Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 08

Advertisement

அத்தியாயம் 08

ராமை பற்றி அறிந்த ஒருவரை பார்த்ததும், அவரிடம் பேசும் ஆவலில் கௌதமை அழைத்த மைதிலி, அவனது உதாசினமான பேச்சில் உடைந்துபோனாள். இதுவரை அவளை யாரும் இவ்வாறு நடத்தியதேயில்லை. Born with a silver spoon என்பதைபோல் வளர்ந்தவளுக்கு, கௌதமின் பேச்சை மனம் உணரவே சில நிமிடங்கள் பிடித்தது. உணர்ந்தபின்போ, அவளருகே கௌதம் இல்லை.

கண்கள் சிவக்க சுற்றிலும் அவனை தேடியவள், அருகிலிருந்த புட்கோர்டில் அவன் அமர்ந்திருப்பதைக்கண்டு அவனை நோக்கி ஆவேசமாக சென்றாள்.

அவனெதிரே சென்று நின்றவள், "ஹலோ! என்ன பத்தி என்ன நெனச்சுட்டு இருக்கீங்க? டூ யூ க்நொவ் ஹூ ஐ அம்? மைதிலி இன்டஸ்ட்ரீஸ் தெரியுமா? " என கேட்டுக்கொண்டே தனது பர்ஸில் இருந்து விசிட்டிங்கார்டை அவன்முன் வைத்தவள், "ஐ அம் மிஸ் மைதிலி ஜனார்த்தனன்! எதோ ராம்க்கு ப்ரெண்டு போலனு உங்களை மதிச்சு வந்து பேசுனா, என்னென்னவோ சொல்லுறீங்க? எப்படி ஒரு பொண்ண பார்த்த சில நிமிஷத்துலயே அவளை தப்பா சொல்ல முடியுது?! Mind your tongue before you spill the words! " என பேசிவிட்டு அங்கிருந்த நாற்காலியில் வேகமாய் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்தினாள்.

அவள் வைத்த விசிட்டிங்கார்டை அலட்சியமாய் கையிலெடுத்தவன், அதை பார்த்த பின்பே மைதிலியின் பின்புலம் அறிந்தான்.

"மேடம் ரொம்ப சாரி.... நீங்க யாருனு தெரியாம தப்பா சொல்லிட்டேன் உங்கள....." என்றான் மெய்யான வருத்தத்தோடு...

அவன் கார்டை பார்த்து தெளிவடைய எடுத்துக்கொண்ட ஐந்து நிமிடத்தில் தன்னை ஓரளவுக்கு நிலைப்படுத்தியிருந்த மைதிலி, "ம்ம்ம் பேசுன பிறகு சாரி கேட்டு எந்த ப்ரயோஜனமும் இல்லை சார்.... விடுங்க.... நானும் டென்சன் ஆகிட்டேன்....." என்றாள்.

"இல்லை மேம்.... யூஸ்வல்லா அவன்கூட வர பொண்ணுங்கமேல எனக்கு நல்ல அபிப்ராயமே இருந்ததில்லை.... அவனை பார்த்து ரெண்டு வருஷம் மேல ஆச்சு... இப்பவும் அவன் ஒரு பொண்ணு கூட இருக்குறத பார்த்து இன்னும் திருந்தலையோனு நினைச்சுட்டேன்.... அவன் மாறியிருப்பான்னு தோணவே இல்ல எனக்கு... It's purely my mistake..... " மன்னிப்பு கேட்பதாக நினைத்து "ராம் திருவிளையாடலின் டீசரை" வெளியிட்டான் கௌதம்.

"Hey hey stop the nonsense, என்ன உளறிட்டு இருக்கீங்க..?" அவன் சொன்னதன் அர்த்தம் புரிந்ததவளுக்கு மயக்கமே வந்தது...

"உளறுறேனா?? இல்லையே மேடம்.... " அவ்வாறு சொன்னபின்பே கௌதம் யோசித்தான்....'அடடா!!! பய எதுவுமே சொல்லல போலருக்கே!!! நம்மளாதான் மாட்டிவிட்டுடோமா!!? சமாளிடா கௌதம்...' என மனதில் பேசிவிட்டு,, "ஓகே மேடம்! நான் கொஞ்சம் அவசரமா கிளம்பனும்... சி யூ...." என நைசாக நகரப்பார்த்தான்.

