Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MALARE MOUNAMAA? - 13

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 13
தங்களிடம் அதிரடியாக விடைப் பெற்று கிளம்பியவளை செய்வதறியாது பார்த்திருந்தனர் அவர்கள்.. அவள் கிளம்புவாள் என்று ஏதோ ஒரு விதத்தில் எதிர்ப்பார்த்திருந்த கோவிந்த், அவள் இவ்வளவு விரைவாகவும், அதிரடியாகவும் கிளம்புவாள் என்று சற்றும் எதிர்ப்பார்த்தானில்லை..

அவள் வண்டியின் பின்னால் சென்று பேச முயன்ற சமர்த்திற்கு இறுக்கமான ஒரு பார்வையை பரிசாக தந்துவிட்டு வண்டியை மிக வேகமாக ஓட்டிச் சென்றாள் சமீரா.
காவலர்களிடம் அவளுடைய பெயர் மற்றும் தன்னைப் பெற்றவர்களின் விவரங்களை சொல்லும்போது கோவிந்திற்கு அலுவலக சம்பந்தமாக அலைபேசியில் அழைப்பு வந்திருந்ததால், அவனால் அவற்றை கவனிக்க முடியாமல் போனது..

சுருக்கமாக பேசி விட்டு வந்த கோவிந்திற்கு அவள் பணியிடத்தின் முழுவிலாசம் மற்றும் அவளின் முகவரி மட்டுமே கிடைத்ததால் அதை அவனுடைய அலைபேசியில் அவசர அவசரமாக பதிவு செய்திக்கொண்டான்.

சமர்த்திடம் மற்றொரு காவலர் ஏதேதோ கேட்டுக்கொண்டிருந்தபடியால் அவனாலும் அவளுடைய முழுப் பெயரின் விவரம் தெரிந்துக்கொள்ள முடியாமல் போனது.. அதைப் பற்றி அவனுக்கு துளியும் அக்கறை இருக்கவில்லை என்பதே உண்மை.

அவனைப் பொறுத்தவரை அவளுடைய அலைபேசி எண் தன்னிடம் இருப்பதே போதுமானது என்று எண்ணியிருந்தான். அதையும் அவள் எரித்துவிட்டு செல்லும் போது தான், அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் நின்றான் சமர்த்..

“சமீர்..!! விடுடா எப்படியும் இந்த ஊர்ல தானே இருக்கப் போறா.. பார்த்துக்கலாம் விடு.. நான் எதுக்கும் ‘டெய்லி நியூஸ்’ல போய் விசாரிச்சுட்டு வரேன். மீராவைப் பார்க்க முடியாவிட்டாலும் அவளோட பிரண்டு(விமலா) இருப்பா இல்லை, அவாளைப் பார்த்து பேசிட்டு வரேன்.. நீ வொரி பண்ணிக்காம உன் வேலையை கவனி..” என்று கூறினான் கோவிந்த்.

“ஓகே கோவிந்த்..!! நாளைக்கு நைட் ட்ரைன்ல உனக்கு டிக்கெட் ரிசர்வ் செய்யவா?”

“ம்ம் ஓகே சமீர்..!! வா நாம குளிச்சுட்டு ஆத்துக்கு போலாம்.. நோக்கு டைம் ரொம்ப ஆயிடுத்து..” என்றபடியே இருவரும் குளிக்க சென்றனர்.

இருவரும் வீட்டிற்கு சென்றதும் சமர்த் அவனுடைய அலுவலக வேலையை கவனிக்க செல்ல, கோவிந்த் ‘டெய்லி நியூஸ்’ இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.
அங்கு அவனுக்கு வேண்டிய தகவல்கள் எதுவும் கிடைக்காததால் வீட்டிற்கே கிளம்பி சென்றான். அவனுக்கு சமீராவை எப்படி நெருங்குவது என்றே தெரியவில்லை.
இந்த வாரக் கடைசியில் கோவைக்கு திரும்ப வந்து சமீராவின் தோழியை எப்படியாவது சந்திக்கவேண்டும் என்ற உறுதியுடன் தான் இப்பொழுது வீட்டிற்கு கிளம்பிச் சென்றான்.

அதற்குள்ளாகவே சமர்த் அவளை சந்தித்து விடுவான் என்பது அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லையே..

மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் இருந்த சமர்த், அந்த மாவட்டத்தில் இருக்கும் சில காவல் துறை உயர் அதிகாரிகளை சந்திக்க விரும்பி அனைவரையும் மதியம் நடைபற இருக்கும் கூட்டத்திற்கு (meeting) அழைத்திருந்தான்.

