Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

2022 ஐ வரவேற்க 22 வரிகள்

Advertisement

Joyram

New member
Member
புதிய வருடம் பிறப்பது ஒன்றும் புதிதன்று
365 நாட்கள் சென்றால் பிறக்கிறது ஒன்று!
புதுவருடம் பரிசாக தரும் ஒரு நினைவை
அதுதான் வேகமாக உதிரும் நம் இளமை!
புத்தாண்டில் நம் மனதில் எத்தனை கனவு
சிலருக்கு சில கனவுகள் ஆகிறது நெனவு!
பலர் கண்ட கனவு போய்விடுகிறது களவு
ஏனெனில் ஆசைக்கு இல்லை ஒரு அளவு!
இருப்பதில் திருப்தி அடைதல் ஒரு முறை
ஆசை நிறைவேற முயலுவது பல முறை!
என்ன படித்திடில் எவ்வளவு உழைத்திடில்
வெற்றி கொள்ள, நேரம் போடணும் பிடில்!
மகிழ்ச்சி கவலை என்கிற ஓயாத வட்டத்தில்
கவலைகளை எதிர்க்கவேண்டும் கிட்டத்தில்!
துணிச்சல் தைரியம் இரண்டு அற்புத வழிகள்
மௌனம் தியானம் இரு அருமை மொழிகள்!
சாப்பாடு, கூப்பாடு உன்பாடு என்பதே ஏற்பாடு
முடிவு குரல் கொடுத்திடில் உடனே புறப்பாடு!
எனவே இறுதிவரை மகிழ்ச்சி இசை பண்பாடு
ஏழைகட்கு ஒரு வேளை உணவே பெரும்பாடு!
அன்பும் நம்பிக்கையும் 2022ஐ வரவேற்கட்டும்
இவ்வுலகில் ஆனந்தம் அமைதி பொங்கட்டும்!

இதை பார்க்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும்
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Joyram
 
Top