Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

maayam seithaayadi--19

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம்-19
ரவிவர்மா-தாமரை,துருவன்-நந்தினி ஆகிய இரண்டு ஜோடிகளும்,தஞ்சை பெரிய கோயிலுக்கு டாக்ஸியில் வந்து இறங்கின...அக்கா தங்கை இருவரும் சுடியில் வந்திருக்க,அண்ணனும் தம்பியும்,வேஷ்டி சட்டை அணிந்து பாரம்பரிய உடையில் வந்திருந்தனர்.

..ரவியும்,தாமரையும் வாய் ஓயாது பேசிக்கொண்டு வர,துருவனும்,நந்தினியும் அமைதியாகவே வந்தனர்...பிரம்மாண்ட கோவிலின் புறதோற்றம் ,அதன் கம்பீரமான அழகில் பேச மறந்து சுற்றி வந்தனர்...

‘’தாமரை....இந்த கோயில் கட்டி ஆயிரம் வருஷம் இருக்கும்..கோவில் கட்டிட வேலை ஏழூ வருஷம் நடந்திருக்கு....எல்லாமே கிரானைட் கற்கள் தான்...கோவில் மேல ,விமானம் இருக்கில்ல அதுல என்பது டன் வெயிட்ல,கலசம் இருக்கு...இரு..இரு.இந்த நந்தி சிலை ஒரே கல்லுல செஞ்சது...இதோ வெளிப்புறத்துல இருக்குபாரு சிற்பங்கள்...இதெல்லாம் நூற்றியெட்டு நடன முத்திரைகள்....இந்த கோயிலோட உயரம் இருநூற்றுபதினாறு அடி....நிறைய புராணக்கதைகள் இந்த சிற்பங்கள்ல சொல்லப்பட்டிருக்கு...எந்த வசதியும் இல்லாத அந்த காலத்துல,எப்பிடி இந்த கற் கோயிலை கட்டியிருப்பாங்கன்னு, இன்னிக்கு வரை யாருக்கும் புரியல...வந்து பார்த்தவங்கல்லாம் வாய் தான் பிளக்கராங்களே தவிர,யாருக்கும் புரியல...பெரிய அதிசயம்....’’

அமைதியாக கேட்டுக்கொண்டு வந்த தாமரை,அவன் பேசி முடித்ததும் நின்று முறைத்தாள்...
‘’என்ன....ஏன் நின்னுட்ட’’
‘’எனக்கும் இந்த ஊருதான்...நாங்களும் இந்த கோயிலுக்கு நிறைய டைம் வந்திருக்கோம்...எங்களுக்கும் கோயில் பெருமைகள் தெரியும்...’’
‘’உனக்கு தெரியும்கறதும் எனக்கு தெரியும்....எனக்கு தெரிஞ்ச நல்ல விஷயங்களை உன் கூட ஷேர் பண்ணிக்கணும்னு ஒரு ஆசை...அவ்ளோதான்,,,’’
‘’ஓகே...நோ ப்ராப்ளம்....தஞ்சை கோயில் பெருமைகளை எத்தனை முறை வேணாலும் கேக்கலாம்...அது இருக்கட்டும்...உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை நான் சொல்லவா?’’
‘’சொல்லேன்’’
‘’இது ஒரு கற்கோயில் ...இல்லையா...ஆனா,தஞ்சாவூர் சுற்று வட்டாரத்துல எங்கேயுமே,கிரானைட் மலை கிடையாது...’’
‘’அப்புறம் ....எங்கேயிருந்து கொண்டு வந்து கட்டினாங்க...?’’
‘’அதுதான் யாருக்கும் தெரியல....எனக்கும் தெரியல...’’
இப்படியாக பேசிக்கொண்டே கோவிலை சுற்றி வந்தார்கள்....நந்தியை வணங்கி விட்டு,உள்ளே சென்று பிரகதீஸ்வரரையும் தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தனர்....பிரசாதம் கிடைத்தது..சாப்பிட்டார்கள்...
‘’வெளியே வந்ததில் இருந்து, அக்கா பிரசாதம் சாப்பிடத்தான் வாய் திறந்திருக்கா’’ என்று தாமரை ஜோக் அடிக்க,அதற்கு கூட,அவளைத்தவிர மற்றவர்கள்தான் சிரித்தனர்...

