Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

9. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
செல்வி நீ பணத்தை எடு, அந்த கடைசி ரூம்ல யாரோ இருக்குற மாதிரி இருக்கு அதனால நான் போய் யாரும் வர்றாங்களான்னு பாக்குறேன். நீ சீக்கிரம் எடு போ போ....

நானும் பணத்தை எடுத்துட்டு வெளியே வந்தேன். ஆனா...

என்ன ஆனா... சொல்லித்தொல...

ஆனா வெளிய நின்னவன ரொம்ப நேரம் ஆளயேக் காணோம் ப்பா. நானும் சுத்தி தேடி பார்த்தேன். சரி போய் கடைசி ரூம்ல பார்ப்போம்னு நா திரும்பின சமயம் அவனே வந்துட்டான்.

வந்தவன் செல்வியிடம்,

என்ன செல்வி எடுத்துட்டயா..

ம்ம் எடுத்துட்டேன்.

சரி சரி சீக்கிரம் பணத்தை என்கிட்ட குடு. நீ முன் வாசல் வழியா வெளிய வந்துரு. நான் இப்பிடியே வந்த வழியாவே போறேன். ம்ம் போ.

அப்போ பணம்.

உங்க வீட்டுக்கு பின்னாடி வெயிட் பண்ணு நான் வரேன்.

ம்ம் சரி சீக்கிரம் வந்திடு.

அவள் கீழே இறங்கி வரும் போது தான் சுமதி பார்த்து எப்போ வந்த செல்வி என்று கேட்டது. திமிராக பதில் சொல்லிவிட்டு அவளது வீட்டிற்கு சென்று காத்திருந்த செல்வி, அவன் வந்ததும் பணத்தை வாங்கி கொண்டு அவனுக்கும் சில கட்டுகளை கொடுத்து விட்டு மீண்டும் அவளது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அதுவரை சொல்லி முடிக்க, வேலன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க கடுகடுவென நின்றிருந்தார்.

உன்ன பெத்ததுக்கு நல்லா திருட்டுத்தனம் பண்ணியிருக்க செல்வி. அந்த இத்துப்போன களவாணிப் பய இல்லையின்னா நீ செத்திருவியோ.

செத்துத் தொல. சொந்த வீட்டுக்கே துரோகம் செஞ்ச நீ உசுரோட இருந்து என்னத்த சாதிக்க போற. உங்க அண்ணன் பண்ண துரோகத்துக்குத் தான் இப்போ உசுரோட இல்ல. இப்போ நீயும் அதே துரோகத்தை தான் பண்ணியிருக்க, உன் உசுரும் எப்போ போகப்போகுதுன்னு நான் பயந்து பயந்தே செத்து போறேன்.

ஆற்றாமை தாங்காமல் வேலன் வெடித்துக் கொண்டிருக்க, சித்தன் ஐயா தான் அவரை சமாதானப்படுத்தி கோவிலுக்கு கிளம்ப வைத்தார். அழுது வடித்தபடி செல்வியும் கிளம்ப,

அதுவரை வெறும் பார்வையாளராக இருந்த செல்வியின் அம்மா பத்மா ஒரு ஓரமாக நின்றிருந்த தனாவின் காலிலேயே விழுந்து விட்டார்.

ஐய்யோ அத்தை என்ன இது எந்திரிங்க.

இல்லப்பா தனா.. இவ சுமதிக்கு எவ்வளவோ தப்பு பண்ணியும் சுமதி ஒரு வார்த்தை கூட இவள எங்ககிட்ட சொன்னதே கிடையாது. விட்டுக் கொடுத்து தான் போவா. இப்போ அங்க வீட்டுல பணம் எடுத்தது தெரிஞ்சும் நீ இவ உசுர காப்பாத்த நடுராத்திரின்னும் பார்க்காம ஒடியாந்த. உங்க பெருந்தன்மை நான் பெத்த ரெண்டுக்கும் இல்ல. அவங்களை பெத்ததுக்கு நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் தனா.

ஐயோ அத்த, நீங்க போய் என்கிட்ட...

வேணாம் அத்த. அம்மா அப்பா யாருமில்லாம நின்னப்ப நீங்க தானே குடும்பத்தையே பாத்துக்கிட்டீங்க. நீங்களும் எங்களுக்கு அம்மா தான் அத்த, மன்னிப்பு கேட்டு என்ன தூர நிறுத்தாதீங்க.

ஆமாம்மா.. அந்த பிள்ளைகளுக்கு இப்போ துணையிருக்க வேண்டியது ரொம்ப அவசியம். மேலும் மேலும் பேசாம சீக்கிரம் கிளம்பி வாங்க கோயிலுக்கு போகனும்.

எல்லோரும் தனாவின் வீட்டிற்கு சென்று பின் கோவிலுக்கு கிளம்பிச் சென்றனர்.

ஆனால் நேற்று பணத்தை வாங்கிவிட்டு சென்ற அவன்... நேராக சென்று நின்றது டாஸ்மாக் கடை தான். மூக்கு முட்ட குடித்து விட்டு மீதி பணத்தை அவன் அம்மாவிடம் தூக்கி எறிந்து சண்டையிட்டவன் அப்படியே மட்டையாகியும் போனான். பணம் எப்பிடி வந்தது என தெரியாமல் புலம்பிய அவனது தாயோ, காலை கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்.

