Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MALARE MOUNAMAA? - 17

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 17
சமீராவுடன் சிறிது கண்ணசந்த சுமித்ரா எழும்போதே சமீராவும் எழுத்திருந்தாள்..

சுமித்ரா எவ்வளவு சொல்லியும் ஒரு மணிநேரத்திற்கு மேல் தூங்கவில்லை அவள்..

சுமித்ராவின் வேண்டுக்கோளிற்கிணங்க கோவிந்த்துடன் சென்று, தன் இருப்பிடத்திலிருந்த உடைமைகள் சிலவற்றை கொண்டுவந்தாள்..

தன் உடைமைகளுடன் குளித்துவிட்டு வந்த சமீரா, வீட்டினுள் நுழைந்ததுமே சுமித்ராவிற்கு சமையலில் உதவினாள்.

பெரிதாக ஒன்றும் சமையல் அறிந்தவளில்லை தான்.. ஆனால் சுமித்ராவினுடன் பேசிக்கொண்டே சமையல் வேலைப் பார்ப்பது சமீராவின் மனதிற்கு இதமாக இருந்ததால், சுமித்ராவை விட்டு அகலாமலே இருந்தாள்..

பின் கோவிந்துடன் மருத்துவமனைக்கு சென்றாள்..

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சமர்த்திற்காக அவளிடம் சிறிது பேச்சுக்கொடுத்தான் கோவிந்த்.

"மீரா, உன்னோட பேரன்ட்ஸ் பத்தி அந்த போலிஸ்காராக் கிட்ட சொல்றச்ச தெரிஞ்சுண்டேன்.. உனக்கு கூடப் பிறந்தவா யாராணும் இருக்காளா?" என்றுக் கேட்டான் கோவிந்த்.

அவனை திரும்பிப் பார்த்த சமீரா 'யாரும் இல்லை!' என்பது போல் தோள்களை குலுக்கிக்கொண்டே, தலையை இடம் வலமாக ஆட்டினாள்.

"என்ன(என்னை) நீ உன் கூடப் பொறந்தவனா நினைச்சுக்கோம்மா.!"

அதற்கும் பதிலளிக்காமல், 'சரி!' என்பதாக தலையை ஆட்டினாள்.

மீண்டும் காரினுள் அமைதி நிலவியது..

சமர்த்தின் எண்ணத்தை மீராவிடம் எப்படி சொல்வது என்று யோசித்தபடி வந்தான் கோவிந்த்..

"மீரா உன் மேரேஜ் பத்தி என்ன பிளான் வச்சுண்டிருக்க?" என்று நேரடியாகவே பேச்சை ஆரம்பித்தான் கோவிந்த்.

"ஹான்!!" என்று விழித்தாள் சமீரா.

"சாரி! உன்னை இப்படி அதிர்ச்சியடைய வைக்கறது என் நோக்கமில்லை.. இப்போ தானே அண்ணனா நினைச்சுக்க சொன்னேன்.. அந்த உரிமைல தான் கேட்டேன்.." என்ற கோவிந்திற்கு

"என்னோட பர்சனல் லைப் ல யாரும் தலையிடுவது எனக்கு பிடிக்காது மிஸ்டர்!! அதே மாதிரி நினைச்சுக்க சொன்னவங்க எல்லாம் சொந்த அண்ணன் ஆகிவிட முடியாது.." என்று பதிலளித்தாள் சமீரா.

"ஆனா, எங்காத்து சமீரை நீ கல்யாணம் பண்ணிண்டா, எனக்கு நீ சொந்த தங்கை தான்.. அதுக்காக மட்டும் தான் உன்னண்ட பேசிண்டிருக்கேன்.. இல்லைன்னா நேக்கு என்ன தலை எழுத்து!!" என்று கடிந்துக்கொண்டான்.

டிரைவரின் முன்னேயே அவனை அவள் எடுத்தெறிந்து பேசியதால் வந்த எரிச்சலே கோவிந்த் கடிந்ததுக்கான காரணம்.

கூடப் பிறந்த சகோதரிகளின் வாரிசுகள் தாம் இவர்களிருவரும் என்பதை கோவிந்தும், சமீராவும் தெரிந்துக்கொண்டிருந்தால் இப்படி பேசிக்கொள்வார்களா என்பது தெரியாது..