"உயிர் போற அவசரமா இருந்தாலும் பரவாயில்லை.... நான் சொல்லுறவரைக்கும் இங்கிருந்து நகர கூடாது...." குரலில் அதிகாரத்துடன் திடமாக சொன்னாள் மைதிலி.

"நீங்க என்ன நினைச்சு இதெல்லாம் சொல்லுறீங்க? ராம் பற்றி தப்பா பேசுற நீங்க எப்படி அவருக்கு ப்ரெண்டா இருக்க முடியும்? எதுக்காக இப்படியெல்லாம் பண்ணுறீங்கனு சொல்லுங்க!!!? "

"இல்லை... அது.... நான் எதோ தப்பா......? ஹான்!!!! எங்கககூட படிச்ச வேற ராம்னு நினைச்சு இவன்கிட்ட அப்டி பேசிட்டேன்...." சமாளிப்பதாக எண்ணி எதேதோ உளறினான் கௌதம்... சில நொடிகள் மௌனத்தில் கரைந்தது.

அவனையே வெறித்தவள், "நீங்க டாக்டர் தானே கௌதம்...?" என்றாள் ஐயமாய்.
அவள் தான் சொன்ன சமாளிப்பை நம்புவாள் என எண்ணாவிடினும், ராமை பற்றி பேசுவாள் என தயாரானவனுக்கு, அவளது சுலபமான கேள்விக்கு பதில் சொல்லக்கூட நேரம் பிடித்தது.

"ஹான்? என்ன? என்ன கேட்டீங்க??? "

"நீங்க டாக்டரா? இல்லை கம்பௌவுண்டரானு கேட்டேன்..." கோவத்துடன் வினவினாள்.

"என்னங்க இப்படி கேட்டுடீங்க... நானும் டாக்டர் தான்... இங்கதான் ஒரு ஹால்பிட்டல்ல Neurologistஆ வெர்க் பண்ணுறேன்... "

"ம்ம்ம்... இப்போ நீங்க ப்ரீயா? ஐ மீன் ஐ வான்ட் டு ஸீ யுவர் ஹாஸ்பிடல், ஷால் வீ? " என்றிட, சிறிது தயங்கிய கெளதம்,

"Oh! Sure... இப்போவே போலாம்..." என்று கிளம்பினான். ஒருவழியாக மைதிலி அவனது சமாளிப்பை நம்பிவிட்டதாகவே எண்ணியவன் சாவி கொடுத்த பொம்மை போல மைதிலி சொன்னதை செய்தான்..

Funzoneல் இருந்த ராமை அழைத்துக்கொண்டு காரில் பயணப்பட்டனர் மூவரும்.

'என்ன இது? ராம் பேசவேமாட்றான் என்கிட்ட.... எதாவது கோவமா இருக்குமா? கோச்சுகிட்டு பேசாம இருக்க தெரியாதே அவனுக்கு....' இவ்வாறு தன் சிந்தனையில் காரை செலுத்திக்கொண்டிருந்தான் கௌதம்... சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்த்தபடி இருந்தான் ராம்... அலையடிக்கும் கடல் போன்ற மனதுடன் உள்ளுக்குள் அமைதியின்றியும், வெளியே அமைதியாகவும் இருந்தாள் மைதிலி.

"உள்ளே வாங்க... இதான் என்னோட ரூம்.. அவுட்பேஷன்ட் டைம் முடிஞ்சுடுச்சு... அதான் இப்போ ப்ரீ... "என ஏசியை ஆன் செய்துக்கொண்டே இலகுவாய் பேசினான் கௌதம்...

அங்கே இருந்த பெரிய மீன் தொட்டியின் அருகே சென்று மீன்களை நோட்டமிட்டுக்கொண்டிருந்தான் ராம்.

"கௌதம்..?? நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணணுமே!! " என்று பேச்சை தொடங்கினாள் மைதிலி.

