Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

maayam seithaayadi--3

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
சரசு சரசு என வாய் நிறைய வாஞ்சையோடு அழைப்பவரை ,வழியனுப்பி வைத்து விட்டு,பனிரெண்டு வயது மகளைக் கையில் பிடித்துக்கொண்டு,செய்வதறியாது நின்றாள் சரசு...ராகவேந்த்ராவிற்கு தம்பியின் மீது மிகுந்த பாசமுண்டு...தம்பியின் இறப்புக்குப் பின்னர் அது தம்பியின் குடும்பத்திற்குமாய் விரிவடைந்தது....அவருக்கும் மனைவி மக்கள் உண்டு...இருந்த ஒரே வீட்டை பங்கிட்டு,மாடியும்,கீழுமாய் அண்ணன் தம்பி இருவரும் குடியிருந்தார்கள்...அது இப்போழுது வசதியாய்ப் போயிற்று.

.சரசுவிற்கு மாடியில் மச்சினர் குடும்பம் வசித்தது ,பெரிய ஆதரவாய் இருந்தது..குடியிருக்க பாதுகாப்பாய் ஒரு வீடு ,வாழ்வாதாரத்திற்கு,கோர்ட் பென்ஷன் ஆகியவை இருந்ததால்.கணவனது மறைவிற்குப் பின்னரும்,சரசுவிற்கு ப்,பெரிய பொருளாதாரப் பின்னடைவு இருக்கவில்லை...காலம் ஓடிக்கொண்டிருந்தது...அது எவருக்காக அல்லது யாருக்காகக் காத்திருக்கப் போகிறது.

.இருந்தாலும் கணவனின் பிரிவுதான் பெரிய வலியாக இருந்தது சரசுவிற்க்கு.ஏனெனில் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை அப்படி...பெற்றோர் பெரியோர் பார்த்து வைத்த மாப்பிள்ளைதான்...எனினும்,வெட்கத்தில் தொடங்கி,தயக்கத்தில் தொடர்ந்து,அன்பில் இணைந்து,ஆதரவில் இறுகி,பாசத்தில் பசையென ஒட்டிக்கொண்டவர்கள்...பிய்த்தெடுக்கையில்.உயிரில் வலி க்கிறதே...பழைய நினைவுகளில் மூழ்கியிருப்பாள்..மகளின் முகம் பார்த்து எதார்த்தத்துக்கு வருவாள்....பெருமாள் இருக்கிறவரை திருநாள் வரும் என்பார்கள்,,சரசுவிற்கு பெருமாளும் இல்லை திருநாளும் இல்லையென்றாகிவிட்டது

.அப்பாவின் மரணம் தாமரையை வேறு விதமாய் பாதித்தது...துறு துறு வென சுட்டிப்பெண்ணாய் இருந்தவள்,அப்பாவின் மரணத்திற்குப் பின்னர் அப்படியே அமுங்கிப் போனாள்....இரண்டும் கெட்டான் வயதில் இருந்தவளுக்கு,தலையில் இடியென விழுந்தது,தகப்பனின் மரணச்செய்தி.

..தன் தாயே தனக்கு மகளாக வந்து பிறந்ததாய் நம்பும் அநேக அப்பாக்களில் சுப்ரமணியமும் ஒருவர்..ஆகவே தாமரையை எங்க அம்மா என்றுதான் சொல்லுவார்,,,அப்படிபட்ட அப்பா இல்லை என்று தெரிகிறது...ஆனால் எல்லோரது வீட்டிலும் இருக்கும் அப்பா தன் வீட்டில் ஏன் இல்லை என்று புரியவில்லை தாமரைக்கு.

.அறியாத புரியாத வயதில் அவளுக்கு ஏற்பட்ட பேரிழப்பு,அவளது இயல்பையே மாற்றியது...அனாவசியப் பேச்சில்லை..விளையாட்டுகளில் மனமில்லை,,,உணவு உடையில் கூட பெரிய ஆர்வமோ,தெரிவோ இல்லை...தன்னை சுருக்கிக் கொண்டு,ஒரு ஆழ்ந்த சிந்தனவாதியாய் மாறியவள்தான் பின்னாளில்,பேச்சாளரானாள்.

.....எழுதி வைத்துப் பேசும் அவசியமின்றி,மடை திறந்த வெள்ளமாய் ,தரையிலிருந்து புறப்பட்ட ராக்கெட்டாய்,தங்கு தடையின்றி,சொல் பிற ழ்வின்றி,எந்தப் பொருள் குறித்தும் பேசும் வல்லமை பெற்றாள்....இன்னும் இல்லறத்தில் கால் கூட எடுத்து வைக்காத இளம்பெண் இப்படி பேசுகிறதே என மற்றவர்களுக்கு வேண்டுமானால் வியப்பாக இருக்கலாம்...ஆனால் அவள் மூளையில்தான் எந்நேரமும் சிந்தனை நதி ஓடிக்கொண்டேதான் இருக்கிறது,,அதிலிருந்து எடுத்து வீச என்ன தயக்கம்..?