நிறைய நேரங்களில் மௌனத்தை துணைக்கு அழைக்கும் சமீரா இந்த நேரத்திலும் கடைப்பிடித்திருந்தால் கோவிந்தின் உதாசீனத்தை தவிர்த்திருக்கலாம் ..

கோவிந்தும் சற்று தன்மையாக பேசியிருந்தால் சமீராவின் அடுத்த அதிரடி நடவடிக்கையை தவிர்த்திருக்கலாம்..

இதெல்லாம் நடந்தால் தானே சமீராவை 'மீராவாக' குடும்பத்துடன் இணைக்க முடியும்..

"ட்ரைவர் சார் வண்டியை நிறுத்துங்க..!"

"மீரா! இப்போ எதுக்கு வண்டியை நிறுத்த சொல்ற?"

கேள்வி கேட்ட கோவிந்திற்கு எந்த வித பதிலும் அளிக்காமல், "ட்ரைவர் சார் ப்ளீஸ் நிறுத்துங்க நான் இறங்கணும்..!" என்றாள் சமீரா..
 
"மீரா இங்க சீன் கிரியேட் பண்ணாதே..! கொஞ்சமாச்சும் மெச்சூர்டா பிஹேவ் பண்ணு.!"

"எனக்கு இவ்வளவு தான் மெச்சூரிட்டி மிஸ்டர்..! ட்ரைவர் இப்போ வண்டியை நிறுத்த போறீங்களா இல்லையா?" என்று காரோட்டியின் தோள்களை உலுக்கினாள் சமீரா.

அந்த உலுக்கலில் சில நொடிகள் கார் குலுங்கியதில் பயந்து காரை ஒதுக்கி நிறுத்தினார் ட்ரைவர்.

காரிலிருந்து இறங்கிய சமீரா, "உங்க சமீருக்கு யாரை வேணும்னாலும் கல்யாணம் செஞ்சு வச்சு, அவளை உங்க தங்கையாய் கொஞ்சிக்கங்க எனக்கு ஒண்ணுமில்லை.. ஆனா இனிமே என் கிட்ட மரியாதை இல்லாமல் பேசாதீங்க..! நான் சாகற வரைக்கும் உங்களை திரும்ப பார்க்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்.. அப்படியே நாம பார்த்துக்கிட்டாலும் தயவு செஞ்சு என் கிட்ட பேசிடாதீங்க.. அதை மீறினீங்கன்னா அப்போ என் கை மட்டும் தான் பேசும்!! பை பார் எவர் மிஸ்டர்..!!" என்று பொரிந்து விட்டு வேகமாக சென்றாள் சமீரா.

சில நொடிகள் வித்தியாசத்தில் கோபமாக உள்ளே நுழைந்த மீராவையும், கோவிந்தையும் புன்சிரிப்புடன் வரவேற்றான் சமர்த்.

சமீராவிற்கு அந்த கோவிந்தை பார்க்க சிறிதும் விருப்பமில்லை தான். சமர்த்தின் உடல் நிலை குறித்து அறிந்துக்கொள்வதற்க்காக மட்டுமே அவள் மருத்துவமனைக்கு வந்திருந்தாள்.. அதை கோவிந்த் அறிந்துக்கொள்ள கூடாது என்பதற்காக கோபம் என்னும் முகமூடியை அணிந்துக்கொண்டாள்.

கோவிந்திற்கு மிகுந்த கோபம் தான்.. மூன்றாவது மனிதர் முன் தன்னை அசிங்கப்படுத்தவிட்டாளே என்ற கோபத்தை விட சமர்த்தின் மனதை புரிந்துக்கொள்ளாமல் கோபித்து சென்ற கோபம் தான் அதிகமிருந்தது.. அதனால் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்றான்..

"ஏண்டாப்பா கோவிந்தா..!! என்னத்துக்கு இப்போ இப்படி மொகத்தில எள்ளும் கொள்ளும் வெடிக்கறது? ஆத்துல அம்மா ஏதானும் சொல்லிட்டாளா? " என்று கேட்ட அப்பாவை முறைத்துப் பார்த்தான் கோவிந்த்.

அப்பாவை முறைத்துப் பார்த்தாலும், பிளாஸ்க்கிலிருந்து காபியை ஊற்றிக்கொடுத்தான் கோவிந்த்.

