Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Konjam Konjam Nerungi Vaa 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் ஒன்று

அடையாரில் உயர்தர மக்கள் வசிக்கும் பகுதியில் அந்த வெள்ளை நிறப் பங்களா மிக அமைதியாக காட்சித் தந்தது… அது வெளியே மட்டுமே. ஆனால் வீட்டினுள் நம் கதையின் நாயகி பத்மினி ரூமிலிருந்து வெளிவரும் பாட்டு சத்தம், காதை பிளந்தது!!

அது தமிழ் பாட்டா, இங்கிளிஷ் பாட்டா, ஹிந்தி பாட்டா என்பது நம் கதாநாயகிக்கே வெளிச்சம்.

“ஏண்டி அந்த சத்ததை கொஞ்சம் கம்மியா வைக்க கூடாதா? இந்த வீட்டில் காலையில் சாமியை கூட அமைதியா கும்பிட முடியவில்லை.” அந்த வீட்டின் மூத்த உறுப்பினரான பத்மினியின் பாட்டி சகுந்தலா சத்தமிட்டார். ஆனால் அந்த சத்தம் எங்கே பத்மினியின் காதில் விழுந்தது?!

பாட்டு சத்தத்திலும் பாத்ரூமிலிருந்து தண்ணிர் விழும் ஓசையிலும் பாட்டியின் சத்தம் பின்னுக்கு தள்ளப்பட்டது. ஜாகிங் முடித்து விட்டு அவ்வீட்டின் குடும்பத் தலைவர் கேசவமூர்த்தி ஹாலுக்கு வந்து அங்கே இருக்கும் பேப்பரையும் டீயையும் எடுத்துக் கொண்டு சாவகாசமாக அமர்ந்தார்.

“ஏம்பா உன் மகளை கொஞ்சம் கண்டிச்சி வைக்க கூடாதா?” என்றார் சகுந்தலா. “ஏம்மா பத்தூ என்ன பண்ணா?” என்று பதிலுக்கு கேட்டார் அவர்.

“எதுவுமே பண்ண மாட்டேங்குறா! அது தான் பிரச்சனையே. மணி ஏழரை ஆச்சு. இன்னும் கீழே இறங்கி வரவில்லை. ஆம்பிளை பிள்ளை மாதிரி நீ அவளை வளர்க்குற! எம்பேச்சையே கேட்கிறது இல்ல.

உன்பேச்சை மட்டும் தான் கேக்குறா. நீ கொஞ்சம் கண்டிக்கலாம் இல்லியா? நாளைக்கு இன்னொரு வீட்டுக்கு போற பொண்ணு. அப்புறம் என்ன தான் குத்தம் சொல்லுவாங்க!!

அம்மா இருந்து வளர்த்து இருந்தா, நல்லபடியா வளர்த்து இருப்பான்னு” என்று அவரின் புலம்பலை முடித்தார்.

“அம்மா உங்ககிட்ட எத்தனை தடவை சொல்லுவது? எம் பொண்ணு கடைசிவரையும் என் கூடவே தான் இருப்பா! அதுக்கு ஏத்த மாதிரி தான் மாப்பிள்ளை பார்ப்பேன்.

என் தொழிலையும் பார்த்து எம்பொண்ணையும் நல்ல படியா பார்த்துக்கிறாங்களோ அவங்களுக்கு தான் என் பெண்னை கொடுப்பேன். என்னமா ஒண்ணும் சொல்லாம என்னோட முகத்தையே பார்க்கறிங்க?” கேசவன் புரியாமல் அவரின் தாயை கேட்டார்.

“இல்லப்பா இருபத்தியோரு வருஷம் முன்னாடி நடந்ததை” சகுந்தலாம்மா முடிக்கக் கூடவில்லை. அதற்குள் படியிலிருந்து இறங்கி கொண்டே, “டாடி இந்த டிரஸ் நல்லா இருக்கா?” வந்துக் கொண்டிருந்த பத்மினியின் குரல் கேட்டவுடன்,

“அம்மா, இந்த பேச்சையே பேசாதீங்க. எம் பொண்ணுக்கு எந்த விஷயமும் தெரியவருவதை நான் விரும்ப வில்லை.” என்று அதிகாரமாக முடித்தார் கேசவமூர்த்தி.