அவ்வப்போது,கவிதைகளும் எழுதுவாள்,,,படிப்பும் குறை சொல்லும்படியாக இருந்ததில்லை..மொத்தத்தில்......சரசுவிற்கு மகளைக் கண்டிக்க,தண்டிக்க,வழிநடத்த, என்று எந்த வேலையும் இல்லாமல் போயிற்று..தனது ஒரே பிடிமானமான மகளைப்பிடித்துக் கொண்டு,அவளோடு ஓட்டிக்கொண்டு,தனது வாழ்நாட்களை கடத்துகிறாள் என்றுதான் சொல்லவேண்டும்..

அறைக்குள்ளிருந்து தலையை மட்டும் நீட்டிய மகளிடம்,
‘’ ஏண்டி இப்டி உக்காண்டிருக்க ! தலை வாரி பூ வச் சுக்கபடாதோ ‘’---என்றாள் சரசு...
வேகமாகத் தாயினருகில் வந்தாள் தாமரை...
‘’ம்மா ! மாப்பிள்ளையாத்துக்காரா வர்றது அக்காவைப் பார்க்கத்தானே’’—என்று கேட்டாள் மாடியைக் கைகாட்டி...

‘’ஆமாம்டி...யாரு இல்லேன்னா...அதுக்காக நீ இப்டி தூங்கி எழுந்தாப்புல நிக்கணூமாக்கும் ‘’
பதில் பேசாமல்,சமையலறைக்கு நகர்ந்த தாமரை,ஒரு பஜ்ஜியை எடுத்துக் கடிக்க,
‘’காபியைக் குடிச்சுட்டு,தலை வாரி முகம் அலம்பிக்கோ...’’
‘’இங்க பஜ்ஜியும் காபியும்...மாடியில என்ன தயாராகறது?
‘’கேசரி’’

‘’எனக்கொரு டவுட்டும்மா...எல்லாத்தையும் சேர்த்துப் பரிமாறுவேளா .....இல்ல...அவா ,மாடியில கேசரி,அப்புறமா கீழ வந்து,காரம் காபின்னு சாப்பிடணுமா?’’
‘’நல்லா நாலு மொத்துவேன்...கேக்கறா பாரு கேள்வி....பெரிமாவுக்கு ஒத்தாசையா இருக்கட்டுமேன்னு,நான் இதெல்லாம் பண்றேண்டி ...தோ இப்ப,காரம்‌.காபியை மேலே கொண்டு சேர்த்துடுவேன்....அப்புறம் அவா பாடு..’’என்றாள் சரசு பெருமூச்சுடன்.

...டிபனை முடித்து விட்டு, தாமரை காபியை தனக்கெற்றாற்போல் திக்காக கலந்து கொண்டாள்...காரசாரமான பஜ்ஜி சட்னியின் சுவை தாங்கிய நாக்கில்.சூடான காபி செல்லும்போது....ஆஹா ....வார்த்தைகளில் வர்ணிக்க முடியுமா என்ன,,,உணர்ந்தே தெரிந்து கொள்ள வேண்டிய பட்டியலில், கடவுளுக்கு அடுத்து,காபிதானோ!!

‘’மாப்ளை என்ன பன்றாராம்?’’
‘’ஐ .டி .கம்பெனியில வேலையாம்...ரெண்டு பிள்ளைகள்ள இவர் மூத்தவராம்...போட்டோவுல பார்த்தேன்...சினிமா நடிகர் பிரசன்னா மாதிரியிருக்கார்....’’
புருவம் உயர்த்தி உதடு பிதுக்கினாள் தாமரை...

‘’சத்தமா சொல்லாதம்மா....பிரசன்னா காதுல விழுந்துடப்போறது ‘’
‘’கலாட்டா பண்ணாதேடி...உண்மையிலேயே பையன் மூக்கும் முழியுமா திருத்தி வச்சாப்புல இருக்கான்,,,’’
‘’சரிம்மா...நான் நம்பறேன்..நீ புரோக்கர் ஆயிடாத...’’

‘’தள்ளிக்கோ...டிபன் காபியை மாடியில கொண்டு குடுத்துட்டு வந்திடறேன்....அவா வந்துடுவா ‘’ என்று சரசு ஒரு சில்வர் டப்பாவை கையில் எடுத்த நேரம் தாமரை குரல் கொடுத்தாள்...

‘’அம்மா அவா வந்துட்டா’’ என்றாள் வாசலை நோக்கியபடி’’’

மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் முன்னாள், தான் முதலில் எதிர்ப்பட வேண்டாம் ....மாடிக்கு செல்லட்டும்...பிறகு போய் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்த சரசு லேசாக எட்டிப் பார்த்து விட்டு தலையை உள்ளிழுத்துக் கொண்டாள்...ஆனால்,மாப்பிள்ளை ரவிவர்மா,தனது பெற்றோர் மற்றும் சகோதரனுடன்,கீழ் வீட்டிற்குள் நுழைந்தான்...
 
Top