Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

8. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
அந்த உருவம் சொன்ன அந்த ஒருத்தர் யாருன்னு நாளைக்கு தான் நமக்கு தெரியும். வா தனா வீட்டுக்கு போகலாம். பிள்ளைங்க தனியா இருப்பாங்க.

ம்ம். இதுக்கு வேற வழியே இல்லையா தாத்தா.

ம்கூம். வேற வழி இல்ல தனா. பார்க்கலாம் என்ன தான் நடக்குதுன்னு.

சரிங்க வேலன் அப்போ நாங்க புறப்படுறோம். நீங்க நாளைக்கு உங்க பையன் திருவோட காரியத்துக்கு கோவிலுக்கு போய்ட்டு வந்ததுக்கு அப்புறம் சீக்கிரமா அந்த கையேட்டை படிக்கணும். எனக்கு என்னமோ இன்னும் நமக்கு நிறைய சவால் இருக்கும்னு தோணுது. நாளைக்கு தான் என்னன்னு தெரியும். ம்ம்... நமசிவாய வாழ்க. வாங்க போகலாம்.

வேலனிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு வர, சுமதி அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தாள்.

அக்கா.. ஏன்க்கா இப்பிடியே உக்காந்திருக்க.. தூங்கியிருக்கலாமே.

எப்பிடிடா தனா தூங்குறது. நம்ம வீட்டுக்கு இவ்வளவு பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் எப்பிடிடா நிம்மதியா தூக்கம் வரும்.

அக்கா கவலப்படாத. எல்லாத்துக்கும் முடிவு இருக்குது. நாளைக்கு அப்பா குடுத்து வச்ச அந்த கையேட்டை படிச்சதுக்கு அப்புறம் வேலன் மாமாவோட நண்பன் சொன்ன இடத்துக்கு போகனும் க்கா. உங்களுக்கு துணையா சித்தன் தாத்தா இருப்பாரு. நானும் மாமாவும் எப்படியாவது அந்த இடத்துக்கு போய் பிரச்சனைக்கான தீர்வை கண்டுபிடிச்சிட்டு தான் வருவோம்.

ஆனா, அதுக்கும் முன்னாடி அந்த உருவம் சொன்ன ஆள் நம்ம குடும்பத்தை சேர்ந்தவரா இருக்க கூடாதுங்குற பயம் தான் இருக்கு. எங்க மறுபடியும் யாராவது இறந்து, அந்த இடத்துக்கு போகும் நாள் தள்ளி போய்ட்டா ரொம்ப சிக்கல் அக்கா.

சரி தான் தனா.. பார்க்கலாம் காலைல என்ன தான் நடக்குதுன்னு. இப்போ போய் நீங்க ரெண்டு பேரும் தூங்குங்க என சித்தன் ஐயா இருவரையும் கீழிருந்த அறைக்கே அனுப்பி வைத்தார்.

சுமதிக்கு தூக்கம் வர மறுத்தது. என்ன தான் கணவன் இறந்த துக்கத்தை மறக்க நினைத்து பிள்ளைகளுக்காக தன்னை நிலைப்படுத்தி கொண்டாலும் அவன் நினைவு வருத்திக் கொண்டு தான் இருக்கிறது. இன்று கணவனின் இறப்பிற்கான காரணமும் தெரிய, ஒருவேளை நீங்க அந்த பணத்தை எடுக்காம இருந்திருந்தா நீங்களும் நானும் நம்ம பிள்ளைகளோட சந்தோசமா இருந்திருக்கலாம். தேவையில்லாம பணத்துக்கு ஆசைப்பட்டு இப்பிடி உயிரையே விட்டுட்டீங்களே.