“டாடி, பாட்டி என்ன சொல்றாங்க?” என்று அவளின் தந்தையிடம் கேட்டாள். “அது ஒண்ணும் இல்லமா. சும்மா இன்னிக்கு சாயங்காலம் சீக்கிரம் வர முடியுமான்னு கேக்குறாங்காமா” என்று பதிலளித்தார்.

“டாடி நீங்க சொல்லவே இல்லீங்களே? இந்த டிரஸ் எப்படி இருக்கு?” மறுபடியும் கேட்டாள் பத்மினி.

“உனக்கு என்னம்மா? எந்த டிரஸ் போட்டாலும் தேவதை தான்!” என்று கூறிய கேசவமூர்த்தியின் கண்களில் பெருமிதம் மின்னியது. அவர் சொல்லுவது எது உண்மையோ இல்லையோ, இது நூறு சதவிதம் உண்மை!

பார்ப்பதற்க்கு ரவிவர்மா ஓவியம் போலவே இருப்பாள். பார்ப்பவர்கள் ஒருமுறை கண்டிப்பாக திரும்பி பார்த்துவிடும் முகம், வெள்ளை நிறமும், அந்த குண்டு முகமும், கண்டிப்பாக அழகு தான். அந்த முகத்திற்க்கு கண் மிக பெரிய ப்ளஸ் பாயிண்ட்.

உயரத்திற்க்கு ஏற்ற உடல்வாகு. மொத்தத்தில் தேவதையே! “பாட்டி டாடியை ஏன் சீக்கிரம் வர சொல்றீங்க? நாங்க சாயங்கலாம் வெளியே போகலாம் என்ற ஐடியாவில் இருக்கேன். நீங்க ஏதாவது பிளான் பண்ணாதீங்க!” என்று பத்மினி கூறவும்,

“நீயே உன் அப்பாவை வெளியே அழைச்சிட்டு போடியம்மா. நான் ஒண்ணும் சொல்ல வில்லை. என் சொல் பேச்சை உன் அப்பனே கேட்கிறது இல்லை. நீ எங்க கேட்கப் போகிறாய்?” சகுந்தலா, தன் ஆதங்கத்தை கொட்டினார்.

“கிரான்மா, இப்ப உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்? இந்த வயசுல கோபம் வந்தா உடம்புக்கு ஆகாது. அப்புறம் என் பிள்ளைகளை யார் வளர்க்கிறது?” பத்மினி முடித்தவுடன் அடுத்து ஆரம்பித்தார் அவளின் பாட்டி.

“என் செல்லகுட்டி இப்போதான் என் மனசு நிறைஞ்சு இருக்கு. உனக்கு சீக்கிரம் ஒரு மாப்பிள்ளை பார்க்கிறேன்.”

“பாட்டி, இரு இரு. நான் எப்போ கல்யாணம் பண்ணிக்கறேனு சொன்னேன்?”

“இப்போ தானடி குழந்தையை பத்தி சொன்ன?”

“சொன்னேன் தான். அதுக்காக இப்போவேவா? கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னேன்? இப்போ தான் பி.காம். தேர்ட் இயர் படிக்கறேன். அது முடிச்சிட்டு சி.ஏ. பண்ணனும். அதுக்கு பிறகு தான் கல்யாணம். அதுவும் நீங்க எனக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டாம்”

“ஏன்டி அப்படி சொல்ற?”

“பின்னே உங்களுக்கு நடிகை பத்மினியை பிடிக்கும்னு, எனக்கு பாட்டி பெயரை வெச்சி இருக்கீங்க. நடிகர் சந்திரபாபு பிடிக்கும்னு அதே மாதிரி பார்த்துட்டா? நான் என்ன செய்யுறது? (தன் பெயர் காரணம் வேறு என்று அவளுக்கு தெரிய வரும் போது.)

