Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK - EPILOGUE

Hema Guru

Well-known member
Member
வணக்கம்!!!

"கரைகிறேன் உனது கண்ணசைவில்" எனது இரண்டாவது நாவல். ஒரு RERUN தொடர்க்கு இவ்வளவு ஆதரவு நான் கொஞ்சமும் எதிர்பார்க்காதது.

வாரத்திற்கு இரு பதிவுன்னு சொன்னேன்! அது ஒரு நாள் விட்டு ஒரு நாள்ன்னு மாறுச்சு!! அப்புறம் தினம் ஒரு பதிவுன்னு என்கிற நிலைக்கு வந்து, கடைசியா ஒரு நாளைக்கு இரண்டு பதிவுன்னு ஆக்கிட்டீங்க!! இது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சிய தான் குடுத்துது.

சிலர் கமெண்ட்ஸ்ல 'இரண்டாவது முறை' வாசிக்குரோம்ன்னு சொன்னப்போ அவங்க மனதைரியத்தை என்னால பாராட்டாம இருக்க முடியல!!!!!!

A Huge THANKS to all my beloved readers for making this story successful. "thanks"க்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல!!
உங்க ஆதரவு எனக்கு தொடர்ந்து வேணும்ன்னு மட்டும் கேட்டுக்குறேன்!!

என்னோட அடுத்த நாவல் நாளை முதல் இத்தளத்தில்...
"கோகுலத்தில் ராமன்" keep supporting dearsssss....
ஒரே வேகத்திலே இன்னைக்கு ஆரம்பிச்சு இன்னைக்கே இந்த கதையை full படிச்சு முடிச்சுட்டேன், நவரசம் நிறைந்த கதை, மிக அருமை. Lachu and vichu, மையு va தெரியும்னு பார்தாங்களே, அது என்ன கதை??
 
