Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 25- FINAL

Advertisement


சில நிமிடங்கள் அப்படியே கழிய, அவளிடம் இருந்து விசும்பல் ஒலி வர, “ஹே, மையு... பேபிமா... என்ன பாரு...” சொல்லிக்கொண்டு, வலுக்கட்டாயமாய் அவளை தன் பக்கம் திருப்பி முகம் பார்த்தான் ராம்.



அவள் அழுவது தெரிய, “டேய் கண்ணம்மா..!! என்னடா? நீ எவ்ளோ போல்ட்!! இப்படி சின்னபுள்ளையாட்டம் அழலாமா? அய்ய்ய்ய.... என் மையு அழுதா நல்லாவே இல்லையே!!!” என அவள் கண்களை துடைத்து விட்டான் ராம்.



இவ்வளவு நாள் உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் பகிர்ந்துக்கொள்ள தோள் கிடைத்ததும், வெடித்து கிளம்பியது. எதற்காக அழுகிறோம்? என்றே தெரியாமல் ராம் மீதே சாய்ந்து முழு மூச்சாய் அழுது தீர்த்தாள் மைதிலி.



அவள் அழுகை பெரிதாகவும், ஒன்றும் சொல்லாமல் அவளை அணைத்தபடி ஆதரவாய் அவளுடன் படுத்திருந்தான் ராம்.



நேரம் செல்ல செல்ல, ஒருகட்டத்தில் அவள் அழுகை குறையவே, அவள் கன்னத்தை கைகளில் தாங்கியபடி, அவள் கண்களை பார்த்து, “என்னம்மா? எதுக்கு இத்தனை அழுகை? ரொம்ப கோவமா என்மேல?” என்றான் ராம்.



“செத்துகிட்டு இருந்தேன் ராம்... ஒவ்வொறு நாளும் உள்ளுக்குள்ளேயே செத்துட்டு இருந்தேன். உனக்கு குணமாகி, பழசெல்லாம் நியாபகம் வந்துட்டா, எங்க என்னை மறந்துடுவியோன்னு செத்துகிட்டு இருந்தேன் ராம்!” என அழுகையினூடே அவள் சொல்ல, துடித்து போனான் ராம்.



விளையாட்டாய் அவன் செய்தது மைதிலியை மிகவும் பாதித்ததை எண்ணி வருந்தினான்.



“நீ எனக்கு வேண்டான்னு சொல்லிடுவியோன்னு தினம் தினம் பயந்து பயந்தே செத்தேன் ராம்...” என சொல்லிக்கொண்டு அவனை சட்டையை கொத்தாய் பிடித்து தன்னுடன் இழுத்துக்கொண்டாள் மைதிலி.



“உன்னை பார்த்த அந்த நொடில இருந்து நான் நானாவே இல்லடா... ஊரே உன்னை பைத்தியம் சொல்லுச்சு. ஆனா உண்மைல நாந்தான் உன்மேல பைத்தியமாகிட்டேன். ‘பார்த்ததும் காதல், பத்தே நாள்ல கல்யாணம்’ இதெல்லாம் மூணு மாசம் முன்னாடி யாராது என்கிட்டே சொல்லிருந்தா கண்டிப்பா நம்பிருக்க மாட்டேன் ராம்...! எல்லாமே நடந்துச்சு. உன்னை பார்த்த அந்த நிமிஷமே நடந்துச்சு..."



"உன்கூட பல வருஷம் வாழ்ந்த மாறி ஒரு உணர்வு. இப்போகூட என்னால நம்பமுடியல, நீ என் வாழ்க்கைல வந்து மூணு மாசம் தான் ஆகுதான்னு...!” என சொல்லிக்கொண்டே போனவளை மேற்கொண்டு பேசவிடாமல் செய்தான் ராம்.



ஒரு வேகத்துடன் அவள் முகத்தை முத்தத்தால் நிரப்பினான் ராம். முதலில் சுகமாய் அதை வாங்கிக்கொண்டவள், அவன் வேகம் நொடிக்கு நொடி அதிகரிக்கவே சற்று திணறிப்போனாள். அவளது திணறலை உணர்ந்தவன் போல, தன் வேகத்தை குறைத்து அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தினான் ராம்.



“கோடில ஒருத்தர்க்கு கூட, இப்படி நடக்காது மையு...” என்றான் ராம் ஆச்சர்யமாய்.



மைதிலி புரியாது விழிக்க, “எழுந்துரிக்கவே மனசு இல்லை... இருந்தாலும் இப்போ எழுந்துக்க வேண்டிய அவசியம் இருக்கே பேபி....” என அவள் மீதிருந்து எழுந்து அந்த அறையின் மூலையில் இருந்த மேசை அருகே சென்றான் ராம்.



