Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Episode -9 எனை தான் அன்பே மறந்தாயோ??

Advertisement

Nilaprakash

Member
Member
கார்த்திக் தன் கண்களில் காதலையும் ஏக்கத்தையும் தேக்கியபடியே வீட்டிற்கு வந்தான்.

" கொழுந்தனாரே ..நீங்க இப்படி அழாத குறையா மூஞ்சியை வைச்சுகிட்டாலும் நிச்சயம் முடிஞ்ச உடனே எல்லாம் பொண்ணை உங்களோட அனுப்ப மாட்டாங்க..‌வாங்க போவோம் "

வீணாவின் கேலியை ஒரு செல்ல முறைப்புடன் சமாளித்து வண்டியை கிளப்பினான் கார்த்திக்.

மலர் தன் அறையில் தன்னைச் சுற்றி பறக்கும் காதல் பட்டாம்பூச்சி களை தவிர்க்க முடியாது தத்தளித்துக் கொண்டு இருந்தாள்.

" ஏன்டி ரெண்டு இட்லி ஆவது சாப்பிட்டு படுக்கலாம் ல "

தன் அன்னையின் பிரிவுக்கு

" வேணாம் பசிக்கல .."

என்று சொல்லிவிட்டு கதவை தாழிட்டு படுத்தாள்.

ரீனாவின் கேள்வி அவள் மனதிற்குள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது.

" ஏன்டி ..விட்டா உன்னை இப்பவே கூட்டிட்டு போயிருவார் போல‌..பையன் மூஞ்சியை பார்க்கனுமே ...சரி சரி ஃபோன் நம்பர் குடுத்தாரா ..இன்ஸ்டா ஐடி ஃபேஸ்புக் ..ஏதாவது "

அவள் இல்லை என்று உதட்டை பிதுக்கவும்

" சரி விடு ..சார் போற மூட்ல இனி ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் ஃபோன் ல தான் இருப்ப ..இந்த ஃப்ரெண்ட் ஐ மறந்துராத மா "

ரீனா பாவம் போல் சைகை செய்யவும் அவளை அடித்து

" பேசாம இருடி கொஞ்ச நேரம் "

என்றாள் மலர்.

" இதே தான் நானும் சொல்ல போறேன் நாளையில இருந்து "

என்று சொல்லி சிரித்தாள்.

மலருக்கு அந்த நினைவுகள் ஆயிரம் ஏக்கங்களை உருவாக்கி இருந்தது.

" கால் வருமா ..பேசினால் என்ன பேசக் கூடும் .‌.. எப்படி பேசுவது "

அவள் மனம் அவனின் கற்பனை கேள்விகளுக்கு பல நூறு ஒத்திகைகள் பார்த்து விட்டு ஒரு வழியாக அவளை உறங்க விட்டது.



கரிகாலன் வீட்டிற்கு வரும் வழியில் எல்லாம் முகம் முழுவதும் புன்னகையுடனே பயணித்தார்.

கார்த்திக் வீடு வந்ததும் சென்னை கிளம்பினான்.

" ஏண்டா .. இன்னைக்கே போற ..நாளை கிளம்பலாம் தான டா "

அன்னபூரணி தன் மகனின் இரவு நேர பயணத்தை தடுக்க முயற்சித்தும் கொண்டு இருந்தாள்.


கரிகாலன் எப்போதும் இப்படி தன் மகன்களை பயத்துடன் வளர்த்தவர் அல்ல.

" கல்யாணம் நிச்சயமாகி இருக்கு .. கொஞ்சம் கவனம போய்ட்டு வா "

ஒரு வரியுடன் பேச்சை முடித்து நகர்ந்தார்.

" சாப்பாடு தீனி எல்லாம் கட்டி வைச்சு இருக்கேன் .. இடையில பசிச்சா சாப்பிட்டுக்க .."

" மா ..சேலம் டூ சென்னை பத்து மணி நேர ட்ராவல் எல்லாம் இல்ல மா .. அதுவும் அது பைபாஸ் ரோடு "

" டேய் ஒழுக்கமா சாப்புட்ரு டா ... ஸ்பீடா போகாதே என்ன "

தன் தாயை ஒரு முறை கட்டிக் கொண்டு கொஞ்சினான் கார்த்திக்.

" விடுடா .. டேய் ..சின்ன பையனாட்ட "

" விடுங்க அத்தே .. இதெல்லாம் அந்த பொண்ணு வர்ற வரைக்கும் தானே என்ஜாய் பண்ணுங்க "

வீணா மறுபடியும் தன் கொழுந்தனை வம்பிழுத்தாள்.

" எங்க அண்ணணுக மாதிரி எல்லாம் நான் இருக்க மாட்டேன் ஏன்மா "

" ஏன்டா உன்னை உங்க அண்ணி வம்பிழுத்தா அவங்களை பேசுடா ..எங்களை ஏன்டா கோர்த்து விடற "

கலையரசன் அவனை முறைக்கவும்

" இப்படி போட்டு கொடுத்து போட்டு வாங்கி பொண்ணு வீட்ல சிறப்பான பெயர் வாங்கிக் கொடுத்த இந்த குடும்பத்தை விட்டு பிரியனும் னு நினைக்கும் போது தான் மனசு ரொம்ப வலிக்குது '"

என்று பாசாங்கு செய்து தன் அண்ணிகளை நோக்கி கையெடுத்து கும்பிட்டு விடைபெற்றான்.