krinithiravan

New member
Member
***சில வருடங்களுக்கு பிறகு****

"டேய்.. அந்த மாலையை இழுத்து கட்டுடா..." என ரிஷி கத்த, "இழுத்தா அறுந்துடும்டா...." என மேற்கொண்டு கத்தினான் கெளதம்."ஹய்யோ... இழுத்துக்கட்டுன்னா பூவ இழுத்து அறுத்து போடுன்னு அர்த்தம் இல்லடா முட்டாப்பயலே... ஒரே வரிசையா.... லூஸ் விடமா தூக்கி கட்டுன்னு சொன்னேன்..." என ஸ்டூல் மீது நின்று வாசலில் தோரணம் கட்டிக்கொண்டிருந்த கௌதமிடம் கத்தினான் ரிஷிகேஷ்."ம்ம்... இந்தா இத்தனை விளக்கமா இப்போ சொல்றியே.. இதை முன்னாடியே சொல்றதுக்கென்னடா மலைமாடு..." என்றான் ரிஷியிடம்.பட்டுவேட்டி சட்டையில் பளிச்சென உள்ளிருந்து வந்த சந்தோஷ், "என்ன எல்லாம் ரெடியா?" என்றான் இருவரையும் பார்த்து.ஸ்டூலில் நின்றிருந்த கெளதம், தன் வேலையை நிறுத்திவிட்டு திரும்பி பார்க்க, அங்கு சந்தோஷ் நிற்கும் கோலம் கண்டு, மெலிதாகவே வயிறு எரிந்தது.பின்னே இருக்காதா? தன்னை விட இளையவனுக்கு, தனக்கு முன் திருமணம். அதுவும் இன்னும் சிறிது நேரத்தில் நடக்கவிருக்கும் அவனது நிட்சயத்தார்ததுக்கு தான் வேலை செய்ய வேண்டிய நிலை.தன்னையே நொந்தபடி, "எல்லாம் என் நேரம்.." என சத்தமாகவே சொன்னான் கெளதம்."ச்ச... இங்க ஒரே வேர்வை... நான் ரூம்ல இருக்கேன்.. ஷாலினி வீட்ல இருந்து வந்ததும் சொல்லுங்க... சரியா..?" என சொல்லிவிட்டு இல்லாத வேர்வையை துடைத்தபடி உள்ளே சென்றான் சந்தோஷ்.ஸ்டூலில் இருந்து இறங்கி, "இவன் என்னை வெறுப்பேத்தவே இப்படி கண்ணு முன்னாடி சுத்துறான்டா...." என ரிஷியிடம் வருந்தினான் கெளதம்."விடு விடு... அக்காக்கு கோவம் போனதும் உனக்கும் பொண்ணு பார்த்து கல்யாணம் செஞ்சு வைப்பாங்க..." என ஆறுதல் போல சொன்னாலும் ரிஷியின் குரலில் நக்கல் தெரிந்தது."ஹும்ம்... தப்பு பண்ணவன் குஜாலா இருக்கான்.. கூட நின்னவனுக்கு இவ்ளோ பெரிய தண்டனை.. எல்லாம் காலக்கொடுமை...." என கெளதம் சொல்ல, "எதை கொடுமைன்னு சொல்றீங்க டாக்டர்..?" என தெரிந்த குரல் ஒன்று பின்னால் கேட்க, திரும்பியவன் அங்கு நின்றவரைக்கண்டு குழம்பினான்.ராமின் சென்னை மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராய் இருக்கும் மாலினியை மும்பையில் இருக்கும் மைதிலியின் வீட்டு வாசலில் அவன் சற்றும் எதிர்ப்பார்கவில்லை என்பதை அவன் முகமே காட்டிக்கொடுத்தது."டாக்டர் மாலினி...! வாங்க வாங்க... ஏன் இவ்ளோ லேட்?" என கேட்டபடி தன் மேடிட்ட வயிறை பொருட்படுத்தாது திவ்யா வாசலுக்கு விரைந்து வர, "பொறுமையா வா திவி..." என கடிந்துக்கொண்டான் ரிஷி.'ஓ... திவ்யா இன்வைட் பண்ணிருக்கா போல...' என புரிந்துக்கொண்டவன், "வாங்க..." என்றதோடு அடுத்த வேலையை கவனிக்க சென்று விட்டான்.