Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

5. விழிமயங்கும் இரவு

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
நண்பர்கள் இருவரும் வெகுநேரமாகியும் சுற்றம் அறியாது அளவளாவி கொண்டிருக்க, கடுவன்களின் சிரித்த முகத்தை பே வென பார்த்துக் கொண்டிருந்தாள் கீர்த்தி..... பேச்சின் ஊடே சற்று திரும்பிய முகுந்த் அப்போது தான் அறையையும் தங்களையே பார்த்துக் கொண்டிருக்கும் கீர்த்தியையும் உணர்ந்தான். கீர்த்தியை கண்டதும் முகத்தில் இருந்த புன்னகை மறைந்திருக்க மீண்டும் முகம் இறுக்கமாக மாறியது. முகுந்தின் இறுக்கம் ஏன் என்று புரியாமல் அவனின் பார்வை சென்ற திசையை பார்த்த மிதுன் அப்போது தான் கீர்த்தியை கண்டான். ஏனோ கீர்த்தியையும் அவளின் நிலையையும் கண்ட மிதுனிற்கு தன் தாயின் நினைவு தான் வந்தது. கடுமையான முகத்துடன் செவிலியரிடம் சில பல கட்டளைகளை சொல்லிவிட்டு, கண்களில் நீர் திரையிட கீர்த்தியையே பார்த்துக் கொண்டிருந்த மிதுனை வேகமாக இழுத்துக் கொண்டு தனது அறைக்குள் நுழைந்தான் முகுந்த். நண்பனின் மாற்றம் ஏன் என்று புரிந்த முகுந்த் ஆதரவாய் நண்பனை அணைத்துக் கொள்ள நண்பனின் அரவணைப்பில் கண்ணீர் மல்க தாயின் நினைவில் மூழ்கி இருந்தான் மிதுன். மிதுனின் தாய் தேவிகா உடல்நிலை சரியில்லாமல் பல நாட்கள் மருத்துவமனை படுக்கையில் அவதிப்பட்டு உயிரை விட்டவர். தீரா நோயில் பல்வேறு உபகரணங்களின் மத்தியில் உடல் மெலிந்தபடி போராடிக் கொண்டிருந்த தேவிகாவை காண மிதுனை அழைத்துச் சென்ற போது அவன் அழுத அழுகை சொல்லில் அடங்காது. அம்மா அம்மா என்று தேவிகாவை சுற்றி வந்த பருவ வயது மிதுன் தேவிகா இறந்ததும் பித்து பிடித்து தான் போனான். இறக்கும் நேரத்தில் அத்தனை வலி வேதனையிலும் மிதுனை கண்டு தேவிகா செய்த புன்னகை இன்னும் அவன் கண்ணை விட்டு மறையவில்லை என்பதே உண்மை. அன்னையின் பிரிவில் ஏங்கிய மிதுன் தங்கையின் நிலையை கண்டு தான் தன்னை மீட்டுக்கொண்டான். தனக்காவது அன்னை இத்தனை வருடங்கள் கூட இருந்தார், ஆனால் பூஜா....???

அம்மாவின் விரல்களை விட்டு இம்மியும் பிரியாத தங்கையின் வலியை மறந்து என் வலியை மட்டுமே எண்ணி இத்தனை நாள் இருந்து விட்டேனே, என தங்கைக்காக தன் வலிகளை மறைத்தான். மனைவியின் பிரிவில் துவண்டு போன தேவராஜை தேற்றி மீண்டும் நடமாட வைத்தான். தங்கைக்கு மற்றொரு அன்னையாய் மாறிப்போனான். படித்து முடித்து அப்பாவின் தொழிலை பொறுப்பெடுத்து கொண்டான்.

ஆனால் அன்னை இல்லா வலி.... அது மட்டும் இன்றளவும் துளியும் குறையவில்லை. இப்போதும் அவனை வருத்தும் ஒரு நிகழ்வு என்றால், அது தேவிகாவின் இழப்பு தான். தொழில், வயது என எல்லாம் முன்னேறினாலும் அது ஒன்றை மட்டும் மனம் மறக்க மாட்டேன் என இருக்கிறது. யாரிடமும் சொல்லாமல் மறைத்தாலும் உயிர் நண்பன் முகுந்திடம் மட்டும் அது நடக்கவில்லை. அவனும் எவ்வளவோ தேற்றியும் ஒன்றும் உதவவில்லை. வருடங்கள் தான் ஓடுகிறதே தவிர அவன் அப்படியே தான் இருக்கிறான். ஆனால் மீண்டும் அன்னையாக ஒருத்தி வந்தால் மாறிடுவானோ என்னவோ? யார் அறிவார்.. இந்த மனித மனமதை.

நிமிடங்கள் கரைய இருக்கும் நிலை உணர்ந்து தானாகவே சமாதானம் ஆனான் மிதுன். பின் மீண்டும் நண்பர்கள் உற்சாகம் ஆக பேச்சு நீண்டு கொண்டே போனது. சில பல முக்கியமான விஷயங்களை பற்றியும் பேசிக்கொள்ள கடைசியாக முகுந்தை வார இறுதியில் வீட்டிற்க்கு வருமாறு கூறிவிட்டு தன் அலுவலகம் நோக்கி கிளம்பினான் மிதுன்.

