Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

maayam seithaayadi-22

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம்-22
ஷோபனா பிள்ளைகளுக்கு எள் உருண்டையும்,முளைக்க வைத்த வேர்க்கடலையும் கொண்டு வந்தாள் வீட்டுக்கு....யாமினி யுவன் இருவரும் விரும்பி சாப்பிட்டார்கள்...

‘’சித்தி...இதெல்லாம் நீங்க வேலை பாக்கற ஹோட்டல்லியா’’
‘’ஆமாடா செல்லம்’’
‘’செம டேஸ்ட் .....அங்க வேற என்னவெல்லாம் இருக்குது சித்தி’’

‘’நிறைய இருக்குடா கண்ணா..!வீட்டுக்கு கொண்டு வர்ற மாதிரி இல்ல....ஏன்னா,அதெல்லாம் ரெடி பண்ணின உடனே சாப்பிடனும்....நான் வர்ற சண்டே அன்னிக்கு ,வீட்டுல தயார் பண்ணித் தரேன்....ஒகேயா’’
‘’வேலை உனக்கு பிடிச்சிருக்கா ஷோபனா?’’—சிவசங்கரி..
‘’ரொம்ப பிடிச்சு இருக்குக்கா...அதோட அது எனக்கு வேலை மாதிரியே தெரியல.....கரும்பு தின்னக் கூலி குடுத்தாப்புல இருக்கு...இண்டெரஸ்டாவும் இருக்கு...இன்னிக்கு ஒரு லேடி வந்து எனக்கு கை குடுத்து பாராட்டிட்டு போனாங்க...’’

‘’காரணம்?’’
‘’காரணம் என்னன்னா,அவங்களுக்கு ஓவர் ப்ளீடிங் ....ரொம்ப நாளா கஷ்டப்படறாங்களாம்...நான் லெமனும் கொத்தவரங்காயையும் சேர்த்து ஒரு ஜூஸ் செஞ்சு சாப்பிடக் குடுத்தேன்....இதை தொடர்ந்து ரெண்டு வாரம் சாப்பிட்டிட்டு வாங்க அப்டின்னு சொன்னேன்....நீயே செஞ்சு குடுத்துருப்பா...உனக்கு புண்ணியமாப் போகும்னு சொன்னாங்க....டெய்லி போட்டு ரெடியா வச்சிடுவேன்....வந்து குடிச்சிட்டு .போவாங்க...வீடு பக்கத்துலதான்..இப்ப எவ்வளவோ பரவாயில்லையாம்...அதான் வந்து சொல்லிட்டு போனாங்க’’ என்றாள் பெருமை பொங்க...’’
ஆச்சரியமாகக் கேட்டாள் சிவசங்கரி...
‘’ஆஸ்பத்திரி,மருந்து,மாத்திரை,சைடு எஃபெக்ட் அப்டின்னு காசையும் செலவு பண்ணி,உடம்பையும் கெடுத்துக்கறதுக்கு,இது பரவால்ல’’
‘’.ஆமாக்கா...மனசில நம்பிக்கையோட ஃபாலோ பண்ணனும் ...அவ்வளவுதான் விஷயம்....அதோடக்கா...அவங்க நாலு பேரும் யங்க்ஸ்டெர்ஸ் இல்லியா...அவங்களோட வேலை பாக்கறதே ஒரு சந்தோசமாயிருக்கு,,,,அக்கா...உங்களுக்கு நைட்டு டிபனுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா?’’

‘’ம்..சுரைக்காய் அடை போட்டிருக்கேன்...வெங்காயம் மட்டும் வெட்டிகுடு...நான் சட்னி அரைச்சிடறேன்..’’ என்றபடி இருவரும் சமையலறைக்கு சென்றனர்...ஆளுக்கொரு வேலையை கையில் எடுத்தனர்....தேங்காய் சட்னி அரைத்து தாளித்த சிவசங்கரி,வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்த சோபனாவிடம் ,மெதுவே பேச்சு தந்தாள்...