"அப்பா சித்த நாழி எதுவும் பேசாதீங்க.. நான் ரொம்ப கோபமாயிருக்கேன்.."

"கோவிந்தா உன் முகத்துக்கு இந்த கோபம் செட் ஆகலடா.. எப்பவும் போல காமெடி பீஸாவே இரு!" என்ற அப்பாவை கனல் தெறிக்க முறைத்தான் கோவிந்த்..

"மாமா விடுங்கோ.. அவன் ஏதோ மூட் அவுட்.. நான் பார்த்துக்கறேன்.." என்று சமாதானப்படுத்தினான் சமர்த்.

"சரிடா சமர்த்தா.! நான் கொஞ்சம் காலாற நடந்துட்டு வரேன்.." என்று சொன்னவர் யாரின் பதிலுக்கும் காத்திராமல் அந்த இடத்தை விட்டு சென்றார்.

சில நிமிடங்கள் அந்த அறையில் மௌனம் மட்டுமே குடிக்கொண்டிருந்தது.. அந்த மௌனத்தை சமீராவே கலைத்தாள்.

"கலெக்டர் சார், போன் வாங்கினா மட்டும் போதாது, அதை வேற யாரும் யூஸ் செய்ய முடியாத படி அதை லாக் செய்யவும் தெரிஞ்சுருக்கணும் சார்.. பொறுப்பான பதவில இருக்கிற உங்க கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல சார்..!" என்ற கொட்டுடன் சமர்த்தின் அலைபேசியை நீட்டினாள் சமீரா.

"ஸ்மார்ட் போன் வாங்க தெரிஞ்சவாளுக்கு அதை லாக் செய்ய தெரியாதா என்ன.. ரொம்பத்தான் தனக்கு தான் எல்லாம் தெரியும்ங்கற மாதிரி பேச வேண்டியது.. வண்டில இருந்து நடு ரோட்டுல கீழ விழுந்ததுல போன் முழுசா கிடைச்சதே பெரிய விஷயம்.. கீழ விழுந்ததுல அன்லாக் ஆகியிருக்கும்.. இதெல்லாம் ஒரு மேட்டரா சமீர்..!" என்று கோபப்பட்டான் கோவிந்த்.

"கோவிந்த் விடுடா! நோக்கு இப்ப என்ன கோபம்?" என்று சமர்த் கேட்டான்.

கோவிந்த் அவனுக்கு பதில் சொல்ல முயலும் போதே அங்கு சமீரா குறுக்கிட்டாள்.

"கலெக்டர் சார்!! போலீஸ்க்கு இன்போர்ம் செஞ்சிருந்தும் இன்னும் ஒருத்தர் கூட என்கொயர்க்கு வரல.. நேத்து நைட் விக்கி வேற இங்க வந்து இருக்கான்.. விக்கிக்கு தெரிஞ்ச ஆளுங்க யாரும் இங்க அட்மிட் ஆகலங்கறது கன்பர்ம் செஞ்சுட்டேன்.. இதுக்கு மேலயும் நீங்க இந்த ஹாஸ்பிட்டல்ல இருக்கிறது நல்லதில்லை.. அதனால நீங்க இப்போ.." என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே கோவிந்த் கோபத்துடன் இடைப்புகுந்தான்.

"அவன் பில்கலெக்டர் இல்ல.. டிஸ்ட்ரிக்ட் கலெக்டர்.. ஹி நோஸ் ஹௌ டு ஹாண்டில் திஸ்.. சோ உங்க வேலை என்னமோ அதை மட்டும் பாருங்க..!!" என்றான்.

"கோவிந்த் நம்ம நல்லதுக்கு தானே சொல்றா.!! அதைப் புரிஞ்சுக்காம எடுத்தெறிஞ்சு பேசற? இது நன்னாவா இருக்கு?" என்று ஆதங்கத்துடன் கேட்டான் சமர்த்.

"எதுடா நல்லது? இவளால தான நீ இங்க அடிபட்டு படுத்திண்டிருக்க! அப்பவே நாம சொல்றத கேட்டிருந்தா இந்த அவஸ்த்தை எல்லாம் இல்லையோன்னோ!! பெரிசா சிம் கார்ட எரிச்சுட்டு போனா!! பேசமா வாய மூடிண்டு நாம சொல்றத கேக்க சொல்லு அவ கிட்ட.. ! என்று எகிறினான் கோவிந்த்.