அதன் டிராயர்ரை திறந்து உள்ளுக்குள் கைவைத்து அவன் அழுத்த, அவர்களுக்கு எதிர்பக்கம் இருந்த சுவர் விலகி ரகசிய பீரோ இருப்பதை காட்டியது.



இன்னமும் தெளியாத அவளை இழுத்துக்கொண்டு அங்கே சென்றான் ராம்.



“ஓபன் பண்ணிப்பாரு...” என அவன் கெத்தாய் சொல்ல, திறந்து பார்த்தவள் திகைத்து போனாள் சந்தோஷத்தில்.



பீரோவின் உள்ப்பக்க கதவு தொடங்கி, ஒரு இடம் விடாமல் அவளது புகைப்படங்களால் அலங்கரித்திருந்தான் ராம். அதன் நடுவே நான்கடி உயரத்தில் வரையப்பட்ட அவள் புகைப்படம் பிரம்பிப்பை கூட்டியது.



“நீயே வரைஞ்சியா ராம்?” அவள் ஓவியத்தை தன் விரல்களால் வருடியபடி கேட்டாள் மைதிலி. அவன் உடனே ‘ஆம்’ என சொல்ல, திரும்பி அவனை சந்தேகப்பார்வை பார்த்தவள், “நிஜமாவா?” என்றாள்.



அவள் பார்வையில் சிக்கிக்கொண்ட ராம், “ஹிஹி! உன் போட்டோவ ஒரு நல்ல ஆர்டிஸ்ட் கிட்ட குடுத்து வரைய சொன்னேன், கீழே ஆர்ட் பை மட்டும் நானே சைன் போட்டுகிட்டேன்” என கண்சிமிட்டி சிரிப்பவனை முறைக்க முடியாது சிரித்தாள் மைதிலி.



சுற்றிலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அவளது புகைப்படங்களை அதிசயமாய் பார்த்துக்கொண்டிருந்தவளை பின்னிருந்து அணைத்துக்கொண்டு, “போடோஸ் எல்லாம் நல்லா எடுத்துருக்கேனா பேபி?” என்றான் அவள் காதில் தன் உதட்டால் கோலம் போட்டபடி.



“எப்படி ராம்?” என்றாள் ஆச்சர்யம் குறையாமல். அவளிடம் அவளை முதன்முதலில் பார்த்த கதையை சொல்ல, “எனக்கு நியாபகமே இல்லையே ராம்?” என வருந்தினாள் மைதிலி.



ராம், “நீ என்னை பார்க்கவே இல்லடா...! நாந்தான் உன்னை பார்த்தேன். நீ என் மேல மோதுனதுல என் ஹார்ட் ஹெவியா டேமேஜ் ஆகிடுச்சு. சோ அதுக்கு மருந்து போட்டுக்கலாம்ன்னு ஒவ்வொறு வீகெண்டும் மும்பை பிளைட்ட பிடிச்சு ஓடி போய்டுவேன்..”



அவள் ‘நிஜமா?’ என்பது போல அவனை பார்க்க, “உனக்கே தெரியாமா உன்ன ஒளிஞ்சு ஒளிஞ்சு சைட் அடிச்சப்போ எடுத்த போடோஸ் தான் இதெல்லாம். நீ சிரிச்சு நான் பார்த்ததே இல்லை... அப்பறம்தான் உன் பாமிலி பத்தி தெரியவந்துச்சு. எனகாச்சும் நான் வளர்ந்து என் சொந்த காலுல நிக்குற வரைக்கும் அப்பான்னு ஒரு உறவு இருந்துச்சு.. உனக்கு அதுகூட இல்லன்னு தெரிஞ்சதும் ரொம்ப கஷ்டமா இருந்துச்சுடா....” என்றான் அவளை தன்னுடன் இன்னும் இறுக்கமாய் அணைத்தபடி.



“அவ்ளோ அக்கறை இருந்துருந்தா என்னை கல்யாணம் பண்ணிருக்கலாம்ல அப்போவே!” விளையாட்டாய் கேட்க நினைத்தாலும் அவள் குரலில் சிறு வருத்தம் எட்டி பார்த்தது.



“எனக்கு வரபோறவ மூழியமா ஒரு பிரச்சனை வந்து, ரிஷி சம்பந்தப்பட்ட விஷயங்கள் அவனுக்கு தெரிஞ்சு, அவனோட மனசு பாதிக்க படவேனானு நினைச்சு தான் நான் கல்யாணமே வேணான்னு முடிவு பண்ணிருந்தேன். இது கொஞ்சம் ரிடிகுலஸ்ஸா இருக்கலாம். பட் எனக்கு அவனை அவ்....ளோ பிடிக்கும்” என ராம் சொன்னதும், “என்ன விடவா?” என புருவம் தூக்கினாள் மைதிலி.