கரிகாலன் குடும்பம் மிகுந்த சந்தோசத்துடன் அவனை வழியனுப்பி வைக்க கார்த்திக் சென்னை கிளம்பினான்.

மறுநாள் கார்த்திக் பயணக் களைப்பில் நன்கு உறங்கிக் கொண்டு இருக்கையில் அவனின் அலைபேசி சிணுங்கியது.

மறுமுனையில் ஜெனி கத்தினாள்.

" எருமை மாடே இன்னும் லேப் கு வராம என்ன பண்ணிட்டு இருக்க .."

அவளின் சத்தத்தில் அவனின் மொத்த தூக்கமும் பறந்து போயிருந்தது.

" வரேன் வரேன் கத்தாதே "

அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர்களின் லேப்பில் அவனின் கார் நின்றது.ஐவருடைய அப்பார்ட்மெண்ட் ன் மிக அருகில் லேப் செட் செய்திருந்தனர்‌. ரிசர்ச் லேப் அதனை ஒட்டிய அலுவலக அறை தங்களுடைய ரிசர்ச் அப்டேட்கள் விவாதிக்க சிறிய அறை என அமைத்திருந்தனர்.

கார்த்திக் ஐ கண்டதும் சரண் அவனை அணைத்துக் கொண்டு வரவேற்றான்.

" மச்சான் ...நீ மட்டும் இப்ப வரலனா இந்த ராட்சஸி என் உயிரை எடுத்திருப்பா ..சத்தியமா சொல்றேன் டி உன் புருஷனுக்கு சொர்க்கம் கன்பார்ம் ..உன்னை மாதிரி ஒரு ராட்சசியை கட்டினதுக்கு அப்பரம் புதுசா என்ன தண்டனை இருக்கும் நரகத்துல "

சரண் ஜெனியை கிண்டலடித்தான்.ஜெனி அவன் தலையில் கொட்டி விட்டு அவர்களுடன் அமர்ந்தாள்.

" டேய் அதெல்லாம் இருக்கட்டும் .. எதுக்கு டா மூணு நாள் ஆஃப் எடுத்த "

" அது மச்சான் ..எத்தனை நாள் தான் ப்ரியாவுக்கு ரீசன் சொல்வேன் சொல்லு ..விட்டா ப்ரேக் அப் ஆயிரும் போல ..அதான் "

ஒரு நிமிடம் மலரின் முகமும் அவள் அவனை பார்த்து

" லெட்ஸ் ப்ரேக் அப் "

என்று சொல்வது போன்ற காட்சி அவன் மனக்கண் முன் வந்து போனது.

" இல்லை ‌...இந்த ரிசர்ச் ஐ எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் முடித்து விட்டு அவளுடன் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து அனுபவிக்க வேண்டும் அவன் மனதிற்குள் முடிவு செய்து கொண்டவனாக சரணை நோக்கினான்.

ஜெனி ஒரு ஃபைலுடன் நின்றிருந்தாள்.

" இந்த வைரஸ் ஓட ஆர் என் ஏ மாற்றம் ரொம்ப டிபிக்கலா இருக்கு ..நீட் டு அப்ஸர்வ் அண்டர் கண்டிசன்ஸ்"

அந்த ஃபைலை வாங்கியதும் மூவரும் தங்கள் ஆராய்ச்சி விவாதங்களைத் தொடங்கினர்.

கார்த்திக் மலரின் முகம் மனதிற்குள் தோன்றும் போது எல்லாம் இன்னும் அதிக வெறியாக உழைக்கத் தொடங்கினான்.

மலர் அவனிடமிருந்து வரும் அமைப்பிற்காக ஏங்கி ஏங்கி ஏமாந்து போனாள்.

அவன் தன்னை பார்த்த பார்வையில் இருந்த காதல் ஏக்கம் உன்னை இப்போதே கடத்திச் செல்கிறேன் என்ற மோக பார்வை அத்தனையும் பொய்யா

அவள் மனது கலக்கமுற்று திண்டாடியது.இளங்கோவோ தன் தங்கையின் முக வாட்டத்தைக் கண்டு தங்களை விட்டு பிரிய போகும் வலி எனக் கருதினான். மொத்த குடும்பமும் அவளை ஆறுதல் படுத்த தொடங்கியது‌.

அவள் மன ஓட்டம் பாடலாக ஒலித்தது

" எனை தான் அன்பே மறந்தாயோ ? "
 
அருமையான பதிவு...

ஆராய்ச்சிய எப்ப முடித்து எப்போ கால் செய்ய..போடா கார்த்திக்....
மலர் உனக்காக உருகிட்டு இருக்காள்....
 
Top