Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

12. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
நாதன் காலில் மாட்டியிருந்த பையை எடுக்க முயற்சித்து அதை இழுக்க பை இரண்டாக கிழிந்து அதிலிருந்த அந்த பொருள் அவர் காலின் முன்னேயே விழுந்தது.

தன் முன்னே கிடக்கும் பொருளை பார்த்ததும் ஏனோ தெரியவில்லை, அவருக்குள் அதை இப்போதே கையில் எடுக்க சொல்லி உணர்வுகள் உந்திக் கொண்டிருந்தது. அது அவரின் பழக்கத்தினால் வந்ததா? இல்லை அந்த பொருள் ஏற்படுத்திய மாயமா? என்று தெரியவில்லை.

மெதுவாக குனிந்து அதை எடுக்க போகும் சமயம், அதுவரை நன்றாக இருந்த சூழ்நிலை மாறி, பெருங்காற்று வீச, மரங்களெல்லாம் பயங்கரமாக ஆடத் துவங்கியது. திடீரென மாறிய அந்த சூழ்நிலையை நாதன் கவனிக்கவே இல்லை. அவர் மனம் இப்போது ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல அந்த பொருளை எடுப்பதில் தான் குறியாய் இருந்தது. கை நீட்டியபடியே இருக்க, அவரால் அதை தொட கூட முடியவில்லை.

ஏதோ ஒன்று அவரை அதை தொட விடாமல் தடுத்து கொண்டிருக்க, அதுவரை காற்று மட்டுமே வீசி கொண்டிருந்த நிலையோடு இப்போது இடியும் மின்னலும் போட்டிபோட்டு ஆரம்பமே பேய் மழை என கொட்டித் தீர்த்தது.

அடித்துக் கொட்டும் மழையில் முற்றிலும் நாதன் நனைந்து போக, அதுவரை அந்த பொருளை எடுக்க முடியாமல் அவரைத் தடுத்த நாதனின் நெற்றியில் இருந்த அம்மனின் குங்குமம் இப்போது மழைநீரோடு கரைந்து காணாமல் போனது.

தொட முடியாமல் இருந்த கைகள் இப்போது அதை தொட்டு கைகளில் ஏந்தி கொள்ள, வீசிக் கொண்டிருந்த காற்றும் மழையும் அப்படியே நின்று போனது.

அதை எடுத்து நிமிர்ந்த போது தான் சுற்றத்தையே அறிந்தார் நாதன். அவர் நனைந்து இருப்பது கூட இப்போது தான் அவருக்கு புத்தியில் உரைத்தது.

சுற்றும் பார்வையை தழுவ விட்டவர், அதை ஆராய நினைக்காமல், அப்படியே அந்த பொருளை தன் சட்டையின் உள்ளே வைத்து மறைத்து வீடு வந்து சேர்ந்தார். எப்போதும் வெளியே சென்று வந்ததும் முதலில் நாதன் மகா அம்மாவை தான் அழைப்பார். ஆனால் இன்று அவரைக் கூட அழைக்காமல் நேரே மேல் அறைக்கு செல்ல படியேற, பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த பூஜை அறை விளக்கு சட்டென்று அணைந்து போனது.

நாதனின் அறை கீழே தான், ஆனால் அவர் தனது தனிப்பட்ட வேலைகளுக்கு என உபயோகிப்பது மாடியிலிருக்கும் அந்த கடைசி அறையைத் தான்.

அங்கே நாதனின் பொருட்கள் மட்டுமே இருக்க, இப்போது எடுத்து வந்த பொருளை ஏற்கனவே அவரிடம் இருக்கும் பல அதிசய பொருட்களின் மத்தியில் வைத்தார்.

இவரிடம் இப்படி நிறைய பொருட்கள் இருப்பது இன்றுவரை குடும்பத்தில் இருக்கும் யாருக்கும் தெரியாது. மகா அம்மா உட்பட.

பழங்கால பொருட்களை சேகரிப்பது என்பது நாதனுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அப்படி அவர் சேர்த்த பொருட்கள் தான் அந்த அறை முழுதும் பரவி இருந்தது. பழங்கால நாணயங்கள். அரசர்கள் உபயோகப்படுத்திய அறிய பொருட்கள் என, அவரின் தொழிலுக்காக சென்ற ஊர்களில் எல்லாம் கிடைத்த இந்த பொருட்களையும் சேகரித்து வைத்திருந்தார்.

இப்போது அவர் எடுத்து வந்திருக்கும் அந்த பொருளும் கூட, ஓர் அதிசய பொருள் என்பதும் உண்மை. கதவை பூட்டி அந்த அறையில் இருந்து வெளிவந்தவரை பார்த்த மகா அம்மா,

என்னங்க, நீங்க கோவிலுக்கு தானே போய்யிருந்தீங்க. இப்போ மேல இருந்து வர்றீங்க.