இங்கு தனாவின் வீட்டில் ரகளையை உண்டாக்கி விட்டு அளவுக்கு மீறிய போதையில் குப்புற படுத்து குறட்டை விட்டுக் கொண்டிருந்தவனின் வீட்டின் முகட்டை பிடித்த படி வந்து அமர்ந்தது அந்த உருவம்.

படுத்து கிடந்தவனையே பார்த்துக் கொண்டிருந்த உருவம் அவனின் கழுத்தில் கைவைக்கும் சமயம் தான் மீண்டும் சித்தன் ஐயா மந்திரத்தை உச்சரித்து அந்த உருவத்தை வரவழைத்தார்.

வந்த உருவம் அவர்களின் செயலைக் கண்டு அதிர்ந்து கூவியது. சித்தன் மந்திரத்தை நிறுத்த பெருங் கோபத்துடன் வீட்டிற்கு வெளியே உலாவிய உருவம்.... அதீத கோரத்துடன் விட்டுச்சென்ற அவனின் வீட்டிற்கே மீண்டும் சென்றது.

ஏற்கனவே இருக்கும் கோர உருவமைப்பு இன்று இன்னும் அதிகமாக இருக்க, குப்புற கிடந்தவனை விரலசைவில் திருப்பி அவனின் தொண்டைக்குழியில் அதன் அழுகி தொங்கிய முகத்தை வைத்து அழுத்த, துடித்து துடித்து அடித்துக் கொண்ட அவனின் உருவம் மெல்ல உயிரை இழந்தது.

அவன்... அவன் தான் திருவின் நண்பன்... திருவை பணத்தை எடுக்கச் சொல்லி தூண்டிவிட்ட செல்வியின் காதலன் முகுந்தன்.

முகுந்தனின் உயிரை உரிஞ்சிவிட்டு இன்றைய தனாவின் முயற்சிகளை தாண்டி அதற்கு கிடைத்த இரத்தச் சுவையில் எக்காளமிட்டு சிரித்தது... அந்த உருவம் அங்கிருந்த மரத்தின் உச்சியில் தொங்கியபடி.

இங்கு கோயிலுக்கு சென்றவர்கள் திருவிற்கு காரியத்தை முடித்து எண்ணெய் ஊற்றி அவனின் ஆன்மா அமைதியடைய வேண்டிக் கொண்டனர்.

சுமதி கடவுள் திருமேனியை பார்த்தபடி திடமாக நின்றிருந்தாள். பிள்ளைகளையும் தனாவையும் பார்த்தவள், தனாவை கை நீட்டி அழைத்தாள்.

என்னக்கா..

கேக்கணும்னு தோணுதுடா அதனால தான் கேக்குறேன்.

சொல்லுக்கா..

எக்காரணத்தைக் கொண்டும் இப்போ நடக்குற பிரச்சனையில உன் உயிரை பணயம் வைக்கவே கூடாது. சத்தியம் பண்ணு.

அக்கா...

பண்ணு தனா..

முடியாது க்கா..

ஏன் முடியாது...

...

நீ நெறயா கஷ்டத்தை அனுபவிசுட்ட டா. இந்த பிரச்சனை நல்லபடியா முடியும்னு சித்தன் தாத்தா சொல்லிருக்காரு. ஆனா ஏதாவது ஒரு சூழ்நிலையில உனக்கு ஆபத்து வர்ற மாதிரி இருந்தா அப்போ நீ இதுல இருந்து விலகிடனும்.

அக்கா...

ஆமா.. நீ விலகிடனும். அடுத்து என்ன வந்தாலும் அதை நான் பார்த்துக்கிறேன். அதுல என் உயிரே போனாலும் சரி.

அக்...

ம்ம்.. நீ வாழணும் தனா. உன்ன நம்பி தான் குழந்தைகள் இருக்கு.கொஞ்ச வயசுலயே வாழ்கையை இழந்த ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. நான் போனாலும் நீ பிள்ளைகளையும் அவங்களையும் சந்தோசமா பார்த்துகிடுவ. எனக்கு நம்பிக்கை இருக்கு.

புரிஞ்சு நடந்துக்கோ தனா. இப்போ வா போலாம்... என அவனின் கையை பிடித்து அவனின் அக்காவாக நடையிட்டாள் சுமதி.

அக்காவை அன்பாய் பார்த்து இறுக்க கை பற்றியவன் புது தெம்பு கிடைத்தது போல் சந்தோசமாக அந்த கோயிலில் இருந்து கிளம்பினான்.

இவர்களின் பேச்சு வார்த்தையை கேட்டுக் கொண்டிருந்த சித்தன் ஐயா இருவரையும் ஓர் பாச உணர்வுடன் பார்த்து, தனக்கு இப்படி ஒரு பணியை கொடுத்து அன்பு மிக்க குடும்பத்தை கொடுத்த அந்த இறைவனுக்கு நன்றி கூறி, என்றும் இவர்கள் ஆனந்தமாக இருக்க வேண்டிக் கொண்டார்.



ஆனால் இவர் நினைப்பது நடக்குமா என்ன????


விடை தேடி பயணம் தொடரும்....
Prabhaas...
 
Top