகத்தை வச்சிண்டு பார்த்துப்பேள்? வார்த்தைகளை நிதானமா பார்த்து உபயோகிக்க பாரு!!” என்ற சுமித்ரா கோவிந்தின் பதிலை எதிர்பார்க்காமல் அடுத்த வேலையைப் பார்க்க சென்றார்.

அவர் சென்றதுமே கோவிந்த், 'மீராவைப் பற்றி அம்மாவிடம் சொல்லுவோமா! என்று முதலில் யோசித்தான். பின் வேண்டாம் என்றும் முடிவு செய்தான்.

அவனால் நிறைய நாட்கள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுக்க முடியாது. வரும் வார இறுதியில் கண்டிப்பாக கிளம்பியாகவேண்டிய சூழ்நிலை..

அதற்குள் சமீராவிடம் பேசி தீர்க்கவேண்டிய விஷயங்கள் அவனுக்கு அதிகமிருந்தன. அதற்கெல்லாம் மீரா வாயை திறக்க வேண்டும்.

சமர்த்திடம் தான் சொல்லும் அவசியம் இருக்காது என்று புரிந்துக்கொண்டான். ஆனால் எப்படி இந்த விஷயத்தை குடும்பத்தினர் ஏற்பர் என்று குழம்பினான்.

சமீராவையோ அல்லது சமர்த்துடன் சேர்ந்த சமீராவையோ குடும்பத்தாரால் ஒதுக்கி வைக்கத்தான் படுவர் என்று யூகித்தான் கோவிந்த்.

சமர்த் இல்லாத குடும்பத்தை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. சமீராவின் வலியையும் புரிந்துக்கொண்டதால், அவளையும் இழக்க மனம் வரவில்லை.

சமீராவின் நிலையை நன்கு அறிந்திருந்தாலும் குடும்பத்தினர் எங்கனம் புரிந்து ஏற்றுக்கொள்வர்? என்ற கேள்வியே திரும்ப திரும்ப அவனுக்குள் எழுந்தது.
அதற்குமேல் அவனுக்கு யோசிக்க தெரியவில்லை என்பதைவிட யோசிக்கமுடியவில்லை என்று சொல்லுவதே நியாயம்.

அவன் காதலுக்கு எதிரி அல்ல ஆனால் குடும்பத்தின் விருப்பம் முக்கியம் என்று நினைப்பவன்.

சமர்த், சமீரா மீதான மயக்கத்தை அவனிடம்(கோவிந்திடம்) கூறும்போது, எதையுமே யோசிக்காமல் சமர்த்தின் காதலுக்கு தூபம் ஏற்றிவிட்டு, இப்பொழுது 'அவள் நம் குடும்பத்திற்கு ஏற்றவள் இல்லை அதனால் அவளை மறந்துவிடு!' என்று சொன்னால் எப்படி சரியாகும்.?

என்ன செய்வது புரியவில்லை!! எப்படி செய்வது தெரியவில்லை!! அதை கண்டறியும் காலமோ, நேரமோ அவனுக்கு இல்லவே இல்லை!! அலுவல் வேலைக்கு சென்றாகவேண்டிய கட்டாயம்!!

"ஐயோ பெருமாளே!!" என்று தலையை பிய்த்துக்கொண்டான் கோவிந்த்.

சமீராவைப் பற்றி குடும்பத்தினரிடம் சொல்லாமல் தள்ளிப்போடலாம் என்று நினைக்கவும் முடியவில்லை. அதற்கு முழு காரணமும் சமீராவே!!

'இன்று கிளம்பிவிடுவேன். நான் இருந்தால் தானே, என்னை நானே அழிச்சுக்குவேன்' என்ற சமீராவின் வார்த்தைகள் அவனை கட்டிப் போட்டிருந்தாலும் அந்த சகாயத்தால் ஏதேனும் ஆபத்து நிகழ்ந்து விடுமோ என்ற பயமே அவனுக்கு மேலோங்கியிருந்தது.

அவள் தன் குடும்பத்துடன் இணைந்தால் மட்டுமே அவளுக்கு பாதுகாப்பு, அதற்காகவாவது கண்டிப்பாக குடும்பத்தில் எல்லோரிடமும் சீக்கிரம் சொல்லவிட வேண்டும் என்ற முடிவெடுத்த கோவிந்த், திரும்பவும் எப்படி சொல்வது என்ற சிந்தனைக்கே சென்றான்.

