Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

16. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
கீழே அறைக்குச் சென்று தனா என்ன செய்கிறான் என்று பார்த்து விட்டு மீண்டும் மேலே வந்தார் நாதன். தன்னிடமிருந்த சாவியை எடுத்து சுற்றும் முற்றும் பார்த்து கதவை திறக்க போக, இப்போதும் கதவு தானாகவே திறந்து கொண்டது. கதவு திறந்த சத்தத்திலேயே பயந்து போன நாதன், மெதுவாக உள்ளே எட்டிப் பார்க்க,

ரீங்கார சத்தத்தோடு என்னை இவ்வளவு நேரமும் காக்க வைத்து விட்டாய் அல்லவா தரணி நாதா.... ரிர்ரீர்... என்னிடம் உனக்கு பயம் இல்லாமல் போய் விட்டதா??? நீ கால தாமதம் செய்ததுக்கான தண்டனை நிச்சயம் உண்டு என அதன் விரல்களை அசைக்க, அவ்வளவு தான் நாதன் பத்தடி தூரம் பறந்து போய் விழுந்தார். அந்த உருவம் இப்போது மாடி வராண்டாவில் நிற்க விழுந்ததில் ஏற்ப்பட்ட வலியைக் கூட பொருட்படுத்தாது, மற்றவர்களின் பார்வைக்கு எப்போதும் இந்த உருவம் படவேக் கூடாது என சுற்றி முற்றி பார்த்தவர், அந்த உருவத்தின் முன் மண்டியிட்டு,

தயவு செஞ்சு மன்னிச்சிடு, எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியாம தான் நேரத்தை வீணாக்கிட்டேன். இந்த ஒரு தடவை என்ன மன்னிச்சிடு. இனி நீ என்ன சொன்னாலும் அதை அப்படியே செய்யுறேன். அப்படியே செய்யுறேன்.

ரிர்ரீ.... ஆனால் தவறு செய்ததுக்கு தண்டனை வேண்டாமா... உன்னிடம் கேட்ட பலி இனி எனக்கு வேண்டாம். நானே எனது பலியை எடுத்துக் கொள்கிறேன். என்னை பின்பற்றியே தொடர்ந்து வா நாதா.... வெகு நாட்களுக்குப் பின் நான் எடுக்க போகும் பலியை உன் கண்ணாற கண்டுகொள். அது தான் உனக்கான தண்டனை.

ரீர்ரி... வா...

சட்டென தாவி பறந்த உருவம் பின்வாசல் வழியாக வெளியே சென்று, காலை உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசுவின் கழுத்தை கவ்விப் பிடித்து இரத்தத்தை உறிஞ்ச, அடுத்த நொடியே பசு தன் உயிரை விட்டது.

அந்த கொடூர முகத்தோடு இரத்தமும் சேர்ந்து வடிய, நாதனை ஓர் கொடூர பார்வை பார்த்து விட்டு ஆங்கார குரலில் ஓலமிட்ட படி மீண்டும் அந்த அறையில் சென்று அடைந்து கொண்டது.

ஆனால் அதை பார்த்துக் கொண்டிருந்த நாதனுக்கு, தான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கும் நிலை வேண்டும் என்று தலையில் அடித்து சத்தமிடாமல் அழுது கொண்டிருந்தார் .

எவ்வளவு நேரம் அழுதார் என்று தெரியவில்லை. அழுது கொண்டே, வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிந்தால் வேதனை படுவார்கள் என்று வேக வேகமாக அங்கேயே குழியைத் தோண்டி புதைத்து விட்டு, சாதாரண இடம் போலவே மாற்றி விட்டு வீட்டிற்குள் நுழைந்தார்.

அவருக்கு நடந்த எதையும் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் சாமி அறைக்குச் சென்று விழுந்து கதற தொடங்கி விட்டார். என்னால தான். எல்லாம் என்னால தான். ஒரு உயிர் போகுறதுக்கு முழுக் காரணமும் நான் தான். பசு மாடு கடவுளுக்கு சமானம். ஆனா அதோட உயிர் போறதுக்கு நான்... நான் தானே காரணம். அதுமட்டுமில்லாம இப்போ.... இப்போ என்னோட குடும்பத்தோட அத்தனை உயிரும் பணயமா இருக்கே. கடவுளே நான் என்ன செய்வேன்... என்ன தான் செய்வேன்.

எனக்கு மட்டும் ஏன் இப்பிடி ஒரு நிலமை. இனி நான் என்ன செஞ்சு, எப்பிடி என் குடும்பத்தை காப்பாத்த, ஐயோ ஆண்டவா.... என வாழ்க்கையில் பல கட்டங்களை கடந்து வந்த நாதன் கலங்கி போய் அமர்ந்திருந்தார்.

