Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Episode 7 - ஆசைகள் விதைக்கும் அதிசய மலரவள்

Advertisement

Nilaprakash

Member
Member
கார்த்திக் கண்களில் ஒரு முறை மலரின் அழகு முகம் வந்து போனது. தன் ஆசை உணவை கண்டு விட்ட குழந்தை போல குதூகலப்படும் தன் மனதை முகத்தில் காட்டாதிருக்க அவன் பிரம்மபிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது.

" எதுக்கு அண்ணீஸ் .."

" உங்களுக்கு நாளை மறுநாள் நிச்சயம் வைச்சிருக்கு ல ..நிச்சய புடவை வாங்கனும் "

ரூபா சொன்னதும் வீணா ஒரு கிண்டலோடு தொடர்ந்தாள்.

" பொண்ணு வீட்டுக்கு போய் அளவு ஜாக்கெட் வாங்கனும் ..நிறைய வேலை இருக்கு "

அவளின் பதில் அவன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்புகளை எரிய விட்டது போல் மாற்றியது.

" பாவம் அண்ணீஸ் நீங்க..என் அண்ணணுக எல்லாம் வேஸ்ட் ..உங்களை எல்லாம் கவனிக்கறதே இல்ல ...கார் ல ஏசி கூட வொர்க் பண்றதில்லயாமே ....இங்க வெயில் வேற கொளுத்துது "

" ஏ .. சித்தப்பா எங்க கார்ல ஏசி எல்லாம் நல்லா தான் இருக்கு ..
"

தன் அண்ணன் மகனின் காதை திருகி பாக்ஸிங் கற்று தருவது போல் அவனை பேச விடாது இருக்கி பிடித்து பேசினான்.

" நான் வேணா என் கார் ல உங்க ரெண்டு பேரையும் டிராப் பண்ணட்டா "

" வேணா கொழுந்தனாரே... நீங்க ஒரு பெரிய விஞ்ஞானி..இந்த சின்ன விஷயத்துக்கு எல்லாம் உங்களை டிஸ்டர்ப் பண்ண முடியுமா ..நீங்க லெசரா இருக்கிறதே பெருசு...டேய் பசங்களா சித்தப்பா கூட நல்லா விளையாடுங்க "

கார்த்திக் ன் மனதை அறிந்து விளையாட்டு காட்டி அண்ணிகள் இருவரும் மனதிற்குள் சிரித்துக் கொண்டு இருந்தனர்.

"வீணா .. நானும் மாமாவும் நகை எடுக்க போறோம் ..கலையரசன் லீவு போட்டுட்டு வரேன் னான் .. நீங்க எப்படி போவீங்க "

அன்னபூரணி படபடத்தப்படியே வந்தாள்.கொஞ்சம் கோபமாக தன் அண்ணண் குழந்தைகளுடன் டிவி பார்த்துக் கொண்டு இருந்தவன் சற்றே ஆர்வமாகி திரும்பினான் கார்த்திக்.

" எழில் வேற வேலை முடிந்து வர இரண்டு மணி ஆகும் னான்"

கார்த்திக் ன் கண்கள்
" இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க " என்பதை பாட்டாய் படித்து தன் அண்ணிகளை நோக்கியது.

ரூபா ஒரு குறுஞ்சிரிப்புடன் கார்த்திக் ஐ பார்த்த படியே பதிலளித்தாள்.

" அது ஒண்ணும் பிரச்சினை இல்லை அத்தே நம்ம டிரைவரண்ணண் பாலுவை வரச் சொல்லிக்கறோம் "

கார்த்திக் தன் அண்ணியை நோக்கினான்.

" நெஞ்சில் கொஞ்சம் கூட இரக்கமில்லையா உங்களுக்கு .. நடக்கட்டும் நடக்கட்டும் .."

இதற்கு மேல் இவர்களிடம் பேசி பயனில்லை என்று எண்ணி டிவி பார்ப்பது போல் பாவனை செய்தான்.

சிறிது நேரத்தில் அவன் குடும்பத்தில் சின்ன வாண்டுகள் தவிர அனைவரும் வெளியே சென்று இருந்தனர்.

