Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 21

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 21

காரில் நிறைந்த அமைதியை கலைத்தது சந்தோஷின் குரல்.
“அவன் எதுக்காக நைட் நடந்தத மறைக்குறான் அண்ணா?” என கேட்டான் கௌதமிடம்.

“அவனுக்கே தெரியாம எல்லாம் நடக்குதோ என்னவோ?!” கௌதமை முந்திக்கொண்டு சந்தோஷிற்கு பதில் சொன்னாள் மைதிலி.

“ஹே மைதிலி... உனக்கு எப்படி தெரியும்? நான் இன்னும் உன்கிட்ட சொல்லவே இல்லையே!” என ஆச்சர்யமாய் கேட்டான் கெளதம்.

“உங்க தொல்லை தாங்காம நான் வீட்டை சுத்தி நடந்துட்டு இருந்தபோ விஸ்வநாதன் அவர் ரூம்ல பேசிட்டு இருந்தது என் காதுல விழுந்துச்சு... அதனால தான் அவர முந்திகிட்டு அவர் பிளான்ன அவருக்கே திருப்பி கொடுத்துட்டேன்...€” என சொன்னாள் மைதிலி.

“என்ன நடந்துச்சு?” என வீட்டினுள் நடந்தது தெரியாமல் சந்தோஷ் கேட்க, “உனக்கு இந்த வெட்டிபையன் விளக்கமா சொல்லுவான். இப்போ அந்த ஹோட்டல் கிட்ட வண்டிய நிறுத்து. செம்மையா பசிக்குது...” என்றான் ராம்.

“ஆமா ஆமா... சார் அப்படியே சுப்ரீம் கோர்ட்ல ஜட்ஜா இருக்காரு... நான் வெட்டியா இருக்கேனு குத்தம் சொல்றாரு... போடா தெர்மாமீட்டரு” என கௌதம் திட்ட தொடங்கினான்.

“என்னது தெர்மாமீட்டரா?? ஹஹா ” என சிரித்து கொண்டு கேட்டான் சந்தோஷ்.

“வேற என்னடா பண்றது? எவனுமே என்னை டாக்டர்ன்னு நம்பமாட்றானுங்க... இப்படி ஏதாது சொல்லிதான் நம்ப வைக்கணும்...” என அலுத்துக்கொண்டான் கெளதம்.

“இப்போ எல்லாருமே நம்பிடாங்க பாரு” என நக்கலாய் சொன்னான் ராம்.

“சந்தோஷ் நீ கார்ர ஓரமா நிறுத்து... நான் இறங்கிக்குறேன்... இது ரெண்டையும் எங்கயாது கொண்டு போய் விட்டுடு... அடிச்சுகிட்டே இருக்கட்டும் ...” என குரல் உயர்த்திய மைதிலிக்கு பதிலாய் இருவரும் எதிரெதிர் புறமாய் முகத்தை திருப்பி கொண்டு அமைதியாய் வந்தனர்.

அருகில் இருந்த உணவகம் சென்று காலை உணவை முடித்துக்கொண்டு கடற்கரை சென்றடையும் வரை பெரிதாய் ஒன்றும் பேசிக்கொள்ளாமல் வந்தனர். ஒரு நிழலான இடத்தில் சென்று அமர்ந்துகொண்டபின் தனது மொபைலில் கேசவன் அங்கிளை தொடர்புகொண்டாள் மைதிலி.

“அங்கிள்... நீங்க கேட்ட பைல் கரெக்ஷன் பார்த்து அனுப்பிட்டேன். நம்ம லாயெர் கிட்ட எனக்கு கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு... அவர் நம்பர் எனக்கு அனுப்பிவைங்க... என்னன்னு நான் அப்றமா சொல்றேனே அங்கிள்? ஒரு பிரச்சன்னையும் இல்லை இங்க... இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாமே முடிஞ்சுடும்.. நான் சீக்கிரமா அங்க வந்துடுவேன்.. அதுவரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிகோங்க....” மேலும் சில வார்த்தைகள் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள் மைதிலி.

“என்னதான் பிளான்ல இருக்க மைதிலி? ஒண்ணுமே புரியல...” என கேட்டான் கெளதம்.

“சொத்து என் பேருல வேணுன்னு கேட்ருக்கேன்.. அதனால அவரு சும்மா இருக்க மாட்டாரு... ஏதாது பண்ணறதுக்கு ட்ரை பண்ணுவாரு... அப்போ ரெட்ஹன்டெடா பிடிப்போம்....” என கடல் அலைகளை பார்த்தபடி சொல்லிகொண்டிருந்தாள் மைதிலி.

“உன் வாய்தான் இப்படி சொல்லுது... ஆனா மனசுக்குள்ள வேற என்னவோ இருக்கு.... எங்ககிட்ட சொல்லகூடாதுன்னு நினைக்குறியா மைதிலி?” என குறுக்கிட்டான் சந்தோஷ்.

“மையு.... உன் மடியில படுத்துக்கவா?? தூக்கமா வருது...” என உண்டமயகத்தில் கண்ணை கசக்கிக்கொண்டு சொன்னான் ராம்.

“ஏய்... எரும... இங்க என்ன நடந்துட்டு இருக்கு...? நீ கொஞ்சம் கூட சீரியஸ்நெஸ் இல்லாம இருக்க??? உன்னாலதான்டா இவ்வளவும்.....!! நீயெல்லாம் ஒரு ஹீரோ....”
அடுத்து விஸ்வநாதன் என்ன செய்ய காத்திருக்கிறார் என தெரியாத கோவத்தில் ராமிடம் எகிறினான் கெளதம்.

“உஸ்ஸ்... அண்ணா... நீங்க ரெண்டு பேரும் பேசிக்காம இருக்குறது தான், நீங்க எனக்கு பண்னுற மிகப்பெரிய நல்லது....” என மைதிலி சொன்னதும் அவ்விடம் அமைதியானது..

“ரிஷியை நம்பலாமன்னு தெரியல மைதிலி...” என ஆரம்பித்தான் சந்தோஷ்.

“எதையும் யோசிக்காத சந்தோஷ்... நடக்குறது நடக்கட்டும்.... ராம் எனக்கு முழுசா கிடைச்சா மட்டும் போதும்... ”
மடியில் உறங்கும் தன் முதல் குழந்தையை ரசித்தபடி அமர்ந்திருந்தாள் மைதிலி.