“வணக்கம்! இந்த மாவட்டத்திற்கு நான் எப்படி புதிதோ அதேப் போல் தான் ஒரு ஆட்சியராக இருப்பதுவும் புதிது தான். இது எனக்கு முதல் அநுபவம். புதிதாக நான் இங்கே வந்திருப்பதால் உங்கள் அனைவரின் உதவியும், ஒத்துழைப்பும் எனக்கு எப்போதுமே தேவை.” என்று ஆரம்பித்தான் சமர்த்.

“கண்டிப்பாக எங்க ஒத்துழைப்பு உங்களுக்கு எப்போதுமே கிடைக்கும் சார்..!!” என்றார் அங்கிருந்த அதிகாரி.

“நன்றி..!!” என்று ஒரு வார்த்தையில் பதில் கூறிவிட்டு சிறிது நேரம் சிந்தித்தபடி இருந்தான்.

சில நொடிகள் கழித்து, “இரண்டு நாட்கள் முன்னாடி வால்பாறை அருகே இருக்கும் மருத்துவமனையில் ஒரு பத்திரிகை நிருபர் கொலை செய்யப்பட்டது உங்களுக்கு எல்லாம் தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.” என்று பேசியவனை இடையிட்டார் மற்றொரு அதிகாரி.

“சார்..!! சுட்டவனே சரணடைஞ்சுட்டானே..!! கேசை சீக்கிரம் முடிச்சுடுவோம்..”

அவரையே பார்த்திருந்த சமர்த், “சார் ப்ளீஸ்..!! நான் பேசறதை முழுசா கேட்டுட்டு உங்களோட ஒபினியனை ஷேர் பண்ணிக்கங்க..” என்றான்.

“சாரி சார்..!!”

ஒரு சிறு தலையசைவில் அவரின் மன்னிப்பை ஏற்று மேலே தொடர்ந்தான் சமர்த்.

அந்த கொலையை சரண் அடைந்தவன் செய்யவில்லை என்றும் அந்த கொலையை செய்தவன் விக்கி என்பதை அவர்களிடம் பகிர்ந்துக்கொண்டவன், அன்று நடந்தவைகளை அவர்களிடம் ஆதி முதல் அந்தம் வரை கூறினான்.

அடுத்தடுத்து மூன்று கொலைகளை பார்த்திருந்ததால் சமீராவையும் ஏதாவது செய்து விடுவார்களோ என்று ஏற்கனவே பயந்திருந்தான் சமர்த்.

(லோகுவும் சேரனும் சாலையில் விபத்தால் மரணமடைந்தனர் என்று சொல்லப்பட்டிருந்தாலும் சமர்திற்கு அந்த விபத்தே திட்டமிட்டு நடந்ததோ என்ற சந்தேகம் இருந்ததால் அந்த மரணங்களையும் கொலை என்று நினைத்திருந்தான்.)

அதுவரை சகாயம் மற்றும் விக்கியின் விவரங்களை காவல் துறைக்கு கொண்டு செல்ல யோசித்திருந்தவனின் மனதில் சமீராவைக் குறித்த பயம் அதிகரித்ததால் சற்றும் தாமதியாமல் காவல் துறையினரின் உதவியை நாடினான் சமர்த்.
 
முதலில் அவளை தன் கண் பார்வைக்குள் கொண்டு வந்தப் பின் தான் காவலர்களின் உதவியை நாட எண்ணியிருந்தான். ஆனால் சமீரா அதிரடியாக கிளம்பிய பின் தன் முடிவை மாற்றி உடனேயே காவலர்களை தொடர்புக்கொண்டான்.

சமர்த் சொல்வதை முழுவதும் கேட்ட காவலர்கள், ‘ஏன் முன்பே தங்களிடம் வரவில்லை?’ என்பதைப் போன்ற மிக சாதாரண கேள்விகளை கேட்டனர்.

சமர்த்தும் அதற்கு பொறுமையாகவே பதில் அளித்தான்.

“சார்..!! சகாயம் சென்ட்ரல் மினிஸ்டர்..!! இதுல நாம அவசரப்பட வேண்டாம்ன்னு எனக்கு படுதுங்க..” என்றார் அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர்.

“இருக்கலாம் சார்..!! ஆனா அரசாங்கத்துக்கு சஹாயம் செய்யத் தான் நாம நியமிக்கப்பட்டிருக்கிறோம்..!! அந்த சகாயத்திற்கு சஹாயம் செய்ய இல்லை..!!” என்ற சமர்த்தின் குரலில் சிறு கோபம் இருந்ததை அங்கிருந்தவர்கள் உணர்ந்தனர்.

