Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

20. Ivan Vasam Vaaraayo!

Advertisement

Annapurani Dhandapani

Well-known member
Member


20. இவன் வசம் வாராயோ!



"எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க.. இது நான் பெத்த குழந்தையில்ல.." என்று நிரஞ்சனா அழுது கொண்டே சொல்ல,

"என்ன சொல்ற.. அப்ப இது யாரோட குழந்தை.. இது எப்டி உன்கிட்ட வந்துச்சி.. நீ பெத்த உன் குழந்தை எங்க.." என்று கயல் அதிர்ந்து போய் படபடவெனக் கேட்டாள். அவளுக்கு வியர்த்து வழிந்து படபடவென வந்தது.

முகில் தன் மனைவியை நாற்காலியில் அமர வைத்து ஏசியைப் போட்டுவிட்டு அவளுடைய வியர்வையைத் துடைத்துவிட்டான்.

தமிழ் எழுந்து சென்று ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து தன் தங்கையை ஆசுவாசப்படுத்தினான்.

"கயல்.. ஒண்ணுல்ல.. ஜஸ்ட் ரிலாக்ஸ்.. இந்தா.. தண்ணி குடி.." என்று சொல்லி அவளுடைய முதுகில் ஆறுதலாகத் தடவினான்.

"இந்த குழந்தைக்கு நீ அம்மா இல்லன்னா அப்ப பெத்தவங்க கிட்டேந்து நீ இத தூக்கிட்டு வந்துட்டியா..பெத்தவங்க கிட்டேந்து பச்ச புள்ளைய பிரிச்சி தூக்கிட்டு வரது பாவம்னு உனக்கு தெரியாதா.." என்று வளர்மதி கோபமாகக் கேட்டாள்.

"அப்ப உன் குழந்தைய யார் என்ன செஞ்சாங்க.. அதுக்கு பழி வாங்கத்தான் இந்த குழந்தைய தூக்கிட்டு வந்திருக்கியா.." என்று ஈஸ்வர பாண்டியும் தன் பங்குக்கு கோபப்பட்டார்.

இதைக் கேட்ட நிரஞ்சனா இல்லை என்பது போல மறுத்து மேலும் அழுதாள்.

"இல்ல அத்த.. இல்ல மாமா.. பெத்தவங்க கிட்டேந்து பச்சக் குழந்தைய தூக்கிட்டு வர அளவுக்கு இவ கல் நெஞ்சக்காரி கிடையாது.. இவ கண்டிப்பா இந்தக் குழந்தைய காப்பாத்தறதுக்குதான் தூக்கிட்டு வந்திருக்கணும்.. இத காப்பாத்தற போராட்டத்தில தன் குழந்தைய இவ பலி குடுத்திருப்பாளே ஒழிய ஒரு நாளும் தன் குழந்தைக்காக எதையும் யாரையும் பழி வாங்க மாட்டா.. எனக்கு இவள நல்லா தெரியும்!" என்று திடமாகக் கூறிய தமிழ் நிரஞ்சனாவின் புறம் திரும்பினான்.

நிரஞ்சனாவுக்கு இதைக் கேட்டதும் கண்களில் ஏற்கனவே வழிந்து கொண்டிருந்த கண்ணீரின் அளவு இன்னும் கூடியது. தமிழைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள்.

அந்த நொடி அவளுக்கு அவன் மீது சொல்லத் தெரியாத ஒரு உணர்வு ஏற்பட்டது. அது நன்றியுணர்வா, இல்லை நம்பிக்கையா என்று அவளுக்கு வகைப்படுத்தத் தெரியவில்லை.

தன்னைப் பார்த்துக் கும்பிட்டவளின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். அவள் கண்களைத் துடைத்தான்.

