Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

maayam seithaayadi

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம்-17
‘’பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே ...என் .ஐயனே !
அம்மையும் அப்பனும் தந்ததா..இல்லை
ஆதியின் வல்வினை சூழ்ந்ததா!
அத்தனை செல்வமும் உன்னிடத்தில் –நான்
பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்..!
பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கை துரத்துதே!
-என சோபனாவின் அலைபேசி ,சோகப்பாடல்களையும்,தத்துவப் பாடல்களையும்,பஞ்சமில்லாமல் பாட,....சிவசங்கரி வந்து உரிமையுடன் திட்டினாள்...

‘’என்ன ஷோபனா இது..?சோதனையான காலங்கள்லதான் நாம அதிகமான பாசிடிவ் சிந்தனைகளோட இருக்கணும்...’’
‘’அக்கா...உள்ள விதியில ஒரு விதியும் குறையப் போற தில்ல...சும்மா மன ஆறுதலுக்காக கேட்டுகிட்டு இருக்கேன்...மனசுக்கு மருந்து போடறாப்புல நல்லா இருக்கு...’’

கழுவற தண்ணியில நழுவற மீன் போல போறாளே ....இவளை என்ன செய்து நாம் வழிக்கு கொண்டு வருவது என சிவசங்கரி யோசிக்க...சம்பந்தமில்லாமல் ஆரம்பித்தாள் ஷோபனா...
‘’அக்கா...உங்களுக்கு விஷயம் தெரியுமா? உங்க வீட்டு அத்தானுக்கு முதல்ல என்னைத்தான் பெண் கேட்டாங்க...’’
‘’எனக்கெப்படி தெரியும்....அத்தானும் சொல்லல...சரி...ஏன் கல்யாணம் நடக்கல?’’
‘’அப்ப எனக்கு பதினைஞ்சு வயசுதான் ஆச்சு...பத்தாங்கிளாஸ் கூடப் பாஸ் பண்ணல...’’ என்று சொல்லி சிரிக்க,சிவசங்கரியும் சேர்ந்து சிரித்தாள்...
‘’அத்தான் தப்பிச்சிட்டாங்க...’’

‘’என்ன..ஒரே சிரிப்பாக் கெடக்கு...சொன்னா,நாங்களும் சிரிப்போம்ல...’’—ஜெயராம்...
‘’அது ஒண்ணுமில்ல அத்தான்...லேடீஸ் மேட்டர்’’
‘’ஓகே..ஓகே..நடக்கட்டும்...நான் மேல கேக்கல....சரி...உனக்கு பொழுது எப்பிடிம்மா போகுது’’
‘’அதான் பிராபள.ம்...ஈவினிங் பிள்ளைங்க கூட ஓடிடுது....பகல் பொழுதுதான் நகர மாட்டேங்குது....கழுத்தை பிடிச்சுதான் தள்றேன்’’

‘’நீ என்னம்மா படிச்சே’’
‘’பி.காம் படிச்சேன்...அப்புறம் என்னமோ ஒரு இண்டெரெஸ்ட்ல,நேச்சுரோபதியில,ஒரு டிப்ளமோ கோர்ஸ் முடிச்சேன்..’’
‘’ஷோபனா....நீ படிச்ச ரெண்டு படிப்பும் சம்பந்தமில்லாம இருக்கு?’’
‘’அத்தான்...என் வாழ்க்கையே அப்டித்தான இருக்கு’’

சோபனாவின் வார்த்தைகள் ஜெயராமுக்கு வலியை தந்தன....சோபனாவின் அப்பா,அதாவது ஜெயராமின் மாமா,நல்ல மனிதர்...பணம் சம்பாதித்தார்...கூடவே நல்ல மனிதர்களையும் சம்பாதித்திருந்தார்....சொந்த பந்தங்களை அரவணைத்து செல்பவர்...அவர்களின் ஏற்ற,இறக்கங்களில் துணை நிற்பவர்...ஜெயராம் அப்பா காலமானது முதல்,,இன்று வரை ,அவர்கள் வீட்டுக்கு தூணாய் இருப்பவர் மாமாதான்...அவரின் ஒரே மகளுக்கு இந்த கதி தேவையா என்ற வருத்தமேற்பட்டது...

‘’மனசை தளர விடாதம்மா....ஏதாவது உனக்கு வேலை வாய்ப்பு வருதானு பார்ப்போம்...அப்பதான்,உன் மனஸுக்கும் ஒரு ஆறுதல் கிடைக்கும்...நல்லதே நடக்கும்...கவலைப் படாத...’’ என்று சொல்லி விட்டு,சோபானாவிடம் இருந்து பதில் எதையும் எதிர்பாராமல்.உள்ளறைக்கு சென்று விட்டான்...பிள்ளைகள் டிராயிங் வரைந்து தரச் சொல்லி கேட்க,அவர்களுக்கு உதவப் போனாள் ஷோபனா..அந்நேரம் எதிர் வீட்டு மைதிலி வந்தாள்...

