Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal Valam Vara Episode 8 Part 2

Advertisement

AshrafHameedaT

Administrator
அத்தியாயம் எட்டு(2) :


“சாரி, அம்மாவை பேசிட்டாங்கன்ற கோபத்துல பேசியிருப்பா” என்று மனோ பொறுமையாய் பேச,

“அதாவது ஒரு விஷயம் செஞ்சா, அதோட விளைவுகளை எதிர்கொள்ள தான் வேணும். நான் செய்யற மாதிரி தான் செய்வேன். ஆனா நீ என்னை பேசக் கூடாதுன்னா அது எப்படி, பேச முடியாத அளவுக்கு பயம் வேணுமாம்? நம்ம எல்லாம் என்ன தீவிரவாதியா?”

“ஊர் வாயை எல்லாம் மூட முடியாதுங்க, அவங்க பேசறது நம்மை கொஞ்சமும் பாதிக்காதுன்னு தெரிஞ்சா தான் நிறுத்துவாங்க, நம்மை அது பாதிக்குதுன்னு தெரிஞ்சா பேசிட்டே தான் இருப்பான்”

“இப்போ உங்கம்மாக்கு என்ன குறைச்சல்? உங்கப்பா நல்ல பதவி, பையன் நீங்களும் அப்படி தான், பொண்ணையும் நல்லா தான் வளர்த்திருக்காங்க, அப்போ யாராவது ஓடிப் போனவ சொன்னா... ஆமாண்டா, அதுக்கென்ன? நீ மூடிட்டு போடான்னு சொல்ல முடியாது, போய் போய் எல்லோர் கிட்டயும் சண்டை போடுவோமா?”

“உலகத்துல நாம தான் புத்திசாலின்னு நினைக்கக் கூடாது” என்று ராஜராஜன் வார்த்தைகளை விளாசித் தள்ள,

இவன் இவ்வளவு பேசுவானா என்று விழிவிரித்து அங்கை பார்த்திருந்தாள். அங்கே போலிஸ் ஸ்டேஷனில் வாயே திறக்கவில்லை என்று பார்த்திருந்தாள்.

“இது எல்லாத்தையும் விட, நமக்கு ஒரு பிரச்சனைன்னா நின்னு அடிக்கலாம், சொல்லிக் கூட அடிக்கலாம், ஆனா நம்மளால அடுத்தவங்களுக்கு பிரச்சனைன்னா நாம அமைதியா தான் போகணும். அதை தான் எங்க வீடு செய்யறாங்க, செய்வாங்க! அதனால தெரியாம எதுவும் பேச வேண்டாம்”

“இப்போ வரைக்கும் உங்கம்மாக்கும் உங்கப்பாக்கும் என்ன பிரச்சனை? உங்கம்மா அவங்க பிறந்த வீட்டோட சீராடலை, அது மட்டும் தான், ஆனா நாங்க அப்படி கிடையாது!”

“மேல இருந்து அப்படியே கீழ விழுந்துடோம், வசதில ஒன்னுமே இல்லாம போயிட்டோம். என்ன உங்களுக்கு வசதி குறைவுன்னு கேட்கலாம்? ஆனா இப்போ இருக்குற இதெல்லாம் ஒன்னுமே இல்லை அவ்வளவு இருந்தது. பாதிக்கப் பட்டது நாங்க தான்”

“அதனால் சும்மா எங்களை குற்றம் சொல்றதை முதல்ல நீ நிறுத்து” என்று அங்கையை பார்த்து நேரடியாய் சொன்னவன்,

“ஒன்னு உங்க தங்கை வந்து எங்க வீட்ல இருக்கட்டும், இல்லை உங்க ஊருக்கு கூட்டிட்டு போயிடுங்க. இப்படி வாட்ச்மேன் மாதிரி வாசல்ல படுத்து என்னால பார்த்துக்க முடியாது. எங்க கிழவியை நான் இனிமே இங்க விட மாட்டேன், இது ரெண்டுல ஏதோ ஒன்னு தான் நடக்கணும்” என்று முடிவாய் சொன்னான்.

அவனின் பேச்சுக்களில் சுவாமிநாதனும் தமிழ்செல்வனும் வியந்து நின்றனர். பேசுவான் தான், ஆனால் முடிவுகள் அவன் எடுத்தது கிடையாது. பெரியப்பா சொல்வதை அப்படியே கேட்டுக் கொள்வான். இப்போது அவன் முடிவெடுக்கிறான்.