அந்த கேள்வி மனதில் எழுந்ததுமே மீண்டும் கைகளை தலையில் வைப்பதற்கு கொண்டு சென்றான்.

அப்பொழுது அவனின் இடது கையில் இருந்த அந்த சிறிய பார்சல் கண்ணில் பட்டது. உடனேயே அது சமீராவினுடையது என்றும் நினைவிற்கு வந்தது.

'சமீராவோ மௌனத்தை மட்டுமே துணையாக கொண்டிருக்கிறாள், இதோ இந்த பார்சல் அவளின் மௌனத்தை கலைக்க உதவலாம்!' என்று மனதிற்குள் பேசிய கோவிந்த், அந்த பார்ஸலை திறந்துப் பார்க்க முடிவு செய்தான்.

முதலில் அதைப் பிரிக்க எண்ணியவன், பின் வேண்டாம் என்ற நினைத்து அதை அருகில் இருந்த ஒரு டேபிளின் மீது வைத்துவிட்டு திரும்பி அந்த அறையினுள்ளேயே நடந்தான்.
சிறிது நேரம் நடந்துக் கொடுத்தப் பின் அவனின் மனம், 'திறக்கவா, வேண்டாமா?' என்று ஊஞ்சலாடியதால் நடையை நிறுத்தி அந்த பார்சலையே சில நிமிடங்கள் பார்த்த்தான்.

ஏதோ முடிவு செய்தவனாக அந்த பார்ஸலை கையில் எடுத்துப் பிரித்தான்.

அதில் ஒரு சிறிய பேழையும் அதன் மேல் ஒரு கடிதமும் இருந்தது. அந்த பேழையின் தாழ் பூட்டப் பட்டிருந்தது. அதன் சாவி எங்கே என்று தேடினான் கோவிந்த்.
அதன் சாவி கிடைக்காததால் முதலில் கடிதத்தை படித்துப் பார்க்க தொடங்கினான்.
 
உறையில்லாத அந்த கடிதத்தை பிரித்ததும், அதிலிருந்து கீழே விழுந்தது அந்த பேழையின் சாவி.

அதை கையில் எடுத்தவன் மேற்கொண்டு கடிதத்தை படிக்க தொடங்கினான்.

"மீரு குட்டி!" என்று ஆரம்பித்த கடிதத்தை நிறுத்தி, 'மீரு!!மீரு!!' என்று இரண்டு முறை சொல்லிப் பார்த்துக்கொண்டான்.

மீரு குட்டி!!
வாப்பா தப்பு செய்வேனாம்மா? அதுவும் இத்தனை உசுரு போக நான் காரணமாகி இருப்பேனா? மத்தவங்க என்னை நம்பாவிட்டால் கூட பரவாயில்லை டா!! ஆனா நீ மட்டும் வாப்பா தப்பு செஞ்சு இருப்பேன்னு நினைத்துவிடாதே! அதை இந்த வாப்பாவால தாங்க முடியாது.
கண்டிப்பா அல்லா தப்பு செஞ்சவங்களை தண்டிப்பார். அந்த நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு. நான் அனுபவிக்கிற இந்த தண்டனைகளே அதுக்கு உதாரணம்.
நான் செய்த தவறுகள் மட்டும் தான் இந்த தண்டனைகளுக்கான காரணம். ஒரு விதத்துல இந்த தண்டனை என் மனசுக்கு நிம்மதியை தருது.
நான் உயிரோட வெளிய வருவேன்னு எனக்கு நம்பிக்கையில்லை. பேகம் எனக்கு முன்னாடியே போய் காத்துக்கிட்டு இருக்குது. உன்னை தனியே விட்டுச் செல்கிறோமே என்ற குறை மட்டும் தான் எனக்கு."
என்று எழுதியிருந்ததை படித்த கோவிந்திற்கு, அதற்கு அடுத்த வரி,
'இல்லை நீ தனி கிடையாது. உன் குடும்ப
' என்று எழுதிவிட்டு அதே பேனாவால் லேசாக கோடிட்டு அடித்து இருந்ததை பார்த்ததும் சிறிது வித்தியாசமாக இருந்தது.

