Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

maayam seithaayadi-15

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம்-15
மேலும் இரண்டு நாட்கள் தங்கி விட்டு,காடு ,கரை இருப்பதால் போக வேண்டும் என்று சொல்லி கிளம்பி விட்டாள் ராஜம்...ஓடக்கூடிய ரயில் அது...ஒரு இடத்தில் நிப்பாட்டி வைக்க முடியுமா என்ன...?
அன்று வேலை நாள் என்பதால்,ஜெயராம் கடை க்கும்,பிள்ளைகள் பள்ளிக்கும் சென்று விட,சிவசங்கரியும்,சோபனாவும் தனித்து விடப்பட்டார்கள்...சிவசங்கரி வீட்டு வேலை களில் மூழ்கியிருக்க,ஷோபனா கையில் அலைபேசியை வைத்துக் கொண்டு,சோகமாக அமர்ந்திருந்தாள்...அவள் படிக்க புத்தகங்கள் எடுத்து தந்தாள்,,,,தொலைக்காட்சியை ஓட விட்டாள்....ஆனால்,எதிலும் சோபனாவிற்கு மனம் லயித்ததாய் தெரியவில்லை ...அவளைப் பார்க்க பாவமாக இருக்கவே,சிவசங்கரி கை வேலைகளைப் போட்டு விட்டு சோபனாவுடன் போய் அமர்ந்தாள்...
‘’என்ன ஷோபனா டல்லாயிட்டே’’
‘’ப்ச ....ரெண்டு நாளா பசங்க கூட இருந்தப்ப,உற்சாகமா இருந்துச்சு..’’ என்று இழுத்தாள்...
‘’நமக்கு உற்சாகம் தர்ற விஷ்யங்களை நாமா தேடிக்க வேண்டியதுதான்...’’என்றபடி,வெள்ளரிக்காயை ஸ்லைஸ் செய்து உப்பு,மிளகுக்தூள் தூவி சாப்பிடத்தந்தாள்...இருவரும் அதை எடுத்து கொரித்தபடியே பேச்சை தொடர்ந்தார்கள்...
‘’உற்சாகமெல்லாம் உள்ளேயிருந்து வரணும்...வெளியில எங்க தேட’’
‘’அதுவும் சரிதான்....இருக்கறது தான வரும்...யாமினியும்,யுவனும் உன்கூட நல்லா விளையாண்டுகிட்டு இருந்தாங்களே....’’
‘’ ஆமாக்கா....உங்க பிள்ளைங்க ரொம்ப ஸ்மார்ட்...அவங்கப்பா மாதிரி....இல்லக்கா...’’
தலையாட்டி சிரித்தாள் சிவசங்கரி...
‘’எனக்கும் குட்டி பிள்ளைங்க கூட இருக்கறது,விளையாடறது,ரொம்பப் பிடிக்கும்...’’
சிறிது நேர மவுனத்திற்குப் பின்னர்,
‘’உங்களோட ஒண்டே எப்பிடிக்கா போகும்...சொல்லுங்களேன்..’’ என்றாள் ஷோபனா..
‘’ம்‌....காலையில பத்து மணிக்குத்தான் வீடு காலியாகும்...அது வரைக்கும்,டிபன் சமையல் வேலைகளைப் பார்த்துகிட்டே,இவங்க பின்னாடி அலையவே சரியா இருக்கும்...இவங்கல்லாம் கிளம்பினப்புறம் சாப்ட்டு ரெஸ்ட்..அப்புறம் வேலைக்காரப் பொண்ணு வருவா...அவ கூட சேர்ந்து கிளீனீங்க் வொர்க் நடக்கும்..அதுக்குள்ள ஏதாவது ஃபோன் கால் வந்துடும்..அதில அரை மணி ஓடிடும்...லஞ்ச் முடிச்சு ,மூணு மணி போல.ஃபிரெஷ் ஆயிட்டு,வெளியில போவேன்...இந்த காலணியில ஒரு கிளப் வச்சிருக்கோம்...அதுல,மீட்டிங்,டிஸ்கஷன்,ஃபீல்ட் வொர்க் –இப்பிடி ஏதாவது இருக்கும்...அதை முடிச்சுட்டு,அஞ்சு மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடுவேன்...அப்றம்மா,ஈவினிங் டிபன்,பிள்ளைங்க ஹோமெவொர்க்,நைட்டு சாப்பாடு....இப்பிடித்தான் ஓடும் ....நத்திங் ஸ்பெஷல்...’’
என்று தனது தினப்படி நடைமுறையை விளக்க....
‘’எல்லாரது வாழ்க்கையும் ஸ்பெசலாத்தான் இருக்கணும்னு ,எந்தக் கட்டாயமும் இல்லக்கா...அமைதியா ஓடினா போதுமே....’’
‘’ஷோபனா...உன்னோட பர்சனல் லைஃப் பத்தி கேக்கறேன்னு தப்பா எடுத்துக்காத..உனக்கு என்னால ஏதாவது தீர்வோ....இல்ல குறைந்த பட்சம் ஆறுதலோ தர முடியுமான்னுதான் யோசிக்கிறேன்...உன்னோட லைஃப் ஏன் ஷோபனா அமைதியில்லாம ஆயிடுத்து ‘’ என்று உண்மையான அக்கறையுடன் கேட்டாள் சிவசங்கரி...