"My pleasure... என்ன பண்ணணும்னு சொல்லுங்க?"

மைதிலி "நீங்க ராமை செக் பண்ணணும்..." என்றதும்,

"ஏன்? எதையாது ஒழிச்சு வச்சுருக்கானா??? " என்றான் கெளதம். அவனை கண்டு மீண்டும் சந்தேகம் மலையென எழுந்தது அவளுக்கு. அதை மறையாமல் வெளியிட்டாள்.

"மிஸ்டர் கௌதம்? நீங்க உண்மையிலயே டாக்டர் தானா?"

"மேடம்...சும்மா ஜோக்...! என்னாச்சு அவனுக்கு? தலையில அடிப்பட்டுறுச்சா? பழைசை மறந்துட்டானா?? " அந்தமாறி எதும் சொல்லி மைதிலியிடம் விளையாடுகிறானோ என யூகித்து அவளிடம் கேட்டான் கௌதம்.

"அதெல்லாம் தெரியல! நீங்க அவரை செக் பண்ணுங்க..."

நீடித்த சில மணிநேரங்களில் எல்லா விதமான பரிசோதனைகளும் செய்து, ராமை முழுவதுமாய் பரிசோதித்த கௌதம் குழம்பிய முகத்துடன் வெளியே வந்தான்.

நீண்ட காத்திருப்பிற்கு பிறகு, அவனை கண்டதுமே, "ராம் எப்டி இருக்கான்?" என்றாள் மைதிலி.

"Unbelievable!! அவனோட சில மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டுறுக்கு.... ரொம்ப பலகீனமா இருக்கு..." தன் நாற்காலியில் சரிவாய் அமர்ந்து கண்களை மூடி, நெற்றியை நீவியபடி சொன்னான் கௌதம்.

" கடவுளே!! சரி பண்ணிடலாம் தானே?? " மைதிலியின் கேள்விக்கு பதிலளிக்காமல்,,

"ராம்க்கு என்ன ஆச்சுன்னு இப்போவாது சொல்லுங்க மைதிலி...." அவன் முகம் வேதனையில் சுருங்கியது.

"எனக்கு எதுவுமே தெரியாது கௌதம்...."என தொடங்கி அவனை சந்தித்ததுமுதல் இன்று வரை சொல்லிமுடித்தாள்.

அவளை வியப்பும் ஆச்சர்யமும் பொங்க பார்த்தான் கெளதம். "நீங்க ரொம்ப கிரேட் மைதிலி.. காதலிக்கிறவன்கிட்ட பேங்க் பேலன்ஸ் இருக்கா? கார், வீடு இருக்கானு எல்லாம் யோசிச்சு பழகுற நிறைய பொண்ணுங்களுக்கு மத்தியில அவன் மனநிலை பாதிக்கப்பட்டுறுக்குறதை கூட பெருசா நினைக்காம அவனை விரும்புறீங்களே!? நிஜமாவே ராம் கொடுத்துவச்சவன் தான்..."

"நானும்தான் குடுத்துவைச்சுருக்கனும்... சரி நான் கேக்குறதுக்கு எதையும் மறைக்காம உண்மையை மட்டும் சொல்லுங்க.. ப்ளீஸ்..."

"நீ என் தங்கச்சி மாதிரி.. ராம் வாழ்கை நல்லவிதமா அமைய நான் என்ன வேணாலும் ஹெல்ப் பண்ணுறேன்... கேளுடா.. " கௌதமின் முகம் மென்மையை பூசியிருந்தது.

"அப்போ நான் உங்களை அண்ணன்னு கூப்பிடவா? " இதுநாள்வரை தன் வாழ்வில் வந்திடாத உறவு திடீரென கிடைப்பதில் கண்கள் பனித்தது மைதிலிக்கு.

"கண்டிப்பா மைதிலி... இப்போ சொல்லு உனக்கு என்ன தெரியனும்?"

"எனக்கு ராம் பற்றி தெரியனும்.... உங்களுக்கு தெரிஞ்சதை மறைக்காம சொல்லுங்க அண்ணா...."