"நிரஞ்சனா! இப்டியே அழுதுட்டிருந்தா என்ன அர்த்தம்!? அழுகைய நிறுத்திட்டு பதட்டப்படாம என்ன நடந்ததுன்னு ஒண்ணு விடாம சொல்லு.. உன்ன உங்கம்மாவும் அண்ணனும் அந்த தாம்பரம் வீட்லேர்ந்து கூட்டிட்டு போனதிலிருந்து எல்லாத்தையும் சொல்லு.. எதையும் மறைக்கணும்னு நெனக்காத.. நீ எதையும் சொல்லாம மறைக்க மறைக்க நீதான் எல்லாருடைய கண்ணுக்கும் குற்றவாளியா தெரிவ.. நீ என்ன நடந்ததுன்னு சொன்னாதான் எங்களால உன்ன காப்பாத்த முடியும்! இந்தக் குழந்தையையும் காப்பாத்த முடியும்.." என்று பரிவுடனும் அதே நேரத்தில் கொஞ்சம் கண்டிப்புடனும் கூறினான் தமிழ்.

"என்ன நடந்திருந்தாலும் பரவால்லம்மா.. நீ தைரியமா சொல்லு.." என்று சொக்கலிங்கம் அவளை ஊக்கப்படுத்தினார்.

நிரஞ்சனா தன் கண்களைத் துடைத்துக் கொண்டு சொல்லத் தொடங்கினாள்.


************************************



நிரஞ்சனா தான் கருவுற்றிருப்பதை அறிந்து துணுக்குற்றாள்.

இது ஏன் நடந்துச்சி.. கடவுளே.. என்ன இப்டி தண்டிச்சிட்டியே.. அந்தாள் என்ன இப்டி வுட்டுட்டு போனப்றம் இந்த குழந்தைய குடுத்து என்னை இப்டி சூழ்நிலைக் கைதியாக்கிட்டியே.. என்று மனதுக்குள் வருந்திக் கொண்டிருக்க, பைரவி அவளிடம் மிகவும் பாசமாக நடந்து கொண்டாள்.

ராஜாத்தியும் நரேனும் நிரஞ்சனாவின் கருவைக் கலைப்பதற்கு ரகசியமாக சூழ்ச்சி செய்ததை எதேச்சையாகத் தெரிந்து கொண்ட பைரவிக்கு, அவர்களுக்காக செய்யும் சமையலில் கொஞ்சம் விஷத்தை சேர்த்தால் என்ன என்று எண்ணுமளவுக்கு கோபம் கோபமாக வந்தது.

ஆனால், இப்போது நிரஞ்சனாவைக் காப்பதுதான் முக்கியம்! அவளை இங்கிருந்து தப்பிக்க வைத்து எங்காவது கண்காணாத இடத்தில் நல்லபடியாக வாழச் செய்ய வேண்டும் என்று நிச்சயித்துக் கொண்டாள்.

அதன்படி சேலத்தில் இருக்கும் தன் தோழி ஒருத்தியை தொடர்பு கொண்டு நிரஞ்சனாவைப் பற்றிக் கூறி அவளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாள்.

அந்தத் தோழியும் நிரஞ்சனாவுக்கு உதவி செய்வதாக வாக்குக் கொடுத்து அவளை சேலம் அனுப்பி வைக்கும்படி கூறினாள்.

அதற்குள் நிரஞ்சனாவிடம் கருக்கலைப்பு மருந்துடன் ராஜாத்தியும் நரேனும் வந்தனர்.

"கண்ணூ.. ரஞ்சனி.. என்னா.. மசக்கை ரொம்ப பண்ணுதா.. இந்தா இந்த டானிக்க குடி கண்ணூ.. தலை சுத்தல் குறையும்.." என்று கூறி ஒரு குட்டி கிண்ணத்தில் கருப்பாய் ஏதோ திரவத்தை எடுத்துக் கொண்டு வந்தவர்களை கலவரமாய்ப் பார்த்தாள் நிரஞ்சனா.

