Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

maayam seithaayadi-23

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம்—23
விஜயகுமாரை கல்யாணத்தில் பார்த்தது....இருந்தாலும்,யூகத்தையும் சேர்த்து ,விஜயகுமாரை அடையாளம் கண்டு கொண்டாள் சிவசங்கரி.....முகமலர்ச்சியுடன் வரவேற்று ஹாலில் அமர வைத்தாள்.
‘’ஷோபனா தூங்கிக்கிட்டு இருக்கா....’’
‘’பரவால்ல...மெதுவா எந்திரிக்கட்டும்..’’
‘’கம்பெனியில லீவெல்லாம் சொல்லிட்டு,அடுத்த வாரம் வருவீங்கன்னு நினைச்சேன்.. ‘’

‘’ ரெண்டு மாசமா,பேசாம இருந்த ஷோபனா ,திடீர்னு ஃபோன் போட்டு வந்துடுன்னாளா.....சந்தோசத்துல கை கால் ஓடலே...வேலையெல்லாம் பத்தி யோசிக்கல...இந்த மடம் இல்லேன்னா,சந்த மடம்...!ஷோபனா கூப்பிட்டதே போதும்னு ஓடியாந்துட்டேன்...’’

சிரிப்பை அடக்கிக் கொண்டாள் சிவசங்கரி..வேகமாக வாசலை தெளித்து விட்டு வந்து,விஜயகுமாருக்கு காபி போட்டுக் குடுத்தாள்....ஷோபனா எழுந்து கொண்டதும் ,அவளிடம் விஷயத்தை சொன்னாள் சிவசங்கரி....
‘’வந்தாச்சா...குட்’’
‘’என்ன சாதாரணமா கேக்கறே...காலையில வருவார்னு உனக்கு தெரியுமா’’
‘’தெரியாது....ஆனா,எதிர்பார்த்தேன்’’
பழித்து காண்பித்தாள் சிவசங்கரி....
‘’நல்ல கெமிஸ்ட்ரி உள்ள ஹஸ்பண்ட் ஓய்ஃவுதான்’’
‘’தாங்க்ஸ்’’ என்றாள்சோபனா ,வெட்கத்துடன் தலைமுடியை காதுக்கு பின்னால் ஒதுக்கியவாறு...

‘’ம்க்கும்...இதுல வெட்கம் வேற’’ என்று அவள் கன்னத்தை இடித்த சிவசங்கரி,’’போ....போய் புருஷனை கவனி’’ என்றாள்...அறை வாசலில் நின்று எட்டிப் பார்த்து ,கை ஜாடையில் கணவனை அறைக்குள் அழைத்தாள் ஷோபனா..உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்தான் விஜயகுமார்...இருவரும் ஒரு நிமிடம் உற்றுப் பார்த்து விட்டு சிரித்துக் கொண்டனர்....

‘’ஏன் என்னைய உள்ள வரசொன்னே’’---விஜயக்குமார்
‘’அங்க அத்தான் நடமாடிட்டு இருப்பாங்க....அவங்க முன்னால உங்க கூட பேசறதுக்கு,எனக்கு வெக்கமா இருந்துச்சு....அதான்’’
சோபனாவிடம் பெண்மையின் டிகிரி ,சற்று கூடியிருப்பதை ,கண்ணுற்று மகிழ்ந்தான் விஜயக்குமார்....

‘’அத்தை மாமா நல்லாயிருக்காங்களா’’
‘’நல்லா இருக்காங்க....என்னைய விசாரிக்க மாட்டியா’’
‘’அதான் பாக்கறேனே....நல்லா அமுல் பேபி மாதிரி புஷ்டியாத்தான இருக்கீங்க’’
‘’உனக்கு நான் பேபி...எனக்கு நீ பேபி....’’
‘’ஆனாலும்,நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு பேபி வேணும்ல’’
‘’வரும் ‘’ என்றான் விஜயக்குமார்..
‘’வர வேண்டும்’’ என்றாள் ஷோபனா...

அன்றே கணவனை,வானவில் இயற்கை உணவகத்துக்கு கூட்டிக்கொண்டு போனாள் ஷோபனா...கடைக்கு, வழக்கமாக வரக்கூடிய,சித்த வைத்தியரிடம் , விஜயக்குமார் தம்பதி தங்களது பிரச்சினையை சொல்ல,அவர் சில விபரங்களை கேட்டு விட்டு,இருவருக்கும் பொதுவான சில உணவுகளையும், இருவருக்கும் தனிதனித் தனியாக சில உணவுகளையும் பரிந்துரை செய்தார்,,,வாரம் இரு முறை விஜயகுமாருக்கு முருங்கைப்பூ சூப் பரிந்துரை செய்தவர்,சோபனாவை தினம் மாதுளை ஜூஸ் குடிக்க சொன்னார்...