"ஏதோ ஜெனி பெருசா சாபம் விட்டுட்டா போல இன்னைக்கு கொடுத்து வைச்சது அவ்வளவு தான் "

அவன் தன்னையே நொந்தபடி பொடுசுகளுடன் டிவி பார்க்கத் தொடங்கினான்.

சரியாக இரண்டு மணி நேரம் கழித்து ரூபாவும் வீணாவும் வீட்டிற்கு பைகளுடன் வந்தனர்.

அவர்களை பார்த்து உச்சு கொட்டி திரும்பினான் கார்த்திக்

" என்ன கொழுந்தனாரே படம் பார்க்கறீங்களா .."

கார்த்திக் சற்றே கோபமான குரலில் வீணாவின் கேள்விக்கு பதிலளித்தான்.

" ஆமா ...சண்டை படம் "

" ஓஹோ நாங்க லவ் பிலிம் ஓ நினைச்சோம் "

" எங்க பார்க்க விடறீங்க..நடுவில நந்தியாட்ட நின்னுட்டு "

" ஹேன்.. ஹேன்.."

ரூபா காது கேளாதவள் போல் கேட்கவும் கார்த்திக் முனகினான்‌.

" தள்ளுங்கடா தள்ளுங்கடா ..டிவியை மறைச்சு கிட்டு"

..தள்ளி இருந்த தன் அண்ணண் மகனை வேணும் என்றே செல்ல இடி இடித்தான் கார்த்திக்.

தங்கள் கொழுந்தனாரின் வெறுப்பை ரசித்தப்படி ரூபாவும் வீணாவும் கண்களாலேயே பேசி சிரித்துக் கொண்டு சென்றனர்.

அதே நேரம் சமையலறையில் தன் மகளிடம் கடிந்து பேசிக் கொண்டு இருந்தாள் மங்கை.

" சாம்பார் வைக்க பழகு முதல.. முதலிலேயே உனக்கு சொல்லி குடுத்து பழக்கி இருக்கனும் .. எல்லாம் உங்க அப்பாவை சொல்லனும் .."

" இப்ப ஏன்மா அப்பாவை திட்டற ..இப்ப என்ன வேணும் உனக்கு .."

" பார்த்துக்க இதான் பருப்பு அளவு ..இதில இவ்வளவு தண்ணீர் விடனும் .. இரண்டு தக்காளி "

தன் தாயின் சமையல் குறிப்பை சிரத்தை இல்லாது கேட்டு கொண்டு நின்றிருந்தாள் மலர்.


" ஹான் அத்தை .. நிச்சய சேலை எடுத்துட்டோம் .. பொண்ணு வீட்டுக்கு இப்ப தான் போறோம்"

ரூபா பேசியபடியே டிப்டாப்பாக கிளம்பி வந்தாள் கூடவே வீணாவும் கிளம்பி நின்றிருந்தாள்.

அவளின் குரலை கேட்டு திரும்பிய கார்த்திக் அவர்கள் கிளம்பி நிற்பதைக் கண்டு கேள்வியோடு நோக்கினான்.

" இல்லை அத்தே பாலு அண்ணணுக்கு ஏதோ சவாரியாம் கிளம்பிட்டாரார் ..எப்படி பொண்ணு வீட்டுக்கு போறது னு தெரியலை "

அவள் பேசிக் கொண்டு இருக்கும் போதே அதை சட்டை செய்யாதது போல கடந்து போனான் கார்த்திக் ‌.

வீணா ரூபாவிடம் கேட்டாள்.

" கொஞ்சம் ஓவரா தான் போயிட்டோமா "

அவளின் கேள்விக்கு இல்லை என்பது போல் ஐந்தே நிமிடத்தில் டிப்டாப்பாக கிளம்பி வந்தான் கார்த்திக்.

தன் அண்ணிகள் இருவரும் வாய் பிளந்து நிற்க ..