"மிஸ்டர்!! மரியாதை எனக்கு முக்கியம்.!! சும்மா அவ இவ ன்னு சொன்னீங்கன்னா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..!" என்று பொரிந்தாள் சமீரா.

"உனக்கே தெரியாததை பத்தி ஏன் பேசற? சித்த சும்மா இரு..!!" என்று சமீராவிடம் சொன்னவன், திரும்பி சமர்த்திடம் "சமர்த்தா டம்மி பீசு டா இவ!! இது தெரியாம நாம தான் இவ பேசறதுக்கு இம்போர்ட்டண்ட் கொடுத்துட்டோம்.." என்றான் கோவிந்த்.

"மிஸ்டர்!! எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு!! இன்னிக்கு என் கிட்ட வாங்கிக்கட்டிக்காம போக மாட்டிங்க போல!" என்றாள் சமீரா.

சமர்த்திற்கு அன்று சகாயம் மூர்ச்சை ஆகி விழுந்த பிறகு கூட ஏறி நின்று மிதித்தது கண் முன்னே தோன்றியது..

சகாயத்தின் இடத்தில் கோவிந்தை நிறுத்திப் பார்த்தவன் வாய் விட்டு சிரிக்க ஆம்பித்தான்..

"கோவிந்தா!! மீரா உன்னை அடிக்கறத ரசிச்சு பார்க்கறச்ச என்னால சிரிப்பை கன்ட்ரோல் பண்ண முடியலடா..!" என்றான் சமர்த் சிரித்துக்கொண்டே.

"இருக்கும் டா இருக்கும்.. உன்னை!!" என்று சமர்த்தின் தோள்களில் வலிக்காதவாறு குத்தினான் கோவிந்த்.

இவர்களின் பாசப்பிணைப்பை சில நொடிகள் ரசித்தவள் , "டேக் கேர் கலெக்டர் சார்!! சகாயம், விக்கி கேஸ நானே ஹாண்டில் செஞ்சுக்குவேன்.. உண்மையா சொல்லணும்ன்னா நான் மட்டுமே தான் ஹாண்டில் செய்யணும்..” என்று ஒரு சில நொடிகள் தாய் தந்தையை நினைத்து விட்டு மேலே தொடர்ந்தாள்.

“அதனால நீங்க உங்க பிழைப்பைப் பாருங்க.. தனியா வண்டியை எடுத்துக்கிட்டு போகாதீங்க.. கவர்ன்மென்ட் வண்டியில பாதுகாப்பா வெளில போங்க.. உங்களோட கலெக்டர் பங்ளோக்கே வீடு மாத்திட்டு போங்க.! நல்ல ப்ரொடெக்ஷன் கிடைக்கும்.. என்ன ப்ரொடெக்ஷன் கிடைச்சாலும் நீங்க கொஞ்சம் எல்லா விஷயத்திலும் கேர்புல்லா இருந்தா, உங்களுக்கும் உங்க பாமிலிக்கும் பாதுகாப்பா இருக்கும்..!" என்று சமீரா சொல்லிக்கொண்டு இருக்கும்போதே கோவிந்த் குறுக்கிட முயன்றான். அவனை நிமிர்ந்து பார்த்தவள் மேலே பேச ஆரம்பித்தாள்.

"இப்போ எனக்கு எதுக்கு இவ்வளவு அக்கறைங்கிற கேள்வி தானே கேட்கப் போறீங்க மிஸ்டர்? எனக்கு உதவி செய்ததால் தான் கலெக்டர் இப்படி அடிப்பட்டு படுத்திருக்கார்!! கூடவே அந்த விக்கியின் பார்வையும் இவர் மேல இருப்பதற்கும் நான் தான் காரணம்.. இவரை முதல் நாள் நான் வால்பாறைக்கு வரச்சொன்னது தப்பு! விஸ்வநாதன் சார் இறந்தபிறகாவது இவரை விட்டு நான் தள்ளி நின்றிருக்க வேண்டும்.. அதை நான் செய்யல!!
அதனால தான் கலெக்டர் சார் காவல் துறையை அழைத்து அதைப் பற்றி பேசியிருக்கிறார். காவல் துறையில் இருக்கும் ஒரு கருப்பு ஆடு விக்கிக்கு தகவல் சொல்ல, என்னை கொலை செய்ய விக்கியின் ஆட்கள் துரத்தின பொழுதாவது நான் இவரை விட்டு தூர சென்றிருக்க வேண்டும்.. அதையும் நான் செய்யல..
எல்லா தப்பும் என் பேர்ல இருக்குங்கிற ஒரு கில்ட்டி கான்சியஸ்ல தான் இவர் கிட்ட இந்த மாதிரி பேசிட்டு இருக்கேன்.. எனக்கு எப்பவுமே யார் மேலயும் எந்த வித அக்கறையும் இருந்ததில்லை.. புரிஞ்சுதா மிஸ்டர்?" என்று ஒரு நீண்ட விளக்கம் சொன்னாள் சமீரா.