"இதக் குடி ரஞ்சனி.. உன் தலை சுத்தல் சரியாகும்.. அந்தக் கோடி வீட்டு பார்வதிக்கா தன் மருமவளுக்காக வாங்கி வந்திச்சா.. நீயும் மசக்கையால தலைசுத்தல்னு கஸ்டப்படறன்னு.. அம்மா பார்வதிக்காடேந்து வாங்கிட்டு வந்தாங்க.." என்று நரேன் தன் தாய்க்கு ஒத்திசைத்தான்.

என்ன இதுங்க.. திடீர்ன்னு கண்ணூன்னு கூப்பிடுதுங்க.. என்று அவளுக்கு ஒரு எச்சரிக்கை உணர்வும் தோன்றியது.

ஆயினும் அவளால் மறுக்க முடியாமல் அதை கையில் வாங்க, அவள் குடிக்கிறாளா என்று ராஜாத்தியும் நரேனும் அவளையே பார்த்திருந்தனர்.

அந்த நேரத்தில் தன் தோழியிடம் பேசிவிட்டு வந்த பைரவி, நடக்கும் விபரீதத்தை உணர்ந்து, அவர்களுக்குப் பின்னால் நின்று நிரஞ்சனாவிடம் குடிக்காதே என்று சைகை செய்தாள்.

நிரஞ்சனா பைரவியின் சைகையை கவனித்து விட்டு சுதாரித்தவளாய், மருந்தைத் தன் வாயருகே கொண்டு போகும் போது தலை சுற்றல் வந்து விழுவது போல மருந்தை தரையில் கொட்டினாள்.

"அடிப்பாவீ.. கஷ்டப்பட்டு வாங்கிட்டு வந்த மருந்த இப்டி அநியாயமா கொட்டிபுட்டியே.. நாசமாப் போறவளே.." என்று திட்டிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள், ராஜாத்தி.

"சனியன்.. நாந்தான் சொல்றேன்லம்மா.. இவள வீட்ட விட்டு தொரத்திடலாம்னு.. நீங்கதான் கேக்க மாட்றீங்க.." நிரஞ்சனாவைத் திட்டிக் கொண்டே தன் தாயின் பின்னால் போனான் நரேன்.

"டேய்.. இவம்மாவும் உங்கப்பனும் பண்ணின துரோகத்துக்கு இவளதான் நா தண்டிக்க முடியும்.. அதான் இவள இங்கியே வெச்சிருக்கேன்.." என்று சொல்லிக் கொண்டே போகும் ராஜாத்தியை வெறுப்பாகப் பார்த்தாள் பைரவி.

"ரஞ்சீ.. மொதல்ல இங்கேந்து போய்டுடீ.."

"எங்கடீ போவேன்.. எனக்கு எதுவும் தெரியாது.. படிப்பும் இல்ல.. வேலையும் கிடைக்காது.. கையில காசும் இல்ல.."

"அதுக்காக இங்க இருந்து இவங்க பண்ற கொடுமையெல்லாம் தாங்கிட்டிருக்கப் போறியா.."

"வேற என்ன என்ன பண்ண சொல்ற.."

"இவங்க உன் குழந்தைய அழிச்சிடுவாங்கடீ.."

"என்ன சொல்ற.." அதிர்ந்து போய்க் கேட்டாள் நிரஞ்சனா.

"இப்ப பார்வதிக்கா குடுத்த மருந்துன்னு சொல்லி உனக்கு ஒரு மருந்து குடுத்தாங்களே.. அது சத்து டானிக்கு இல்ல.. கரு கலைக்கிற மருந்து.. நம்மூர் நாட்டு வைத்தியரு பொண்டாட்டி கிட்ட கேட்டு வாங்கிட்டு வந்திருக்காங்க.. அந்தம்மா, அது எனக்குன்னு நெனச்சிகிட்டு, பைரவி உம்மாமியார் குடுக்கற மருந்த குடிச்சிறாதன்னு ஆருக்கும் தெரியாம தோட்டத்துப் பக்கமா வந்து சொல்லிட்டுப் போவுது.."

"ஏன்டீ இவங்க என் மேல இவ்ளோ வெறுப்ப கொட்றாங்க.."