"சொல்லுறேன்... ஆனா நீ எந்த சூழ்நிலையிலும் ராமை மட்டும் வெறுத்துடவோ!? விட்டுவிலகிடவோ கூடாது....!!" என உறுதிப்பெற்றுக்கொண்டு தனக்கு தெரிந்ததைப்பற்றி சொல்லத்தொடங்கினான்.

"அவனை நான் Edinburghல தான் முதல்முறையா பார்த்தேன்... வெளிநாட்டுகாரனோட ரூம் ஷேர் பண்ணிக்க பிடிக்காம நான் கஷ்டப்பட்டுட்டு இருந்தப்போ, முதன்முதல்ல ராம் என்கிட்ட வந்து பேசுனான். என் பிரச்சனையை சொன்னதும், நான் தனியாதான் இருக்கேன், என்கூட வானு சொல்லி கூட்டிட்டு போய்ட்டான்... என்னவோ அவனை பார்த்ததுமே பிடிச்சுபோச்சு எனக்கு... படிப்புல அவன் ரொம்ப ஷார்ப், நானே அவன்கிட்டதான் டவுட் கேப்பேன்...

வாய் ஓயாம பேசுவான்... ரொம்ப ஜாலி டைப்... ஒரு உதவி தேவைனு கேக்குறதுக்கு முன்னாடியே அதை புரிச்சுட்டு நமக்காக பண்ணிடுவான்..
Birdsன்னா ரொம்ப இஸ்டம்.. அவனுக்கு petsபற்றி நிறைய விஷயம் தெரியும். அவன் ஒரு பெட் லவ்வர்.

அவங்க அம்மா இவன் பிறந்தபோதே தவறிட்டதா சொல்லுவான்... சீரியஸ்னஸ்னா என்னனுகூட தெரியாது அவனுக்கு.. ரெண்டு வருஷ படிப்ப முடிச்சுட்டு நாங்க இந்தியா போறதுக்கு சில நாள் முன்னாடி அவனோட அத்தெ அவனுக்கு கால் செஞ்சு, ராம் அப்பா உடம்பு முடியாம ஹாஸ்ப்பிடல்ல இருக்குறதா சொன்னாங்க...

அப்போக்கூட இவன் பதறவே இல்லை... விஷயத்தை என்கிட்ட சொல்லிட்டு இந்தியா கிளம்பிட்டான்... ஒரு வாரத்துல நானும் இந்தியா வந்தேன்... எனக்கு ஜெய்பூர்ல வேலை கிடைச்சுது... அவனை பார்க்கலாம்னு போன் பண்ணிணேன்.... அப்போதான் அவங்க அப்பா தவறிட்டாரு தெரிஞ்சுது... நான் கிளம்பி வரேன்னு சொன்னதுக்கு வேணாம்னு சொல்லிட்டான்.. நானும் கொஞ்சநாள் போச்சுனா நார்மல் ஆகிடுவான், இங்க கூட்டிட்டு வரலாம்னு நினைச்சேன். ஆனா அதுக்கு அடுத்த ஆறு மாசத்துல அவன் இந்தியா நம்பர் வேலை செய்யலை... அவனோட அட்ரெஸ் நான் வாங்கி வைக்காததால எனக்கு அவனை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கல..."

சொல்லிமுடித்தவனை உறுத்து விழித்தவள், "சோ அப்படியே விட்டுட்டீங்க!?"என்றாள் குற்றம் சாட்டும் தொனியில்.

"தப்புதான் மைதிலி... பேஸ்புக்ல கான்டெக்ட் பண்ண ட்ரை பண்ணேன்.. பட் முடியல.. ஒரு வருஷமாவே அவன் activeல இல்லை... அவன் பிசியா இருக்கானு நினைச்சேன்.. அதுக்குபிறகு நானும் இங்கே பிசி ஆகிட்டேன்... " இதை சொல்லும்போது அவன் குரல் இறங்கியிருந்தது.

"ம்ஹும்!! சரி அவரோட Fb profile காட்டுங்க..."

"அது எதுக்கும்மா? "

"காட்டுங்க அண்ணா..."