எதுக்கு இப்படி எழுதி அடித்திருப்பார் என்ற கேள்வியும் எழுந்தது. அதற்கும் விடை கிடைக்காமலேயே கடிதத்தை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தான்.

விஸ்வநாதன் சார் உன் கிட்ட சின்ன பெட்டியை தருவார். அதைவாங்கிப் பாரு எல்லாமே உனக்கு புரியும். அதைப் பார்த்ததுமே உனக்கு இந்த வாப்பா மேல இருக்கிற நம்பிக்கை போய்விடும்ன்னு எனக்கு தெரியும். ஆனா எனக்கு வேற வழி தெரிலம்மா.
பதினாறு, பதினேழு வருஷத்துக்கு முன்ன நான் செஞ்ச தப்புல இருந்து ஒரு குண்டுவெடிப்புனால தான் தப்பிச்சேன். ஆனா செய்யாத தப்புக்கு அதே மாதரி குண்டுவெடிப்பு வழக்கிலேயே தண்டனை கிடைச்சிருக்கு.
பார்த்தியா அல்லா தப்பு செஞ்சவங்களை தண்டிப்பார்ன்னு சொன்னேனே, அது உண்மைதானே மீரா!!
முடிஞ்சா இந்த வாப்பாவை மன்னிச்சு மறந்திரு.!!
ஒண்ணே ஒண்ணு மட்டும் தான் சமீரா, இத்தனை உசுரு போனதுக்கு நான் காரணம் இல்லை. அதை மட்டும் நம்பு.!! எனக்கு அது போதும்!!

அன்புடன்,
வாப்பா.(Ibraheem)"
)

என்று எழுதிவிட்டு கூடவே 'இப்ராஹீம்' என்று கையொப்பமும் இட்டு இருந்தார். அடைப்பு குறிக்குள் (இந்த கையெழுத்து உனக்கு பிடிக்கும் இல்ல. அதான் கடைசியா என் கையெழுத்தை போட்டேன்) என்று எழுதியிருந்ததையும் படித்து முடித்தான் கோவிந்த்.

கோவிந்த் அடுத்து என்ன செய்வது என்று சிந்தித்தான். 'இந்த மீரா ஏன் லெட்டரை மட்டும் படிச்சுட்டு இந்தப்பேழையை திறந்தே பார்க்கல?' என்று நினைத்தான்.

அவனுக்கு என்ன தெரியும், அந்த கடிதத்தில் இருக்கும் வார்த்தைகள் தான் சமீராவை பெட்டியை திறந்து பார்க்கவிடாமல் செய்தது என்று.

இந்த பெட்டியை திறந்துப் பார்த்தால் வாப்பா மீது உனக்கு இருக்கும் நம்பிக்கை குறையும் என்ற இப்ராஹீமின் அந்த வார்த்தைகள் தான் சமீராவை அந்த பேழையை திறந்து பார்க்காமலேயே தூக்கி எறிந்துவிட சொன்னது.

குண்டுவெடிப்பையும் தந்தையையும் சேர்த்து நினைத்துக்கூட பார்க்க விரும்பவில்லை சமீரா. தந்தையின் மீது இருக்கும் அதீத நம்பிக்கைதான் அந்த பேழையை திறக்க விடாமல் செய்திருந்தது.

ஆனால் அவள் கவனிக்க தவறியது, பதினாறு, பதினேழு வருடங்களுக்கு முன் இப்ராஹீம் செய்திருந்த தவறை அன்று நடந்த ஒரு குண்டுவெடிப்பே காப்பாற்றியது என்று எழுதியிருந்ததை தான்.

அன்றைய சூழ்நிலை அதை கவனிக்க அவளுக்கு அவகாசம் கொடுக்கவில்லையென்பதே உண்மை.

அவளுக்கு புரிந்ததெல்லாம் தந்தை இப்ராஹீமின் மீதான நம்பிக்கையை தான் குறைத்துக்கொள்ளக்கூடாது என்பது மட்டுமே..

அதனால் பெட்டியை திறந்து பார்க்காமலேயே விஸ்வநாதனிடம் கொடுத்திருந்தாள். கூடவே, 'என் அப்பாவின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது!!' என்ற வார்த்தைகளையும் கூறினாள்.