"இப்ப இப்டி அழுதுட்டிருக்க நேரமில்ல.. இங்கேர்ந்து முதல்ல போ.. அவங்க திரும்பவும் போய் மருந்து வாங்கிட்டு வரதுக்குள்ள இங்கேர்ந்து கிளம்புடீ.."

"பயமா இருக்குடீ.. சும்மா நடந்தாலே தலை சுத்துது.. இந்த நிலையில நா எங்க போவேன்.."

"சேலத்தில என் ஃபரண்டு இருக்கா.. அவ கிட்ட நா பேசிட்டேன்.. அவ உன்ன பத்திரமா பார்த்துக்குவா.. இந்தா.. இதுல ரெண்டாயிர ரூபா இருக்கு.. உங்கண்ணனுக்கு ரெியாம ஔிச்சி வெச்சிருந்தேன்.. இத எடுத்துகிட்டு கிளம்பு.. சேலம் போற பஸ்ஸுக்கு டிக்கெட் எடுத்துக்க.. நா மத்தத போன்ல சொல்றேன்.." என்றாள் பைரவி.

"மணப்பாறைலேர்ந்து திருச்சி போய் அங்கிருந்துதானே சேலம் போக முடியும்.." சந்தேகம் கேட்டாள் நிரஞ்சனா.

"இல்லல்ல.. நேரா சேலம் போற பஸ் வரும்.. அதுல ஏறிடு.. திருச்சி போய் சேலம் போறது சுத்து வழி.. பணமும் ரொம்ப செலவாகும்.. சரியா.. என் ஃப்ரண்டு ஜோதின்னு.. அவ நம்பர் உனக்கு அனுப்பறேன்.. உன் நம்பர் ஏற்கனவே அவளுக்கு அனுப்பிட்டேன்.. நீ சேலம் போய் இறங்கினதுமே அவ உன்ன வந்து கூட்டிட்டு போய்டுவா.. அதுக்கப்றம் கவலையில்ல.. நா ஒரு வாரம் பத்து நாள் கழிச்சி வந்து உன்ன பாக்கறேன்.. சரியா.. இப்ப கிளம்பு.."

"பயமாருக்குடீ.. இந்த தலை சுத்தலோட.. எங்கியாவது மயங்கி விழுந்துட்டா.."

"இங்க இருந்தா இவங்க உன் உயிர எடுக்காம விட மாட்டாங்கடீ.."

"செத்துடுவேன்னு சொல்றியா..அப்டியாவது நிம்மதியா இருப்பேன்டீ.."

"பட்டுன்னு உயிர் போய்ட்டா பரவால்ல ரஞ்சீ.. உனக்கு நிம்மதி கிடைச்சிடுச்சுன்னு நானும் நிம்மதியா இருந்துடுவேன்.. ஆனா இவங்க உன் வயித்தில வளர்ற அந்த பச்ச மண்ண அழிப்பாங்க.. அதுக்கப்றம் உன்ன குத்திக்காட்டி பேசிப் பேசியே தினம் தினம் கொல்வாங்க.. சோறு போடாம உன்ன வீட்டு வேல முழுக்க செய்ய வெப்பாங்க.. தினம் தினம் உன் கண்ணுல மரண பயத்த பாக்க வெறி புடிச்சி அலையாறாங்கடீ.. உனக்கு இதெல்லாம் தேவையா.. முதல்ல இங்கேர்ந்து போடீ.. அவங்க வர நேரமாச்சு.. இந்த முறை மருந்தை உன் கையில குடுக்காம உன் வாயில அவங்களே ஊத்திடப் போறாங்க.. உன் பயத்தால உன் குழந்தைய பலி குடுக்கப் போறியா.." என்று நீளமாகப் பேசி நிரஞ்சனாவைக் கேள்வி கேட்டு அங்கிருந்து தப்பிக்க வைத்தாள் பைரவி. ,

நிரஞ்சனா நிதர்சனத்தை உணர்ந்து அங்கிருந்து கிளம்பினாள்.