வேறுவழியின்றி தன் ஐடி வழியே ராமின் Profileஐ காட்டினான். அதை ஆராய்ந்த மைதிலி அதில் ஓரிடத்தில் கண்கள் நிலைக்குத்த அப்படியே நின்றாள்.

பின்பு கண்களை அகற்றாது "இதை ஏன் அண்ணா சொல்லல?" என்றாள்.

"எதை? " என கேட்டபடி ஸ்கிரினை பார்த்தவன் 'அய்யோ! 'என நாக்கை கடித்துக்கொண்டான்.

ராமின் புகைப்படங்களை பார்த்தவள் உணர்ச்சித்துடைத்த முகத்துடன் அதையே பார்த்தபடி நின்றாள். அதில் இருந்த புகைப்படங்கள் அனைத்திலும் ராம் ஏதேனும் ஒரு பெண்ணுடனே போஸ் கொடுத்துக்கொண்டு நின்றான். அவன் தனித்து நிற்கும் படங்களே சொற்பம். பப்பிலும் பீச்சிலும் பார்டியிலும் என அவன் பதிந்திருந்த படங்கள் அத்தனையிலும் பெண்கள்... பெண்கள்.. பெண்கள்...!! ராமன் என எண்ணிய மைதிலிக்கு கோபியர் மத்தியில் ரமணனாக புது அவதாரத்தில் தெரிந்தான் ஸ்ரீராம்.

தன் நண்பனை மைதிலி வெறுத்திடக்கூடாதே என்ற பதைபதைப்புடன், "மைதிலி இதெல்லாம் அவன் விளையாட்டா பண்ணுனதும்மா....நீ எதுவும் தப்பா நினைக்காத அவனை.... " என சமாதானம் செய்யத்தொடங்கினான் கௌதம்.

சில நொடிகள் கண்களை மூடியபடி நின்ற மைதிலி, ஆழ மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்திக்கொண்டு கண்களை திறந்தாள்.

"அதைமட்டும் ஏன் அண்ணா சொல்லாம விட்டுட்டீங்க???? எனக்கு ராமை பற்றி எல்லாமே தெரியனும்.... மறைக்காம சொல்லுங்க...." அவள் முகத்திலிருந்தும் குரலிலிருந்தும் அவளது மனநிலையை கண்டுக்கொள்ளமுடியவில்லை அவனால்... குழம்பிய முகத்துடன் தான் சொல்லாமல் விட்டதையும் சொல்லத்தொடங்கினான்.

"இந்தியால அவன் எப்படி இருந்தான்னு எனக்கு தெரியாதுமா.... ஆனா என்கூட இருந்தப்போ அவன நான் கழுவி ஊத்தாத நாளே இல்லை..... இவனா யாரையும் தேடி போகவோ, பேசவோ மாட்டான். இவனுக்குனே எங்கிருந்துதான் வருங்கன்னு தெரியாது எனக்கு.... அவனை தொத்திக்கிட்டேதான் சுத்திட்டு இருப்பாங்க.... இதெல்லாம் வேணாம்டானு நெறைய தடவை சொல்லிருக்கேன். சிரிப்பானே தவிர வாயை திறந்து பேசவே மாட்டான்...

அப்புறம் அவனுக்கு 'ராம் 'னு கூப்பிட்டா பிடிக்காது.... ஸ்ரீராம்னு பேரு வச்சா Lord Ram மாறி இருக்கனும்னு என்ன கட்டாயம்னு கேட்டு கடுப்படிப்பான்...

உன் வைஃப் வந்தாதான் நீ திருந்துவனு நான் அட்வைஸ் பண்ணுனா,, நான் காலத்துக்கும் சிங்கிள்டா, கெத்துடானு சொல்லுவான்.... ஆனா இப்போ சரியான ஆளுகிட்டதான் மாட்டியிறுக்கான்..." இறுதியில் சிறு சிரிப்புடன் சொல்லி முடித்தான் கௌதம்.

அவன் சொன்னதை சலனமில்லாமல் கேட்ட மைதிலி, "அவ்ளோதானா? இல்ல இன்னும் எதாவது சொல்லாமல் விட்டுட்டீங்களா அண்ணா??" என கேட்டாள்.