அதனால டாடி பார்க்கட்டும். அதுவும் இப்போ இல்லை! அஞ்சு வருஷம் கழிச்சி.”

“எப்படியோ போ என்பேச்சை எப்படியும் நீ கேட்க போவது கிடையாது” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் பூஜையை தொடர பாட்டி சென்றுவிட்டார்.

“டாடி இன்னிக்கு ஈவ்னிங் பீச் போகலாமா? ஏதாவது முக்கியமான மீட்டிங் இருந்தா வேண்டாம் டாடி.”

“நீ சொன்னா எந்த மீட்டிங்கையும் கேன்சல் பண்ணிட்டு வந்துடுவேமா”

“சரிப்பா. இன்னிக்கு காலேஜ்ல இருந்து நான் நேரா பீச்சுக்கு வந்துடறேன். நீங்களும் வந்துடுங்க. ஓகே வா?”

“ஓகேம்மா! எனக்கு ஆபீஸுக்கு டைம் ஆச்சு. நீயும் கிளம்புமா” என்று சந்தோஷமாக கிளம்பினார்.

இனிமேல், அவர் வாழ்வில் சந்தோஷம் என்பது இருக்க போவது இல்லை என்று தெரியவில்லை. அப்படி தெரிந்திருந்தால் இன்றைக்கு பீச்சுக்கு மகளை அழைத்துச் சென்றிருக்க மாட்டார். விதியின் விளையாட்டை யார் தான் அறிவார்?

காலேஜில் பத்மினி மிகவும் கவனமாக புனிதா மேம் நடத்தும் அகௌண்ட்ஸை கவனித்துக் கொண்டிருந்தாள்.

வீட்டில் மட்டும் தான் வாய். வெளியில் மிகவும் அமைதியாகவே இருப்பாள். ஏன் இன்னும் சொல்ல வேண்டுமானால் மற்றவர்கள் பேசும் பேச்சுக்கு கூட அளந்துதான் பதில் அளிப்பாள்.

ஆனால், மனதிற்க்குள் அவர்களுக்கு கவுண்டர் கொடுத்து கொண்டே இருப்பாள். தோழியர்கள் பேசும் போது கூட சிறு புன்னகையே பதிலாக அளிப்பாள். ஆனால், அப்பாவை பற்றி பேசுவதென்றால் அளவுக் கோல் கிடையாது.

அவள் தோழி ஷாலினி செய்யும் குறும்புகளை மிகவும் ரசிப்பாள். அவ்வாறே அன்று மேம் “கிரெடிட் எங்கே போடவேண்டும்.? டெபிட் எங்கே போடவேண்டும்” என்று கேட்டதிற்க்கு,

“டெபிட் டாடி அக்கௌண்டில் இருந்து பணம் எடுக்கறது. கிரெடிட் என் அக்கௌண்டிற்க்கு போடுறது மேம்” என்று கூறினாள்.

“நீயெல்லாம் எங்கே உங்க அப்பாவுக்கு சம்பாதித்து உதவ போகிறாய்? அவர்கிட்ட இருந்து வாங்குறதிலேயே இருங்க! ஆனால், இது மாதிரி நீ படிச்சா கண்டிப்பா அது தான் நடக்கும்.” மேம் கடுப்பாகி கூறினார்.

பத்மினி தோழியின் பேச்சை மனதில் ரசித்தாலும், “ஏன்டி மேடமோட பிபியை ஏத்துற? கொஞ்சம் அவுங்க சொல்வதை தான் கவனிடி” என்று சொன்னாள்.

“ஏம்மா தாயே, நீயே சிறந்த ஸ்டுண்டென்டா இருடியம்மா! நான் எல்லா காலேஜுக்கு வருவதே ஜாலியா பொழுது போக்குறதுக்கு தான். ஷாலினியின் குறும்பை ரசித்துக் கொண்டே தன் மனதில் என் வாழ்க்கை கடவுள் கொடுத்த வரம் என்று மகிழ்ந்தாள்.