‘’அக்கா,உங்க ஃபோன் தாங்களேன்...ஒரு முக்கிய வேலை இருக்கு...என்னோட ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆயிட்டுது ...’’
‘’தோ...சார்ஜுல போட்டுருக்கேன் பாரு...எடுத்துக்க....’’—சிவசங்கரி...
‘’யாருக்கா அது...உங்க வீட்டுல புதுசா ஒரு பொண்ணு நடமாடுது’’
‘’அவரோட மாமா பொண்ணு...ஷோபனா....சும்மா கொஞ்ச நாள் தங்கிட்டுப் போலாம்னு வந்திருக்கா’’
‘’மேரேஜ் லைஃப்?’’
‘’ஆங்....அது கொஞ்சம் பிராபளமாயிருக்கு...சரியாயிடும்...ஸ்டெப் எடுத்துட்டு இருக்காங்க’’

‘’நினைச்சேன்...அப்டித்தான் இருக்கும்னு கணக்கு போட்டேன்....சரியா இருக்கு...நீங்க எல்லாத்துக்கும் உதவற வங்க...இந்த பொண்ணுக்கும் நல்லது பண்ணலாம்னு நினைக்கறீங்க....பாத்துக்கா...உங்க மேரேஜ் லைஃபை பிராபளமாக்கிடப் போறா’’
‘’ச்சே....அவ நல்ல பொண்ணு...எங்க வீட்டுக்காரரும் அப்டிப்பட்ட ஆள் கிடையாது மைதிலி’’

‘’வாய்ப்பு கிடைக்கிற வரை எல்லாரும் நல்லவங்கதாங்க்கா..ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டுன கதையா ஆயிடாமப் பார்த்துக்கங்க என்று சிவசங்கரியின் அலை பேசியை எடுத்துக் கொண்டு கிளம்ப....முழித்தாற்போல நின்ற சிவசங்கரி, கணவன் கூப்பிடும் குரல் கேட்டு உள்ளே போனாள்..

‘’சிவா...உன் ஃபிரண்ட் என்ன இப்பிடி பேசறா....வாயை அடக்கி பேசச்சொல்லு..’’என்று கடுப்படித்தான் ஜெயராம்...
‘’இல்ல..ஜெயா...அவ பொதுவான ஊர்நடப்பை சொல்றா...’’
‘’கிழிச்சா...இது மாதிரி வில்லங்கமான ஆட்களை எங்கரேஜ் பண்றது தப்பு சிவா...அடுத்த வீட்டு விஷயங்கள்ல தலையிடறதுக்குன்னு ஒரு லிமிட் இருக்கு...அவ வாதத்துப் படியே பார்த்தாலும்,ஒண்ணு ரெண்டு பேர் தப்பு பண்ணலாம்.. அதுக்காக எல்லா ஆம்பளையும் எவடா கிடப்பாள்னு அலையவா செய்வாங்க ?என்ன அர்த்தத்துல இப்பிடி பேசிட்டுப் போறா....வந்தா வந்த வேலையை பாத்துட்டுப் போகணும்’’ என்று அவன் தனது இயல்பு மீறி வெடிக்க,
‘’விடுங்க ஜெயா....நான்தான் அவளுக்கு பதில் சொல்லிட்டேன்ல....’’

‘’கேள்வியே சரியில்ல..இதுக்கு விளக்கம் வேறயா..இப்பிடித்தான் தெரிஞ்சோ தெரியாமலோ ஒவ்வொருத்தர் மனசுல விஷத்தை விதைச்சிர்‌றது..குடும்பங்கள் ரெண்டாகறதுக்கு,இது மாதிரியான ஆட்கள்தான் காரணம்..அவளை மெதுவா கட் பண்ணு’’ என்று ஏகமாக கோபப்பட்டான் ஜெயராம்..மைதிலி சொன்னதும்,அதற்கு ஜெயராம் கடுமையாக ரியாக்ட் செய்ததும் ஒரு புறமிருக்க,சோபனாவிற்கு ஒரு வழியை காட்டி,அவளது வாழ்க்கையை பிசியாக்குவாதே புத்திசாலி த்தனம் என்ற முடிவுக்கு வந்தாள் சிவசங்கரி..எப்பேற்பட்ட சாமார்த்திய சாலிக்கும், சமயங்களில் இடித்துரைத்து,சொல்லவும், முடுக்கி விடவும்,ஒரு தூண்டுதல் சக்தி தேவைபடத்தான் செய்கிறது...அதை சமுதாயம் போகிற போக்கில் நடத்திக் கொண்டுதான் இருக்கிறது...
 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கண்ணம்மாள்ஸ்ரீதர் டியர்
 
Last edited:
எதிர் வீட்டுப் பெண் சிவசங்கரிக்கு நல்லதுதானே சொல்றாள்
வரும் முன்பே உஷாராக இருப்பது நல்லதுதானே
ஜெயராம் கோபப்படுவதில் அர்த்தமில்லை
சிவசங்கரி விழித்துக் கொண்டு ஷோபனாவுக்கு ஜெயராம் தவிர்த்து வேற நல்லது நடந்தால் சரி
 

Advertisement

Latest Posts

Top