பறந்து விரிந்த அந்த கூடத்தின் நடுவே விதவிதமான தட்டுகளில் ஏதேதோ அழகாய் அடுக்கப்பட்டிருக்க, அதன் அருகில் அமர்ந்திருந்த ஐயர் வெள்ளை காகிதத்தில் மஞ்சள் வைத்து ஏதோ செய்துக்கொண்டிருந்தார். கையில் பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு ஐயருடன் இனிய வாக்குவாதத்தில் இருந்தார் கேசவன்.கைகளில் நகைப்பெட்டிகளை தாங்கிக்கொண்டு மிதமான ஆரஞ்ச் வண்ண பட்டுபுடவையில், முகம் நிறைந்த புன்னகையோடு மெருகிட்ட அழகாய் கேசவனிடம் வந்தாள் மைதிலி."அங்கிள்... இதுல என்கேஜ்மென்ட் ரிங் இருக்கு... வச்சுகோங்க... நான் ரெண்டு பசங்களும் ரெடியான்னு பார்த்துட்டு வரேன்..." என சொல்லிவிட்டு தங்கள் அறைக்குள் விரைந்தாள் அவள்.கதவை திறந்துக்கொண்டு, "அர்ஜுன்ன்ன்ன்.......?" என அவள் அழைக்க, அவளது இரண்டரை வயது குட்டி டிரெஸ்ஸிங் டேபிளில் இருந்து குதித்து வந்தது."மீ தெதி...." என அவன் உற்சாகமாய் சொல்ல, "அடடே... அஜ்ஜூ குட்டி பட்டு வேஷ்டி கட்டிருக்கீங்களே....! செம்ம க்யூட்டா இருக்கீங்க....!! சமத்து" என அவள் கொஞ்ச, "மீ குத் பாய்... டாடி பேட்..." என அவன் ரகசியமாய் அவளிடம் சொல்ல, அதை சரியாய் கேட்டவன் போல, குளியறையில் இருந்து வெளிவந்தான் ராம்."டேய் படவா!! என்னடா சொல்ற என்னபத்தி...?" என ராம் வேகமாய் அவனருகே செல்ல, இங்கு ஒரு பஞ்சாயத்து நடக்கும் என அறிந்திருந்த மைதிலி, "அச்சோ... அப்பா வராங்க... நீ கீழ தாத்தா கிட்ட ஒளிஞ்சுக்கோ... ஓடு ஓடு... விழுந்துடாம போ..." என சொன்னதும் தன் பிஞ்சுகால்களை விரைந்து செலுத்தியபடி வெளியே ஓடினான் அர்ஜுன்."இந்த வயசுலயே லொள்ள பார்த்தியா? அவனுக்கு அந்த வேஷ்டியை கட்டிவிட்டு, ரெடி பண்றதுக்குள்ள எனக்கு கண்ணை கட்டிருச்சு...." என சொல்லிக்கொண்டே தன்னுடையை உடையை கையில் எடுத்தான் ராம்."ஹஹா... சரி சீக்கிரமா வா... எல்லாரும் வந்தாச்சு... வெயிட் பண்றாங்க..." என சொல்லிவிட்டு நகர போனவளை அவசரமாய் கைபிடித்து இழுத்து தடுத்தான் ராம்."உன் புள்ளையை நான் ரெடி பண்ணேன்ல... ஒழுங்கா என்னை ரெடி பண்ணு.. வா..." என அவளை வம்படியாய் இழுத்தான் ராம்."இந்த சட்டை வேஷ்டியை கட்டிட்டு வரது உனக்கு என்ன அவ்ளோ கஷ்டமா? ரெண்டு பேருமே இப்படி ரூம்க்குள்ள நின்னா நல்லா இருக்குமா? நீ வா.. நான் போறேன்...""சரி போ... ஆனா நான் இப்படியே தான் வருவேன்..." என்றான் ராம்.இடுப்பில் துண்டு மட்டுமே கட்டிருக்க, "இப்படியேவா?? எனக்கென்ன? வா..." என நக்கலாய் சொல்லிவிட்டு அவள் நகர, அவளை முந்திக்கொண்டு வெளியே சென்றான் ராம், அப்படியே!!பதறியபடி அவனை உள்ளே இழுத்துக்கொண்ட மைதிலி, "பொண்ணு வீட்டுக்காரங்க எல்லாம் இருக்காங்க.. மானத்தை வாங்காத... குடு, போட்டு விடுறேன்..." என அவன் கைகளில் இருந்த வேஷ்டியை வாங்கி அவனுக்கு கட்டிவிடத்தொடங்கினாள்."பேபி.. கூலர்ஸ் போட்டுக்கவா?""வீட்டுக்குள்ள எதுக்குடா கூலேர்ஸ்..?""அப்டியே கெத்தா இருக்கும்ல..?""கண்ணு தெரியாதவன் மாறி இருக்கும்...""போடி....""போடா.....""மையூ?....""ம்ம்ம்ம்...""