இப்டிதான் நம்ம அம்மாவும் என்னை அழிக்காம தன் வயித்தில வளர்த்தாங்களோ.. இப்டியேதான் நான் நல்லா இருக்கணும்னு நெனச்சு அப்பா குணாம்மா கழுத்தில தாலி கட்டினாங்களோ.. இந்த குழந்தைய அழிக்க மனசு வரல.. அது என்ன பாவம் பண்ணிச்சி.. பைரவி சொல்ற மாதிரி இனிமே இந்த குழந்தைய பத்திரமா பாத்துக்கணும்.. என்று தனக்குள் நினைத்தபடி மெதுவாக பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்து செல்ல, எதிரில் ராஜாத்தியும் நரேனும் நரேனின் இருசக்கர வாகனத்தில் வருவதைப் பார்த்துவிட்டு அருகிலிருந்த செல்போன் கடைக்குள் நுழைந்து மறைந்து கொண்டாள்.

அவளுடைய கெட்ட நேரம் அந்தக் கடைக்குள் அவர்களும் நுழைந்தார்கள். நுழைந்தவர்கள் இவளைப் பார்த்துவிட்டு,

"ஏய்.. நீ எங்க இங்க வந்த.." என்று கேள்வி கேட்க,

"ம்.. வந்து.. இதுல காசு தீந்து போச்சு.. அதான்.. ரீசார்ஜ் பண்ண வந்தேன்.." என்று அவள் சமாளித்தாள்.

"ம்க்கும்.. இப்ப நீ இத ரீசார்ஜ் பண்ணலன்னா ஓடிப் போன உம்புருசன் கிட்ட பேச முடியாதாக்கும்.." என்று ராஜாத்தி கேட்க, நரேன் ஏதோ பெரிய ஜோக்கைக் கேட்டது போல பெரிதாய் சிரித்தான்.

நிரஞ்சனாவுக்கு அழுகை வரும் போல இருந்தாலும் அமைதியாய் நின்றாள்.

நரேன் தன் கைப்பேசிக்கும் தன் தாயின் கைப்பேசிக்கும் ரீசார்ஜ் செய்து கொண்டு நூற்றித் தொண்ணூறு ரூபாய்க்காக இருநூறு ரூபாய்த் தாளை நீட்ட, கடைக்காரன் பாக்கி பத்து ரூபாய் இல்லை என்று நிரஞ்சனாவின் கைப்பேசிக்கு ரீசார்ஜ் செய்த வகையில் மீதமிருந்த பத்து ரூபாயை இதிலிருந்தே எடுத்துக் கொண்டான்.

"ஹூம்.. உன்னப் பாத்ததில பத்து ரூபாய் எனக்கு நஷ்டம்.. தண்டச்சோறு.." என்று திட்டிக் கொண்டே கடையிலிருந்து வெளியே போனான் நரேன்.

"சனிய.. எங்களுக்குன்னு வந்து வாச்சியே.." என்று தன் பங்குக்கு அவளைத் திட்டிக் கொண்டே மகன் பின்னால் போனாள் ராஜாத்தி.

ஹப்பாடா.. என்று நிரஞ்சனா நிம்மதிப் பெருமூச்சு விட, ராஜாத்தி மீண்டும் கடைக்குள் எட்டிப் பார்த்தாள்.

"ஏய்.. சீக்கிரம் வீட்டுக்கு வர வழியப் பாரு.. பராக்கு பாத்துட்டு தெரு பொறுக்கிட்டு இருந்துடாத.."

"ம்.. இல்லம்மா.. தோ பக்கத்தில இருக்கற புள்ளையார் கோவிலுக்கு போயிட்டு.." இழுத்தாள் நிரஞ்சனா.

"ம்.. ம்.." என்று முறைத்துவிட்டு மகனின் வாகனத்தில் ஏறிக் கொண்டாள் ராஜாத்தி.