‘’இதை கேக்கறதுக்கு ஏங்க்கா சங்கடப் படறீங்க....ஆக்சுவலாப் பார்த்தா நானே டீடைல்ஸ் சொல்லிருக்கணும்...அந்த டாபிக் எடுக்கப் பிடிக்காம,அப்பிடியே விட்டுட்டேன்... ‘’ என்றவள் தனது கை நகசாயத்தை நிமிண்டிக்கொண்டிருந்தாள்....அவளுக்கு டைம் கொடுத்து காத்திருந்தாள் சிவசங்கரி...அது போலவே தண்ணீரை குடித்து விட்டு வாய் திறந்தாள் ஷோபனா..

‘’என் ஹஸ்பண்டோ நானோ பொல்லாதவங்க கிடையாதுக்கா..ஓபன் மைண்ட் பர்சன்ஸ்தான்...ஆனா என்னவோ தெரியல,எங்க மேரேஜ் லைஃப் சக்ஸஸ் ஃபுல் லா அமையல..’’
‘’ஒன் லைன் ஸ்டோரியா சொல்லிட்டே....இதுல எனக்கு எதுவும் புரியல...உனக்கு என் மேல நம்பிக்கையிருந்தா, உன்னோட பிராப்ளம்ஸை ஷேர் பண்ணு’’

‘’ஏங்க்கா அப்டி சொல்றீங்க...உங்க மேலயும் அத்தான் மேலயும் நம்பிக்கை இருக்கறதாலதான, உங்க வீட்டுல வந்து உக்காந்திருக்கேன்’’
‘’ஓகே...தேங்க்ஸ்....ஷோபனா..பிரச்சினைகளை மறக்கறது வேற...மூடி வைக்கறது வேற...மூடி வைக்க வைக்க ,அது இன்னும் மோசமான ஸ்டேஜுக்குத்தான் போகும்...உன்னோடது வாழ்க்கை பிரச்சினை....மற க்கக்கூடியது இல்ல...ஆகையினால,பேசித்தீர்க்க,முயற்சி பண்ணுவோம்....அதுக்கப்புறம் கடவுள் விட்ட வழி....சரி..இப்ப என்னோட கேள்விகளுக்கு பதில் சொல்லு ஷோபனா..உனக்கு பிடிச்சித்தான கல்யாணத்துக்கு ஒத்துகிட்டே’’
‘’ஆமாக்கா....ஒரு பொது இடத்துல வச்சி சந்திச்சோம்... பாத்துகிட்டோம்..பேசிக்கிட்டோம்...பிடிச்சிருந்துது...ஓகே சொன்னோம்...ஒரு பார்வையில சம்மதம் சொன்னது தப்போன்னு இப்ப யோசிக்கிறேன்...’’