அந்நேரம் அவளது அலைபேசி அலறியது. “யாரு மைதிலி?” என கேட்ட கௌதமிற்கு, “ரிஷி!!!” என சொல்லிவிட்டு அழைப்பை ஏற்றாள்.

அவர்கள் கடற்கரை கிளம்பி சென்ற சிறிது நேரத்தில்,
“என்னங்க சொல்றீங்க?” என விஸ்வநாதனை உலுக்கினார் லக்ஷ்மி.

“தப்பு பண்ணிட்டேன்... மைதிலி சொத்தையும் சேர்த்து நம்ம வாங்கிடலாம்ன்னு திட்டம் போட்டேன்... அதை செயல் படுத்துறதுக்கு முன்னாடியே இவ்ளோ பெரிய தடங்கல் வந்துடுச்சு... அந்த பொண்ணை நான் குறைச்சு நினச்சுட்டேன்... ரெண்டு பேரையும் இனிமே விட்டு வைக்க கூடாது....” என திண்ணமாக சொன்னார் விஸ்வநாதன்.

“இதைதான் அவங்க வீட்டுக்குள்ள புகுந்த அன்னைக்கே தலைபாடா அடிச்சுகிட்டேன். பேசவிட்டு வேடிக்கை பார்த்துட்டு, இப்போதான் புத்தி வருதோ... சாயங்காலம் அந்த கழிசடை எல்லாம் வீட்டுக்குள்ளையே வரகூடாது. அவ்ளோதான் சொல்லுவேன்...” என கத்தி தீர்த்தார் லக்ஷ்மி.

“ஏற்கனவே போட்ட திட்டம் தான். நம்ம பேருல சந்தேகம் வரகூடாது. அந்தமாறி பண்ணனும். அதுக்கு.....” என விஸ்வநாதன் சொல்லிகொண்டிருக்கும்போதே இடைபுகுந்த லக்ஷ்மி, “வழக்கம் போல பொறுத்து பண்ணனும்னு ஏதாது சொன்னீங்க? நான் மனுஷியாவே இருக்கமாட்டேன்.. பார்த்துகோங்க...” என மீண்டும் கத்தினார்.

“சர்ர்ரிடி... எனக்கு மட்டும் கோவம் இல்லையா? இப்படி கத்துறதுல என்ன பிரயோஜனம் இருக்கு... எதை எப்போ செய்யணும்ன்னு எனக்கு தெரியும்..” அதற்க்கு லக்ஷ்மி முறைப்பதை கண்டு, “சரி இப்போ என்ன செய்யணும்னு சொல்லுற? அதுங்க ரெண்டும் வீடுக்குள்ள வரகூடாது.. அவ்ளோதானே? இப்போவே நம்ம ஆளுங்ககிட்ட சொல்லி முடிக்க சொல்றேன். சாயங்காலம் அதுங்க நம்ம வீட்டுக்கு வரும். பிணமா! சரிதானே?!” என்றார்.

“ரெண்டு மட்டும் இல்லை... மூணும்! அது ரெண்டு கூடவும் ஒன்னு தொத்திகிட்டு வந்துருக்கே...! டாக்டர்ன்னு சொல்லிக்கிட்டு. அவளோட அண்ணன்! அதையும் சேர்த்து போட்டு தள்ளுங்க”

“சரிம்மா... எல்லாத்தையும் சொல்லிடுறேன்....” செட்டிநாடு மெஸ்ஸில் ஆர்டர் எடுக்கும் சர்வர் போல அனைத்தையும் கேட்டுவிட்டு தன் மொபைலை கையில் எடுத்தார் விஸ்வநாதன்.

தன்னை சுற்றி நடக்கும் பேச்சுவார்த்தையை ஒருவித பயத்துடன் பார்த்துகொண்டு அமர்ந்திருந்த ரிஷிக்கு, விஸ்வநாதன் மொபைலை கையில் எடுக்கவும் தான் நிலைமையின் வீரியம் உறைத்தது.

விரைந்து அருகில் சென்றவன், அவர் கையில் இருந்த மொபைலை பிடுங்கி தூர எறிந்தான். அவன் செயலை எதிர்பார்க்காத லக்ஷ்மி, “உனக்கும் பைத்தியம் பிடிச்சு போச்சா? எதுக்குடா போன்ன தூக்கிப்போட்ட?” என்றார்.

“எனக்கு பைத்தியம் இல்லை. உங்க ரெண்டு பேருக்கும் தான் பைத்தியம் பிடிச்சுருக்கு. பணப்பைத்தியம் பிடிச்சுருக்கு. மனுஷ உயிரைவிட இந்த காசும் கட்டடமும் தானே உங்களுக்கு முக்கியமா போச்சு” என நேரிடையாக கேட்டான் ரிஷி.

“ஏய் என்னடா நல்லவன் மாறி நடிச்சு பார்க்குறியா? இம்புட்டு நாளும் எங்க கூட்டுல தான் இருந்த? இப்போ என்னவோ புதுசா பேசுற?” என பதிலுக்கு கேட்டார் லக்ஷ்மி.

“ஆமா.. இவ்ளோ நாளும் நீங்க பண்றதெல்லாம் பார்த்துட்டு சும்மாதான் இருந்தேன். இன்னும் சொல்லனும்ன்னா உங்ககூட சேர்ந்து இந்த சொத்து எல்லாம் நம்ம கைக்கு வரதுக்கு பிளான் பண்றமாறி நடிச்சேன்...”

“என்னது? நடிச்சியா? என்னடா விளையாடுறியா? தோளுக்கு ஒசந்த பையனா இருக்கியேன்னு தான் சும்மா இருக்கேன். இல்லனா இந்த பேச்சுக்கு என்ன பண்ணிருபேன்னே தெரியாது...” என விரல் நீட்டி அவனை எச்சரித்தவர் நேரே வீட்டிலுள்ள லேண்ட்லைன் ரிசீவரை கையில் எடுத்துகொண்டு “ஏங்க? மசமசன்னு நின்னுட்டு இருக்கீங்க? கந்தன், ராகவன் யாரது நம்பர் இருக்கா?” என கேட்டவர் முன் இருந்த தொலைபேசி சுக்குநூறாய் உடைந்தது ரிஷி அதை தூக்கி அடித்ததும்.