ஆனால் இந்த மகிழ்ச்சி சில நாள்களில் காணாமல் போகப் போவது அறியாமல். மாலையில் கடற்கரையில் தந்தையுடன் செலவிடும் நிமிடத்திற்க்கு எதிர்பார்த்து காத்திருந்தாள். மாலையில் தந்தைக்கு மெசெஜ் தட்டிவிட்டு அவருக்கு முன் கடற்கரை செல்வதர்க்கு ஷாலினி அழைக்க அதை காதில் வாங்காமல் பறந்து விட்டாள்.

பத்மினிக்கு அனைத்தையும் விட தந்தையுடன் நேரம் செலவிடுவதே மிகவும் பிடிக்கும். கடற்கரையில் குளிர்ந்த காற்றை அனுபவித்துக்கொண்டே கண் மூடி மணலில் அமர்ந்திருந்தாள் .

திடீர் என்று தன் முன் நிழல் ஆடுவதை உணர்ந்த பத்மினி கண் திறந்தாள். தன் முன் மைக்கை கொண்டு வந்த ஒரு இளைஞன், “ஒரு பெண்ணுக்கு காதல் திருமணம் மகிழ்ச்சி அளிக்குமா? பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் மகிழ்ச்சி அளிக்குமா? அது பற்றி உங்க கருத்தை சொல்ல முடியுங்களா” என்று கேட்டதற்க்கு சிறிதும் யோசிக்காமல் , பெற்றவர்கள் பார்த்து வைக்கும் திருமணம் தான் ஒரு பெண்ணுக்கு மகிழ்ச்சியை அளிக்க முடியும்.

அந்த பதில் சொல்லி முடித்து பார்த்தால் தன் தந்தை முகத்தில் அவ்வளவு கர்வம். அந்த கர்வமே தன் மகள் வாழ்வில் விளையாடபோவது தெரியாமல் மகிழ்ந்திருந்தார். “அப்பா நீங்க எப்போ வந்திங்க?”

“நீ பேச ஆரம்பித்ததும் நான் வந்துட்டேன் பத்து. நீ பேசுனது எனக்கு அவ்வளவு பெரிய சந்தோஷம்” “நான் உண்மையை தான் சொன்னேன் அப்பா.” என்று சிரித்தால் கூடவே விதியும் சிரித்தது.

------------------------------------------------டெல்லி---------------------------------------------------------

பிரதாப் மாடியில் இருந்து இறங்கி கொண்டே தன் செல்போனை காதில் வைத்து பேசிக்கொண்டிருந்தான். தவறு கத்திக் கொண்டிருந்தான்.

அவன் சத்ததை கேட்டு டைனிங் டேபிளில் உணவு உண்டு கொண்டிருந்த பிரதாப்பின் பெற்றோர் மகன் முகத்தை பார்த்து, என் மகனுக்கு என்ன இல்லை அழகு, அறிவு, அந்தஸ்த்து, அனைத்தும் இருந்தும் அவன் முகத்தில் சிரிப்பு இல்லையே, என்ற வேதனையை உள் அடக்கி உணவையையும் உள் அடக்க முயன்றனர்.

பிரதாப் தன் பெற்றவர்கள் முகத்தில் கவலை கோடுகளை பார்த்து தன் கோவத்தை கட்டுக்குள் கொண்டு வந்தான். பிரதாப் இருகிய மனம் படைத்தவன். தன் உணர்சியை மற்றவர்களுக்கு காட்ட மாட்டான். “அப்பா சாப்பிடீங்களாப்பா ஏன் டல்லா இருக்கீங்க.”

“அதெல்லாம் ஒன்னும் இல்லாப்பா”, என்று தன் தன் தந்தை சொன்னாலும் மகனுக்கு பெற்றோர் கவலை அறியாததா? என் பெற்றோர்களின் இருபத்தி ஒரு வருட கவலைக்கு நான் கண்டிப்பாக ஒரு தீர்வு காண்பேன்.