‘’ஓகே....ஒரு ஐடியா பண்ணலாம்...ஒரு வேளை நாங்க இருக்கிறோம்னு கூச்சப்பட்டுத்தான் நீங்க ரெண்டு பேரும் பேசிக்கறதில்லையோ என்னவோ...அதனால,நாங்க ரெண்டு பேரும் அந்த பக்க பிரகாரத்துல உக்காந்திருக்கோம்....நீங்க ரெண்டு பேரும் இங்க உக்காந்து பேசிட்டு இருங்க’’என்றாள் தாமரை...அனைவரும் தலையாட்டினார்கள்....ரவியும் தாமரையும் சற்று தள்ளி இடம் தேடி அமர்ந்தார்கள்...
‘’தாமரை...இந்த ஐடியா அவங்களுக்காகவா...இல்ல நமக்காகவா’’
சிரித்தாள் தாமரை...
‘’ரெண்டு ஜோடிக்கும்தான்...உங்களுக்கு ஹாப்பி தான’’
‘’செம ஹாப்பி’’
‘’நந்தினியும் துருவனும் பேசிக்கிட்டாத்தான் நல்லது’’
‘’நந்தினி துருவன் கூட வெளிய வர எப்பிடி சம்மதிச்சாங்க’’
‘’அதுக்கும் ரொம்ப மெனக்கிடத்தான் வேண்டியிருந்துச்சு...முதல்ல முடியாதுனுட்டா...கோவிலுக்குத்தான் போறோம்...அதுவும்,நிச்சயமான பையன் கூடத்தான் போறோம்....பெரிமாட்ட மட்டும் சொல்லிட்டு வா...ஒண்ணும் தப்பில்ல அப்டின்னு எவ்வளவோ வேப்பிலை அடிச்சுத்தான் சம்மதிக்க வச்சேன்...ம்ஹூம்...இந்த சின்ன வயசுல என்ன வேலையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கு...’’
‘’ரொம்ப பாவம்தான்...சரி...அதென்ன...மூணு மாசம் கழிச்சுத்தான் கல்யாணாம்னு உங்க வீட்டுல சொல்லிட்டாங்க’’
‘’ எங்க வீட்டுல சொல்லல....ஜோசியர் சொன்ன தேதி அது’’
‘’எப்பிடிதான் ஓட்டப் போறேனோ’’
‘’எதை’’
‘’மூணு மாசத்தைதான்’’
‘’ஆம்பளைங்க வேலையே இதுதான்...எப்படா கல்யாணாம்னு ஏங்க வேண்டியது...அப்புறம் ,பொண்டாட்டியை கலாய்ச்சி மீம்ஸ் போட்டு தள்ள வேண்டியது...பட்டிமன்‌றத்துல,பல ஆம்பளைங்க பொண்டாட்டி ஜோக்க்ஸை வச்சிதான காலத்தை ஒட்டறாங்க’’
‘’நான்லாம் அப்பிடி இல்லம்மா...கிடக்குது! கல்யாணத்துக்கப்புறம் நீ எங்க வீட்டுக்கு வந்துடுவே இல்ல’’
‘’ஆமா..அதுதானே தமிழர் பண்பாடு’’
‘’சரி..உங்க அம்மா தனியால்ல இருப்பாங்க...நம்ம கூட வந்து இருக்கட்டுமே...இப்பவே சொல்லி வச்சிடு’’

சுருக்கென்று இருந்தது தாமரைக்கு...எப்படி நான் இதை யோசிக்காமல் போனேன்..என் கல்யாணமும் அது தரப்போகும் பரவாசத்தையும் மட்டுமே சிந்தித்து இருந்தேனே..அம்மா தியாகம் செய்வதற்கென்றே பிறந்தவள் என்று முடிவு செய்து விட்டேனா...
‘’தாமரை.....என்ன பதிலே இல்ல’’
‘’பரவால்ல...என் இடத்துல இருந்து யோசனை பண்ணியிருக்கீங்க’’
‘’இனிமே உன் இடம்....என் இடம்னு என்ன இருக்கு..நம்ம ரெண்டு குடும்பங்களுமே நம்ம ரெண்டு பேருக்குமே பொறுப்புதான’’