அவன் திடீர் தாக்குதலில் பயந்து சற்று நகர்ந்தவர், “என்னடா ஆச்சு உனக்கு? நல்லாதானே இருக்க?” என்றார் பதற்றமாய்.

“ஒரு தடவ சொன்னா புரியாதா உங்களுக்கு எல்லாம்? எதுக்காக இப்படி பணம் பணம்னு அலையுறீங்க?” என்றான் ரிஷி.

நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டு நின்றிருந்த விஸ்வநாதன், ரிஷியின் இந்த கேள்விக்கு வாய் திறந்தார்.
“உனக்காக தானேடா... எல்லாம் உனக்காக தானே!! காலம் போன கடைசில இதையெல்லாம் நாங்க அனுபவிக்கவா இவ்வளவும் பண்றோம்? நீ காலத்துக்கும் சந்தோசமா இருக்கணும்னு தானே இதெல்லாம்?”

“நான் நல்லா இருக்கணும்ன்னு நினைச்சுருந்தா, எனக்கு நீங்க கொடுக்கனும்னு ஆசைபடுறத உங்க உழைப்புல சேர்த்து வச்சுருக்கணும். ராம்க்கு அவங்க அப்பா கஷ்டப்பட்டு சேர்த்த சொத்தை எப்படி நீங்க எனக்காக குடுக்க முடியும்?” என வினவினான் ரிஷி. அவன் கேள்வியில் வாயடைத்து நின்றார் விஸ்வநாதன்.

“என்னடா ரொம்ப தான் சட்டம் பேசுற நீ? நாங்க குடுத்த வாழ்க்கைல தான் நீ இவ்ளோ உசரம் வளர்ந்துருக்க. அதை மறந்துட்டு எங்ககிட்டயே வாயாடாத! எவளையாது கூட்டிட்டு போயி வழக்கம் போல ஊரசுத்து. அதைவிட்டுட்டு பெரியவங்க விஷயத்துல தலையிடாதா... புரிஞ்சுதா?” என்றார் லக்ஷ்மி கறாராய்.

“நான் இவ்ளோ சொல்லியும் உங்களுக்கு புரியவே இல்லல? பணத்துக்காக ஒருத்தரை கொன்னீங்க... இன்னொருதன்ன பாதி பைத்தியமாக்கிடீங்க....! அவனுக்கு இப்போதான் ஒரு வாழ்கை அமைஞ்சுருக்கு... உங்க பணத்தாசையில அதையும் கெடுத்துடாதீங்க அப்பா....” என கெஞ்சினான் ரிஷி.

“அவனுக்கு எல்லாதையும் கொடுத்துட்டு நம்ம ரோட்டுக்கு தான்டா போகணும்... அறிவுகெட்ட தனமா பேசாதா....!!” எகிறினார் லட்சுமி.

“இல்லை அம்மா... ராம் நம்மளை அப்படீல்லாம் விட்டுடமாட்டான். செஞ்ச தப்புக்கு எல்லாம் நம்ம அவன்கிட்ட மன்னிப்பு கேட்டுடுவோம். அவன் ரொம்ப நல்லவன்ம்மா. நம்மளை கண்டிப்பா மன்னிச்சு ஏத்துக்குவான்...”

“அவன்கிட்ட கையகட்டி நிற்க சொல்றியா? அப்படி ஒரு வாழ்கையே எங்களுக்கு தேவையில்லை... அவன் தயவுல நாங்க வாழணும்னு முடிவு பண்ணிருந்தா, அவனோட அப்பாவயே நாங்க கொன்னுருக்கமாட்டோமே!!! எங்களுக்கு தேவை ராஜ வாழ்கை... ராஜாக்கு சேவகம் பண்ணுற வாழ்கை இல்லை... உனக்கு புரியுதா நான் சொல்றது? மரியாதையா வழிய விடு...” என சொன்ன லக்ஷ்மி, தன் மகன் பேசுவதையே பார்த்தபடி நின்ற விஸ்வநாதனின் கரம் பற்றி இழுத்து வாசலுக்கு சென்றார்.

“உங்களுக்கு அவன் குடியிருக்க பேட்டை தெரியும்தானே... நம்ம நேருலையே பார்த்து பேசிட்டு வந்துடுவோம்...” என சொன்னபடி நகர்ந்தார்.

“ஒரு நிமிஷம் நில்லுங்க!”

அரைநொடி தாமதித்து பின் திரும்பி பார்க்காமல் மீண்டும் நடந்தனர் இருவரும். லட்சுமி இழுத்த இழுப்பிற்க்கு நடந்தார் விஸ்வநாதன்.

“யார்காக பணம் பணம்ன்னு இப்படி அலையுறீங்களோ!? யார்காக மத்தவங்க உயிரை கூட எடுக்க துணியுறீங்களோ!? அவன்!!!!! உங்க பையன்!!! நீங்க திரும்பி வரும்போது உயிரோட இருக்கமாட்டான்....” என உரக்க கத்தினான் ரிஷிகேஷ்.

“சும்மா பூச்சாண்டி காட்டிட்டு இருக்காத...! எங்களுக்கு நிறைய வேலை இருக்கு... வேலைக்காரங்க எல்லாம் அவுட்அவுஸ்ல இருக்காங்க... உனக்கு பசிச்சா கிச்சென்ல பிரியாணி இருக்கு.. போட்டு சாப்பிட்டுட்டு நல்லா தூங்கு... அம்மா கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்... சரியா?” என அவன் கன்னம் வழித்துவிட்டு மீண்டும் வாசல் நோக்கி சென்றார் இதற்குமுன் எதுவுமே நடவாததுபோல்.

“நில்லுங்க அம்மா....” என கத்திய ரிஷி நேரே கிச்சனுக்கு சென்றான்.

“இப்படி போறப்போவே அபசகுனமா நில்லு நில்லுன்னு சொல்லிட்டு இருக்கியே... போற காரியம் உருப்படுமாடா?” என அவனிடம் கடிந்து கொண்டவர், திரும்பி தன் கணவனிடம், “என்னதான் ஆச்சு உங்களுக்கு? என்னவோ மந்திரிச்சு விட்டமாறியே நிக்குறீங்க?” என்றார்.