இன்னும் அவரால் மீள முடியவில்லை. ம்ம்ம்கூம்... போதும்... என்னால முடியல. நான் இருந்தா தானே அது சொல்லுற எல்லாத்துக்கும் தலையாட்ட சொல்லும். வேணாம்.. எந்த பாவமும் அறியாத ஒரு ஜீவனோட உயிர் போறதுக்கு காரணமா இருந்த என்னோட உயிர் எனக்கு வேணாம். இப்போவே, இந்த நிமிஷமே நான் செத்து போறேன்...

ஆமா... ஆமா... அது தான் சரி.... என வேகமா மொட்டை மாடிக்கு ஓடினார். மேலிருந்து குதிப்பதற்கு சுவற்றில் ஏற போகும் ஒரு நொடி இடைவெளியில் சடாரென அந்த உருவம் முன்னே வந்து நிற்க, இப்போது எது நடந்தாலும் நடக்கட்டும் என நாதனும் பயமின்றி நின்றிருந்தார்.

என்ன செய்ய போகிறாய் தரணி நாதா.. உயிரை விட போகிறாயா..... ரிரீர்.... ரிரி... முடியாது... உன்னால் உயிரை துறக்க முடியாது. ஏனெனில்..... அது இப்போது என்னுடையது. என்னுடைய அனுமதி இன்றி நீ உன் உயிரை விட நினைத்தால் அடுத்த நொடி உன் குடும்பத்தின் ஒட்டு மொத்த உயிர்களும் உனக்கு துணையாக வந்து சேரும். நினைவிருக்கட்டும் உன் உயிர் என் கைகளால் என்னால் மட்டுமே பிரியும்... பிரிய வேண்டும் என்பதே உன் தலையெழுத்து.

இதை எப்போதும் மறவாதே... தரணி நாதா... நீ பார்க்க வேண்டியது இன்னும் ஏராளம் இருக்கிறது. காத்திரு... வேதனையுடன் காத்திரு. என்று உரக்க கூறிவிட்டு தாவி பறந்து விட்டது.

நாதன் தான் அப்படியே அங்கே மொட்டை மாடிச் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து விட்டார். என்னோட உயிர் எனக்குச் சொந்தமில்லையா? அப்போ இது நான் என்ன செஞ்சாலும் என்னை விடாது போலயே.... ஐயோ ஐயோ.... என்ன செய்ய... என்ன செய்ய.

......

பொழுதும் விடிந்தது. காலையில் எழுந்த மகா அம்மா பக்கத்தில் படுத்திருக்கும் தனாவை புன்னகையுடன் பார்த்துவிட்டு நாதனை தேட, அவரை காணவில்லை. சரி எங்காவது போயிருப்பார் என்று வேலைகளை கவனிக்க, பரமன் ஓடி வந்தார்.

அம்மா.... அம்மா.

என்ன பரமா...

அம்மா நம்ம மாட்டை காணோமே மா...

என்ன சொல்லுற பரமா....

ஆமாம்மா காணோம்.

அதெல்லாம் காணாம போகல, நேத்து நடந்த சம்பவத்தை ஒரு பெரியவர் கிட்ட சொன்னேன். அவர் அப்போ அந்த மாட்டை வித்துடு நாதான்னு சொன்னாரு. அதான் காலையிலேயே சந்தையில கொண்டு போய் வித்துட்டேன். நீங்க யாரும் வருத்தப்பட வேணாம். இனி ஆக வேண்டிய வேலைய பாருங்க. அப்புறம் இன்னொரு விஷயம். இப்போதைக்கு நேரம் சரியில்ல. அதனால முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா மத்த ஆடு கோழிகளையும் வித்திடு பரமா. கொஞ்ச நாள் போனதும் மறுபடியும் வேணும்னா திரும்ப வாங்கிக்கிடலாம். என்ன சரிதானா...

சரிங்க ஐயா..

என்ன மகாமா.. உன்னோட மனசு இனி கஷ்டபடாதுல...

எல்லாவற்றையும் விக்க சொன்னது கஷ்டமாக இருந்தாலும், இருக்கும் சூழ்நிலைக்கு அந்த உயிர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் வேற இடத்திற்கு செல்வது சரியாகத்தான் பட்டது மகா அம்மாவிற்கு.

சிரித்தமுகமாக சரி என்று தலையசைத்து விட்டு பிள்ளைகளை பார்க்க செல்ல, தரணி நாதன் இரவு முழுதும் யோசித்து வைத்திருந்ததை பேசிய நிம்மதியில் அறைக்குள் நுழைந்தார்.

அன்றே எல்லா ஜீவராசிகளையும் விற்க ஏற்பாடு செய்து விற்றும் விட்டார். ஆனால்.......


விடை தேடி பயணம் தொடரும்....
Pranhaas....
 
Top