" எனக்காக எல்லாம் ஒண்ணும் இல்ல .‌..தனியே ரெண்டு பேரும் கஷ்டப்படுவீங்க தான் "

அவன் கூறவும் வீணா நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள் ‌.
மூவரும் கிளம்பினர்.ரூபா மீண்டும் கார்த்திக் நினைவுப் படுத்தினாள்.

" கார்த்திக் பொண்ணு வீட்டுக்கு எல்லாம் உள்ளே கூட்டிட்டு போக மாட்டோம் .. வெளியே தான் ..மாமா ஸ்ட்ரிட் ஆர்டர் எந்த காரணத்தை கொண்டும் உன்னை பொண்ணு வீட்டுக்கு தனியா கூட்டிட்டு போக கூடாது.. அதுவும் நாங்க னா சுத்தமா கூடாது .. அதையும் மீறி தான் ரிஸ்க் எடுக்கறோம் "

" இந்த பாவப்பட்ட முகத்தை வேற பார்க்க முடியல எங்களால "

வீணா சிறிது எடுத்து கொடுக்கவும் கார்த்திக் தன் அண்ணிகள கையெடுத்து கும்பிட்டு விட்டு காரை எடுத்தான்‌.

கார் மலரின் வீட்டின் பின்புற வளைவில் வந்து நின்றது.

" பொண்ணு வெளியே வந்துச்சுனா உங்க அதிர்ஷ்டம் இல்லை னா "

வீணா மேலே கடவுளை கை காட்டி விட்டுச் சென்றாள்.கார்த்திக் தன் எதிர்பார்ப்புகளை அடக்கிக் கொண்டு காரின் வெளிப்புறம் அலைபேசியோடு நின்றிருந்தான்.


" ஏ மலர் .. பருப்பு வெந்திருச்சு ..வெளியே முருங்கை மரத்தில காய் பறிச்சுட்டு வா "

" எல்லாம் என்னையே வே வேலை வாங்கு மா "

அவள் சலிப்புடன் பறிக்கச் சென்றாள் .பக்கத்தில் இருந்த மா மரத்தில் மாங்காய் நின்றிருந்தது .

சாம்பாருக்கு மாங்காய் நல்லா இருக்குமே .. மனதிற்குள் எண்ணியவளாக காம்பவுண்ட் சுவரில் ஏறினாள் .

கார்த்திக் சத்தம் கேட்டு நிமிர்ந்தான்.மலர் யாரோ ஒரு ஆடவன் நிற்கிறான் என்பதே கூச்சம் கொண்டு திரும்ப எத்தனித்தவள் அவன் நிற்பதைக் கண்டதும் தடுமாறி கீழே விழுந்தாள்.

வாசகர்கள் அவளை பூ போல கார்த்திக் தாங்குவான் என்று நினைத்திருந்தால் அதற்கு முழுக்க முழுக்க எழுத்தாளர் பொறுப்பல்ல‌.

தன் முன் தவறி விழுந்தவளை தாங்காது ரசித்து கொண்டு இருந்தவனை பார்க்க முடியாது தலை குனிந்த படியே எழ முயற்சித்தவளை அள்ளி அணைத்து ஏந்தி சென்றான் கார்த்திக் ‌.

ரூபாவும் வீணாவும் மங்கை யிடம் பேசிக் கொண்டு இருந்தனர்.

" இருங்க இருங்க டீ கொண்டு வரேன்.. "

என்று சொல்லி டிவியை ஆன் செய்து சென்றாள்.

" இல்லை பரவாயில்லை ங்க சாப்பிட்டு தான் வந்தோம் "

அவர்கள் சொன்னது காற்றில் தான் போனது‌.

சரியாக சூப்பர் ஸ்டார் ரஜினி பட டயலாக் ஓடியது.

" அட போடா ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான் "

பீஜிம் ஓட ஓட கார்த்திக் மலரை கையில் ஏந்திக் கொண்டு உள்நுழைந்தான்‌



 
அருமையான பதிவு...

பார்டா...
கார்த்திக்கு க்கு வந்த அதிர்ஷ்டம்....
Enjoy!!!!

இத பார்த்தா எல்லார் முகமும் எப்படி போகும்?!!! :unsure: :p
 
Top