முகுந்தும் பணிகளை கவனிக்க நாட்களும் சென்றது. வார இறுதி மிதுனின் வீட்டிற்க்கு செல்ல நிலை உண்டாக இருவரும் வெளியே சந்தித்துக் கொண்டனர். அந்த முக்கியமான விஷயங்களை பற்றி விவாதிக்க.

கீர்த்தியின் நிலையும் சற்றே முன்னேற்றம் காண மீண்டும் ஓர் சந்திப்பு கீர்த்தியின் அறையில் முகுந்துடன் மிதுன்.

........

தலையில் காயத்துடன் யாரும் அறியாமல் சத்தமில்லாமல் கிளம்பிக் கொண்டிருந்தாள் மந்த்ரா. நேரம் நள்ளிரவை தாண்டியிருந்தது. சிறிது தூரம் நடையாய் தொடர்ந்து பின் வேகமெடுத்து ஓட துவங்கி அடைய வேண்டிய அந்த இடத்தை நெருங்கியதும் அலைபேசி மூலம் தகவலை தெரிவித்து விட்டு காத்திருந்தாள். இரு நொடி பொழுதில் பதில் தகவலும் கிடைத்து விட விறுவிறுவென அந்த சுற்றுச்சுவரை தாண்டிக் குதித்தாள் மந்த்ரா. வெளியிலிருந்து பார்க்க அப்பகுதியில் இருக்கும் சாதாரண வீடு போலத் தான் இருந்தது. ஆனால் உள்ளே நடக்கும் கொடூரம் அதிபயங்கரமாகத் தான் இருந்தது. கட்டிடத்தின் வலது புறம் மறைவாய் சென்றதும் மீண்டும் ஓர் தகவலை அனுப்ப இடது புறத்தில் இருந்து மந்த்ராவை நோக்கி ஒருவன் வர, பின் பக்கமிருந்து மற்றொருவனும் வந்தான். மூவரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு மீண்டும் அவரவர் திசைகளில் பிரிந்தவர்கள் தங்களின் வேலைகளில் மும்முரமாக..... அரைமணி நேரத்தில் வேலைகளை முடித்து விட்டு அளிக்க வேண்டிய இடத்தில் செய்தியையும் அளித்து விட்டு மீண்டும் ஓர் அணைப்புடன் அவரவர் இடம் நோக்கி புறப்பட்டனர்.

மறுநாள் காலையில் எல்லோரும் கேட்டதே அச்செய்தியை தான். ஹிந்தி மொழியில் பரபரப்பாக செய்தி ஊரெங்கும் பரவ, அத்தனை மீடியாக்களும் கமிஷனரின் அலுவலகம் முன்பு தான் கூடியிருந்தது.

கமிஷனர் ராகேஷ்மரி பேட்டி அளித்தார்.......

அதிகாலை நேரத்தில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி சிட்டியின் மையப் பகுதி பூங்காவில் முப்பத்தி ஆறு முதியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வெவ்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் என்றும் மருத்துவ சிகிச்சைக்காக இங்கு வந்ததாகவும் தெரிகிறது. ஆனால் திடீரென்று ஒரு நாள் காணாமல் போனதாகவும் நேற்று அனைவரும் தப்பித்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதற்கான பின்னணி மற்றும் காணாமல் போன காரணம் காவல்துறையின் தீவிர விசாரணையில் தெரியவரும் என அவரின் உரையை முடித்தார். மீடியாக்களின் கேள்விகள் மேலும் அவரை கிண்டி கிளற, அனைத்திற்கும் பொறுமையாக பதிலளித்தார் கமிஷனர் ராகேஷ்மரி.

கேள்விகள் முடிந்ததும் கமிஷனர் சென்று விட அந்த முதியவர்களிடமும் கேள்விகளை எழுப்பி கொண்டிருக்க, அதை தன் சர்தார்ஜி மீசையை நீவியபடி பார்த்துக் கொண்டிருந்தார் தி கிரேட் பிரணவ் சிங்.

.........

நேரம் காலை ஆறு,
டெல்லி இராணுவ கூடம்.

அதிகாலை ஓட்டத்தில் வியர்வை சொட்ட சொட்ட ஓடிக்கொண்டிருந்தான் அவன். தலையில் சர்தார்ஜி பாகை, திமிறி நிற்கும் உடற்கட்டு என கம்பீர ஆடவனாக அந்த மைதானத்தை சுற்றிக் கொண்டிருந்தான் அவன். அவனை கடந்து செல்லும் அனைவரும் மரியாதை நிமித்தமாக வணக்கம் செய்ய புன்னகையோடு சின்ன தலையசைப்பை தந்தபடி தன் ஓட்டத்தை தொடர்ந்தான். வழக்கமான அவனின் சுற்றுகள் முடிய நெற்றி வியர்வையை துடைத்தபடி அமர்ந்தான் அவன் ...... வசிஸ்டன் ..... மேஜர். பி. வசிஸ்டன். நேற்றைய சம்பவம் மற்றும் அதற்கு முன் நடந்த சம்பவங்களில் முக்கிய பங்கு வகிப்பவன். இவனின் கூடவே இருக்கும் மற்றொருவன் இவனைப் போலவே மற்றொரு மைதானத்தில் ஓடிக் கொண்டிருந்தான்.... அவன் யார்?? யார் இவர்கள்????

விரைவில்....


தொடரும்........ Prabhaas ???
 
  • Like
Reactions: Ums
Top