'என்ன? நம்ம சொன்னதுக்கு ரியாக்ஷனே காட்டாம இருக்கு மைதிலி ??? ஒரு வேள ராம் மேல கோவமோ ??? நம்மதான் அவசரப்பட்டு எல்லாம் சொல்லிட்டோம் போலயே!!? ' என உள்ளுக்குள் அதிர்ந்து போனான் கௌதம்.

அதேநேரம் உள்ளறையில் உறங்கிக்கொண்டிருந்த ராம், "மையு..... மையு...... எங்க இருக்க நீ? பயமா இருக்கு... "என சத்தம் போட தொடங்கினான்...

"லைட்ட ஏன் அண்ணா ஆஃப் பண்ணீங்க?" என கேட்டுவிட்டு அவன் பதில் சொல்லும்முன் அவனிருந்த அறைக்குள் சென்றிருந்தாள் மைதிலி.

"ஒன்னுமில்லை ராம்.... நான் இங்கதான் இருக்கேன் பாரு!! " என அவனிடம் குழைவாய் பேசுவது கௌதமின் செவிகளை எட்டியது.

'தங்கச்சி என்ன நினைக்குதுனே கண்டுபுடிக்க முடியலையே!? இப்ப எனக்கு பைத்தியம் புடிச்சுடும் போல!! 'என தலையை உலுக்கிக்கொண்டவன் ஒரு டம்ளர் தண்ணீரை ஒரு மூச்சில் குடித்தான்.

அந்த அறையிலிருந்து வெளிவந்த ராம் மைதிலியை நிமிர்ந்து பார்த்தான் கௌதம். மைதிலியின் புடவை முந்தானையை தன் முகத்தில் தூக்கி போட்டுக்கொண்டு, முகத்தை தேய்த்தபடி அவள் பின்னே வரும் ராமை கண்டவனுக்கு முறுவல் பூத்தது.

'ஒரு பொண்ணு பின்னாடி நாய்க்குட்டி மாறி காலம் முழுக்க போறதுல என்னடா இருக்கு? எங்கிருந்தோ வந்தவ நம்மள அதட்டுவா, மிரட்டுவா! அவளை அட்ஜெஸ்ட் பண்ணிகிட்டு வாழ்கையை ஓட்டனும். என் லைஃப்ல அப்படி ஒரு சம்பவம் மட்டும் நடக்கவே நடக்காதுடா மச்சான்....'

ராமின் முந்தைய வார்த்தைகளை எண்ணிப்பார்த்த கௌதமின் முறுவல் பெரிதானது.

"என்னாச்சு அண்ணா? இப்படி சிரிக்குறீங்க?? "

"ராம் முன்னாடி என்கிட்ட பேசுனதெல்லாம் நினைச்சேன்... சிரிச்சேன்..."என ராமை பார்த்து சிரித்துக்கொண்டே சொன்னான் கௌதம்.

"அண்ணா! இவரை பழைய மாதிரி மாத்திடலாம் தானே?!" என மைதிலி எதிர்பார்ப்புடன் கேட்க, அவளருகில் இருந்த ராம், "வீட்டுக்கு போலாம் மையு...." பொறுமையின்றி முந்தானையை இழுக்கத் தொடங்கினான்.

"கண்டிப்பா குணப்படுத்தலாம் மைதிலி... நரம்புகள் பலகீனமாதான் இருக்கு... சரியான சிகிச்சை குடுத்தா சீக்கிரமே ராம் குணமாக வாய்ப்பு அதிகமான இருக்கு..."

ராமின் கைகளை தன்னுள் வைத்துக்கொண்டு கௌதம் சொல்வதை பொறுமையாய் கேட்டுக்கொண்டிருந்தாள் மைதிலி. "அப்படின்னா ட்ரீட்மென்டை ஆரம்பிச்சுடலாமே அண்ணா?? "

மைதிலி கைகளை இறுகபற்றியிருந்ததால், அவள் தோளில் சாய்ந்து தன் மூக்கை தேய்த்தான் ராம்.

கூச்சத்தில் அவன் கைகளை விலக்கியவள் மெல்லிய குரலில் "என்ன பண்ணுற ராம்? " என்றாள்.