’அது எனக்கு மருந்து கிடையாது,,,,விருந்து..விரும்பி சாப்பிடுவேன்’’
‘’இல்ல...நீங்க நினைக்கற மாதிரி இல்லை...சில கண்டீசன்ஸ் இருக்கு...அது நாட்டு மாதுளையா இருக்கணும்....அதுல தோல்,ஜவ்வு பகுதி ..இப்பிடி எதையும் நீக்காம,முழுசா ஜூஸ் போட்டு சாப்பிடணும்....சரியா’’ என்றார்.

..இருவருக்கும் தனித் தனியாக சில பயிற்சிகளும் சொல்லிக்குடுத்தார்...மனதில் இருவருக்கும் நம்பிக்கை பிறந்தது....மற்ற நால்வரும் .திருமண வாசலில் நின்று கொண்டிருந்ததால்,அவர்களால்,விஜயகுமார்-ஷோபனா இருவரின் பிரச்சினையை புரிந்து கொள்ள முடிந்தது...மானசீகமாக அவர்கள் நால்வரும் கூட,சோபனாவின் இல்லறத்தை மேம்படுத்தும் முயற்சியில் ,சிவசங்கரியுடன் கை கோர்த்துக் கொண்டனர்

...இதயங்களாலும்,எண்ணங்களாலும்,அதன் வீச்சினாலும் ,சரி செய்ய முடியாத விவகாரங்கள் எதேனும் இருக்கிறதா என்ன? உணவகத்தில் இருந்த நாலு பேரோடு ,விஜயகுமார்,ஷோபனா இருவரும் சேர்ந்து அறுவரானார்கள் ..குடும்பமாக மாறி ஒருவருக்கொருவர் ,ஒத்தும் உதவியும், உணவகத்தை உற்சாகமாக நடத்தினார்கள்.

..களிப்புடன் வேலை செய்தாலும்,கடமையில் கருத்தாக இருந்தார்கள்...இடையிடையே,விஜயகுமாருக்கு தேவையான உணவுகளை தயாரித்து ,அவனை சாப்பிட வைத்தார்கள்...உணவகத்தில் தொடப்படும் பயிற்சிகளும்,முயற்சிகளும் வீட்டிலும் தொடர்ந்தன....சிவசங்கரி அவற்றை கையில் எடுத்துக் கொள்வாள்.

..தொடங்கிய முயற்சி வளையத்தில் இருந்து,அவர்கள் இருவரும், எக்காரணம் கொண்டும் வெளி வராமல் பார்த்துக் கொண்டாள்....இரவு தூங செல்லுமுன்,பாதாம்,பிஸ்தா உள்ளிட்ட உலர் கொட்டைகளை அரைத்து,சுண்டக் காய்ச்சிய பாலில் கலந்து குடிக்க தருவாள்..

.அதோடு,விஜயகுமார்-ஷோபனா படுக்கை அறைக்குள்,சுகந்த மனம் வீசும்படி சுத்தமாக ,அமைத்துக் கொடுத்தாள்...ஜெயராம், தோழமையுடன் பழகியதும், விஜயகுமாரை எந்த வித ,நெருடலும் இன்றி,வீட்டில் இயல்பாக இருக்க வைத்தது..நல்ல மருத்துவ குணமுள்ள சத்தான உணவுகள்,குறைகளை நிவர்த்தி செய்யும் பயிற்சிகள்,மன மகிழ்ச்சி,அன்பான ஆதரவான சூழல்,ஆகியவை விஜயகுமார் தம்பதியை நெருக்கத்திற்கு கொண்டு வந்தது....


 
இந்த அப்டேட் படிக்கவே ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு, கண்ணம்மாள் டியர்
இந்தக் காலத்தில் மாமன் மகன் அனுசரணையாக இருப்பதே பெரிது
அதிலும் அந்த மாமன் மகனின் மனைவி ரொம்ப பாசத்தோடும் அன்பு அனுசரணையுடனும் நடந்து கொள்வது ரொம்ப ரொம்ப பெரிது
இப்படிப்பட்ட உறவுகள் கிடைக்க ஷோபனா கொடுத்து வைத்தவள்
 
Last edited:
Top