தமிழ்செல்வன் அண்ணனை அவன் செய்வது சரியா என்று பார்க்க, அவர் அவன் முடிவிற்கு கட்டு படுவது போல நின்றார். “ண்ணா, அந்த பொண்ணை நம்ம வீட்டுக்கு கூப்பிடறான்”

“அது சரி தானேடா ஒன்னு வரட்டும், இல்லை போகட்டும். இங்க வெச்சு நாம அதை பாதுகாத்துட்டு இருக்க முடியுமா என்ன? அது வேற ஊர் வம்பை அசால்டா விலைக்கு வாங்குது” என்று அவரும் சொல்ல,

“என்னடா இது?” என்று வியந்து பார்த்தவர், இதுவரை அண்ணன் சொல்படி நடந்தவர், இனி மகன் சொல்படி நடக்க முடிவு செய்து அவனை பார்க்க ஆரம்பித்தார்.

“நான் அங்கை கிட்ட பேசறேன்” என்று மனோ சொல்ல,

“நீ பேசு, பேசாம போ, ஆனா இது ரெண்டு தான் முடிவு. ஒன்னு எங்க வீட்டுக்கு வரட்டும், இல்லை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுங்க, இந்த ஊர்லையோ இல்லை அக்கம் பக்கம் ஊர்லையோ தனியா இருக்கக் கூடாது. ஏன் தமிழ்நாட்டுக்குள்ளேயே தனியா இருக்க கூடாது. எங்க எல்லையை தாண்டி நீங்க எப்படியோ இருந்துக்கங்க” என்று இதுதான் முடிவு என்பது போல சொன்னான்.

“என்ன தமிழ்நாட்டிற்குள்ளேயே இருக்கக் கூடாதா? தமிழ் நாடு என்ன இவனின் அப்பன் ஊரா? என் அப்பனின் ஊரும் இதுதானே?” மனதினுள் பொருமியவள்,

“நான் உங்க பேச்சை கேட்கலைன்னா” என்று அங்கை பேச,

மனோ அவளை அதட்டி பேச வாயெடுக்கும் போதே அவனை கைகளால் பேசாதே என்பது போல காண்பித்த ராஜராஜன், “கேட்கணும்னா கேட்டு தான் ஆகணும்” என்று சொல்ல,

“கேட்கலைன்னா” என்று அவள் மீண்டும் பேச,

“கூப்பிடு உங்கப்பாவை, இது தான் அவர் பொண்ணை வளர்த்து வெச்சிருக்குற லட்சணமான்னு கேட்கறேன். எங்க பொண்ணு தான் எங்க பேச்சை கேட்கலை, உங்களோட வந்துடுச்சு, உங்க பொண்ணு என்ன பண்ண போகுதுன்னு அவரை கேட்கறேன். என் வாழ்க்கை என்ன உங்களுக்கு விளையாட்டா? என்னோட கல்யாணம்னு ஒன்னு நடக்காம இருந்திருந்தா நீ எப்படியோ போன்னு விட்டிருப்பேன், நீயே கேட்கற உன் மனைவின்றது கூட அடுத்தவங்களுக்கு இல்லையான்னு, அப்போ நீ சொல்றதை அடுத்தவன் சொல்லாமையா இருப்பான்”

“உங்களால திரும்ப எங்க வீடு அசிங்கப்படணுமா? என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்கலாம்?” என்று ராஜராஜன் கோபமாய் அவளின் அருகில் போக,

மனோ இன்னும் வேகமாய் அங்கையின் அருகில் போனவன், “எதுன்னாலும் பேசி முடிவெடுத்துக்கலாம் கோபம் வேண்டாம்” என்றான்.

அவனுக்குமே இதை முடித்து விட்டால் பரவாயில்லை என்று தான் தோன்றியது.

“ம்ம் அப்புறம் இன்னொரு விஷயம்” என்ற ராஜராஜன், “உட்காரு” என்று மனோவிடம் சொன்னவன், பெரியப்பா அப்பாவிடமும், “உட்காருங்க” என்று சொல்ல, அவர்களும் அமர்ந்தனர்.

ராஜராஜன் மனோவை ஒருமையில் பேசிக்கொண்டு இருப்பது அப்படி ஒரு கோபத்தை கொடுத்துக் கொண்டிருந்தது அங்கைக்கு.

“எனக்கு பேசி பேசி தொண்டை வறண்டு போச்சு, டீ போடுவியா நீ, போட தெரிஞ்சா எங்களுக்கு கொண்டு வா”

“என்ன நானா?” என்றாள் கடுப்பாக.