அதேப் பெட்டியை இன்று கோவிந்த் நீட்டும் போது, அதில் இருந்த தந்தையின் கடைசி கடிதம் மற்றும் அதில் இருந்த அவரின் கையொப்பம் மட்டுமே அவளை திரும்பிப் பார்க்க செய்திருந்தது.

ஆனால் உடனேயே அதில் இருந்த வரிகள் நினைவிற்கு வந்ததால், சற்று திமிராகவே தூக்கியெறிந்து விட சொல்லியிருந்தாள்.

கோவிந்திற்கு அவளின் திமிர்த்தனம் மட்டுமே தான் அவனின் கண்களுக்கு புலப்பட்டது. சற்றும் அவளின் மனம் அவனுக்கு புலப்படவேயில்லை.

எப்பொழுதும் மௌனத்தை மட்டுமே துணைக்கு அழைத்துக் கொண்டுவரும் சமீராவிற்கு அவளின் மனநிலையை கோவிந்திற்கு தெரியவிட விருப்பமில்லை.

எப்படி கோவிந்திற்கு புலப்படும்? என்ற கேள்விக்கு வழக்கம் போல் விதியையும் காலத்தையும் குறை கூறி விட்டு கதையை தொடர்வோம்.

கோவிந்த் கடிதத்தை படித்து முடித்ததும் கையிலிருந்த சாவியின் உதவியால் பேழையை திறக்க முயன்றான்.

நெடு நாட்களாக திறக்கப்படாததால், சாவி நுழையும் துவாரத்தில் அடைப்பு இருந்தது.

அதனால் அந்த துவாரத்தினுள் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு திறந்தான்.

அதில் இருந்து முதலில் அவன் கையில் எடுத்துப் பார்த்தது, சின்ன குழந்தையின் உடை!!

உடை மிகவும் பழையதாக இருந்ததால் நைந்து போயிருந்தது.

அதை கையில் வைத்து திருப்பி திருப்பி பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

'இந்த உடையை எதுக்கு பொக்கிஷமா பூட்டி வச்சிருக்கார்?' என்று அவன் மனதில் கேள்வி எழுந்தது.

என்று சமீராவை, 'மீரா' வாக சந்தித்தானோ அன்றிலிருந்தே அவனுள் எழும் கேள்விகளுக்கு பஞ்சமில்லை.

அடுத்ததாக இருந்த புத்தகத்தை பிரித்தான். பிரித்ததுமே அவனுக்கு புரிந்தது அது ஒரு புகைப்பட ஆல்பம் என்று.

முதல் பக்கத்தை பிரித்ததுமே இருந்த "ஆயுஷ்ஹோம" பத்திரிக்கையை பார்த்த போது மிகவும் பரவசம் அடைந்தான். அதனால் அடுத்ததடுத்த பக்கங்களை வேகமாக புரட்டினான். ஒவ்வொரு புகைப்படமும் மிக அழகாக லேமினேட் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததால் புகைப்படங்கள் தெளிவாக தெரிந்தது.

குழந்தை மீராவுடன் தன் குடும்பம் இருக்கும் இந்த ஆல்பம் எப்படி சமீராவின் அப்பா கையில் கிடைத்தது என்ற கேள்விக்கு விடை தேடும் பொருட்டு வேக வேகமாக பக்கங்களை புரட்டினான்.

அவனுக்கு விடை கிடைப்பதைப் போல ஆல்பத்தின் கடைசி பக்கத்தில் இப்ராஹீம் மீராவின் பெற்றோர்களுக்கு எழுதிய கடிதம் கண்ணில் பட்டது.
அந்த கடிதமும் அழகாக லேமினேட் செய்யப்பட்டு இருந்தது.

அதில் குழந்தை மீராவை சமீராவாக மாற்றியதற்கு மீராவின் பெற்றவர்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்.

மேலோட்டமாக அந்த கடிதத்தைப் படித்த கோவிந்த், எல்லாவற்றையும் கைகளில் அள்ளிக்கொண்டு சமர்த்தும் மீராவும் இருந்த அறைக்கு ஓடினான்.
 
nice ud. govind thiranthu padichanala achi illana padikamaye irunthurupa meera..
 
ஒரு வழியா உண்மை வெளியே வந்து விட்டது
 
Top