‘’ஷோபனா...இயற்கை உணவு பற்றி பிரமாதமா சொன்னேயில்ல..’’
‘’இல்லக்கா...நான் கூட்டி குறைச்சு சொல்லல....உண்மையே அதுதான்...’’
‘’எல்லா நோயையும் சரி பண்ணிடலாமா....ஷோபனா’’
‘’அக்கா! கான்செப்ட் என்னன்னா..இயற்கை உணவு சாப்பிடற ச்சே, உடம்போட எதிர்ப்பு சக்தி தன்னால கூடிடுது....!உடம்புக்கு தேவையான விட்டமின்ஸ்,மினரல்ஸ்,இரும்பு சத்து,கால்சியம் எல்லாமே கிடைச்சிடுது....உடம்பு உற்சாகமாகி கழிவுகளை வெளியேத்துது....அப்போ,உடம்பு இயற்கையாவே தன்னை குணப்படுத்திக்குது...இதுதான் நடக்குது...உணவகத்துல,ரவிவர்மா இருக்காருல்ல,அவருக்கு கூட ,இயற்கை உணவு சாப்பிட்டதால,ஆக்ஸிடண்ட் ஆன கையில,புண்ணு வேகமா ஆறிடுச்சாம்...இப்ப, செயற்கை கை பொருத்தறதுக்கு ஏற்பாடு ஆயிட்டு இருக்காம்...’’
‘’பாவம்...சின்ன வயசுப் பையன்...நல்லது நடந்தா சரி...அப்ப,இயற்கை உணவு எல்லாருக்கும்,எல்லா நோய்க்கும் பொருத்தமானதுதான்னு சொல்ல வர்றே’’
‘’ஆமாக்கா...குப்பனா இருந்தா என்ன...சுப்பனா இருந்தா என்ன...சாப்பிடறவங்களுக்கு பலன் கிடைக்கும்’’
‘’அப்பா,அந்த இயற்கை உணவை,உன் ஹஸ்பண்டுக்கு ஏன் ட்ரை பண்ணக்கூடாது ஷோபனா’’

சிவசங்கரியின் கேள்வியில்,அதிர்ச்சியாகி,கை வேலையை போட்டு விட்டு நிமிர்ந்தாள் ஷோபனா....

‘’ஷோபனா...நான் எதுக்கு சொல்றென்னா...உன் ஹஸ்பண்டுக்கு என்ன நோய்னும் தெரியல...அதுக்கு ட்ரீட்மெண்ட் என்னன்னும் புரியல...அப்படியே தெரிஞ்சாலும் அதை எடுத்துக்கறதுக்கும் அவரு தயாராயில்ல...பிரச்சினையை வெளியே எடுத்துப் பேசறதுக்கே அவரு ரெடியில்ல...உன்னால முடியல...குருட்டுப் பூனை விட்டத்துல பாய்ஞ்சது மாதிரியா இருக்கு உன்னோட விவகாரம்....அதனாலதான் சொல்றேன்,கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு,இந்த எஃப்பெக்டிவான இயற்கை உணவை அவருக்கு ஏன் குடுத்து பார்க்கக் கூடாது?’’

‘’நீங்க சொல்றது சரிதாங்க்கா ...நல்லது நடக்குதோ இல்லியோ நிச்சயமா கெட்டது நடக்காது...ட்ரயல் பேசிஸ்ல குடுத்துப் பாக்கலாம்... ..இது ஏனோ என் மரமண்டைக்கு தோணாமப் போயிட்டுது... ஆனா,அவரு அங்கே...நான் இங்கே...எப்பிடி தர முடியும்?’’

‘’அட என் அறிவுக் கொழுந்தே....ஒரு மாசம் மெடிக்கல் லீவு போட்டுட்டு இங்கே வர சொல்லிடு...’’