“அப்சலுட்லி கரெக்ட் சார்..!! ஆனா, இப்படி ரைமிங்கா பேச மட்டும் தான் நம்மளால் முடியும்.. இவரு சொன்ன மாதிரி நாம கொஞ்சம் வெயிட் பண்ணித் தான் அந்த மினிஸ்டர் மேல அக்சன் எடுக்க முடியும்..” என்றார் மற்றொரு காவல்துறை அதிகாரி.

“ஓகே ஐ கேன் அண்டர்ஸ்டான்ட்.. பட் அந்த விக்கி மேல அக்சன் எடுக்கலாமே..” என்றான் சமர்த்.

“அதுக்கு நம்ம காவல் துறையும் காத்துக்கிட்டு தான் இருக்கு சார்.!! ஆனா இதுல மினிஸ்டரும் சம்பந்தப் பட்டிருப்பதால் நாம கொஞ்சம் விட்டு தான் பிடிக்கணும்.”

“நாம விட்டுட்டு தான் இருக்கோம் பிடிக்கறது இல்லையே..!!” என்று சலித்துக்கொண்டான் சமர்த்.

அவர்கள் மேற்கொண்டு இந்த விஷயத்தில் இருக்கும் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து விட்டு தங்களுடைய கூட்டத்தை கலைத்தனர். சமர்த்தும் தனது மற்றைய பணிகளை முடித்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.

வீட்டில் இருந்த கோவிந்த் சமர்த்திடம் தன்னால் மீராவின் தோழியைப் சந்திக்க முடியவில்லை என்று பகிர்த்துக்கொண்டான். அடுத்தவார கடைசியில் வந்து மீண்டும் அவளை சந்திக்க முயற்சிப்பதாகவும் கூறினான். சமர்த்தும் அதற்கு ஒத்துக்கொண்டான்.

வண்டியை மிக வேகமாக ஓட்டிச் சென்ற சமீரா, அவர்களை விட்டு நெடுந்தூரம் வந்திருந்தாள். சமர்த்தின் மீது அவளுக்கிருந்த சலனம் இத்தனை வருடங்களில் சற்றும் குறையவில்லை என்பதை ஒத்துக்கொண்டது அவளின் மனம்.

அதேப்போல் அவள் மனதில் கோவிந்தின் மீது எழும் அதித சகோதர பாசத்தை கண்டு சிறிது பயந்து தான் போனாள். அதை தன் கண்கள் காட்டிக் கொடுத்து விடுமோ என்று தான் அவனிடம் சிறு கோபத்துடனேயே பேசினாள்.

நிச்சயம் அவர்களை கண்டு அவளுக்கு பயமில்லை.. சமர்த்தின் கண்களில் தெரிந்த ஆர்வம் கலந்தப் பார்வையே அவளுக்கு சொன்னது, அவளின் மேல் அவனுக்கு இருக்கும் சலனத்தை.

அந்தப் பார்வை அவளுக்கு மிகுந்த நிம்மதியையும், ஆறுதலையும் கொடுத்தாலும் அவனின் குடும்ப சூழல், அவளை அவனை விட்டு தள்ளி நிற்க தூண்டியது.

வேற்று மதத்தை சேர்ந்த தன்னை நேசிப்பதால் அவனுடைய குடும்பம் அவனை ஒதுக்கி வைத்து விடுமோ என்று பயந்தாள் சமீரா. ‘ஏற்கனவே தன்னுடைய குடும்பத்தை ஒரேடியாக இழந்து தான் தவிப்பதே மனதிற்கு வேதனை அளிக்கிறது. இதில் அவனும் அது போல் தவிக்க வேண்டுமா, என்ன? அதிலும் எல்லோரும் உயிருடன் இருக்கும்போதே அவர்களை தள்ளி வைப்பது என்பது இன்னும் கொடுமை..!!’ என்று மனதினுள் ஏதேதோ பேசினாள் சமீரா.

முதலில் இந்த ஊரை விட்டு, அவர்களை விட்டு உடனே தள்ளி செல்ல தான் முடிவு செய்து இருந்தாள். ஆனால் நடப்பு அவளுக்கு ஒத்துழைக்கவில்லை.

விஸ்வநாதன் தன் மனைவி இறந்ததுமே அவருடைய சொத்துக்களின் பெரும்பகுதியை சில தொண்டு நிறுவனங்களுக்கு தானமாக அளித்திருந்தார். இப்பொழுது அவரின் வீடு மட்டுமே அவரின் சொத்தாக இருந்தது.