‘நீங்க சொல்றது சரிதான்.. ஆனா ,’அம்மா நிச்சயம் சம்மதிக்க மாட்டாங்க....அதோட,பெரியப்பா ,பெரியம்மாவும் ஒத்துக்க மாட்டாங்க....’’
‘’நீ சொல்லிப் பாரு..நீ உங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு...அதனால நீதான் அவங்களுக்கு மகனும்,மகளும்...’’
ரவியின் வார்த்தைகள் கேட்டு ,தாமரைக்கு பெருமிதமாகவும்,சந்தோசமாகவும் இருந்தது....தன்னை சுற்றி கடவுள் ஒரு பாதுகாப்பு வளையம் அமைத்து தந்தது போல் உணர்ந்தாள் தாமரை....
‘’இந்த கெமிஸ்ட்ரி அப்டின்னு சொல்வாங்களே அது எனக்கும் உங்களுக்கும் ஒர்க் அவுட் ஆகியிருக்கு....இல்ல வர்மா...’’
சிரித்தான் வர்மா...
‘’அந்த கெமிஸ்ட்ரி துருவனுக்கும் நந்தினிக்கும் சரியா வருமா’’
‘’சரியா வரணும்...கொஞ்சம் லேட்டா நடக்கலாம்’’
‘சரி..நாம ’சுமாரா எத்தனை குழந்தைங்க பெத்துக்கலாம் தாமரை.?’’
‘’எத்தனையா? ஏன்? ஸ்கூல் எதுவும் நடத்தப் போறீங்களா.’’
‘’இல்ல...குடும்பம் நடத்ததான்...’’
‘’அதுக்கு ஒண்ணு போதாது’’
‘’கண்டிப்பா போதாது’’
‘’எனக்கும் தான்...நான்தான் வீட்டுல சண்டை போடக்கூட ஆளில்லாம ஒரே பிள்ளையா ,ஒத்த குரங்கா வளர்ந்துட்டேன்...நம்ம வீட்டுல குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கணும்....ஆனா,ரெண்டு வருஷம் போகட்டும்...’’