‘’தப்பெல்லாம் கிடையாது...அம்பது ஒண்ணா வாழ்ந்தவங்களே புரிஞ்சிக்கிடாமத்தான் இருக்காங்க...அதை விடு..கல்யாணம் முடிஞ்சுது...மாமியார்,நாத்தனார்னு இன்லாஸ் ப்ராப்ளம் ஏதாவது இருந்துச்சா’’
‘’இல்ல...நாங்க தனிக் குடித்தனம்தான் இருந்தோம்...அவங்கள்ளாம் என்னிக்கோ ஒருநாள் வருவாங்க..போவாங்க...அவ்ளோதான்’’
‘’பணப்ரச்சினை ஏதாவது இருந்துச்சா ‘’
‘’இல்ல...அப்பா குறையில்லாம எல்லாம் நல்லா செஞ்சாங்க...அவருக்கு பிரைவேட் கம்பெனியில வேலை..சொந்த வீடு...அதனால பணப்ரச்சினையெல்லாம் ஏதுமில்ல...அப்பிடியே இருந்தாலும் அது சரி பண்ணிக்க கூடியதுதான...’’
‘’எதுவுமே சரி பண்ணக்கூடியது தான் ஷோபனா...திறக்க முடியாத பூட்டுன்னு எதுவும் கிடையாது..சாவி
தெரியாமத்தான் சங்கடப்படறோம்னு அத்தைதான் அடிக்கடி சொல்வாங்க..சரி....கல்யாணமானதிலேர்ந்து உங்களுக்குள்ள எல்லாம் சரியா நடந்துச்சா ஷோபனா?’’
‘’எல்லாம்னா?’’
‘’எல்லாம்னா எல்லாம்தான்’’
புரியவில்லை என்பதுபோல்,உதட்டைப் பிதுக்கினாள் ஷோபனா...

‘’சரி...ஒப்பனாவே கேக்கறேன்...தாம்பத்யம் கரெக்டா இருந்துச்சா’’
‘’தாம்பத்யமா...அப்டின்னா என்னன்னே தெரியாது எனக்கு’’
‘’சுத்தம்..யார் கோ-ஆபரேட் பண்ணலையே...அவரு நெருங்கி வரலையா....இல்லா,நீ இண்டரெஸ்ட் காட்டலையா?’’
‘’ம்‌....எனக்கு எதிபார்ப்புகள் இருந்துச்சுக்கா..ஆனா அவருக்கு அந்த எண்ணமோ ஆசையோ வரவேயில்லையே’’ என்றால் ஷோபனா குழப்பத்துடன்...
‘’என்னடி இது ! அதிசயமா இருக்கு ! வாழைப்பழம் வேண்டாம்ங்கிற குரங்கு வையகத்தில உண்டா என்ன?’’
‘’இந்த குரங்குக்கு வாழைப்பழம் பிடிக்கலேன்னு சொல்ல முடியாது..நான் புரிஞ்சுகிட்ட வரைக்கும் சாப்பிட முடியலேன்னு நினைக்கறேன்’’
‘’ஓ!செக்ஸுவல் பிராபளமா ! அதுக்கு நல்ல ட்ரீட்மெண்ட் இருக்குன்னு சொல்றாங்களேம்மா’’ என்றாள் சிவசங்கரி ஆதங்கத்துடன்...

‘’அது சரிக்கா...அதுக்கு முதல்ல இவரு எனக்கு பிரச்சினை இருக்குன்னு ஒத்துக்கணும்லா...அப்புறம்ல தீர்வைத் தேட முடியும்...எனக்கு ஒண்ணுமில்ல,இந்த மாசம் சரியாயிடும்....அடுத்த மாசம் சரியாயிடும்னு சொல்லி சாதிச்சுட்டாரு..வேற என்ன செய்ய...இந்த விவரத்தை நான் எத்தனை பேருகிட்ட போயி விளக்கிக்கிட்டு இருக்க முடியும்....புரியாத ஜனங்க என்ன விஸேஷம் ஒண்ணுமில்லையான்னு என்னைக் கேட்டு ஊசிரை எடுக்குதுங்க....’’ என்று மனம் நொந்தாள் ஷோபனா...
‘’ஓஹோ...இப்பதான் எனக்கு முழு பிக்சர் கிடைச்சிருக்கு....ஷோபனா...இது ஒரு பிசிக்கல் வீக்னஸ் ,,,அவ்ளோதான்..! நீங்க ரெண்டு பேரும் டைவோர்ஸ் வரை போறதுக்கு என்ன அவசியம் வந்துடுத்து.?’’