அதற்குள் ரிஷி கண்முன் தோன்ற, “என்னடா வேணும் இப்போ?” என்றார் லட்சுமி எரிச்சலாய்.

“நான் சொன்னதை செய்வேன் அம்மா. இப்போ நீங்க இந்த வீட்டை விட்டு வெளிய போனா, என் கையில இருக்க கத்தியால என்னை நானே அறுத்துப்பேன்...” என கத்தியை தூக்கி காட்டினான் ரிஷி.

சில நொடிகள் அங்கே மௌனம் நிலைத்தது.

“போற வழில நம்ம வீட்டுக்கு ஆம்புலன்ஸ்ஸ வர சொல்லிடுறேன்... இப்போ நாங்க போகணும்....!!” என தீர்க்கமாய் சொல்லிவிட்டு நகர்ந்தார் லக்ஷ்மி.

“அம்மா!!!!” கண்களில் நீர் சிதற, செல்லும் அவரை இயலாமையுடன் பார்த்தான் ரிஷி.

வழியும் கண்ணீரோடு தன் கண்களை இருக்க மூடி மூச்செடுத்தவன், கையில் இருந்த கத்தியை தூக்கி தன் மறுக்கையின் மீது வைத்து, “அம்ம்ம்ம்ம்மா.............” என்ற அலறலுடன் கிழித்துக்கொண்டான். ஆழமாய் இறங்காவிட்டாலும் மேல்தோலை தாண்டி சற்று இறங்கி இருந்தது. வழியும் ரத்தத்தோடு மடிந்து அமர்ந்தவனை கண்டு, தலையில் அடித்தபடி ஓடிவந்தார் லக்ஷ்மி.

“ச்சை... கிளம்புற நேரத்துல நீ வேற எதுக்குடா ஏழறைய கூட்டுற?” என்ற திட்டோடு அவனருகில் வந்தவரை விநோதமாய் பார்த்தான் ரிஷி.

“அப்போ என்னைவிட, என் உயிரை விட உங்களுக்கு இந்த காசு பணம் தான் முக்கியமா போச்சுல்ல? ஏம்மா? என்னை உங்களுக்கு பிடிக்காதா? நான் வேணாமா அம்மா?” என மனதும் உடலும் வழியில் துடிக்க கேட்டான் ரிஷி.

“சும்மா உளரிட்டு இருக்காதடா. பணம் வாழ்க்கைக்கு ரொம்ப அவசியம். அது இல்லனா ரோட்ல போற நாய் கூட நம்மளை மதிக்காது. இதெல்லாம் இப்போ நான் சொன்னா கசப்பா தான் இருக்கும்... போக போக நீயே தெரிஞ்சுக்குவ... உன்னை எதுக்கு வளர்த்து ஆளாக்குனோம்னு எங்களை வருத்தப்பட வச்சுடாத.....” என சொன்னபடி அவன் கையில் துணியை கட்டிவிட்டு தன் கணவரிடம் சென்றார் லக்ஷ்மி.

சோபாவில் அமர்ந்திருந்தவரிடம் “எழுந்துறீங்க.... நேரமாச்சு போலாம்...” என்றார்.
விஸ்வநாதன் எழுந்துக்கொள்ளாமல் இருப்பதை கண்டு, “நீங்க வேற உங்க பங்குக்கு என்னை படுத்தாதீங்க... வந்து தொலைங்க. இடம் தெரிஞ்சா நானே கூட போயிருப்பேன்.” என எரிந்து விழுந்தார்.

அப்போதும் அவர் எழுந்துக்கொள்ளாமல் இருப்பதை கண்டு எரிச்சல்மேலிட, அவரிடம் சென்று “இப்போ உங்களுக்கு என்ன கேடு வந்துச்சு?” என கேட்டபடி அவரை உலுக்க, சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தார் சோபாவில்.

“என்னங்கககககக.......”

“அப்பாஆஆஆஆ”
இருவர் குரலும் ஒருசேர ஒலித்தது.

கடற்கரையில்...
கெளதம், “போன்ல யாரு மைதிலி?”
“ரிஷி”
“என்னவாம்??”
“விஷ்வனாதன் ஹாஸ்பிடல்ல இருக்காரு. நாம போகணும்...” என்றாள் எந்த உணர்ச்சியுமின்றி.

“அந்த மூர்த்தி ஹாஸ்பிடல்லையா?” என்றான் சந்தோஷ்.
“ம்ம்ம்...”
“நம்ம ஏன் போணும் அங்க?” என்ற கௌதமிற்கு,
“அவருக்கு ஹார்ட் அட்டாக்காம்” அவள் குரலில் நக்கலும், இதழ்கடையில் ஏளன புன்னகையும் இருந்தது.. இதை நான் எதிர்பார்த்தேன் என்பதைப்போல.
 
ஹாஸ்பிடல் வாசலில் காரை நிறுத்தினான் சந்தோஷ். அமைதியாக உறங்கும் ராமை பார்த்துவிட்டு, “நானும் அண்ணாவும் போய் பார்த்துட்டு வரோம். ராம் கார்லயே இருக்கட்டும். நீ பார்த்துக்கோ...” என சந்தோஷிடம் சொல்லிவிட்டு கெளதமுடன் உள்ளே சென்றாள்.

“ரிசெப்ஷன்ல கேட்ப்போமா மைதிலி? எந்த ரூம்ன்னு?” என்றான் கெளதம்.

“கேட்கவே வேணாம்... கண்டிப்பா ஐசியூல தான் இருப்பாரு...” என சிரித்துக்கொண்டே சொன்ன மைதிலியுடன் சேர்ந்து தானும் சிரித்தான் கெளதம்.

“ஹஹா... முகத்தை சீரியஸ்ஸா வச்சுக்கணும். அங்க நடக்கப்போறதை பார்த்து சிரிச்சுட கூடாது...” என சத்தமாய் தனக்கு சொல்லிக்கொண்டவன் அவளிடம், “நீ மட்டும் எப்படி மைதிலி, முகத்துல எந்த எக்ஸ்பிரஷனும் காட்டாம மெயின்டைன் பண்ணுற? எனக்கு எல்லாம் ரொம்ப கஷ்டம்...” என கேட்டான்.