‘’ஆமா...வெளியூர்களுக்கு ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்’’
‘’’’ரவி எனக்கு வெளியூருக்கெல்லாம் போக வேண்டாம்...வெளி நாட்டுக்கு போகணும்னு இருக்கு’’
‘’போலாம்...எனக்கு பாஸ்போர்ட் இருக்கு...’’
‘’எனக்குமிருக்கு’’
‘’அப்புறமென்ன...வேர்ல்டு மேப்பை பார்த்து ,எந்த நாட்டுக்கு போகணும்னு மட்டும் சொல்லு....மத்ததை நான் பாத்துக்கறேன்’’
சந்தோஷம் தாங்காமல் கலகலவென சிரித்தாள் தாமரை...பொறுக்குமா....எதிரில் கையில் கோலுடன் வந்தாள் ஒரு கிழவி.கை பார்த்து ஜோசியம் சொல்பவள்....ரவியைப் பார்த்து சொன்னாள்...
‘’தம்பி...உங்க முகம் ஒரு சேதி சொல்லுது....சொல்லட்டா’’
‘’வேண்டாம்மா...எங்களுக்கு நம்பிக்கையில்லை’’ என்றாள் தாமரை பட்டென்று...
‘’தாயீ....இந்த பூமியும்,சாமியும் நம்பிக்கை இருக்கறவங்களுக்கு மட்டுமில்ல,நம்பிக்கை இல்லாதவங்களுக்கும்தான்..’’
கிழவியிடம் ஏதோ விஷயம் இருப்பதாகத்தோன்ற...
‘’அவங்க என்னதான் சொல்றாங்கன்னு கேப்போமே...சொல்லுங்கம்மா’’
‘’உங்க மனசு போல ஏண்ட தட்சணையை வைங்க சாமி’’
ஐம்பது ரூபாயை எடுத்து வைத்தான் ரவிவர்மா...கையிலிருந்த கோலை நெற்றிக்கு நடுவில் வைத்து,கண் மூடி பிரார்த்தனை செய்தாள்...பின்பு,அதே கோலால் ரவியின் வலது உள்ளங்கையை மூன்று முறை தடவி கொடுத்தாள்....
‘’தம்பி...என் மனசில குடியிருக்கும் அன்னை காளி .அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி உண்மையை, உள்ளது உள்ளபடியே சொல்லுவா....பரவாயில்லையா’’
‘’திக்’’என்றது தாமரைக்கு...
‘’பரவாயில்லம்மா...சொல்லுங்க’’ என்றான் ரவிவர்மா..
பொங்கி வந்து கொண்டிருக்கும் தனது மகிழ்ச்சியை,கிழவி ஏதாவது சொல்லி பொசுக்கென்று ஆக்கி விடுவாளோ என்று பயந்தாள்.தாமரை.....அதுவே நடந்தது...
‘’தம்பி....தங்கக் கம்பி நீங்க...கறந்த பால்ல கூட குறை இருக்கலாம்...ஆனா,குறை சொல்ல முடியாத மாணிக்கம் நீங்க...வீட்டுக்கு தலைச்சன் பிள்ளை...மனசுக்கு பிடிச்சவளையே கை பிடிக்க காத்திருக்க,,,,,,எல்லாம் சரிதான் ...ஆனா,உனக்கு ஒரு கண்டம் இருக்கேப்பா...’’
அதிர்ந்தனர் இருவரும்...
‘’எதுல காண்டம் வரும்’’
‘’அது அவன் செயல்...பஞ்ச பூதங்கள்ல எதனாலயும் வரலாம்’’
அதற்கு மேல் பொறுக்க முடியாமல்,ரவியின் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு வேகமாக நகர்ந்தாள் தாமரை...
‘’தாமரை...என்னாச்சு...ஏன் படபடப்பா இருக்க’’
‘’இன்னும் என்ன ஆகணும்...அந்தம்மா பாட்டுக்கு ஏதோதோ சொல்லிட்டு இருக்கு...நீங்களும் தலையாட்டி கேட்டுகிட்டு இருக்கீங்க’’ என்றாள் மூச்சிரைக்க...
‘’பாவம்...வயித்து பிழைப்பு...ஏதோ சொல்றாங்க...அதெல்லாம் சீரியஸா எடுக்கலாமா...ஜஸ்ட் லீவ் இட்’’
‘’என்னால அப்பிடி முடியல....திரும்பி பார்க்காம வாங்க...கிளம்பலாம்...டயமாச்சு’’
துருவன் நந்தினியையும் அழைத்துக் கொண்டு கோவிலை விட்டு வெளியில் வந்தார்கள்..அப்செட் ஆன தாமரையை ,உற்சாகப் படுத்துவதற்காக ரவி.
‘’ஓகே...ஷாப்பிங் போலாமா’’ என்றான்...மற்ற மூவரும் தலையாட்டவே. ஒரு ஜவுளிக் கடைக்குள் நுழைந்தார்கள்...
முதலில் புடவை செலக்சன்...
‘’அக்கா.நாம ரெண்டு பெரும் ஒரே மாதிரி சாரி எடுத்துக்கலாமா’’ –தாமரை..
முகம் சுளித்தாள் நந்தினி...
‘’வேண்டாம்...ஸ்கூல் யுனிஃபர்ம் மாதிரி இருக்கும்’’
சரியென,ஒரே டிசைனில் வேறு வேறு நிறங்களில் இரண்டு புடவைகள் தேர்ந்தெடுத்தாள் தாமரை....ரவி அவற்றை பில் செட்டில் செய்து விட்டு,ஒன்றை தாமரையிடம் தந்து விட்டு,மற்றதை துருவனிடம் கொடுத்து நந்தினிக்கு தர சொன்னான்...அதற்குள் அனைவருக்கும் பசி வந்து விட்டதால்,உணவகத்திற்கு சென்று சாப்பிட்டு விட்டு,அவரவர் வீடு வந்து சேர்ந்தனர்...தாமரை எத்தனையோ முறை தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று வந்துதான் இருக்கிறாள்...ஆனால் இன்றைய நிகழ்வே வேறு...அப்படி ஒரு மன நிறைவு....













 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கண்ணம்மாள்ஸ்ரீதர் டியர்
 
Last edited:
அந்த ஜோசியக்காரி சொன்னது போலவே நீர் மூலம் ரவிக்கு ஒரு கண்டம் வந்து கை போய் விட்டதே
 
Top