‘’தெரியலேக்கா...ஏதோதோ நடந்து,கடைசியில,இப்ப இந்த புள்ளியில வந்து நிக்கிறோம்’’
‘’ஆனா.எனக்குத் தெரியுது ஷோபனா..கல்யாண வாழ்க்கைக்கு அடிப்படையே தாம்பத்யம்தான்...அது உங்களுக்குள்ள சரியா இல்லாததால, உனக்கும் அவருக்கும் நடுவுல பெரிசா ஒட்டுதல் இல்லாமப் போச்சு...உடல் சேராததாள மனசும் சேரல...சின்ன சின்ன பிரச்சினைகள் கூட,அதனாலதான்,பூதாகாரமா ஆயிடுச்சி...’’
‘’இருக்கலாம்க்கா’’

‘’இருக்கலாம் இல்ல...அதுதான் உங்களைப் பிர்ச்சிருக்கு...ஷோபனா,கணவன் மனைவி உறவு ரத்த சம்பந்தமில்லாத உறவு...தாம்பத்யம்தான் அவங்களுக்கு நடுவுல பசையா இருக்கும்...அப்புறம் குழந்தைங்க வந்ததும் அவங்களுக்காகன்னு ஓடிடும்...உங்க கதையில ,ஆரம்பமே சறுக்கல்ன்றதால,அப்பிடியே தேங்கிடுச்சு’’
‘’கரைக்ட்டுதான்’’
‘’உங்க வீட்டுல என்ன சொல்றாங்க’’
‘’நல்ல சாந்தமான பையன்...இருக்கற இடம் தெரியாம இருப்பான்..உனக்கு அவன் கூட அனுசரிச்சுப் போகத்தெரியலேன்னு எனக்கு திட்டு விழுது’’
‘’அவங்ககிட்ட உங்க பெட்ரூம் பிராபளத்தை சொல்ல வேண்டியதுதான...’’
‘’கூச்சமா இருக்குதுக்கா...சொல்ல வாய் வரமாட்டேங்குது’’

‘’சரிதான்..பொம்பளை புள்ளைகளை செக்ஸுங்கிற வார்த்தையை சொல்லக்கூட விடாம அடக்கி அடக்கி வளர்த்துடறோம்...அப்புறம் திடீர்னு ஒரு நாள் அதைப் பத்தி எப்பிடி பேச முடியும்...?’’
''பொம்பளைப் புள்ளைன்னாலே ,ஏதோ கல்யாணம் பண்றதுக்காகவே போராந்தாப்புல,வீட்டுல,நகை நாட்டு சேர்த்து,ஊரை கூட்டி ஆர்ப்பாட்டம் பண்ணி,தாலி கட்டி வைக்கிறாங்க....வீட்டுக்கு அடங்கி நடக்கறதா நினைச்சுக்கிட்டு,நாமளும் பெத்தவங்க கை காட்டற ஆளுக்கு,என்ன ஏதுன்னு யோசிக்காம தலையை நீட்டிடறோம்...இது மாதிரி,ட்ராஜடி ஆகும் போதுதான்,நம்ம மூளையே முழிச்சிக்குது''

''ப்ச ...ஓகே...பின்னால போயி யோசிக்க வேண்டாம் ஷோபனா...நடக்க் வேண்டுயாது என்னன்னுதான் யோசிக்கணும்,,,அதையும் இப்ப யோசிக்காத...ஒரு மாசம் பிரீயா விடு...ஜாலியா இரு...அப்றம் பார்க்கலாம்...சரி....டயமாச்சு...வா சாப்பிடலாம்''
'என்ன சமயல்க்கா''
''மோர்க்குழம்பு,கீரைத்தண்டு கூட்டு,சேனைக்கிழங்கு ரோஸ்ட்''
''ஆஹா....தோ ...ஹாண்ட்வாஷ் பண்ணிட்டு வந்துடறேன்''
என்று எழுந்தாள் ஷோபனா...
பெண்களால்தான் பிரச்சினைக்குள் சுலபமாக போகவும் முடியும்...அதிலிருந்து மீண்டு வரவும் முடியும்...
 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கண்ணம்மாள்ஸ்ரீதர் டியர்
 
Last edited:
ஷோபனாவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா?
அவள் கணவனிடம் ஜெயராம்மை பேச வைத்து இந்த குறையை சரி செய்யலாமே
 
சேனைக்கிழங்கு ரோஸ்ட் ஓகே
மோர்க்குழம்புக்கும் கீரைத்தண்டு கூட்டுக்கும் பொருத்தமாக இருக்குமா?
 
Top