“பழகிப்போச்சு அண்ணா...! தினமும் பிசினெஸ்ல எத்தனை பேரை சந்திக்கிறோம்?! நம்ம நினைக்கிறது முகத்துல தெரிஞ்சுட்டா, நம்மளை ஜெயிக்குறது மத்தவங்களுக்கு சுலபமா போய்டும்... சோ எப்பவுமே unpredictableலா இருக்கனும்!!” என சிரிப்புடன் சொன்னாள் மைதிலி.

அவள் சிரித்த முகத்தை பார்த்த கெளதம், “என்ன மைதிலி ரொம்ப சந்தோசமா இருக்க போலருக்கு. முகத்துல்ல ஒரு லைட் எரியுதே...!?” என கேட்டான்.

“ம்ம்ம்... எல்லாம் சீக்கிரமா முடியபோகுது... எந்த பிரச்னையும் இல்லாம என்னோட லைப்ப பார்க்கலாம் இனிமே... அந்த ஹாப்பி தான். ராம்க்கு அல்லோபதி ட்ரீட்மென்ட் குடுக்கனும்னு கேட்டுருந்தேன்... ஒண்ணுமே ஸ்டெப் எடுக்கல நீங்க?” என அவள் சொன்னதும் உடன் நடந்து கொண்டிருந்தவன் சட்டென நடையை நிறுத்தினான்.

அவனை மைதிலி கேள்வியாய் பார்க்க , “கடைசில நீ கூட நான் ஒரு பெரிய டாக்டர் அப்படீங்கரத மறந்துட்டல்ல தங்கச்சி?” என்றான் பாவமாய்.

அவன் கேட்ட விதத்தில் சிரிப்பு வரவே “ஹஹா சரி வாங்க அண்ணா.. இந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சதும் நம்ம ட்ரீட்மென்ட் பத்தி யோசிப்போம். கொஞ்ச நாள் தானே...” என பேசிக்கொண்டே அவர்கள் மெல்ல நடந்து தீவிர சிகிச்சை பிரிவு இருந்த தளத்தை அடைந்திருந்தனர்.

மைதிலிக்கு முன்னே நடந்து சென்றுக்கொண்டிருந்த கெளதம், அங்கே வெளியில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து லக்ஷ்மி தன் மொபைலில் எதையோ தீவிரமாக பார்த்துக்கொண்டிருப்பது தெரிய, “அங்கே பாரேன், புருஷனுக்கு நெஞ்சுவலி வந்து ஹாஸ்பிடல்ல கிடக்குறான். இது எனக்கென்னனு மொபைல் நோண்டிட்டு இருக்கு...” என மைதிலிக்கு அவரை சுட்டிகாட்டினான் கெளதம்.

அவன் சொல்வதை ஆமோதிப்பதை போல தலையசைதவள், “யாருமே இல்லாத இடத்துல யாருக்காக நடிக்கணும்ன்னு நினைச்சு சும்மா இருந்துருப்பாங்க...” என சொல்லிக்கொண்டே அவர் அருகில் சென்றாள் மைதிலி.

அவர்களை கண்டுவிட்ட லக்ஷ்மி தேம்பி அழ தொடங்க, “அழாதீங்க.. சரி ஆகிடுவாரு. உள்ள போலாம்தானே...” என அவர் நடிப்புக்கு ஆரம்பத்திலேயே முற்றுபுள்ளி வைத்தாள்.

“போகலாம்ன்னு தான் நினைக்குறேன்..” என்றார் லக்ஷ்மி விடாது அழுதபடி.

அவரையும் இழுத்துக்கொண்டு ஐசியூ உள்ளே சென்றாள் மைதிலி கெளதமுடன்.

அங்கே ஏசி காற்றில் ஓயர்களுக்கு மத்தியில் நிம்மதியாய் உறங்கிக்கொண்டிருந்தார் விஸ்வநாதன்.

“என்ன நடந்துச்சு? ஏன் திடிர்ன்னு இப்படி?” என கேட்டாள் மைதிலி.

முந்தானையை சுருட்டி வாயில் வைத்து அடைத்துக்கொண்டு அழுதுகொண்டே பேசினார் லக்ஷ்மி. அவர் பேசியதில் அழுகையே பிரதானமாய் இருக்க, வேறு ஒன்றும் தெளிவாய் புரியவில்லை.

‘என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம, எப்படி அழுதே மேட்ச் பண்ணுது பார்த்தியா?’ என அவள் காதிற்குள் சொன்னான் கெளதம். அவனுக்கு சிறு தலையசைப்பை கொடுத்துவிட்டு, “சரி போதும் அழாதீங்க... ரிஷி எங்க இருக்கான்? பார்மசி போயிருக்கானா?” என்றாள்.

“அவன் ரூம் நம்பர் முன்னூத்தி எட்டுல இருக்கான். அப்பனுக்கு முடியாம போன துக்கத்துல கைய அறுத்துகிட்டான். உங்ககிட்ட எல்லாம் சொல்ல வேணாம்னு சொன்னான். எதுவும் கேட்டுகாதீங்க...” என சொன்னார் விசும்பலோடு.

“நீங்க இவரை பார்த்துகோங்க.. நான் ரிஷியை பார்த்துட்டு வரேன்” என சொல்லிவிட்டு வெளியேறினாள் மைதிலி.

லிப்டில் மூன்றாம் தளத்துக்கான பொத்தானை அழுத்திவிட்டு நின்றான் கெளதம்.

“நம்மளை அந்த அம்மா லூசுன்னே நினைச்சுடுச்சா? யோசிச்சு நம்புறமாறி ஏதாது சொல்லலாம்ல? அப்பாக்கு ஹர்ட்அட்டாக் வந்தா எவனாது கையை அறுத்துப்பானா? புல்ஷிட்” என அவன் ஆதங்கத்தில் பேச, நிலைத்த புன்னகையோடு நின்றிருந்தாள் மைதிலி.

ரிஷியின் அறை கதவு திறந்து உள்ளே செல்ல, அங்கு ரிஷி கையை வருடியபடி கண்ணீர் தடங்கள் தென்படும் முகத்தோடு அமர்ந்திருந்தாள் திவ்யா.