மனதினில் வெம்பி தவித்தவள், இனி என்ன நடந்தாலும் சரி தம்பிக்கு துணையாக எதுவந்தாலும் எதிர்த்து நிற்க துணிந்து விட்டாள். நாளைக்கு கோவிலுக்கு போய் வந்ததும் அந்த செல்விய சும்மா விடக்கூடாது. என்னால குடும்பத்துல சண்டை வரக்கூடாதுன்னு தான் அவ எவ்வளவு செஞ்சாலும் பொறுத்து பொறுத்து போனேன். ஆனா அவ, சொந்த அத்த வீட்டுக்கே துரோகம் பண்ணுறா. நாளைக்கு இருக்கு அவளுக்கு என்று நினைத்தபடியே நெடு நேரம் சென்று உறங்கிபோக

தனாவோ கடவுளே நாளைக்கும் ஒரு தடங்கள் வந்து நாங்க போக வேண்டிய பயணத்தை தடுத்திடாம நீங்க தான் பாத்துக்கிடணும். உங்களை மட்டும் தான் நம்பி இருக்கேன். நீங்க தான் எனக்கு துணையிருக்கணும். கடவுளே..... என்று அசதியில் அவனும் தூங்கி போனான்.

ஆனால் அந்த உருவம் அது சொன்னபடியே அதன் பலியை எடுத்துக்கொண்டு, எக்காளமிட்டுச் சிரித்தபடி தனாவின் வீட்டின் முன் உள்ள மரத்தின் உச்சியில் அதன் அழுகிய உடலை படர்த்தி ஒய்யாரமாய் அமர்ந்திருந்தது.

இன்றைய பொழுது உனக்காக நிறைய காத்திருக்கிறது என்பதை போல விடியற்காலை எல்லோரும் எழுந்ததே அந்த இறப்பு செய்தியை கேட்டுத் தான். தனா, சித்தன் ஐயா, சுமதி என எல்லோருக்கும் அதிர்ச்சி உச்சந்தலையில் அடித்தது. ஒரு வேளை இது அது தானோ என எல்லோரும் நினைத்து வெளியே வந்த நேரம், வேலன் வேக வேகமா ஓடி வந்தார்.

என்னா மாமா என்னாச்சு.... ஏன் இவ்வளவு வேகமா ஓடிவறீங்க.

அங்க செல்வி ஒரே அழுக தனா. ஐயோ என்னால தான் அவன் செத்துட்டான். நானும் இப்போ சாக போறேன். அவன் இல்லாம நான் இருக்க முடியாதுன்னு தூக்கு மாட்டிக்க போய்ட்டா தனா.

ஐயயோ என்ன மாமா. அப்போ நேத்து அவனும் இங்க வந்திருந்தானா.

என்னன்னு தெரியல தனா. வேற எதுவும் அவ சொல்ல மாட்டேங்குறா. நீங்க உடனே வாங்க. ஐயா நீங்களும் கொஞ்சம் வாங்களேன்.

வாங்க வேலன் போகலாம். அம்மா சுமதி நீ கோவிலுக்கு போக தயாராகி பிள்ளைகளையும் தயாராக்கு. இன்னிக்கி நீங்க கோவிலுக்கு போக வேண்டியது ரொம்ப முக்கியம். நாங்க போனதும் என்னன்னு பார்த்திட்டு எல்லாரையும் கூடவே கூட்டிட்டு வந்திடுறோம்.

ம்ம் சரிங்க தாத்தா.

வேலன், தனா, சித்தன் ஐயா மூவரும் வீட்டிற்குள் நுழைய செல்வி அவளது அம்மாவிடம் சண்டையிட்டு வெளியே ஓட தயாராக இருந்தாள்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த சித்தன், வேலன் காதில்.. இதை சாதாரணமா விடுறது தப்பு. ம்ம் என்று தலையை அசைக்க, உள்ளுக்குள் மகள் மேல் பாசம் இருந்தாலும், இனி அவளை அவள் போக்கிலே விட்டால் குடி கெட்டுவிடும் என யோசித்து அவளை நோக்கி முன்னேறினார்.

