Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Maayam seithayadi 5

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம்-5

படியேறி வந்து விட்ட மாப்பிள்ளை வீட்டுக்காரராகளை ,வரவேற்று ,அமரவைத்து,மரியாதை நிமித்தமாக,தானும் எதிரே அமர்ந்தாள் தாமரை...ரவி வர்மாவின் தகப்பனார் ,தன்னையும் தனது குடும்பத்தினரையும்,அறிமுகம் செய்து கொண்டார்,,,,வேறு வழியின்றி,தாமரையும்,தன்னை அறிமுகம் செய்து கொள்ள, காத்திருப்பு நேரத்தை நிரப்பும் பொருட்டு,அவர்களிடையே,உரையாடல்,இயல்பாய் தொடங்கி தொடர்ந்தது...

‘’ரொம்ப சந்தோஷம்மா ....பட்டிமன்றங்கள்ல,என்ன சப்ஜெக்ட் எல்லாம் பேசியிருக்கே’’ என்றார் ரவி வர்மாவின் அப்பா தினகரன்...

‘’ம்‌.....அனேகமா ஃபேமிலி சப்ஜெக்ட்ஸ்தான் அங்கிள்...சில சமயங்கள்ல புராணங்களில் இருந்து தலைப்புகள் வரும்...தேச தலைவர்கள் தொடர்பாவும் பேசறதுக்கு டாபிக்ஸ் தருவாங்க...அதையும் விடறதில்ல...லைப்ரரி புக்ஸ் ஹெல்ப் எடுத்துக்கிட்டு பேசிடுவேன்’’

‘’தட்ஸ் குட்...அப்பதானே பல்வேறு துறை அறிவு நமக்கு கிடைக்கும்’’

‘’சாதாரணமா பட்டிமனறம் பேசறவங்க, ஜென் கதைகள்,வாட்சப் ஜோக்ஸ்‌ கைவசம் வச்சிருப்பாங்க...பட்டிமன்ற மேடைகளுக்கு போயிட்டு,அதுல,ரெண்டு எடுத்து விடறது,ரெண்டுபாரதியார் பாட்டு,சிச்சுவெசனல் சாங் ரெண்டு,அப்றம்,எதிர் கட்சிக்கு கொஞ்சம் கவுண்ட்டர் ஸ்பீச் அப்டின்னு சிம்ம்பிளா முடிச்சுடுவாங்க...நீங்களும் அப்டித்தானா’’ ரவி வர்மாவின் தம்பி,துருவன் பட்டென்று கேள்வியை வீச
.....அசரவில்லை தாமரை...தலையாட்டி மறுத்து விட்டு இப்படி பதில் சொன்னாள்....

‘’அப்டி பொதுமைப் படுத்திர முடியாது...ஏன்னா, எல்லா துறை கள்லயும் நுனிப்புல் மேயற கூட்டமும் இருக்கும்...எடுத்துகிட்ட வேலையை சிரத்தையோட,செயிற வங்களும், இருப்பாங்க...அது அவரவர்,இயல்பைப் பொறுத்தது...என்னையப் பொறுத்த அளவுல,எத்தனை பட்டிமன்றங்கள் கலந்துகிட்டேங்கற எண்ணிக்கையை நான் பெரிசா எடுத்துக்கறதில்ல.. நான் எடுத்துகிட்ட தலைப்புகளுக்கு,நான் எவ்வளவு தூரம் நியாயம் செய்திருக்கேன்னுதான் யோசிப்பேன்...டாபிக் தொடர்பா, நிறைய தகவல்கள் திரட்டி,அதை பேஸ் பண்ணித்தான் பேசுவேன்...அதுவும் போக,ஒவ்வொரு பட்டிமன்றத்தையும்,என்னைய வளர்த்துக்க,கிடைச்ச வாய்ப்பாத்தான் பார்ப்பேன்...’’ என்று தாமரை

தன்னிலை விளக்கம் தர,அவளது வார்த்தைகளில் தெறிக்கும் ,தொழில் பக்தியோடு சேர்த்து அவளையும் ரசித்தவாறு, அமைதிப் புன்னகையுடன் அமர்ந்திருந்தான் ரவி வர்மா...