“திவ்யா?” என மைதிலி அழைத்ததும், “அக்கா... வாங்க... வாங்கண்ணா” என்றாள்.

“ஹாஸ்பிடல்ல எல்லாம் இப்படி வாங்க வாங்கன்னு கூப்பிட கூடாது. அடிக்கடி வந்துபோற இடமா இது?” என கெளதம் கேட்க மெலிதாய் சிரித்தாள் திவ்யா.

“என்னாச்சு ரிஷிக்கு?”

“தெரியல அக்கா.. ஒன்னும் சொல்லமாட்றாரு... இவ்ளோ நேரம் முழிச்சுதான் இருந்தாங்க. இப்போதான் இன்ஜெக்ஷன் போடவும் தூங்குனாங்க....” என்றாள் ரிஷியை பார்த்துக்கொண்டே.

“காயம் பெருசா இல்லைதானே?” என கேட்டுகொண்டே அவன் கையை பரிசோதித்தான் கெளதம். (டாக்டராமாம்.....)

கெளதம், “சின்ன காயம் தான்.. சரி ஆகிடும்... காதலி நர்ஸ்ஸா இருக்குறது கூட எவ்வளவு நல்லது பாரு!! ஹஹா கூடவே இருந்து பார்த்துக்கோ...” என சொல்லிவிட்டு வெளியேறினர்.

“யாரு நடிக்குறாங்க? யாரு நடிக்கல...? என்ன பிளான் பண்ணிருக்காங்க? எதுக்காக இந்த டிராமா ஒண்ணுமே புரியல மைதிலி....” என்றான் கெளதம்.

“பொறுமை வேணும் அண்ணா... அமைதியா இருங்க...”

நேரே லக்ஷ்மியிடம் வந்து, “ரிஷியை பார்த்துட்டோம்.. நீங்க இவரை பார்த்துகோங்க. ஏதாது வேணும்னா போன் பண்ணுங்க. கொடுத்து அனுப்புறேன். இப்போ நாங்க கிளம்புறோம்.” என்றாள் மைதிலி.

“டாக்டர் மூர்த்தி உங்களை பார்க்கணும்ன்னு சொன்னாங்க... போறப்போ அவர்கிட்ட என்னனு கேட்டுட்டு போய்டுங்கம்மா...” என்றார் லக்ஷ்மி அவசரமாய்.

சரி என சொல்லிவிட்டு டாக்டர் அறைக்குள் சென்றனர் மைதிலியும் லக்ஷ்மியும்.

மூர்த்தி, “உட்காருங்க....”

“பார்க்கணும்ன்னு சொன்னதாக சொன்னாங்க...” என விஷயத்திற்கு வந்தாள் மைதிலி.

“ஆமாம்மா... விஸ்வநாதன் சார்க்கு இப்படி ஆகும்ன்னு நான் நினைக்கவே இல்லை. நல்லா ஆரோகியம்மா இருந்தவர் தான்... இப்போ என்னாச்சுன்னு தெரியல. அவர் ஹார்ட் ரொம்ப வீக்கா இருக்கு... இந்த அளவுக்கு பலகீனமா இருக்குன்னா, அவர் மனசுகுள்ள எதையோ நினைச்சு வருந்திட்டே இருந்துருக்கனும்..” என மூர்த்தி சீரியஸ்சாக சொல்ல, “ஆஹான்?” என்றான் கெளதம்.

“உஸ்ஸ்.. அண்ணா!!” என அவனை கடிந்துவிட்டு “நீங்க இப்போ என்ன ட்ரீட்மென்ட் கொடுக்குறீங்க டாக்டர்? ஆபரேஷன் ஏதும் பண்ணனுமா?” என்றாள் மைதிலி.

“இது மைனர் அட்டாக் தான். ஆபரேஷன் தேவைபடாது. ஆனா அவரை கவனமா பார்த்துக்கணும். அவர் மனசை பாதிக்குற எந்த விஷயத்தையும் சொல்லகூடாது. அவர் மனசு அமைதியா இருக்கனும்...” என்றார் மூர்த்தி.

“சொத்து விஷயத்தை பத்தி பேசக்கூடாதுன்னு எப்படி நாசூக்கா சொல்றான் பார்த்தியா?” என மைதிலிக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிவிட்டு, “இதை நீங்க லக்ஷ்மி ஆன்ட்டி கிட்டே சொல்லிருக்கலாம்ல?”என்றான் கெளதம்.

“பாவம்.. வயசானவங்க... ஹஸ்பன்ட்க்கு எதாதுன்னா தாங்கமாட்டாங்க... அதான் உங்ககிட்ட சொல்றேன்...” என்றார் உருக்கமாய்.

மைதிலியும் கௌதமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அவரிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்து, தங்கள் காரை நோக்கி நடந்தனர் இருவரும்.

“காசுக்காக எவ்ளோ கேவலமா நடிக்குதுங்க பாரும்மா...” என்றான் ஆதங்கமாய்.

“விடுங்க அண்ணா...” என்றதோடு பார்கிங் அருகே செல்ல, அங்கு சந்தோஷும் ராமும் நின்று கொண்டிருந்தனர்.

“ராம்? தூங்கி எழுந்தாச்சா?” என கேட்டுக்கொண்டே அவன் அருகில் சென்றாள் மைதிலி.

“நான் அப்போவே எழுந்துட்டேன். உன்னதான் காணோம்...” என அவளிடம் குறைப்படித்தான் ராம்.

“கொஞ்சம் லேட் ஆகிடுச்சு ராம். வீட்டுக்கு போலாமா இப்போ?” என்றாள்.

“நீ ஏன்டா என்னவோ மாறி இருக்க? என்னாச்சு?” என சந்தோஷை கேட்டான் கெளதம்.

“ஒன்னும் இல்லை.. தலைவலி... வீட்டுக்கு போவோம்.. கார்ல ஏறுங்க...” என அவர்களை ஏற்றிக்கொண்டு வீட்டிக்கு சென்றான்.

செல்லும் வழியெங்கும் ஹாஸ்பிடலில் நடந்ததை கெளதம் கதையாய் சொல்ல, ராம் அவனுடன் சரிக்கு சரி வாயாடிக்கொண்டு வந்தான்.