அழகா இருக்கடி...""தெரியும்...!" இத்தனையும் பேசி முடிப்பதற்குள் மைதிலி, அவனை தயார் செய்துவிட "போலாம் ராம்... நேரமாச்சு..." என்றாள்.அங்கிருந்த ஆளுயர கண்ணாடி முன் அவளை நிறுத்திய ராம், தங்கள் ஜோடி பொருத்ததை ரசித்தபடி, "நம்ம செம்ம ப்பேர்-ல?" என்றான்."கீழ சில பேரு இன்னும் சிங்கள்லா இருக்காங்க... பாவம்... நம்ம இதெல்லாம் நைட் வச்சுப்போம்... இப்போ போவோம் ராம்.. வா...." என அழைக்க, "நைட்டா? நிஜமாவா?" என குதித்தான் ராம்."நடிக்காத கேடி..." என அவள் செல்லமாய் கிள்ள, அவள் கன்னத்தில் அழுத்தமான முத்தம் ஒன்றை பதித்து விட்டு வெளியே சென்றான், தன்னவளோடு.கேசவன் அமர்ந்து ஷாலினி வீட்டாருடன் பேச, சந்தோஷ் ஷாலினி இருவரும் எதிரெதிரே அமர்ந்து பார்வையால் பேசிக்கொண்டிருந்தனர்."தட்டை மாத்திக்கலாமா சம்பந்தி?" என ஷாலினி வீட்டார் கேட்டதும், வீட்டின் முதல் மாப்பிள்ளை என்ற முறையில் ராமிடம் கண்களால் சம்மதம் கேட்டார் கேசவன்.அவன் சரி என்றதும், இரு வீட்டாரும் தட்டை மாற்றி நிச்சயம் செய்து விட, மைதிலி நிச்சய மோதிரத்தை எடுத்து கொடுத்ததும், சந்தோஷ் ஷாலினி இருவரும் ஒருவருக்கொருவர் அதை மாற்றிக்கொண்டனர்.வந்ததில் ஒரு வேலை முடிந்துவிட, "அடுத்த நிச்சயம் பண்றவா, வந்து உட்காருங்கோ...." என அழைத்தார் ஐயர்.மாலினி எழுந்து சென்று அங்கு அமர, அப்போது தான் கெளதம் கவனித்தான் அவள் தன் குடும்பத்துடன் வந்திருப்பதை."அண்ணா? என்ன வேடிக்கை? மாலினி பக்கத்துல போய் உட்காருங்க.." என மைதிலி சொல்ல, "நானா? நான் எதுக்கு..?" என முழித்தான் கெளதம்."என்னத்தன்னு சொல்றது? மாலினிக்கு உன்னை பிடிச்சுருக்காம்... அதான் உன்னை அவங்களுக்கு ஹஸ்பன்ட் ஆகிடலாம்ன்னு எல்லாரும் சேர்ந்து முடிவு பண்ணிட்டோம்..." என ராம் சொல்ல, "என்கிட்டே ஏண்டா கேட்கவே இல்லை...?" என அதிர்ந்தான் கெளதம்."சொல்லல... இப்போ என்னடா அதுக்கு?""என்னை பிடிச்சுருக்குன்னா என்கிட்டே தானே சொல்லணும்? உங்ககிட்ட சொல்லி நேரே நிச்சயம் வர வந்துருச்சு..." என சபையில் அவன் கத்த, "சரி விடு.. நிச்சயம் கான்செல்..." என்றான் ராம் உடனே.அவன் அப்படி சொல்லி முடிப்பதற்குள் குடு குடுவென ஓடிசென்று மாலையை தன் கழுத்தில் தானே மாட்டிக்கொண்டு மாலினி அருகே அமர்ந்தான் கெளதம். "நான் வேணான்னு எங்கடா சொன்னேன்?" என சொல்லிவிட்டு ஒரு அசட்டு சிரிப்பு வேறு.அனைவரும் நிச்சய பத்திரிக்கை தயார் செய்வதில் கவனமாகிட, தன் பக்கத்தில் இருந்த மாலினியிடம் "என்கிட்டேயே சொல்லிருக்கலாமே? லவ் பண்ணிட்டு இருந்துருக்கலாம். வேஸ்ட் ஆப் டேஸ் சோ பார்..." என்றான்."நான் ஒருமுறை ப்ரொபோஸ் பண்ண வந்தேன்.." என்ற மாலினியிடம், "ரியல்லி..???" என ஆச்சர்யத்தை கொட்டினான் கெளதம்."