பளார்.... பளார் என,

வேலன் விட்ட அறையில் பம்பரமாய் சுழன்ற செல்வி சுவற்றில் போய் தான் தஞ்சமடைந்தாள். நானும் பாத்துட்டு இருக்கேன் என்ன ரொம்ப துள்ளுற. செய்யுறது எல்லாம் கோட்டித்தனமா செஞ்சிட்டு, இப்போ சாக போறேன் சாக போறேன்னு சொல்லுற, போ போய் அவன் வீட்டு முன்னாடி நின்னு சாவு. இப்போ சொன்னையே அதே வார்த்தைய வரி மாறாம ஊரு சனம் கூடியிருக்கும் அந்த வீட்டு முன்னே போய் நின்னு சொல்லு.

உன்ன பெத்ததுக்கும், நீ செஞ்ச பாவத்துக்கும் ஊரே எம்மூஞ்சில காரித்துப்பட்டும். ஒரே மவ ஒரே மவன்னு நீ செய்யுறதெல்லாம் சகிச்சுக்கிட்டு போனா... நீ எவன் கூடயோ சேர்ந்து என் தங்கச்சி வீட்டுலயே திருடுவியா.

ம்ம், ஒழுங்கா மருவாதயா சொல்லிபுடு நேத்து அங்க என்ன நடந்துச்சு.

நேத்து நடந்ததை அப்படியே கூறியதோடு மட்டுமல்லாமல், இதுவரை அடித்திடாத, அவளின் அப்பா அடித்த அடியை தாங்காமல் நின்று கொண்டிருந்த செல்வி, வேலன் விட்ட மிரட்டலில்,

தயக்கத்தோடு நின்றிருக்க, வேலன் முறைத்த முறைப்பில்,

ஆமா ப்பா.. நேத்து நானும் அவனும் அத்தை வீட்டுக்கு போயிருந்தோம். அவன் பின் வாசல் வழியா தான் வந்தான். ஏற்கனவே அண்ணன் அங்க பணம் எடுத்த விஷயம் எனக்கு தெரியும். ஆனா அது எங்க இருக்குன்னு எனக்கு தெரியாது. முந்தாநாள் தான் அவன் என்கிட்ட சொன்னான்.

உங்க அத்த வீட்டுல பணம் எங்க இருக்குன்னு எனக்கு நல்லா தெரியும். வா ரெண்டு பேரும் போய் எடுத்திட்டு வந்திடுவோம். உங்க அண்ணன் எடுத்த பணத்தையே அந்த தனா பையன் கண்டுபிடிக்கல. இதுல, இதை வேற அவன் எங்க கண்டுபிடிக்க போறான். வா நாம யாருக்கும் தெரியாம எடுத்துட்டு வங்திடுவோம்னு கூட்டிட்டு போனான்.

நான் பணத்தை எடுக்க தனா ரும்குள்ள போனப்ப, அவன் அந்த கடைசி ரூம்ல யாரோ இருக்குற மாதிரி இருக்கு, நீ பணத்தை எடு நான் போய் யாருன்னு பார்க்குறேன்னு போனான்.

ஆனா....

என்ன ஆனா.....



விடை தேடி பயணம் தொடரும்......
Prabhaas....
 
அருமை, வித்தியாசமான முயற்சி.
திகில் தொடர் எழுத ரொம்ப தைரியம் வேணும். அதே சமயம் நிறைய ஆய்வு கட்டுரைகள்தேடி பிடித்து ஆராய வேண்டும், எழுத்தாளர் முயற்சிக்கு பாராட்டுகள். ?
 
அருமை, வித்தியாசமான முயற்சி.
திகில் தொடர் எழுத ரொம்ப தைரியம் வேணும். அதே சமயம் நிறைய ஆய்வு கட்டுரைகள்தேடி பிடித்து ஆராய வேண்டும், எழுத்தாளர் முயற்சிக்கு பாராட்டுகள். ?
Thank you so much ?
 
Top