“பின்னே இது உன் வீடு, உன்னோட பாதுகாப்புக்கு தான் நாங்க உட்கார்ந்து இருக்கோம். அப்போ நீ தானே செய்யணும்” என்றான்.

அவள் முடியாது என்று நிற்க, “எனக்கு இன்னும் நிறைய உங்கண்ணன் கிட்ட பேசணும், இப்போ நான் யாரையும் தேட முடியாது, நீ பொண்ணு டீ போடணும்னு சொல்லலை, இல்லை என்னோட மனைவியா டீ போடணும்னு சொல்லலை , இங்க இந்த பேச்சுல நீ எதுவுமே செய்ய முடியாது, இப்போதைக்கு இங்க நீ வெட்டி, இது உன் வீடு கூட, அதுதான் சொல்றேன் போ” என்று அலட்சியமாய் சொல்ல,

அம்மாடி தங்கள் மகனின் இன்னொரு பரிமாணத்தை பார்த்து அவனின் அப்பாவும் பெரியப்பாவும் அசந்து இருக்க,

மனோவிற்கோ எப்படி இவனுடன் வாழ முடியும் அங்கைக்கு. முடியாது! முதலில் இவளை அழைத்துக் கொள்ள வேண்டும், இந்த உறவை முடித்து விட வேண்டும் என்று மனதில் திண்ணமாக்கிக் கொண்டான்.

அவனை விட ராஜராஜன் தான் அதிகம் நினைத்தான், “இவளை யார் இங்க வரச் சொன்னா, என்னை கல்யாணம் பண்ணச் சொன்னா, இப்படி பிடிக்கலை பிடிக்கலைன்னு ஏலம் விட சொன்னா, கிளம்புடி முதல்ல நீ இங்க இருந்து, நீ எவ்வளவு அழகா இருந்தாலும், குணமா இருந்தாலும், மணமா இருந்தாலும், எனக்கு வேண்டாம்!”

“கடவுளே! அப்பா என்னை இங்க இருந்து போறதுக்கு பெர்மிஷன் குடுத்துடணும்” என்று இவர்கள் இருவரையும் விட அங்கை அதிகம் நினைத்தாள்.

எண்ணமும் ஆக்கமும்

மல்லிகா மணிவண்ணன்
 
நீ இங்க பேச்சு வார்த்தை க்கு தேவையில்லை...
சும்மா இருக்குறதுக்கு போய் டீ போடுமா..

பெண்ணு ன்னு இளக்காரமா சொல்லல..
மனைவி ன்னு அடிமையா சொல்லல..

என்னா டயலாக், ராஜன்...
அசத்திட்ட கண்ணா...
 
Last edited:
:love: :love: :love:

அண்ணன்........ கூட்டிட்டு போய்டணும்......
புருஷன்....... கிளம்புடி முதல்ல.......
பொண்டாட்டி..... எங்கப்பா கிளம்புறதுக்கு permission குடுத்துடனும்.........
அப்புறம் என்னத்துக்கு இந்த கல்யாணம்.......

கல்யாணம் பண்ணிவெச்ச மேஜர் சார் வந்து நியாயம் சொல்லிட்டு போங்க.......

யாருப்பா பயமானு கேட்டது??? அண்ணனும் தங்கச்சியும் பார்த்தீங்கல்ல....... வரும்.பயத்துக்கே பயம் வரும்........
இப்போ பார்த்தீங்களா அண்ணனும் தங்கையும்........ அப்பாவும் பெரியப்பாவுமே ஆச்சர்யமா பார்க்கிறாங்க.......
தேவையில்லா இடத்தில நேரத்தில் பேசுறதில்லை.......

அவன் தான் வான்னு கூப்பிடுறானே......... நீ போகணும்னு வேண்டிக்கிற.......
சரி சரி கிளம்பு தமிழ்நாட்டை விட்டு..........
 
Last edited:
இந்த பேச்சுல நீ எதுவுமே செய்யமுடியாது....... இப்போதைக்கு இங்கே நீ வெட்டி...... இது உன் வீடு கூட....... அதான் சொல்றேன் போ........
குணமா மணமா இருந்தாலும் எனக்கு வேண்டாம்........
அது பொண்டாட்டி தானே....... டீ-யில்லையே????
 
Last edited:
ராஜ ராஜன் நல்ல form க்கு வந்துட்டடான்....

சொல்லி அடிப்பேனடி
அடிச்சேன்னா நெத்தி அடிதானடி நான் சொல்லி அடிப்பேனடி அடிச்சேன்னா நெத்தி அடிதானடி
 
Last edited:
Top