அவருக்கு தான் சகாயத்தை பின் தொடர்வதால் தன்னுடைய உயிருக்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்பது நன்கு தெரிந்திருந்தது. அதனால் அவருக்குப் பிறகு அதை என்ன செய்ய வேண்டும் என்பதை உயில் எழுதியிருந்தார்..

அந்த உயில் இப்பொழுது வங்கியில் பாதுக்காப்பு பெட்டகத்தில் இருந்தது. அவருடைய வங்கி கணக்கில் சமீராவின் பெயரையும் இணைத்திருந்தது அவளுக்கு இப்பொழுது உதவியது.

அவருடைய வங்கி கணக்குகளை எல்லாம் க்ளோஸ் செய்வதற்கு விஸ்வநாதனின் இறப்பு சான்றிதழ் தேவைப் பட்டது அவளுக்கு. அதைப் பெறுவதற்காகவாவது அவள் சிறிது காலம் கோவையில் தான் இருந்தாக வேண்டும்.

அவளுக்கும் சொந்த வேலைகள் நிறையவே இருந்தது. அந்த வேலைகளை எல்லாம் முடிக்காமல் போனால் நிச்சயம் அடுத்த மாதம் உணவிற்கு கூட அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலை வந்துவிடும்.

இப்ராஹீம் கட்டியிருந்த வீட்டையும், வாங்கியிருந்த நிலத்தையும் சகாயம் அபகரித்ததால் அப்போதே தெருவில் நிற்க வேண்டிய நிலை தான் சமீராவிற்கு.
உறவுகள் எல்லாம் அரசியல்வாதிகளின் மேலும் மற்றும் காவல் துறையினர் மேலும் இருந்த பயத்தால் அவளை ஒதுக்கியிருந்தனர். அதிலிருந்து காப்பாற்றியவர் விஸ்வநாதன் மட்டுமே..

அவளின் படிப்பிற்காக விஸ்வநாதன் உதவியதைக் கூட பாதி தான் ஏற்றாள்.. நிறைய சிறு சிறு வேலைகள் செய்ததால் கிடைத்த பணத்தைக்கொண்டே அவளுடைய ஜீவனத்தை நடத்தினாள்.

அப்படிப்பட்டவள் நிச்சயம் அடுத்தவரிடம் கையேந்த மாட்டாள். அதனால் இப்படியே இந்த ஊரை விட்டு செல்லும் முடிவை கைவிட்டாள்.. இன்னும் சில நாட்களாவது கோவையிலேயே தங்கவேண்டியிருக்கும் என்ற நிதர்சனத்தைப் புரிந்துக்கொண்டாள் சமீரா.

அதுவரை சமர்த் மற்றும் கோவிந்த் கண்களில் படாமல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துக் கொண்டு அவளின் அறையை நோக்கி வண்டியை திருப்பினாள்.
அங்கிருந்த சிறு கோயிலில் இருந்து வந்த மணிகளின் ஒலிகள் இறைவனின் விளையாட்டு ஆரம்பித்து விட்டது என்று சொல்லாமல் சொன்னது..

அவர்களின் கண்ணில் படாமல் இருக்க இன்று மட்டும் தான் அவளால் முடியும் என்பதை அறிந்திருந்த இறைவன் அங்கு நடந்த ஆராதனையில் குளிர்ந்தார்.

மறு நாள் காலை அழகாக விடிந்தது..

“கோவிந்த்..!! உன் பக் எல்லாம் பேக் பண்ணி வச்சிக்கோ.. டிரஸ் இங்கயே இருக்கட்டும்.. அதான் அடுத்த வாரம் வரப்போறியோன்னோ!! உன் லாப்டாப், சார்ஜர் அது மாதிரி மட்டும் எடுத்துக்கோ.. ஈவ்நிங் நான் ஆபீஸ்ல இருந்து வந்ததும் ஸ்டேசன்க்கு அழைச்சுண்டு போறேன்..”

“ஓகே சமீர்!! நேக்கு இப்போ கால் இருக்கு..!! நீ இப்போ ஆபீஸ் கிளம்பு..” என்ற கோவிந்திடம் கையசைத்து விடைப்பெற்று கிளம்பினான் சமர்த்.
காலைப் பொழுதும் நன்றாகவே கழிந்தது எல்லோருக்கும்.

இரவு உணவை வீட்டிலேயே முடித்துவிட்டு இரயில் நிலையம் நோக்கி சென்றனர்.