அவர்கள் தலை மறைகிற வரை பார்த்திருந்துவிட்டு அங்கிருந்து வேக வேகமாக பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தாள்.

வேகமாக நடந்ததில் தலைசுற்றல் வந்தாலும் சுதாரித்துக் கொண்டு பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தாள். அவர் வந்து சேரவும் ஒரு பேருந்து வந்து நிற்கவும் சரியாக இருக்க, அதில் ஏறி அமர்ந்தாள்.

அடுத்த அரை மணி நேரத்தில் அவளுடைய சிறிய ஊரிலிருந்து மணப்பாறை பேருந்து நிலையத்திற்கு வந்து சேர, அங்கிருந்து சேலத்துக்கு பேருந்து புறப்பட இன்னும் ஒரு மணி நேரம் இருப்பதாக அங்கே தெரிவித்தனர்.

அங்கிருந்த சிமன்ட் பெஞ்சில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

அதற்குள் பைரவி அழைக்க,

"பைரவி! மணப்பறை பஸ் ஸ்டான்ட் வந்துட்டேன்.. சேலம் போற பஸ் எடுக்க இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமாம்.. அதான்.. பஸ் ஸ்டான்டில உக்காந்திட்டிருக்கேன்.."

"சரிடீ.. பத்திரமா போ.. போய்ட்டு போன் பண்ணுடீ.."

"ம்.."

"என்ன ரஞ்சீ.. பயமா இருக்கா.."

"அதுவும் தான்.. ஆனா.. தலை சுத்துதுடீ.."

"ம்ச்.. இந்த மாதிரி நேரத்தில உன்ன உக்கார வெச்சி பாத்துக்க முடியாம.. சாரிடீ.."

"ஏய்.. பரவால்லடீ.."

"சரி.. நீ அதுக்குள்ளாற என் ஃப்ரண்டுக்கு போன் பண்ணிக்க.. அவ சொல்ற மாதிரி செய்டீ.. ஏதாச்சும் ஜூஸ் வாங்கி குடிச்சிக்க.. பணம் பத்திரம்.. என்ன.. சரி.. சரி.. உங்கண்ணனும் அம்மாவும் வர சத்தம் கேக்குது.. நா வெக்கிறேன்..பாத்து பத்திரமா இருந்துக்க.." என்று நிரஞ்சனாவுக்கு தைரியம் சொல்லிக் கொண்டே வைக்க மனமில்லாமல் கைப்பேசி அழைப்பை துண்டித்தாள் பைரவி. அவள் கண்கள் தன்பாட்டில் கண்ணீரை உகுத்தன.

நிரஞ்சனாவும் இங்கே தன் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

பைரவி சொன்னது போல் அவளுடைய தோழி ஜோதியின் எண்ணுக்கு அழைக்க, மறுமுனையில் ஒரு ஆண் குரல் கேட்டது.

"ஹலோ!"

"ஹலோ.. ஜோதிக்கா இருக்காங்களா.."

"நீ யார்மா.."

"ம்.. வந்து.. நா.. நிரஞ்சனா.. வந்து.. பைரவி சொல்லி.. வந்து.." நிரஞ்சனா படபடப்புடன் தன்னை என்ன சொல்லி அறிமுகம் செய்து கொள்வது என்று புரியாமல் தவிக்க,

"ஓ.. நீதானாமா அது.. சரி.. சரி.. நா ஜோதியோட அண்ணந்தான்.. நீ இப்ப எங்கமா இருக்க.."

"அண்ணே.. நா இப்ப மணப்பாற பஸ் ஸ்டான்டுல இருக்கேன்.. சேலம் போற பஸ் இன்னும் அரை மணியில எடுப்பாங்க.."

"ஐயியோ.. நீ சேலத்துக்கா போற.. இப்ப ஒரு முக்கியமான வேலையா நாங்க சென்னைக்கு வந்திருக்கோமே.."

"ஐயோ.. இப்ப என்னண்ணே பண்ணட்டும்.."

"நீ ஒரு வாரம் கழிச்சி வாம்மா.."