‘’அது சொல்லிடலாம்...வந்துடுவாரு..ஆனா..இதுல இன்னொரு பிரச்சினை இருக்குக்கா..வக்கீல்கிட்ட டைவோர்சு பேப்பரை குடுத்து மூவ் பண்ணுங்கன்னு சொல்லிட்டு வந்துட்டேனே...’’ என்றாள் நாக்கை கடித்தபடி...

‘’நீ இருக்க பாரு....குதிரை குப்புறத்தள்ளூனதுமில்லாம,குழியும் பறிச்சுதாம்...அசட்டுப் பிள்ளை...வக்கீலுக்கு ஃபோன் பண்ணி,ஸ்டாப் பண்ணி வைக்க சொல்லு...நமக்காகத்தானே வக்கீலு...’’
‘’சொன்னா கேட்டுக்குவாராக்கா வக்கீலு’’
‘’கண்டிப்பா கேட்டுக்குவாரு...அவருக்கென்ன வேண்டுதலா,உங்களை பிரிச்சு வைக்கணும்னுட்டு’’

‘’அப்ப என் ஹஸ்பாண்டுக்கு ஃபோன் பண்ணி கூப்பிடலாம்கிறீங்க’’
‘’உடனே கூப்பிடறே....இல்லேன்னா,நாளைக்கு உனக்கு சோறு கிடையாது’’
‘’அக்கா....எனக்கு உங்களைப் பார்த்தா ஆச்சரியமாவும்,பொறாமையாவும் இருக்கு...புருசனோட மாமா பொண்ணுக்காக ,இவ்வளவு மெனக்கெடறீங்களே....!நூத்துல ஒரு ஆள்க்கா நீங்க’’

அதற்குள் மணக்க மணக்க சுரைக்காய் அடை ,மொறு மொறு வென தயாராகி விட்டது...ஒரு துண்டை பிய்த்து,சட்னியில் தோய்த்து வாயில் போட்டு ,உப்பு பார்த்தாள்....சோபனாவையும் சாப்பிட்டு பார்க்க சொன்னாள்...
‘’ம்....பெர்ஃபெக்ட்....இப்ப நீ கேட்ட கேள்விக்கு வரேன்....ஷோபனா ,ஓடாத கடிகாரம் கூட,ஒரு நாளைக்கு, ரெண்டு முறை சரியான டைம் காட்டுதும்பாங்க...எனக்கு,வசதி வாய்ப்பிருக்கு...!வீடு,வாசல்,கணவர்,குழந்தைகள்,வண்டி,வாகனம்னு,கடவுள் எல்லாம் குடுத்திருக்கார்....என்னைய சுத்தி உள்ள மக்களுக்கு,என்னாலானதை நான் செய்யாட்டா.....அந்த கடவுளை விடு....என் மனசாட்சியே என்னை மன்னிக்காது....சரி....பேச்சை மாத்தாத....ஓடு!ஓடு!உடனே போய் உன் ஹஸ்பண்டுக்கு ஃபோன் போடு’’ என்று சோபனாவை விரட்டினாள் சிவசங்கரி.

...அடுத்த வாரமாவது சோபனாவின் கணவன் விஜயகுமார் வர வேண்டும்....பிரச்சினையை தள்ளிப் போடாமல்,சுறு சுறுப்பாக தீர்வு தேடுவதும் தானே புத்திசாலித்தனம்....ஆகவே, விஜயகுமார் விரைந்து வந்தால்,முயற்சியை தொடங்கி விடலாம் என்று நினைத்துக் கொண்டு தூங்கப் போனாள்....காலையில் வாசல் தெளிக்க கதவை திறந்தால்,எதிரே நிற்கிறான் விஜயகுமார்...



 
விஜயகுமார் வந்துட்டான்
பொண்டாட்டி சோபனாவைத் தேடி விஜயகுமார் வந்துட்டான்
சிவசங்கரி சூப்பர் லேடிப்பா
 
Last edited:
Top