‘’கண் அளக்காததையா கை அளந்துடப் போறது?....அவன் கிடக்கிறான்மா...நீ எதையும் கரெக்டா ,கச்சிதமா செய்யற பொண்ணுன்னு,பார்த்தாலே தெரியறது...’’ என்றாள் ரவி அம்மா லோகாம்பாள்...

‘’தமிழ் படிக்கறவாளே குறைஞ்சு போயிட்டா...தமிழை தள்ளி வச்சுட்டுத்தான் பிள்ளைகளே வளர்ரது...நீ தமிழ் நன்னா படிச்சு,அதை மேடையிலயும் ,முழங்க கிளம்பிட்டியே...இந்த துறையில ஆர்வம் வந்ததுக்கே,உன்னைப் பெரிசா பாராட்டனும்மா’’---தினகரன்...

சுவற்றுக்கு அந்தப் பக்கமாய் நின்றவாறு, ஒரு வித,தவிப்புடன், மகளும்,மற்றவர்களும்,பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த சரஸ்வதி,இனியும் தான் காட்சிக்குள் நுழையா விட்டால்,நன்றாக இருக்காது என்ற உறுத்தலில்,புடவையை இழுத்து போர்த்தியவாறு,ஹாலுக்கு என்ட்ரி கொடுத்து,அனைவரையும் கை கூப்பி வரவேற்றாள்..

‘’எல்லாரும் வாங்கோ...நான் தாமரையோட அம்மா சரசு...’’
அனைவரும் பதில் வணக்கம் வைத்தனர்...
‘’உக்காருங்கோ...பேசலாம்’’---லோகாம்பாள்.

‘’பேசலாமே...வந்து....பெரியவாள்லாம் வீடு தேடி வந்திருக்கேள்.....ரொம்ப சந்தோஷம்...ஆனா இவ பொண்ணு இல்ல’’ என்றாள் தயங்கியவாறு...

‘’அம்மா...நானும் பொண்ணுதாம்மா’’ என்று தாமரை ,பொய்யான பதட்டத்துடன்,டைமிங் காமெடி பண்ண,மாப்பிள்ளை உள்பட அனைவரும் சிரித்து விட்டனர்..சரஸ்வதிக்கு என்னவோ போலாகிவிட்டது....

‘’சித்த சும்மாயிருடி....ஐயோ....அதில்ல...நீங்க பார்க்க வந்த பொண்ணு இவ இல்லைன்னு சொல்ல வந்தேன்’’

‘’சரிதான்....எங்களுக்கு புரிஞ்சுடுத்து....இருந்தாலும் நீங்க அதை தெளிவா சொல்ல வேண்டாமோ...இந்த காலத்து குழந்தைகள் ரொம்ப ஸ்மார்ட்..அதிலும் உங்க பொண்ணு பேச்சாளர் வேற’’’ என்று லோகாம்பாளும் சரஸ்வதியை கலாய்க்க ....

‘’சரிதான் நீங்க சொல்றது...மாடியாத்துல,என் மச்சினர் பொண்ணு இருக்கா...சித்து சிறுக்குன்னு ஆளும் நன்னாயிருப்பா....ஆத்து காரியங்களும் நன்னா பார்ப்பா....அவளைத்தான்...’’ என்று சரசு இழுக்க,

‘’மச்சினர் பொண்ணுங்கரேள்.....அப்ப,உங்க பொண்ணு மாதிரித்தான...இங்கேயே வரச்சொல்லுங்கோ....பார்த்துடலாம்’’

‘’ஆமா....எங்காத்துக் காரிக்கு மூட்டு வலி...ஏற இறங்க சிரமப்படுவா....அதுக்கும் சேர்த்துதான் சொல்றா’’என்று சொல்லி விட்டு,மனைவியின் முறைப்பிலிருந்து தப்பிக்க,முகத்தை திருப்பிக்கொண்டார் தினகரன்....
‘’தோ....நிமிசத்துல அழைச்சுண்டு வரேன்’’ என்று சரசு மாடிக்கு ஓட,.. அந்த இடைவெளியிலும் உரையாடலை தொடர்ந்தனர் தாமரையும் ரவி

குடும்பத்தினரும்...
ரவியின் ஐ.டீ.துறை ,அதனுடைய நிலையற்ற தன்மை,வேலை பரபரப்பு,கலாசார மாறுதல் என்று பேச்சு அதன் போக்கில் பயணித்தது.
..அவர்களிடையே,எவ்வித கட்டாயமும்,நெருடலும்,இல்லாத இயல்பான சந்திப்பு என்பதால்,அவர்களால் மனம் திறந்து பேச முடிந்தது..