"அதில்லண்ணே.. வீட்ல பிரச்சனை.. நா வீட்ட விட்டு வண்ட்டேன்.."

"ஓ.. ம்.. என்ன பண்லாம்.." அவன் வாய் விட்டு யோசித்தான்.

"நா வேண்ணா சென்னை வந்துடவாண்ணே.."

"ம்.. சரி வாம்மா.. நீ சென்னைக்கு வந்து இறங்கி இந்த நம்பருக்கு கூப்புடு.. பாத்துக்கலாம்.. ம்.. காசு வச்சிருக்கியாம்மா.."

"ம்.. வச்சிருக்கேண்ணே.."

"சரி.. சென்னைக்கு வந்திடு மா.." என்றான் அவன்.

சரியென்று கூறி அவள் கைப்பேசி அழைப்பை துண்டித்துவிட்டு சென்னை செல்லும் பேருந்துக்கு பயணச்சீட்டு வாங்கினாள்.

இன்னும் பதினைந்து நிமிடங்களில் பேருந்து புறப்படவிருப்பதாக அவளிடம் கூற, அவள் சென்று ஒரு டீயும் இரண்டு பன்னும் வாங்கி சாப்பிட்டு விட்டு வழியில் சாப்பிடுவதற்கு எதையோ கொஞ்சமாக வாங்கிக் கொண்டாள். குடித்த தேனீரே குமட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு.

எப்படியோ சமாளித்தாலும் கழிப்பறை சென்றேயாக வேண்டிய கட்டாயம் ஏற்பட, பொதுக்கழிப்பிடம் அவளை முகம் சுளிக்க வைத்தது. சகித்தபடி கழிப்பறைக்குச் சென்று விட்டு வரவும் சென்னை செல்லும் பேருந்து கிளம்பவும் சரியாக இருக்க, மெதுவாக வந்து பேருந்தில் ஏறிக் கொண்டாள்.

பேருந்து புறப்பட்டு பத்து நிமிடத்திற்கெல்லாம் கோளாறாகி நிற்க,

"பஸ் இனிமே போவாது.. வேற பஸ் புடிச்சிக்கங்க.." என்றார் நடத்துனர்.

பயணிகள் அனைவரும் முணுமுணுத்தபடி இறங்கி வேறு பேருந்துக்காக காத்து நின்றனர்.

"ம்.. இந்த டிக்கட்டுலயே வேற பஸ்ஸிலயும் ஏத்திக்குவாங்கதான.." என்று அவள் கேட்க, அவளைப் போலவே மற்றவர்களும் கேட்டு வைத்தனர்.

"ஆமாங்க.. இதே சீட்டுலயே வேற பஸ்ஸில போலாம்.. திரும்பவும் சீட்டுக்கு காசு கேக்க மாட்டாய்ங்க.." என்று கூறிக் கொண்டே எல்லாருடைய பயணச்சீட்டிலும் தன் கையொப்பமிட்டு அன்றைய தேதியையும் அப்போதைய நேரத்தையும் குறித்துக் கொடுத்தார் நடத்துனர்.

நிரஞ்சனாவும் தன் பயணச்சீட்டில் நடத்துனரின் கையொப்பத்தை பெற்றுக் கொண்டு அடுத்த பேருந்துக்காக மற்ற பயணிகளுடன் காத்திருக்கலானாள்.

அப்போது கரிய பெரிய உருவத்துடன் பெரிய வீச்சரிவாளுடன் அவளை நோக்கி வேகமாக ஓடி வந்தான் ஒருவன்.






- தொடரும்....








 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அன்னபூரணி தண்டபாணி டியர்
 
Last edited:
Nice,
ரஞ்சிய இப்படி கஷ்டப்படுத்துறாங்களே, என்ன ஜென்மங்களோ ??
 
இவளுக்கு மட்டும் பிரச்சனை
ஒண்ணு மாத்தி ஒண்ணு வருது
இப்ப இது யாரு
 
Top