ம்ம்ம்... ஒருநாள் கான்டீன்ல சமோசா சாப்பிட்டுகிட்டு தனியா இருந்தீங்க... இதான் ரைட் டைம்ன்னு நினைச்சு 'ஐ லவ் யூ'ன்னு ஒரு பேப்பர்ல எழுதி கொண்டு வந்து உங்ககிட்ட கொடுத்தேன்..? பட் அதை நீங்க டிஷு பேப்பர்ரா யூஸ் பண்ணிட்டீங்க..." என்றாள் பாவமாய்."அப்படியா பண்ணேன்?""ம்ம்ம்... போன மாசம், சர்ஜிகல் எக்யூப்மென்ட்ஸ் எல்லாம் ஹார்ட்இன் ஷேப்ல அடுக்கி வச்சுட்டு உங்களுக்காக வெயிட் பண்ணேன்... நீங்க வந்து அதை பார்த்துட்டு, 'இப்படிதான் பொறுப்பு இல்லாம எல்லாத்தையும் கலைச்சு போடுவியான்னு' திட்டிடீங்க..." என்றாள் இன்னும் பாவமாய்."அப்பறம்...?" என அவள் வேறொரு நிகழ்வை சொல்ல தொடங்க, "வேணாம்மா.. சொல்லாத.. கண்டிப்பா அதையும் சொதப்பிருப்பேன்... ஆல்ரெடி என் இமேஜ் ரொம்ப டேமேஜ் ஆகிருக்கு... இதுல நீ வேற இன்னும் டேமேஜ் பண்ணாத...." என கெளதம் சொல்ல, பளிசென சிரித்தவள், "உங்ககிட்ட பிடிச்சதே உங்க ஹுயூமர் சென்ஸ் தான்...." என்றாள் சிரிப்பினூடே.அவ்விடைவெளியில் எல்லாம் தயாராகிட, "மாப்பிள்ளை அப்பா அம்மா வந்து தாம்பூலதட்டை வாங்கிக்கோங்கோ..." என ஐயர் சொன்னதும் 'பெற்றோர் இல்லாததால் தானே வாங்கிக்கொள்வதாய் சொல்லவந்தவன்' எதிரில் ராமும் மைதிலியும் வந்து அமர்ந்ததை கண்டு அமைதியானான்."மாப்பிளைக்கு நான் தங்கச்சி... நானும் என் வீட்டுகாரரும் வாங்கிக்கலாம் தானே?" என கேட்டுக்கொண்டு, மாலினி வீட்டாருடன் நிச்சய தாம்பூலம் மாற்றப்பட்டது ராம் மைதிலி கைகளால்.நிச்சய மோதிரமும் மாற்றப்பட்டு, நிறைவான மனதுடன் அங்கு அனைவரும் இருக்க, "கல்யாண தேதியும் குறிச்சுட்டா நல்லா இருக்குமே!" என்றார் ஷாலினின் தந்தை."அடுத்த மாசமே வச்சுக்கலாம்.. ஒன்னும் ப்ரோப்லேம் இல்லை... உங்களுக்கு ஓகே தானே பசங்களா?" என இளையோரிடமும் ஒப்புதல் கேட்டுக்கொண்டார் கேசவன்."ரெண்டு கல்யாணமும் ஒண்ணா வச்சுடலாம் தானே அங்கிள்?" என மைதிலி கேட்க, பெரியவர்களுடன் கலந்து பேசிவிட்டு சரி என்றார் கேசவன்."மையூ.. நமக்கு பாதாம் பால்ல தூக்க மாத்திரை கலந்து கொடுத்தவன்... மறக்காத.." என மைதிலி காது கடித்தான் ராம்.அவன் சொல்வதை கூர்ந்து கேட்டுவிட்டு, அதிர்ந்த கெளதம், "டேய் இன்னும் எத்தனை வருஷம்டா இதையே சொல்லுவ? நான் செய்யலடா அத!" என நொந்துக்கொண்டான்."புதுசா சொல்லவா...?" என அவனிடம் கேட்டுவிட்டு, "அவன் லவ் பண்ணனும்ன்னு ஆசைப்படுறான் மைதிலி... அதனால அடுத்த வருஷம் கல்யாணம் வச்சுப்போம்..." என்றான் ராம்."இதெல்லாம் மட்டும் எப்படி டா உன் காதுல விழுது?" என கெளதம் புலம்ப, "அடுத்த மாசம் இருபத்தி இரண்டாம் தேதி, வளர்பிறை முகூர்த்தம் ரெண்டு ஜோடிகளுக்குமே அமோகமா பொருந்துது..." என ஐயர் சொல்ல அதையே முடிவு செய்தனர் அனைவரும்."ஹேய்ய்ய்ய்....." என ஆரவாரமாய் கைத்தட்டினர் சந்தோஷத்தில்.இரவு உணவு வரை சிரிப்புசத்தம் வீட்டை நிறைத்திருக்க, உண்ட மயக்கமோ, மனதின் நிறைவோ, எதுவோ ஒன்று நேரமே அனைவரைக்கும் தூக்கத்தின் பிடியில் சிக்கவைத்தது.