“அம்மா இன்னிக்கு கோவிலில் பூஜை இருக்குனு சொன்னிங்கலே, ஈவ்னிங் எத்தனை மணிக்கு வரணும்?” இது தான் பிராதாப் அவன் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தன் பெற்றோர்களுக்காக அனைத்தையும் விட்டு கொடுப்பான்.

“ஒரு ஆறு மணிக்கு வாப்பா சரியா இருக்கும்.”

“சரிம்மா வந்து விடுகிறேன்.” என்று விடைப்பெற்று செல்லும் தன் மகனையே கவலை தோய்ந்த முகத்துடன் பார்த்தாள்.

சாந்தி கன்ஸ்ட்ரெக்க்ஷனில் ஊழியர்கள் அனைத்துப் பேரும் பரப்பரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதன் எம்.டி. பிரதாப் அனைத்துப் பேரையும் திட்டிக் கொண்டிருந்தார். திட்டி என்றால் சத்தம் போட வில்லை, ஆனால் அவன் உச்சரிக்கும் வார்த்தை, அதை உச்சரிக்கும் போது அவன் முகத்தில் வந்து போகும் பாவம் அதை பார்த்தே ஊழியர்கள் அரண்டு விடுவார்கள்.

“மினிஸ்டருக்காக கட்டும் சைட்டில் ஒர்க் நடக்கவில்லை என்று ஏன்? எனக்கு முதலில் தகவல் சொல்ல வில்லை?” என்று தன் பி.ஏ அசோக்கிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

“இல்லே பாஸ் சின்னப் பிரச்சினை தானே இதுக்காக உங்களை ஏன் டிஸ்டர்ப் பண்ணனும்னு யோசிச்சேன் பாஸ். ஆனால் இவ்வளவு அளவுக்கு போகும் என்று நான் நினைக்க வில்லை”, என்று தலைகுனிந்தான்.

“சரி விடு… முதலிலேயே சொல்லி இருந்தால் பிரச்சினை இவ்வளவு தூரம் போகவிட்டு இருக்க மாட்டேன். இதுவும் நல்லதுக்கு தான், முதலில் நமக்கு எதிரா யார், நம் லேபர்களிடம் பேசினாங்கனு பாரு. அவனுங்களுக்கு கொடுக்குற பனிஷ்மெண்டில் வேற யாரும் நம்ம எதிர்க்கிறதுக்கு யோசிக்கணும்.”

அசோக் மாட்டினாங்கடா, என்று மனதிக்குள் நினைத்துக் கொண்டான். ஏன் என்றால் தன்னை எதிர்ப்பவர்களை அழிக்காமல் விட மாட்டான். இது தொழில் வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு அனைவருக்கும் தெரியும்.

பிறகு யோசிப்பதற்க்கு கூட நேரம் இல்லாமல் வேலை சரியாக மாலை வரை இருந்தது. மாலையில் அம்மாவை கோயில் அழைத்து செல்வதற்காக சீக்கிரம் ஆபீஸை விட்டு கிளம்பினான். கிளம்புவதற்கு முன் தன் பி.ஏ அசோக்கிடம் முடிக்க வேண்டிய வேலையைப் பற்றி சொல்லி விட்டு கிளம்பினான்.

தன் வீட்டில் அம்மா ரெடியாக இருப்பார்கள் என்று நினைத்தற்க்கு மாறாக சோப்பாவில் அமர்ந்துக்கொண்டு மகன் வருவதை கூட அறியாமல் டிவியிலேயே பார்வையை பதித்திருதார். தன் அன்னையின் பார்வையை தொடர்ந்து தானும் பார்வையை டிவியில் பதிக்க, அவனாலும் பார்வையை அங்கும் இங்கும் நகர்த்த முடியவில்லை. ஏன் ஏன்றால், டிவியில் பத்மினியின் நிகழ்ச்சி ஒலிப்பரப்பாகிக் கொண்டிருந்தது.
 
Top