“ஹாஹா.. உன்னை விட இல்லடா.. உன் அளவுக்கு அவனையும் பிடிக்கும். அவனுக்குன்னு இப்போ யாருமே இல்லை...” என சொல்லும்போதே அவனுக்கு வலித்தது.



“ஏன் இல்லை? அதான் அவனுக்கே அவனுக்குன்னு திவ்யா காத்திட்டு இருக்கலே? சீக்கிரமா அவ வீட்ல பேசி டேட் பிக்ஸ் பண்ணிடலாம்” என எளிதாய் சொன்னாள் மைதிலி.



“ஹ்ம்ம்... செஞ்சுடுவோம்... அதுக்கு முன்னாடி நம்ம மேரேஜ் ரிசெப்ஷன் இருக்கு. அதுக்கு திவ்யா பாமிலிய கூப்புடுவோம்.. அங்கேயே எல்லாம் பேசி பிக்ஸ் பண்ணிடுவோம்.. சரியா??”



“டன்..!!! பிபோர் தட், இதெல்லாம் என்னனு சொல்லு...” என அந்த பீரோ முழுக்க இருந்த புடவைகளை காட்டி கேட்டாள் மைதிலி.



“ஹிஹி.. இதுவா?? உன்னை சாரி கட்டி பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசை.. நீதான் பேன்ட் சட்டையிலேயே சுத்துவியே... இருந்தாலும் என்னோட ஆசைக்கு வாங்கி வச்சேன்...” என அவன் சொல்ல, முதன்முறை ராம் அவளை புடவை கட்ட சொன்னது நினைவு வந்தது அவளுக்கு.



அவள் இமைக்காமல் அவனையே பார்ப்பதை கண்டு, “அன்னைக்கு ராத்திரி எனக்கு எல்லாம் நியாபகம் வந்து மண்டையே வெடிக்குறமாறி ஆச்சு. பக்கத்துல பார்த்தா நீ!!! எல்லாம் கனவோன்னு கூட நினச்சேன். ஒண்ணுமே புரியாமா யோசிச்சு யோசிச்சு டயர்ட் ஆகி, அந்த ரூம்க்குள்ள மூச்சடைக்குற மாறி ஆகிடவும் தான் வெளில போனேன். அப்புறம் கெளதம் எழுப்புனதுதான் தெரியும்..” என சிரித்தான் ராம்.



“ஏன் என்கிட்டே சரியானதை மறைச்ச?” என முகம் சுருங்க கேட்டாள் மைதிலி.



“பேபி!!!! நீ என்னை அதுநாள் வரை ஒரு குழந்தை மாறி பார்த்துகிட்டன்னு கெளதம் சொன்னான். எனக்கு அதை அனுபவிச்சு பார்க்கணும் போல இருந்துச்சு.. நான் சரியாகிட்டேனு தெரிஞ்சா நீ அப்படி இருக்க மாட்டியோன்னு தான் உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு எல்லார்டையும் ப்ராமிஸ் வாங்கிட்டேன்... பட் மையூ... சீரியஸ்லி நீ என்னை ஒரு குழந்தை மாறி தான் பார்த்துகிட்ட! ஐ லவ் டு பீ லைக் தட் வித் யூ பேபி... உன்னை ஏமாத்தனும்ன்னு நினைச்சு பண்ணல.. ட்ரஸ்ட் மீ...” என்றான் ராம் உணர்வு பூர்வமாய்.



அவன் சொன்னதை எல்லாம் கேட்டவள் ஒன்றும் சொல்லாது அவன் நெஞ்சில் புதைந்துக்கொண்டாள்.



அவள் சமாதானம் ஆனதில் மகிழ்ந்தவன், “நீதான் என் பொண்டாட்டிங்கற நினப்புலயே காலத்தை ஓட்டிடலாம்ன்னு பார்த்தா, கடவுளா பார்த்து உனக்கே என்னை கட்டிவச்சுட்டான்...” என சிரித்தமுகமாய் சொன்னான் ராம்.



இருந்த இலகுதன்மை மாற, அவன் நெஞ்சில் கைவைத்து பட்டென அவனை தள்ளி விட்டாள் மைதிலி.



அவள் விலகல் புரியாமல் “ஏய் என்னடி ?” என்றான் ராம்.