"அரிச்சுது மையு... நீதான் கையை பிடிச்சுக்கிட்டியே...." என அப்பாவியாய் சொல்ல,

ராமிடம் இருந்து பார்வையை கௌதமிடம் திருப்பிய மையு,, "சொல்லுங்க அண்ணா! ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கலாம் தானே? " என கேட்டாள்.

"ம்ம்ம் பண்ணலாம் மையு.... ஆனா ராம்க்கு எதனால இப்படி ஆச்சுனு தெரிஞ்சுக்குறது ரொம்ப முக்கியம்.... அவங்க வீட்டுல கேட்டா சொல்லுவாங்கல்ல? "

"அது தெரிஞ்சாதான் சரிபண்ண முடியுமா? "

"அப்படியில்லம்மா... தெரிஞ்சா நல்லா இருக்குமேனு சொன்னேன்..."

"தெரிஞ்சுக்குறதுக்கான ஸ்டெப்ஸ் எடுத்துட்டு இருக்கேன்... அதுவரைக்கும் என்ன ட்ரீட்மென்ட் பண்ணணுமோ பண்ணலாமே அண்ணா? " தான் பிடித்த பிடியிலேயே நின்றாள் மைதிலி.

"சூர் மைதிலி... பட் ட்ரீட்மென்ட் இங்க இல்லை, நான் சொல்லுற இடத்துக்கு கூட்டிட்டு போ... சீக்கிரமே ராம் சரியாகிடுவான்.."

"எங்க கூட்டிட்டு போனும்?? எவ்ளோ தூரமா இருந்தாலும் சரி, என் ராம் சரியான போதும், நான் கூட்டிட்டு போறேன்..."

வேறிடம் செல்கிறோம் என்பதை அவள் பேச்சில் உணர்ந்த ராம், "ம்ம்ம் போலாம் போலாம் மையு... போர் அடிக்குது இங்க..." என அவள் தோளை சுரண்டினான்.

"சட்டிஸ்கர்ல இருக்க சித்ராகுட் நீர்வீழ்ச்சி பக்கத்துல ஒரு மலைவாழ்கிராமம் இருக்கு... அங்கே இந்தமாதிரி பிரச்சனைகளுக்கு பழங்கால முறையில வைத்தியம் பார்க்குறாங்க... நான் மெடிக்கல் கேம்ப் போனப்போ அவங்க வைத்திய முறையை கண்கூடா பார்த்தேன்... அங்க இருக்க சூழலே அவனுக்குள்ள ஒரு மாற்றத்தை கொண்டு வரும்.." திடமாய் சொன்னான் கெளதம்.

"என்ன அண்ணா சொல்லுறீங்க? இவ்ளோ பெரிய ஹாஸ்பிடல், வெல் ட்ரெய்ன்டு டாக்டர்ஸ் இவங்களால பண்ண முடியாததை எதோ ஒரு மலையடிவாரத்துல இருக்கவங்க பண்ணிடுவாங்கள்ளா? " நம்பமுடியாமல் வினவினாள்.

"மைதிலி.......! நம்ம மனுஷ உடம்பே 10 டாக்டர்க்கு சமம்... நம்ம உடல் இயல்பை இழக்குறப்போ, அதை சரிசெய்ய நம்ம உடம்பே ஸ்டெப் எடுக்கும்... சோ மருந்து குடுத்து சரி பண்ணுறதை விட, ராம் இயல்புல குணமான அது ரொம்பவே நல்லது.. ராம்கிட்ட இந்தமாறி ஒரு பேஷன்ட் வந்துருந்தா, அவனும் இதேதான் சொல்லிருப்பான்..."

அவன் சொல்வதைக்கேட்டு தயக்கத்துடன் அமர்ந்திருந்த மைதிலியை "என்மேல நம்பிக்கை இருந்தா பண்ணும்மா" என சொன்னான் கௌதம்.

"சரிங்க அண்ணா... எப்போ போனும்னு சொல்லுங்க... நாங்க அங்க கிளம்புறோம்..."

