Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Anu Anuvaai Ennul Irangugiraaai 1

Admin

Admin
Member


என்னுள் ஒன்று:-

அப்டியே ஸ்க்ரீன தள்ளி கேமராவ பெருசு படுத்தி பாத்தோம்னா... அடடா இந்த வீடு புல்லா அலங்காரமா இருக்கே எதனா விசேஷமா இருக்குமோ.. எதுக்கு யோசிச்சிகிட்டு, அதெல்லாம் நமக்கு செட் ஆகாது, அதனால நான் என்ன பண்ண போறேனா உள்ள போய் பாக்க போறேன்…. நீங்களும் வரீங்களா?

ஏண்டி எட்டி பாக்கறதே தப்பு…. இதுல பாரதிராஜா படம் ரேஞ்சுக்கு அல்டாப்பு விடற பாத்தியா🤦 அத தாண்டி என்னால சகிச்சிக்க முடில

சகிச்சிக்க முடியலனா போயிட்டே இரு..

ஏய்.. நான் உன் மனசாட்சிடி

அதுக்கு??😏

உன்னலான் மதிச்சு பேச வந்த பாரு… என்னைய??

எதனா ஹெல்ப் வேணுனா சொல்லு, போன போது என் மனசாட்சியா போய்டனு செஞ்சி தரேன்..

எதுக்கு என்னை செருப்பால அடிக்கற்துக்கா??

அதே அதே…😇

என்னது… 😡😠

ச்ச..ச்ச.. நான் போய் அப்டி சொல்வேனா?? மீ க்ரீன் சேன்ட் மா….🙃😜

ஹான்… போடி நான் கோவமா போறேன்….

அச்சச்சோ…..

அப்பாடி!!! எப்டியோ போயிடுச்சி இதையே சமாளிக்க முடில இன்னும்… ம்ஹும்..

ஹி ஹி… சாரி வாங்க போலாம் (நல்ல வேள அவங்க மனசுல திட்றதுலாம் காதுல விழாது இல்லனா இந்த சூனா பானா நிலைம என்னாகிறது??)

அப்டியே அந்த வீட்டு தாழ்வாரத்த சுத்தி பாத்தோம்னா குட்டிஸ்லாம் விளையாடிட்டு இருக்காங்க… (வெறி டேஞ்சரஸ் புள்ளைக்கோ) அப்டியே உள்ளபோனா… அடங்கொக்கமக்கா!! எவ்ளோ தட்டுங்க… ஆமா? இதெல்லாம் நமக்கெதுக்கு.. நமக்கு தேவையானது அங்க தான் இருக்கும் அங்க போய் பாக்கலாம் வாங்க,

ஹா ஹா கண்டுபுச்சிட்டேன் பாருங்க… எப்புடி!!! என் திறமை… என்னது??😳😳 என்னனு உங்களுக்கு தெரியலையா?? இதோ இப்பவே காமிக்கிறேன்… பாத்திங்களா செமையா இருக்குல பாக்கர்துக்கே….. சாப்பாடுலாம்😋😋😍 (அடதீனி பண்டாரமே)

ஆமா இது யாரு ரெண்டு பேரு?? ஏதோ பேசிட்டு இருக்காங்க, என்னனு கேப்போம் வாங்க👂

ஏன் கா சோகமா இருக்கீங்க?? நல்ல நாள் அதுவுமா..

எவடி அவ… நானே இந்த பிசாசுங்கலாம் வந்து எதையாவது ஆட்டைய போற்றுமோனு பாத்துட்டு இருக்கேன்.. இதுல சோகமா இருக்கேன்னால சோகமா?? போடி அங்குட்டு…

யாருக்கா?? அந்த குட்டி வாண்டுகளையா சொல்ற..

நான் ஏண்டி அதுகள சொல்றேன், அதுங்க சமத்து... எல்லா இந்த வளந்த மாடுங்க சிலது இருக்குங்களே அதுங்களதான் சொல்றேன்… வரட்டும் இன்னைக்கு அதுங்கள ஒரு கை பாத்துடறேன்..

அய்யய்யோ😳 நம்பள தான் சொல்ராங்க போலையே… வாங்க ஓடிடலாம்.

நம்பள இல்லமா உன்ன…

ஐயோ!!! காமெடி பண்ற நேரமா இது.. அப்புறம் வர சேதாரத்துக்கு சங்கம் பொறுப்பேற்காது பாத்துக்கோங்க..

உன்கூடலான் சகவாசம் வச்சிகிட்டோம்ல, என்ன பண்றது வந்து தொலையுறோம்….

என்னடா இது இதுக்கே இப்டி மூச்சு வாங்குது…. ஓஹோ ஓடி வர வேகத்துல படிக்கட்ட பாக்காம மேல வந்துட்டோம் போலையே, அது பரவால அந்த ராணி மங்கம்மா கிட்ட இருந்து தப்பிச்சோமே அதுவே போதும்…

ஆமா இங்க ஒரு ரூம் இருக்கே… வாங்க அதுல போய் பத்திரமா ஒளிஞ்சுக்கலாம்🚶‍♀️🚶‍♀️, எப்பாடி கதவு திறந்து தான் இருக்கு.