“உனக்கு நிறைய பொண்ணுங்ககூட கனெக்ஷன் இருக்காமே!?” என்றாள் மைதிலி இடுப்பில் கைவைத்துக்கொண்டு அவனை முறைத்தபடி.



“ஹய்யோ இதுவேறையா? எவன் சொன்னான்?” என ராம் கேட்க, “கெளதம் ரிஷி எல்லாரும் தான் சொன்னாங்க.. நானும் பேஸ்புக்ல போடோஸ் எல்லாம் பார்த்தேன்..” என்றாள்.



“எவன் எது சொன்னாலும் நம்பிடுவியா? பார்ட்டி போறப்போ, வெளில மீட் பண்றப்போ எடுத்த போடோஸ் எல்லாம் உனக்கு ஆதாராமா? தப்பு பண்றவன் இப்படிதான் ஊரே பார்க்குறமாறி பேஸ்புக்ல போடுவானா? இல்லை இந்த மூணு மாசத்துல எவளாது என்னை தேடி தான் வந்தாளா?” என ராம் கேட்க, அவன் கேட்பது சரியெனப்பட்டாலும், “பின்ன எதுக்கு கெளதம் அப்டி சொல்லணும்?” என்றாள்.



“அவன் ஒரு ஈரவெங்காயம்.. அவன்கிட்ட நான் விளையாட்டா சொன்னதெல்லாம் உண்மைன்னு நம்பி உன்ட வேற சொல்லி தொலச்சுருக்கான்...” என்றான் ராம் குறையாத கடுப்புடன்.



“ரிஷி கூட சொன்னான்?” என்று அவள் இழுக்க, “எனக்கு கேர்ள்பிரண்ட்ஸ் அதிகம் தான் மையு, ஆனா எல்லாருமே எனக்கு நண்பர்கள் மட்டும் தான்! பார்க்குறவங்க என்னை கிண்டல் பண்ணும்போது, எல்லார்கிட்டயும் விளக்கம் குடுக்குறதுக்கு பதிலா, ஒரு சின்ன சிரிப்போட நான் நகர்ந்து போய்டுவேன்! சோ அது என்னை ஒரு பிளேபாய்யா உருவகப்படுத்திருக்குன்னு இப்போதான் தெரியுது! இதுவரைக்கும் எனக்கு ஒரு முன்னாள் காதலோ, ஒரு சின்ன ஈர்ப்போ எதுவுமே யார்கிட்டயும் வந்தது இல்ல! இதை நீ நம்பிதான் ஆகணும்” தீவிரமான தொனியில் சொல்லி முடித்தான் ராம்.



“ஓஓஓ... அப்போ அதெல்லாம் உண்மை இல்லையா?” என மீண்டும் கேட்டு, அவனிடம் உறுதிபடுத்திக்கொண்ட பின், அவனை அணைத்துக்கொள்ள அவனருகே சென்ற மைதிலியை வேகமாய் தடுத்தான் ராம்.



“அங்கேயே நில்லு...”



“ஏன் ராம்?” என அவள் சிணுங்க,



“இன்னும் ஏதாது டவுட் இருக்கா?”



“இல்லை..”



“நிஜமா?”



“ம்ம்ம்...”



“சத்தியமா?”



“சத்தியமா!”



“ப்ராமிஸ்ஸா??”



“ரெண்டும் ஒண்ணுதான் ராம்...”



“கட்டிபிடிச்சுட்டு அப்புறம் தள்ளிவிட மாட்டியே?”



“மாட்ட்ட்டேன்....” மெல்லிய வெட்கத்துடன் அவள் சொல்ல,



“அப்போ சரி... ஓடி வந்து மாமாவ கட்டிக்கோ....” என சொன்னதும், அவள் வேகத்துடன் அவன் நெஞ்சில் மோத இருவரும் ஒருசேர கட்டிலில் விழுந்தனர்.



“ஹஹாஹா!!!!” அவர்களின் சிரிப்பொலி அந்த அறையை தாண்டி வெளியிலும் கேட்க, “ஷ்ஷப்பா.... ஒருவழியா எல்லாம் முடிஞ்சுதுடா சாமி..” என நினைத்து நிம்மதி கொண்டனர் மூன்று பேச்சிலர்களும்.

***

“சார் தயவுசெஞ்சு கொஞ்ச நேரமாது அசையாம இருங்க சார்.... கெஞ்சி கேக்குறேன்...”



‘விட்டால் அழுதுவிடுவேன்’ என்ற தோரணையில் போடோக்ராபெர் சொல்ல, அவனை பார்த்து பாவமாய் இருந்ததோ என்னவோ! அடுத்த பத்து நிமிடங்களுக்கு ஒழுங்காய் போஸ் கொடுத்தான் ராம்.



