Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

6. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
அந்த உருவம் கூறிச் சென்ற வார்த்தையை பற்றி யோசித்துக் கொண்டிருந்த சித்தன் பட்டென்று யோசனை தோன்றவும் தனாவை கூட்டிக் கொண்டு மீண்டும் அந்த கடைசி அறைக்கு சென்றார்.

ஒரு கையில் நாதன் பாதுகாப்பிற்கு குடுத்த மாலையையும், மற்றொரு கையில் தனாவையும் பிடித்தவர், அதிக சத்தத்துடன் சிவ மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே அந்த கடைசி அறையின் உள்ளே நுழைந்தார். அறையின் மையத்திற்கு வந்ததும் இன்னும் ஆவேசமாக மந்திரத்தை உச்சரிக்க, படாரென்று அந்த உருவம் அவர்கள் முன் வந்து நிற்க,

தனாவிற்கு அத்தோடு அவன் இதயத் துடிப்பே நின்று விடும் அளவிற்கு பயம் நெஞ்சை அடைத்தது. அதீத பயத்தில் வியர்வை சுரப்பிகள் அளவுக்கு அதிகமாக சுரக்க, மொத்தத்தில் பயத்தில் வியர்வையில் குளித்தவன் போல தான் அங்கு நின்றிருந்தான்.மேலும் மேலும் மந்திரத்தை உச்சரித்த சித்தன் அவ்உருவத்தை பார்த்தபடியே தனாவின் கையை பிடித்து அந்த உருவத்தை நோக்கி முன்னேறினார். ஏற்கனவே பயத்தில் இருந்தவன், இப்போது இன்னும் பயத்தில் தாறுமாறாக நடுங்கிக் கொண்டிருந்தான்.

ஆனால் அதற்கு மாறாக இவர்கள் முன்னேற முன்னேற, அந்த கொடூர உருவமோ பின்னோக்கி அதன் உடலை நகர்த்திச் சென்றது. ம்கூன்... ம்கூன்... என ஒருவித நாராச உருமலுடன் பின்னோக்கி சென்ற அந்த உருவம் சித்தன் ஐயா மந்திரத்தை நிறுத்திய நேரம் பெரும் சத்தத்தோடு மீண்டும் காணாமல் போனது.

தனாவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தான். இப்போது நடந்த சம்பவம் உண்மைதானா? சற்று முன் என்னை கொல்லப்பார்த்த உருவம் இப்போது ஏன் பயந்து போய் ஓடியது என குழப்பம் வேறு அவனை ஆட்கொள்ள, சித்தன் ஐயா வெற்றிச் சிரிப்புடன் தனா வா கீழ போகலாம். இனி வெற்றி நம்ம பக்கம் தான்.

அவரையும் குழப்பத்துடன் பார்க்க, கீழ வா நான் எல்லாத்தையும் சொல்லுறேன்.

ஏன் என்ற கேள்வியுடன் சித்தன் ஐயாவையே அவன் பார்த்துக் கொண்டிருக்க, சுமதியும் என்ன நடந்தது என அறிய தனாவையும் சித்தன் ஐயாவையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சாமி அறையில் வீற்றிருந்த எல்லா படங்களையும் பார்த்துக் கொண்டிருந்தவர், உன்கிட்ட வேலன் நண்பன் குடுத்த ருத்ராட்சம் எங்க தனா.

அது.. தாத்தா.. ஆங்.. ரூம்ல சட்டைய மாத்தும் போது இந்த சட்டையில எடுத்து வைக்க மறந்துட்டேன் தாத்தா.

ம்ம்... என தனாவிடம் திரும்பி, அந்த உருவம் உன்ன கொல்ல வரல தனா.

என்ன?? என ஆச்சர்யமாய் பார்க்க.

ஆமா. அது உன்ன கொல்ல வரல. உன்னை பயமுறுத்தி தான் பார்க்க வந்திருக்கு. அது உன்னை தொட வந்தது நிஜம். ஆனால் அதை மீறி அந்த உருவத்தை நேரா பார்த்து நீ அதை தொட்டிருந்தா, இங்க கதையே வேற.

என்ன தாத்தா சொல்லுறீங்க.

ஆமா தனா.. நல்லா யோசிச்சு பாரு. உனக்கு எதுவும் ஆகாதுன்னு உங்க அப்பாவுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கு.

என்ன பார்க்குறீங்க... அப்படி இல்லாத பட்சத்தில் வீட்டுல நீங்க அண்ணன் தம்பி மூனு பேரும் இருக்க, ஏன் என் கடைசி புள்ள மட்டும் ரொம்ப கஷ்டபட போறான். அவனுக்கு உதவியா இந்த கையேட்டை சேர்த்திடுங்கன்னு என்கிட்ட எதுக்கு சொல்லணும்.