"நல்லாவே புரிஞ்சுது மா..! ஆனா உனக்கு தான் புரியல போலிருக்கு! இவன் ஒரு கவர்ன்மெண்ட் சர்வெண்ட்!! பீப்புள்க்கு சர்வீஸ் செய்ய தான் படிச்சுட்டு வந்து இருக்கான்.. நீ சொல்றதை எல்லாம் கேட்டுண்டு இன்னிக்கு வேணும்ன்னா பாதுகாப்புங்கிற பேர்ல ஒளிஞ்சுக்கலாம்.. இல்ல மத்தவாளுக்கு சோப்பு போட்டுண்டு தப்பிச்சுக்கலாம்.. நாளைக்கு?" என்று நிறுத்தியவன்

“இதையே தான் அவன் ரிட்டயர்டு ஆகறவரைக்கும் செஞ்சுண்டு இருக்கணும்!! இல்லைன்னா அவனுக்கும், அவன் குடும்பத்துக்கும் பாதுகாப்பில்லை.. ஆனா அந்த மாதிரி இருக்கிறது எவ்வளவு அசிங்கம்ன்னு நோக்கு புரியறதா?" என்று கேட்டான் கோவிந்த்.

"கோவிந்த் சித்த நீ சும்மா இரு!! நான் அவா கிட்ட பேசிக்கறேன்.!" என்று கோவிந்திடம் சொன்ன சமர்த், திரும்பி சமீராவிடம், "இது அவ இவ ன்னு பேசறது இல்ல.. தயவுசெஞ்சு தப்பா நினைக்காத. நான் குழந்தைலேர்ந்து பேசி பழகின முறை.. அது நடுநடுவே எங்களுக்கு வந்துடும்.. கூடியவரைக்கும் அந்த மாதிரி பேசுவதை குறைத்து கொள்கிறேன்.. இல்லைன்னா மக்கள் கிட்ட இருந்து என்னை தள்ளி நிறுத்திடும்..! என்று விளக்கமளித்த சமர்த், சமீராவின் பிரச்சினையைக் கேட்டான்.

"உன்னோட பிரச்சினை என்னங்கிறதை என் கிட்ட சொல்லு மீரா! இதை நான் இந்த மாவட்டத்ததோட ஆட்சியர்ங்கிற முறைல தான் கேட்கிறேனே தவிர எந்த உள் நோக்கமும் எனக்கு இல்லை..”

சமர்த்தின் கேள்வி காதில் விழாதது போலவே நின்றாள் சமீரா..

“சகாயம், விக்கி மாதிரி ஆளுங்க நம்ம நாட்டுல நிறய பேர் இருக்காங்க! அந்த மாதிரி ஆளுங்க கிட்ட இருந்து என்னால எப்பவுமே ஒதுங்கிண்டே இருக்க முடியுமா? இல்ல கண்டும் காணாத மாதிரி தான் நடந்துக்க முடியுமா?

ஒரு மாவட்ட ஆட்சியரா எனக்கு அநுபவம் குறைவு தான்!!

பட் என் பாமிலிய நல்லா புரிஞ்சுக்கறதுகாண அநுபவம் எனக்கு நிறைய கிடைச்சிருக்கு!!

என்னோட பேமிலி ரொம்ப ஆர்தடாக்ஸ்..!! வெளி மனுஷாள எல்லாம் அவ்வளவு சீக்கிரம் ஆத்துள்ள ஐ மீன் வீட்டுக்குள்ள அனுமதிக்க மாட்டா. மடி, ஆச்சாரம்ன்னு நிறைய பார்ப்பா!

ஏன் நானும் அந்த மாதிரி தான் வளர்ந்திருக்கேன்..