சமர்த்தின் இருச்சக்கர வாகனம் அன்று சாயங்காலம் தான் பார்சல் செர்விஸ் உதவியால் வந்திருந்தது.. அதில் தான் இருவரும் ஸ்டேசன் சென்றனர்.

கோவிந்த் ஏறியதும் கிளம்பிய அந்த இரயிலையே சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்து விட்டு கிளம்பினான் சமர்த்.

மீராவை எப்படி தொடர்பு கொள்வது என்று யோசித்தபடியே தன்னுடைய வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவனின் கண்களுக்கு, இருச் சக்கர வாகனம் ஒன்று கீழே கிடந்திருந்தது தெரிந்தது.

வண்டியின் வேகத்தை குறைத்து அதனருகே சென்று பார்க்கும்போதே புரிந்தது அது நன்றாக அடி வாங்கியிருந்தது என்று.

யாரேனும் அடிப்பட்டு கிடக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் தேடினான். கண்களுக்கு ஒருவரும் புலப்படாததால் மேற்கொண்டு வண்டியை வேகமாக செலுத்தினான்.

அவன் வண்டிக்கு சற்று முன்னதாக ஒரு ஆம்னி வேன் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.

அந்த வேன் சற்று அதிகமாக குலுங்கியவாறே சென்றது மிகவும் சந்தேகமாக இருந்தது சமர்த்திற்கு.

அதன் அருகே செல்வதற்காக வண்டியை மிக வேகமாக இயக்க முயன்றான்.

அதற்குள் அந்த வேன் சாலையில் கோணல் மாணலாக ஓடத் தொடங்கியது.

சிறிது தூரம் சென்றதும் ஒரு மரத்தின் மீது மோதி நின்ற வேனை சிறிது பயத்துடனேயே பார்த்திருந்தான் சமர்த்.
ஏனென்றால் அதிலிருந்து கதவைப் பிளந்துக்கொண்டு பறந்து வந்து விழுந்தான் ஒருவன். கூடவே, “ஹெ.ல்.ப்..!!ஹெ.ல்ப்.. காப்..ப்பா..த்துங்க!! என்ற பெண் குரலுடன்.

நொடியும் தாமதிக்காமல் அந்த வேனிடம் நெருங்கிய சமர்த் சற்றும் மீராவை அங்கு எதிர்ப் பார்க்கவில்லை..
ஒருவனை ஏற்கனவே எட்டி உதைத்ததால் அங்கிருந்த நால்வரும் மீராவை அழுத்திப் பிடித்து தப்பிக்க முடியாதவாறு பிடித்திருந்தனர்.. அவர்களிடம் இருந்து தப்புவதற்காக மிகவும் திமிறினாள் சமீரா.

சமர்த் வந்ததைக் கூட கவனிக்காமல் இருந்தனர் அந்த வேனில் இருந்தவர்கள்.

வண்டியை கீழே போட்டு அவர்களிடம் நெருங்கியவன் ஒருவனை பிடித்து இழுத்தான்.

அதில் எல்லோரும் திரும்பிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மற்ற மூவரையும் தாக்கி விட்டு சமர்த்தின் கையைப் பிடித்து இழுத்து அவன் வண்டிக்கு அருகில் ஓடிச் சென்றாள் சமீரா.

“சமீர்!! ஏறுங்க..!! இனிமே நாம இங்க இருக்கிறது ரொம்ப ஆபத்து..!!” என்று கூறியவாறே அவனின் வண்டியை ஸ்டார்ட் செய்தாள் சமீரா.

பின்னால் ஏறிய சமர்த்திற்கு அவளின் வேகம் மிகவும் பயமுறுத்தியது.

“மீரா..!! மெதுவா போ..!!”

“ஏன்? பரலோகம் பார்க்க ரொம்ப ஆசையோ!!”

“ஹா..ன்!!” என்று முழித்தான்.

“இந்த வேகமே குறைவு தான்.. அவங்க நம்ம கிட்ட நெருங்கிட்டாங்க..”

“ம்ம்..!! புரியுது.. நேரா ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷன்க்கு போ..!!” என்றவனுக்கு மெளனமாக ‘சரி’ என்பது போல் தலை அசைத்து விட்டு வண்டியின் வேகத்தை அதிகரித்தாள் சமீரா.

அதில் சற்று தடுமாறிய சமர்த் அனிச்சை செயலாக அவளின் இடையை அணைத்த மாதிரி ஒரு கையால் பிடித்ததால் மனம் தடுமாறிய மீராவின் கைகளில் இருந்த வண்டி ஆடியது. அந்த வண்டி சிறு கல்லில் பட்டு மேலும் தடுமாறி கீழே விழுந்தது..
 
Top