அன்றுதான்,அப்பொழுதுதான் அறிமுகம் என்றாலும்,எத்தனையோ வருட பரிச்சயம் போன்றதொரு மன நெருக்கத்தை ,ரவிவர்மாவும்,தாமரையும் உணர ,அதன் தாக்கத்தை ரவிவர்மாவின் குடும்பத்தினரிடமும் காண முடிந்தது....சரசு மாடிக்கு செல்கையில்,அங்கு நந்தினிக்கு அலங்காரம் முடியும் தறுவாயில் இருந்தது..

‘’அக்கா...மாப்பிளை யாத்துக்காரா வந்து நாழியாயிடுத்து...கீழ உக்காண்டு வெயிட் பண்ணிட்டிருக்கா..’’
‘’மேலே வரசொல்லேன்’’ மகளுக்கு பூ சூடி விட்டவாறே சொன்னாள் விஜயா...

‘’சொல்லாம இருப்பேனா....ஆனா,அவா எங்காத்துல வச்சி ,நந்தினியை பார்க்க பிரியப்படறாப்புல தெரியுது...’’

‘’ஏனாம்’’என்று அம்மாவும்,பெண்ணும் முறைக்க...குறுக்கே வந்து விழுந்தார் ராகவேந்தரா...

‘’சரி....எங்க வச்சி பார்த்தா என்ன,,,,எல்லாம் ஒண்ணுதான்...சீக்கிரம் ரெடியாகுங்கோ...மணிக்கணக்கா உள்ள இருக்கேள்...இன்னும் அலங்காரம் முடிஞ்ச பாடா தெரியல’’
என்று வசை பாடத் தொடங்க,

‘’சரி...அப்போ அவாளுக்கு டிபன் காபி குடு...நாங்க பின்னாடியே வந்திடறோம்’’ என்று கேசரி டப்பாவை சரசு விதம்,அரை மானதுடன் நீட்டினாள் விஜயா...
‘’நீ போயேண்டா கீழே...பொம்மானாட்டியாட்டம் காலைச் சுத்திண்டு’’ ...என்று மகனை விஜயா கடிக்க,ஹரிஹரன் சித்தியுடன்,கீழிறங்கி வந்தான்...சரசுவும்,ஹரியும் சேர்ந்து,காபி டிபன் பரிமாறினார்கள்...வந்திருந்த விருந்தினர்க்கு,வயிறும்,மனசும் ஒரு சேர நிறைந்து விட்டது...அக்காவை முந்திக்கொண்டு ,மாப்பிள்ளை மனதிலும்,அவர் வீட்டினரது புத்தியிலும் ஏறி அமர்ந்து கொண்டாள் தங்கை

தாமரை....தங்கத் தாமரை ....பந்திக்கு மட்டுமல்ல,பெண் பார்க்கும் படலத்திலும்,முந்த வேண்டும் போலிருக்கிறது...ஆக,ரிசல்ட் என்னவென்றால்,நந்தினி தனது பெற்றோருடன் கீழிறங்கி வந்து,நேருக்கு நேராக எதிர் கொண்ட பொழுது,அது ஒரு ஸம்ப்ரதாய நிகழ்ச்சியாக
அமைந்ததே தவிர,அங்கே மனங்களுக்கு இடையே எந்த,கெமிஸ்ட்ரியும் ஏற்படவில்லை...ஏனெனில்,ரவி வர்மா தாமரையே தனது

மனைவியாக வரவேண்டியவள் என்ற முடிவுக்கு எப்போதோ வந்துவிட,ரவி வர்மாவைப்போல்,ஒரு வாழ்க்கை துணை அமைவது சிறப்பிலும்

சிறப்பு என்ற எண்ணத்திற்கு தாமரையும் வந்திருந்தாள்...மன இசைவு ஏற்பட்டு விட்டதால்,அவர்களுக்கு அப்படி தோன்றியது..எண்ணங்கள் தானாக இணைய வேண்டியவை...வலிந்து இணைக்கப்பட வேண்டியவையோ,கூடியவையோ அல்ல.
 
Top