வீட்டு வாசலில் அவர்களை விட்டுவிட்டு காரை ரிவர்ஸ் எடுத்த சந்தோஷை பார்த்த மைதிலி, “வெளிய எங்கயும் போறியா சந்தோஷ்?” என்றாள்.

“ஆமா மைதிலி.. கொஞ்சம் வேலை இருக்கு. வன் ஹார்ல வரேன்...” என்றான் அவள் முகம் பாராது.

“தலைவலிக்குதுன்னு சொன்னியேடா?” என கெளதம் கேட்க, “ஹான்.. அதுக்குதான்... டேபிலட் வாங்கிட்டு வரேன்” என சொல்லிவிட்டு பறந்தான் சந்தோஷ்.

செல்லும் அவனை கேள்வியாய் மைதிலி பார்க்க, “என்னாங்கடா இது!! மர்மத்தொடர்ல வர கேரக்டர் மாறி எப்போ எவன் எப்படி இருப்பான்னே புரியமாட்டுது...” என சொல்லிக்கொண்டே உள்ளே சென்றான் கெளதம்.

மாலை மங்கி, இருள் பரவ தொடங்கிய நேரம் தன் மடியில் இருந்த மடிக்கணினியை இறக்கி வைத்துவிட்டு நெட்டிமுறித்தாள் மைதிலி. கடிகாரத்தை பார்க்க, மணி ஐந்தை தாண்டி சில நிமிடங்கள் கடந்திருந்தது.

“இவ்ளோ நேரம் ஆகிடுச்சா? ஹ்ம்ம்... எப்படியோ ஒரு பெரிய வேலை முடிஞ்சுது...” என நிம்மதியாய் குளியலறைக்கு சென்றாள்.

குளித்துமுடித்து ஹாலிற்கு வர, வீட்டினுள் ஆட்கள் இருப்பதற்கான அறிகுறியே இல்லாமல் நிசப்தமாய் இருந்தது.

‘ராம் எங்க?? வீட்ல யாரையும் காணோம்’ என அவள் நினைத்த வேளை ஒரு பந்து பறந்து வந்து அவள் எதிரே இருந்த சுவற்றில் பலமாக மோதியது.

அது வந்த திசை நோக்கி அவள் திரும்பி பார்க்க, பந்தை எடுக்க வீட்டிற்க்குள் கௌதமும் ராமும் அடித்து பிடித்து கொண்டு ஓடிவந்துக்கொண்டிருந்தனர்.

தன்முன் கிடந்த பந்தை எடுத்து, ஓடி வந்து கொண்டிருந்த ராமிடம், “ராம்.. கேட்ச்...” என சொல்லிவிட்டு தூக்கி வீசினாள்.

சரியாய் அதை அவன் பிடித்துக்கொள்ள, “இதெல்லாம் போங்கு தங்கச்சி, எங்க பிரச்சனைல குறுக்க வராத!!” என எச்சரித்தான் கெளதம்.

“டேய் போடா போடா, என் மையு எனக்குதான் சப்போர்ட்... எப்பவும்...!!! சரிதானே மையு?” என அவளிடம் கேட்டு உறுதிபெற்றபின் “நாங்க விளையாடுறோம்... வந்து பாரு...” என சொல்லிவிட்டு ஓடினான் ராம்.

தோட்டத்தில் வேலையாட்களை வைத்துக்கொண்டு ராம் ஒரு அணியாகவும், கெளதம் ஒரு அணியாகவும் இருக்க, வாலிபால் விளையாடி கொண்டிருந்தனர் அனைவரும்.

அங்கு நடக்கும் கலாட்டாக்களை ரசித்து பார்த்தபடி அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தாள் மைதிலி.

சிறிது நேரத்தில் அவளருகே அரவம் தெரிய திரும்பி பார்த்தவள், ரமா பாட்டி வருவதை கண்டு புன்னகைத்தாள்.

“வாங்க பாட்டி.. நீங்க மட்டும் தான் இவ்ளோ நேரம் மிஸ்ஸிங். இப்படி உட்காருங்க..” என தன்னருகே அவரை அமர்த்திக்கொண்டாள்.

“சின்ன பசங்க மாறி அடிச்சுக்குறாங்க பாருங்க பாட்டி” என அங்கு மீண்டும் நடந்த சிறு சண்டையை காட்டி அவள் சிரிக்க, “இந்த வீடு இப்படி இருந்து ரொம்ப காலம் ஆகுதும்மா... ராம் வீட்டுல இருந்தாலே இந்தமாறிதான். எப்பவும் சிரிப்பு, விளையாட்டுன்னு வீடே உயிரோட்டமா இருக்கும்... யாரு கண்ணு பட்டுச்சோ?!” என கண்கலங்கினார்.

“அச்சோ பாட்டி...!! இப்போவும் ஒன்னும் ஆகலை... எல்லாமே பழையமாறி ஆகதான் போது... அதுக்குதானே நான் வந்துருக்கேன்.. நம்பிக்கை வைங்க பாட்டி...” என அவர் கரம்பற்றி ஆறுதலாய் சொன்னாள் மைதிலி.

“உன்னதான் முழுசா நம்பி இருக்கேன்ம்மா... ஆனா, ராம்க்கு இப்படி ஆகுறதுக்கு நான்கூட ஒரு வகைல காரணம்னு நினைக்குறப்போ மனசு கஷ்டமா இருக்கு...” என விசும்பினார்.

“என்ன சொல்றீங்க பாட்டி?” என புரியாமல் கேட்டாள் மைதிலி.

“கொலைகார கும்பல்ன்னு தெரிஞ்சும் ராமை இந்த வீட்ல தங்கவிட்டது, ராத்திரி இந்தப்புள்ள துடிச்சுட்டு இருந்தபோ நான் நிம்மதியா தூங்குனது... இதெல்லாம் நினைச்சாலே கஷ்டமா இருக்கும்மா...”

“ஹய்யோ பாட்டி! இப்படி நடக்குற எல்லாத்துக்கும் நாந்தான் காரணம்ன்னு நினைச்சு பீல் பண்ணிட்டு இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகிறது? நடக்கிறது எல்லாமே நல்லதுக்கு தான். எப்பவும் பாசிடிவ்வா நினைக்க பழகுங்க....” என அவரை தேற்றினாள்.