"ரொம்ப சந்தோஷம்.. நீங்க அங்க தங்குறதுக்கான ஏற்பாட்டை பண்ணிட்டு நானே சொல்லுறேன்... " என்றவனிடம்,

"சரிண்ணா... நேரமாச்சு.. கிளம்புறோம்.... ராம் வேற போனும் போனும்னு சொல்லிட்டு இருக்கான்..." என்றாள் மைதிலி.

அவள் கிளம்புறோம்னு சொன்னதுமே அவளுக்கு முன்பு எழுந்துக்கொண்டான் ராம்.

இருவரும் கண்களை விட்டு மறையும்வரை நின்று பார்த்த கௌதமிற்க்கு ராமின் இந்நிலையை எண்ணி மனம் கனத்தாலும், மைதிலியை எண்ணி மனதை சமன்செய்துக்கொண்டான்.

வீட்டிற்க்குள் சென்றதும் நேரே கட்டிலுக்குச்சென்று அதில் குப்புற விழுந்தான் ராம்..

"என்ன ராம்? அவ்ளோ டயர்டா? "

"ம்ம்ம் "

குளித்துவிட்டு வெளியே வந்த மையு, ராம் இன்னமும் அதேவாக்கில் படுத்திருப்பதைக்கண்டு, "ஏய் எழுந்திரிடா!!! குளிச்சுட்டு வந்து படு... கம் ஆன், வேக் அப்!! " என அவனை பாத்ரூமில் தள்ளினாள்.

சிறிதுநேரத்தில் வெளியே வந்த ராம், கட்டிலில் படுத்திருந்த மைதிலி அருகில் 'பொத்தென ' விழுந்தான்...

வேறுசிந்தனையில் இருந்த மைதிலி, ராமின் செய்கையை கண்டுக்கொள்ளவில்லை...

"மையு.... நாம எங்கபோக போறோம்...?"

"ம்ம்ம் உன் விச்சு மாமாவ பார்க்க..."

"என்னை அங்க விட்டுட்டு போய்டுவியா? "

"ம்ம்ம்...." எங்கோ பார்த்தபடி பதில் சொல்லிக்கொண்டிருந்தாள் மைதிலி.

அவளின் பதிலில் திகைத்தவன் வேகமாக அவளை நெருங்கி படுத்து தன்னோடு அணைத்துக்கொண்டான்.
"போகாத மையு என்னைவிட்டு... நான் உன்கூடவே இருக்கேன்.. ப்ளீஸ்ஸ்ஸ்....."

அவன் கண்களில் ஈரம் கசிவதை கண்டவள், "சும்மா சொன்னேன் ராம்... உன்ன விட்டு எங்கயும் போக மாட்டேன்.." என தன்னோடு அவனை அணைத்துக்கொண்டாள்.

ஆனால் அவள் மனதில் ஆயிரம் கேள்விகள் குடையத்துவங்கின.

'ராம் சரியானதும் என்னை ஏத்துப்பானா? கல்யாணம் பிடிக்காதுனு பிடிவாதமா இருந்தவருட்ட, என்னை கல்யாணம் பண்ணிக்கசொல்லி
கேட்டா என்ன சொல்லுவாரு?'

'பொண்ணுங்க பழக்கம் இருக்குனு அண்ணா சொல்றறாங்க... ராம் குணமாகிட்டா அவரோட இந்த குணமும் கூடவே வருமா?'

'பேசாம ராமை சரிபண்ணாம இப்படியே நம்மகூட வச்சுப்போமா? '

அப்படி தோன்றியமறுகணமே 'ச்சே சுயநலமா யோசிக்கிறேன்..!' என தன்னை மாற்றிக்கொண்டாள்...

சிந்தனைகளின் மத்தியில் உறக்கம் அவளை தழுவ ராமை அணைத்தபடியே உறங்கிப்போனாள் மைதிலி.

பெண்களுடனான ராமின் பழக்கவழக்கங்கள் பற்றி அவள் கண்டுக்கொள்ளாதது போல் காட்டிக்கொண்டாலும், அவள் மனதின் ஓரத்தில் அது ஆறாத வடுவாய் தங்கிப்போனது... !


-தொடரும்...
பாவம் மைதிலி
 
Top