சென்னையின் மிக பெரிய திருமண மண்டபத்தில் மிக மிக ஆர்ப்பாட்டமாய் நடந்துக்கொண்டிருந்தது ராம் மற்றும் மைதிலியின் திருமண வரவேற்ப்பு.



தொழிலதிபர் முதல் கடைநிலை ஊழியர் வரை ஒருத்தர் விடாமல் வந்து வாழ்த்த, அந்த இடமே திருவிழா கூட்டம் போல நிரம்பி வழிந்தது.



ஒருபக்கம் அத்தனை ஆரவாரங்களுடன் பாட்டு நடனம் என கலைகட்ட, மறுபக்கம் மூக்குக்கு கால் முளைத்து ஓடும் வகையில் உணவுவகைகள் பட்டையை கிளப்பியது.



இத்தனைக்கும் நடுவில் ராம் மைதிலி வந்திருந்த ஒருவரையும் விடாமல் இழுத்துவைத்து அன்பாய் பேசி, நிழற்படம் எடுத்துக்கொள்ள, இதர வேலைகள் அனைத்தும், ரிஷி, சந்தோஷ் கெளதம் முன்னிருக்க சிறப்பாய் நடந்தது.



பெரியவர்கள் என்ற முறையில் கேசவன் வரவேற்ப்பில் நின்று வரவேற்க, வந்தவர்களை சரியாய் கவனித்து சாப்பிட வைத்தார் ரமா பாட்டி.



“மையு... நெக்ஸ்ட் வீக் மும்பைல ரிசப்சன்... அதுமுடிஞ்சதும் என்னோட நீ வந்துடனும்...” என்றான் ராம் வருபவர்களை கவனித்தபடி.



“எங்க ராம்?” என அவள் ஆவலாய் கேட்க, “சஸ்பென்ஸ்...” என ஹஸ்கி வாய்சில் சொன்னான் ராம்.



“ஹனிமூன் தானே?” என தன் காதருகே நாராசமாய் ஒரு குரல் கேட்க, திரும்பி பார்த்த ராம், அருகில், ‘ஈஈஈ’ என தன் அனைத்து பற்களையும் காட்டிக்கொண்டு நின்றான் கெளதம்.



“நீ எதுக்குடா இங்க வந்த எரும?” என ராம் உறும, “பாமிலி போட்டோ டா.. அங்க பாரு” என்றான் கெளதம்.



அப்போதுதான் தங்களை சுற்றி பார்த்தனர் இருவரும்.

மைதிலி அருகே சந்தோஷ், ரமா பாட்டியுடன் நிற்க, அவள் முன் போடப்பட்ட சாரில் போஸ் கொடுத்தபடி அமர்ந்திருந்தார் கேசவன்.



ராமின் பக்கம் கௌதமும், அவன் அருகில் ரிஷி திவ்யாயுடன் நிற்க, போட்டோகிராபர் குரலில் நேரே பார்த்தான் ராம்.



“சார் எல்லாம் வந்தாச்சா? ரெடியா?? எடுத்துடலாமா???” என புகைப்படகலைஞர் உறுதிகேட்க, சம்மதமாய் தலையசைத்தனர் அனைவரும்.



“சார்... எல்லாரும் கொஞ்சம் நல்லா சிரிங்களேன்...!! இன்னும் நல்லா.... இன்னும் கொஞ்சம்....” என அவர் கேமெராவுடன் அங்கு போராடிக்கொண்டிருந்தார்.



“துப்பாக்கில இருந்து வரும் தோட்டா...

கிளம்புறப்போ சொல்வாங்க டாட்டா...

நான் இல்லாம எடுக்குறீங்களாடா ஃபோட்டா....??” என எங்கோ குரல் கேட்க,



“அய்யய்யோ!!! ஒரு ஆபத்தான மிருகம் நம்மளை நோக்கி வருதுடோய்... எல்லாம் ஓடுங்க....” என கெளதம் சொன்னதும் அங்கு வெடித்து கிளம்பிய சிரிப்பலையில் அந்த மண்டபமே சிரித்தது.



போட்டோக்ராபர் நினைத்தது கிடைத்துவிட, வேகமாய் அந்த நொடியை தன் காமெராவில் கிளுக்கிகொண்டார்.



அவ்விடமே மகிழ்ச்சிக்கு குறைவின்றி நிறைந்து தளும்பியது.

------EPILOGUE இன்று மாலை!!--------

[/QUOTESema sis ellaroda characterisation SEMA supera iruku sis
 
Top