நான் இப்போ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னே வந்தே மகா. ஆமா எங்க பசங்கள காணோம்.

ம்ம்... நீங்க மறந்திட்டீங்களா.. அவங்க விருந்துக்கு மாமனார் வீட்டுக்கு போயிருக்காங்க சுமதி அப்பா.

ச்ச. ஆமா நான் மறந்தே போய்ட்டேன் மகா. சரி அப்போ தனா எங்க. அவனை கூப்பிடு. பெரியவனுங்க வேற இல்ல. அதனால நாளைக்கு அவனை தான் கடைக்கு கூட்டிட்டு போகனும்.

அவன் இதோ பின்னாடி தான் ஏதோ பண்ணிட்டு இருந்தான். இருங்க நான் போய் கூப்பிடுறேன்.

கீர்த்தனா.... கீர்த்தனா.... தம்பி...

ம்மா... நான் இங்க இருக்கேன்.

அங்க என்ன பண்ணிட்டு இருக்க, இந்த நேரத்துல..

அது ஒன்னும் இல்ல.. இங்க பாரு என சட்டை பையிலிருந்து மணக்கும் மல்லிகை பூவை அவர் கையில் அள்ளிக் கொட்டினான்.

இந்நேரத்தில தான் பூவ பறிப்பாங்களா. என்ன கீர்த்தனா நீ.

அம்மா.... முதல்ல இப்பிடி கீர்த்தனா கீர்த்தனான்னு கூப்பிடுறத நிறுத்து ம்மா. நீ கூப்பிடுறத பார்த்து பக்கத்து வீட்டு பூஜா, நீ என்ன பொண்ணா உங்க அம்மா உன்னை கீர்த்தனான்னு கூப்பிடுறாங்கன்னு ரொம்ப கேலி பண்ணி சிரிக்கிறா ம்மா. தயவு செஞ்சு இனி அப்பிடி கூப்பிடாத ம்மா.

ஏன், ஏன்.. என் பையன நான் கூப்பிடுறேன். அவளுக்கு என்ன வந்தது. நான் அப்படி தான் கூப்பிடுவேன்...

என் செல்ல கீர்த்தனா....

ம்மா... ம்மா...

சரி சரி வா உன்ன அப்பா கூப்பிட்டார்.

எதுக்கு.

அதை நீயே வந்து கேளு. வா.

அம்மாவின் செல்ல பிள்ளை அவரின் தோளில் தொங்கிக் கொண்டு நாதனின் முன் வந்து நின்றான்.

மகாவையும், தனாவையும் பார்க்கும் போது நாதனுக்கு அதீத மகிழ்ச்சி பொங்கும். ஏனெனில் தனா அப்படியே மகா அம்மாவின் சாயல்.

நாதனுக்கும் மகாவுக்கும் திருமணம் நடைபெறும்போது, மகா அம்மா அப்படியே தனாவை போல தான் இருந்தார். ஆனால் தனா கொஞ்சம் உயரம். மகா அம்மா உயரம் கம்மி.
மற்றபடி உடல்வாகு இருவருக்கும் ஒன்று போல தான். திடகாத்திரமான அண்ணங்களுக்கு இவன் தம்பி என்றால், யாரும் நம்ப மாட்டார்கள். தனா அப்படித்தான் இருப்பான்.

சிரித்தபடி கீர்த்தனனின் கன்னம் வருடியவர் நாளைக்கு கடைக்கு போகனும். சீக்கிரம் சாப்பிட்டு தூங்கு. ரெண்டு பேரும் உன்னோட வண்டியில தான் போகணும். காலைல ரெடி பண்ணி வை.

ம்ம்.. சரிப்பா... என்று இவனும் குஷியாக சொல்ல, மகா கீர்த்தனனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

கடைசி பிள்ளை, சிறுவயதிலிருந்தே ஒல்லியான தேகம் என்பதால் மகா அவனை எங்கும் வெளியே விட மாட்டார். அவரின் கைகுள்ளேயே வைத்து வளர்க்க, பயந்த சுபாவம், இரக்க குணம் என மகா அம்மாவை போலவே வளர்ந்து விட்டான்.

அன்று வீட்டில் இவர்கள் மூவர் மட்டும் தான் என்பதால் உணவருந்தி விட்டு மூவரும் ஒரே அறையிலேயே படுத்து விட்டனர்.

ஆனால் மேலே அந்த அறையிலிருந்த பொருளோ தன் கட்டுகள் விடுபட்ட ஆனந்தத்தில் சந்தோசமாக அந்த பொருளிலிருந்து வெளி வந்தது.

உடனேயே ஆட்டத்தை ஆரம்பிக்க காத்திருந்த அது, தன் முதல் செயலை வெற்றிகரமாக துவங்கியது.

அங்கிருக்கும் பொருட்களின் மூலம்.



விடை தேடி பயணம் தொடரும்...
Prabhaas...
 
Top