ஏன்னா உன்கிட்ட ஏதோ ஒன்னு இருக்கு தனா. அதுவும் இந்த ஆறு மாத காலத்துக்குள்ள. அதுனால தான் குறிப்பிட்ட இந்த நாள்ல தான் உன்ன வந்து பார்க்க சொன்னதும்னும் எனக்கு தோணுது.

அது மட்டுமில்ல உன்னை கொல்லனும்னா எதுக்கு இத்தனை நாள் அந்த உருவம் காத்திருக்கனும். அடுத்தடுத்து உன் அண்ணனுங்க இறந்ததுமே உன்னையும் கொலை பண்ணிருக்கலாம் தானே. எதுக்காக விட்டு வைக்கணும். ஏன்னா உன்னை ஏதோ ஒன்னு பாதுகாக்குது.

நீ கத்திக்கிட்டு இருக்கும் போது அந்த உருவம் என்கிட்ட என்ன சொல்லிட்டு போச்சு தெரியுமா?

இப்போ இந்த நேரம் எனக்கான பலி தயாரகிடுச்சு. அதை உன்னால தடுக்க முடியாது. பலியானவனை வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும்னு சொல்லுச்சு.

பலி தயாரகிடுச்சுனு சொல்லுச்சே தவிர, உன்ன கத்த விட்டதை விட வேற எதுவும் பண்ணலயே. இப்போதைக்கு உன்னை இங்க பயமுறுத்தி அசையாம வச்சுட்டு, அது வேற ஒருத்தரை தானே குறிப்பிட்டுச்சு. அதான் எல்லாத்தையும் யோசிச்சு நான் ஒரு முடிவு பண்ணி தான் மறுபடியும் உன்ன அந்த அறைக்கு கூட்டிட்டு போனேன்.

என் கணிப்பு சரியாகிடுச்சு. ஆனா அந்த இன்னொரு பலி யாருன்னு தெரிஞ்சா தான் நாம அவங்களை காப்பாத்த முடியும்.

ம்ம் நல்லா யோசி தனா. அந்த உருவத்துகூட சம்மந்த பட்டவங்க இன்னும் யாராவது இருக்காங்களா?

ஆஆ.... ஐயோ தாத்தா இதுவரை நீங்க சொன்னதை நினைச்சாலே எனக்கு ரொம்ப பயமாவும் ஆச்சர்யமாவும் இருக்கு. அப்படியிருக்க இன்னும் யோசிக்க சொன்னா என்னால முடியல தாத்தா முடியல.

ஆறுதலாய் அவன் கேசம் கோதிய சித்தன். பயப்படாத தனா. உன்கூட நான் இருக்கேன். இன்னும் உன்னோட இந்த போராட்டத்துல நீ பார்க்க வேண்டியது நிறைய இருக்கு. ஆனா இப்போ வேற வழியில்ல நீ யோசிச்சு தான் ஆகனும்.

ம்ம் சரி தாத்தா.

அதுவரை இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த சுமதி சித்தன் ஐயா கடைசியாக கூறியதை கேட்டதும் தனாவிடம்,

தனா ஒன்னே ஒன்னு மட்டும் எனக்கு தெளிவுபடுத்து. உங்க மாமா எதனால இறந்து போனார்.

இப்போ எதுக்கு அக்கா.

நீ சொல்லு. இப்போ அது தான் ரொம்ப அவசியம்.... அவசரமும் கூட..

அது வந்து... நம்ம வீட்டுக்கு வந்ததினால தான் க்கா.

ப்ச்.. தெளிவா சொல்லு தனா.

நான் ஊருக்கு போன சமயம் நம்ம வீட்டுல பணத்தை எடுத்துட்டு அந்த உருவம் இங்க வந்ததுக்கான அந்த பொருளை தொட்டுட்டார் க்கா.

நிச்சயமா இது தான் உணமையா? உனக்கு எப்பிடிடா இது தான்னு தெரியும்.

ஏன்னா நம்ம வீட்டுல எல்லாரும் இறந்து போனது வேற வேற இடத்திலயா இருக்கலாம். ஆனா இறந்து போனதுக்கான காரணம் எல்லாமே ஒன்னு தான். அதை வச்சு தான் சொல்லுறேன்.

ஓ.... அப்போ அந்த பணம் இங்க இருந்து வந்தது தானா.

அப்போ.... அந்த இன்னொரு பலி அவங்களா கூட இருக்கலாம் தனா...

யாருக்கா?


யார் அந்த அடுத்த பலி...



விடை தேடி பயணம் தொடரும்......
Prabhaas...
 
Top