ஆனா மக்களுக்கு சேவை செய்யன்னு வந்துட்டு என்னால அப்படி யாரையும் ஒதுக்க முடியாது.. அதே மாதிரி என்னைப் பெற்றவர்களையும் என்னால விட்டுக்கொடுக்க முடியாது..

நானும் மடியும் ஆச்சாரமா இருப்பவன் தான். ஆனா அது எல்லாம் என்னோட ஆத்துல இருக்கிறவரைக்கும்.. எப்போ ஆத்து படி இறங்கி ஒரு மாவட்ட ஆட்சியரா கடமை செய்ய கிளம்பறேனோ அதையெல்லாம் நான் மறந்துடுவேன்..

என்னோட பதவிக்கு ஏத்த மாதிரி ஆட்சியர் மாளிகைக்குள் குடி போனா அங்கிருப்பவர்கள் என்னோட குடும்பத்தாரால் ஒதுக்கப் படுவார்கள். அதெல்லாம் வெளி ஆள்களுக்கு பரவினால், நான் மக்கள் கிட்ட இருந்து தள்ளி வைக்கப்படுவேன்..

என்னால் அதை ஒத்துக்கவே முடியாது. மக்களோட ஒண்ணா கலந்து கீழ இறங்கி நல்லா ஒழுக்கமா வேலை செய்யணும்ங்கிறது தான் என்னோட கொள்கையே..

என் பாமிலியை எனக்கு ட்ரான்ஸ்பர் பண்ற இடங்களுக்கு எல்லாம் மூவ் செய்ய முடியாது தான்.. பட் இது தான் என்னோட முதல் அநுபவம்.. அதுவும் தமிழ்நாட்டுல.. இப்போ தான் அப்பாவும் ரிட்டயர்டு ஆனார்.. சோ இப்போதைக்கு நாங்க எல்லாரும் ஒண்ணா இருக்கலாம்ங்கிற எண்ணம் தான் தனி வீடு எடுத்து குடி போனது.." என்று நீண்ட விளக்கம் கொடுத்து முடித்தான் சமர்த்.

சமர்த்தின் குரலில் நிறைய சோர்வும், உடம்பில் ஏற்பட்டிருந்த காயத்தினால் உண்டான வலியும் நிறைய இருந்தாலும், அவனுக்கு தன்னை சமீராவிடம் புரியவைத்து விடவேண்டுமென்ற எண்ணமே சற்று ஓங்கி இருந்ததது.

அதனால்தான் இந்த நீண்ட விளக்கம்.

சமீரா அவனை புரிந்துக்கொண்டாளோ, என்னவோ? ஆனால் அவன் குடும்பத்தின் ஆச்சாரத்தை கேட்டு இவர்களிடமிருந்து சீக்கிரமே தள்ளி போய் விட வேண்டுமென்ற எண்ணம் மட்டும் அவளுள் தோன்றியது தான் நிஜம்.

அதனால், "இதெல்லாம் எனக்கு தேவை இல்லாதது கலெக்டர் சார்!! நான் சொன்னது என்னுடைய பிரச்சினைகளை நானேப் பார்த்துப்பேன்ன்னு மட்டும் தான்! உங்களுக்கு கூடுதலா ஒன்றிரண்டு அட்வைஸ் விழுந்திருக்கலாம், பட் அதை எடுத்துகிறதும் எடுத்துக்காம போவதும் உங்க இஷ்டம். இனிமே என்னோட விஷயத்துல தயவு செஞ்சு தலையிட வேண்டாம்.. பை பார் எவர்!!" என்ற சமீராவைப் பார்த்து,

"செல்ஃபீஷ் பெல்லோ, உன் கிட்ட இருந்து இதை நான் எதிர்ப்பார்த்தேன் மீரா!! பட் நீ இனிமே எங்களை விட்டு போவதற்கு நான் அனுமதி தரமாட்டேன்!!" என்று பேசினான் கோவிந்தன்.

"முடிஞ்சா என்னை தடுத்து பாருங்க மிஸ்டர்!!"

கோவிந்தும் சமீராவும் ஒருவருக்கொருவர் வார்த்தையாடி கொண்டிருப்பதைப் பார்த்து ஒரு பெருமூச்சுடன் தலையில் கை வைத்துக்கொண்டான் சமர்த்.
 
Top