தன்னறைக்குள் நுழைந்த மைதிலி, கைகளில் இருந்த காகிதத்தை பத்திரமாய் வைத்துவிட்டு திரும்பினாள்.கட்டிலில் சாய்ந்து படுத்துக்கொண்டு ராம் ஒரு மார்க்கமாய் தன்னை பார்ப்பதை அறிந்தவள், வேண்டுமென்றே அறைக்குள் இல்லாத வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தாள்.இல்லாத வேலையை எவ்வளவு நேரம் தான் செய்ய முடியும்...? அவள் செய்வதை எல்லாம் சிரிப்புடன் பார்த்தபடி அவளை பின்தொடர்ந்தவன், ஒருகட்டத்தில் செய்ய ஒன்றும் இல்லாமல் அவள் நிற்பதை கண்டு, "மையூ பேபி... எல்லா வேலையும் முடிஞ்சுதா? இல்லை ஏதும் உதவி பன்னவாடா?" என்றான்.தன்னை அவன் கண்டுக்கொன்டதை உணர்ந்தவள், "ஹும்ம்..." என்றதோடு, கட்டிலருகே செல்ல, பாய்ந்து வந்து அவளை தன்னோடு சுருட்டிக்கொண்டான் ராம்."நடிப்பு! நடிப்பு... மனுஷன தவிக்க விடுறதுல அவ்வுளவு சந்தோசம்..." என சொல்லிக்கொண்டே ஒவ்வொரு இடமாய் கடித்து வைத்தான் ராம்.அவன் கடித்ததில் வலியை விட கூச்சமே பெரிதாய் ஏற்பட, சிரிப்பில் நெளிந்துக்கொண்டிருந்தாள் மைதிலி.கடித்து கடித்து சோர்ந்து போனவன், "அர்ஜுன் எங்க பேபி..?" என தெரியாதது போல கேட்க, "நீதானே அங்கிள் ரூம்ல விட்டுட்டு வந்த? கேடி...." அவன் கன்னத்தை பலமாக கடித்தாள் மைதிலி."ஆஆஆ.. கொஞ்சம் கூட இரக்கமே காட்ட மாட்டறடீ நீ!! இப்படி கடிக்குற?! சரி வரும்போது கைல வச்சுருந்தியே? என்ன அது?" என்றான் ராம்."அதுவா? கெளதம் அண்ணா வளர்ந்த ஆசிரமத்துல இருந்தவங்க, அப்பறம் அவரோட ஸ்போன்செர் எல்லாரையும் இன்வைட் பண்ணணும்ல அவர் கல்யாணத்துக்கு? அதான் ஒரு லிஸ்ட் எடுத்தேன்" என சொன்னவளை இமைக்காமல் பார்த்தான் ராம்."என்னடா?அப்படி பார்க்குற?""என் பொண்டாட்டிக்கு மூளை முழுக்க மண்டையா... ச்சா... மண்டை முழுக்க மூளையா இருக்கே...!! எல்லாருக்கும் என்ன தேவைன்னு யோசுச்சு செய்யுற இந்த அறிவுக்கு ஏதாது குடுத்தே ஆகணுமே...குடுத்தே ஆகணுமே!!!!" என அவன் சொல்ல, முத்தம் கொடுப்பான் என நினைத்திருந்தவளை மொத்தமாய் அதிரவைத்தான் ராம்."என்ன கொடுக்கலாம்.. என்ன கொடுக்கலாம்...? ம்ம்ம்? இதான் செம்ம கிப்ட்டா இருக்கும். நான் முடிவு பண்டேன். உனக்கு ஒரு உயிரை குடுக்கப்போறேன். நம்ம அர்ஜு எவ்ளோ நாள் தான் தனியா விளையாடிட்டு இருப்பான்?" என சொல்லிவிட்டு அதற்க்கான வேளைகளில் அவன் உடனுக்குடன் இறங்கவிட, அவன் சொன்னது புரியாமல் இருந்த மைதிலிக்கு, அவன் செய்வது புரியவே, "ஏய் கேடி, விடுடா...ஹாஹா ராம்ம்ம்ம்ம்..." என செல்லமாய் அவனிடம் போராடி தோற்றாள் மைதிலி.இன்னும் சில மாதங்களில் குட்டி மைதிலியோ, குட்டி ஸ்ரீராம்மோ அறிமுகம் ஆவார்கள் என்ற அதீத நம்பிக்கையோடு, அவர்கள் வாழ்வு மேலும் சிறக்க, சிறப்பு வேண்டுதலோடு விடைபெறுவோம்....!
-சுபம்-
Nice ji story
 
Sachu

Member
Member
Priya mam அருமையான கதை. Nirayva இருந்தது. தங்களுக்கு மிக்க பாராட்டுக்கள் பல. வெகு அருமை.
 
Top