அவளை வாஞ்சையோடு பார்த்தவள், “எங்க ராம்க்குனு ஒருத்தி வராமையே போயிருவாளோன்னு பயந்து கடந்தேன்... உனக்காகதான் அவன் இவ்வளவு நாளும் கல்யாணம் வேணாம்ன்னு சொல்லி காத்திருந்தான் போல...” என ஆசையாய் சொன்னார்.

அவர் அப்படி சொன்னதும் முகம் வாட, வேடிக்கை பார்பதை போல முகத்தை திருப்பி கொண்டாள் மையு.

அவள் வாட்டத்தை கண்டவர், “என்னாச்சும்மா? நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா?” என்றார் பதட்டமாய்.

“அதெல்லாம் இல்லை பாட்டி”

“இல்லை.. என்னமோ உன் மனசை அரிக்குது... என்னனு சொல்லும்மா...” என அவளை சொல்லத்தூண்டினார்.

“கெளதம் அண்ணா, ரிஷி எல்லாம் சொன்னாங்க. நானும் போட்டோஸ் பார்த்துருக்கேன். ராம்க்கு நெறைய பொண்ணுங்க கூட பழக்கம் இருக்குனு சொன்னாங்க...” என திக்கி திக்கி சொல்லி முடித்தாள் மைதிலி.

தன் ராமை பற்றி அடுத்தவரிடம் குறையாய் ஒரு விஷயம் சொல்லி முடிப்பதற்குள் தொண்டைக்குழி அடைப்பது போல இருந்தது அவளுக்கு.

“இதுக்கு தான் இவ்ளோ தயங்குனியா?? இல்லன்னு யாரு சொன்னது?? என்கிட்டயே கூட சொல்லிருக்கான். இன்னைக்கு அந்த பொண்ணு கூட வெளில போனேன். ஒருத்தி என்கிட்டே லவ் பண்றேன்னு சொன்னா... அப்புறம் இன்னும் நிறைய...”

அவர் அப்படி சொல்லவும் அவள் முகம் இன்னும் வாடியது. தெரிந்த ஒன்றாயினும் அதை ஒருவர் உண்மை என சொல்லும்போது இன்னும் வலித்தது அவளுக்கு.

“எப்பவும் கண்ணால பார்க்குறதும் பொய். காதால கேட்குறதும் பொய். தீர விசாரிக்காம ஒரு முடிவுக்கு நீயா வந்துட கூடாதும்மா...!! நான் சத்தியம் பண்ணிகூட சொல்லுவேன்... நான் வளர்த்த ராம் சொக்கத்தங்கம்... தப்பு பண்றவன் அதை எப்பவும் வெளிப்படையா பண்ணமாட்டான்...” என உறுதியாய் சொன்னார் பாட்டி.

மேலும், “அவனுக்கு வார்த்தையால கூட ஒருத்தரை கஷ்டபடுத்தவோ, காயப்படுத்தவோ தெரியாதும்மா” என்றார்.

“பாட்டி??? அது??” எப்படி கேட்பது என தெரியாமல் அவள் தடுமாற, “உன் மனசுல இருக்க கேள்விக்கு ராமே பதில் சொல்லுவான்... அதுவரைக்கும் மனசை போட்டு குழப்பிக்காம இரு” என சொல்லிவிட்டு எழுந்து சென்றார்.

அவரிடம் பேசிய பின்பு, மனம் சற்று தெளிவானாது போல இருந்தது மைதிலிக்கு. அவர்கள் விளையாடிகொண்டிருந்த இடத்தை அவள் பார்க்க, அப்போது ராம் அடித்த அடியில் பந்து பறந்து போய் தொலைவில் விழுந்தது. “ஊஊஊ சிக்சர்” என கத்திக்கொண்டிருந்தான் ராம்.

"வாலிபால்ல சிக்ஸரா? அடிங்க...!"

வழக்கம்போல கெளதம் அவனிடம் சொற்போரிட, சந்தோஷ் பந்தை எடுக்க சென்றிருந்தான். உடன் விளையாடிக்கொண்டிருந்த வேலையாட்கள் முகத்தில் அயர்வையும் மீறிய மகிழ்ச்சி.

வாய்வழியே காற்றை வெளிதள்ளிகொண்டே, நெற்றியில் வழிந்த வியர்வையை தன் பெருவிரல் கொண்டு விலக்கியபடி, அவன் திரும்ப... அவன் பார்வைவட்டத்தில் விழுந்தாள் மைதிலி.

அவளும் அவனையே பார்த்துகொண்டிருக்க, ‘என்ன?’ என்பது போல தன் புருவங்களை மட்டும் உயர்த்தி கேட்டான் ராம்.

அவன் கேட்ட விதத்தில் அவனிடம் இருந்து கண்ணெடுக்க தோன்றாது, ‘ஒன்னும் இல்லை’ என்பதை போல தலை அசைத்தாள் மைதிலி.

தன் உதடு குவித்து ரகசியமாய் ஒரு பறக்கும் முத்தத்தை அவசரமாய் மைதிலியை நோக்கி பறக்கவிட்டு, அவள் சொக்கும்படி கண்ணடித்தான் ராம்.

அவன் செயலில் மெலிதாய் அதிர்ந்தவள், உடனே ‘அடி!!’ என்பதை போல கை நீட்ட, சத்தமாய் சிரித்தான் ராம். சிரிக்கும் அவன் அழகை ரசித்துகொண்டே இவளும் மனதார சிரித்தாள்....!

-தொடரும்...
 
அந்த rishi அப்பா vuku உண்மை ah ve hearty attract ah illa summa நடிப்பா... Rishi avvallavu solliyum avan uyir ah maachikka try panniyum kuda avanga பணத்து ஆசை avangala விட்டு pogalala.... இவங்களை கொலை panna ஆள் set panranga... Santhosh ku enna aachi ஏன் ஒரு மாறி இருகான் எங்க poitu வந்தான்... பாட்டி solrathu correct thira விசாரிக்கணும்... எல்லாரும் வாலி பால் vilayaduraangala.... இனிமேல் என்ன aaga pooguthoo... Eagerly waiting for next episode
 
Top