அய்யய்யோ இவ ரூம்க்கா வந்தோம்… இப்டியே எஸ் ஆயிற்றது தான் நல்லது, பொறுமையா கால எடுத்து வைக்கணும்…

என்னங்க மோடம்… எங்க ஓட்றீங்க??

மாட்டிகிட்டோமே!!! நானா?? நான் ஏன் ஓட போறேன், அப்டியே ரூம்லாம் அழகா இருக்கேன்னு சுத்தி பாத்துட்டு இருந்தேன்…(என்னைக்கும் நம்ப கெத்த விற்றக்கூடாது டா கைப்புள்ள… மெய்ட்டேன் பண்ணு)

யாரு நீ?? சுத்தி பாத்துட்டு….. நம்பிட்டேன்!!!

உண்மையாவே பா…

ஏய்!!! பிராடு, நீ யாருனு எனக்கு நல்லாவே தெரியும்… மரியாதையா ஓடிடு, நீ ஓட்ன வரைக்கும் போதும் இனி நான் பாத்துக்குறேன்…

சரி வாங்க நம்பெல்லாம் போலாம்☹

ஏய்.. ஏய் நான் உன்ன மட்டும் தான போக சொன்ன, அவங்கள இல்ல… சாரி இவளால உங்களலானம் கூப்புட்றதுக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சி…

வணக்கம் 🙏 எல்லாரும் வாங்க! வாங்க! ஏன் நின்னுட்டே இருக்கிங்க உக்காருங்க… இது உங்க வீடு மாதிரி.. நானும் உங்க வீட்டு பொண்ணு மாதிரி ஓகே… நீ இன்னும் கெளம்பலையா??? 😡

இதெல்லாம் ஓவரு, அப்புறம் பாத்துக்கோ சொல்லிப்புட்டேன்…

அந்த வெண்ணையெல்லாம் நாங்க பாத்துக்குறோம் முதல கெளம்பு….

முறைக்குறாளே.. எதனா பண்றதுக்குள்ள ஓடிடுவோம், பாய் பிரண்ட்ஸ்…

யார் பெற்ற மகளோ நீ யார் பெற்ற மகளோ???

ஹான் இன்னும் இப்டியே பாடிட்டு சுத்தன…. அப்டி ஒருத்தி இருக்கவே மாட்டா பரவலயா….

……….,

என்னடா இதுங்க ரெண்டும் இப்டி சண்டை போட்டுக்கராங்களே பாக்கறீங்களா… ‘நண்பேன்டா’ அந்த மாதிரி தான் நாங்க, சோ அதெல்லாம் கண்டுக்காதீங்க…

அச்சோ நான் யாருனு சொல்லல பாருங்க,

நான் ‘கனலழகி’... எனக்கு 26 முடுஞ்சு வர டிசம்பர் வந்தா 27 ஆக போது.. சோ எல்லா பெத்தவங்களும் சொல்ற அதே விஷயம் தான்…

உங்கள பலர் கேட்டு இருப்பீங்களே, உன்ன கரை சேத்துட்டோம்னா எங்க கடமை முடுஞ்சிடும்.. பொம்பள புள்ளைய எவ்ளோ நாள் வீட்ல வச்சிக்க முடியும்.. (மாமியார் வீட்டுலாம் காடா இருக்குமோ)

எனக்கு என்ன ஒரு டவுட்னா, நம்பலாம் கட்டு மரக்கப்பலா என்ன?? கரை சேத்து கட்டி வைக்க….

இத கேட்டா நம்பள… அதிகப்பிரசங்கி, வாயாடி, அப்புறம் பொம்பள புள்ள ஒழுங்கா அடக்க ஒடுக்கமா பேசுசனும், அடுத்தவங்க வீட்டுக்கு வாழ போறவ,,,, ஊஃப் இப்படிலாம் பல காமக்கள்……

இதெனால நான் சொல்ல வரது என்னனா… இவ்ளோ பேசியும் எங்க அம்மா அதாங்க அந்த ராணி மங்கம்மா எனைய கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிட்டாங்க… அதாகப்பட்டது அவங்க கடமைய முடிக்குறாங்களாம்…. அதனால இன்னைக்கு எங்க வீட்லையே பொண்ணு பாத்துட்டு, ஒப்பு தாம்பூலம் மாத்த போறாங்கலாம்.

நாங்கெல்லாம் அப்டி விட்ருவோமா என்ன?? த்ரிஷா இல்லனா நயன்தாரா!!!! அம்மா இல்லனா புருஷன்…. (சிங்கம் சிக்கிடுச்சே…)

சில்லி கேர்ள்😏..(என் அம்மா தான்) பாத்துடுவோம் அவங்களா?? நானானு???😉

அடுத்த பதிவில்……

நேசம் உயிர்க்கும், அணுவணுவாய்
jothika.jpg
 
Attachments

Kalaiyarasi

Active member
Member


படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க... அண்ட் லேட்டா போட்டதுக்கு மன்னுச்சு 🙏 டைப்போ மிஸ்டேக் இருக்கும்னு நினைக்கிறேன்.. அடுத்த பதிவில் இருந்து வராம பாத்துக்குறேன்....
உங்க கனலை பத்தி முடுஞ்சா ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க......

நன்றியுடன்
கே.கே
 
Last edited:
Advertisement

Advertisement

Top