Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

12. மர்ம கிணற்றுக்குள் மரணமோ...!

Advertisement

AMMU ILAIYAAL

Well-known member
Member
மூவரையும் காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்ட ஆரதி மேற்கொண்டு வேலையை பார்க்க அங்கிருந்து கிளம்பினாள். ஊர் மக்களுக்கு இதில் இருந்து வெளியில் வரவே... சில நாட்கள் தேவைப்பட்டது. அதற்குள்ளே ஆரதியின் உதவியோடு... சேகரித்த ஆதாரங்கள் அத்தனையும் பத்திரிக்கை, ஊடகம், வலைத்தளங்கள் என அனைத்திலும் வேகமாக பகிரப்பட்டது. உலகில் உள்ள.... அனைத்து மக்களின் பார்வையும் பூவிலாங்குடி கிராமத்தின் மீதுதே இருந்தது. இதில் காவல் துறையை சார்ந்த நபரே குற்றம் செய்திருப்பதாலும் பல கண்டனங்களும், போராட்டங்களும்... அதிக அளவு வந்த காரணத்தினாலும் இவ்வழக்கு மாநில சிறப்பு புலனாய்வு அமைப்புக்கு (CBCID) மாற்றப்பட்டது.

மாநில சிறப்பு புலனாய்வு அமைப்பும் தன் விசாரணையை துரிதப்படுத்தியது. மகேஷ், செந்தூரன், கயல்விழி, குமரேசன், முத்துவேல் என அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தது.
அனைத்து ஆதாரத்தையும் ஆரதியே....... வெளி உலகுக்கு காட்டியதால் உரிய பதில் அளிக்க விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தாள்.

அதேநேரம் ஆரதியின் துணிச்சலான செயலுக்கு பல பாராட்டுகள் வந்து கொண்டிருந்தது. நிழல் கரம் பத்திரிக்கையும் பதவி உயர்வு அளித்ததோடு... வெகுநாட்களாக ஆரதி கேட்டுக்கொண்டிருக்கும் சென்னை பிரிவிற்கும் மாற்றப்பட்டது. அங்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த ஆரதிக்கு விசாரணை அழிப்பிற்கான கடிதம் வர உடனடியாக அங்கு சென்றாள்.


மத்திய புலனாய்வு சிறப்பு அதிகாரி... ஆரதி இடம் எப்படி இந்த உண்மை எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சது என கேள்வி எழுப்ப....

"ஆரம்பத்துல முத்துவேல் அப்பா பொண்ணா தான் நான் அந்த ஊருக்குள்ளே போனேன். போனதும் கொஞ்ச நாள் அந்த ஊர்ல இருக்க சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்துட்டு இருந்தேன். அங்க இருக்க மக்களோட நடவடிக்கை பேச்சு மட்டும் இல்லாம... எந்தெந்த நேரத்துக்கு அவங்க வேலைக்கு போறாங்க திரும்ப வராங்க முதல்கொண்டு... எல்லாத்தையுமே கண்காணிக்க ஆரம்பிச்சேன். அப்படி நான் தொடர்ந்து கண்காணிக்கும் பொழுது தான்... கட்டபொம்மன் சுகுமாறன் ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்குறதை பார்த்தேன். ஏற்கனவே சுகுமாறன் எனக்கு முதல் சந்தேக நபரா இருக்க...
இவங்க சந்திப்பு கட்டபொம்மன் மேல இரண்டாவது சந்தேக நபரா என் பார்வை பதிந்தது. இவங்க ரெண்டு பேரயும் அதிக அளவு கண்காணிக்க ஆரம்பிச்சேன். ஒருநாள் சுகுமாறன் அம்மாவும் சுகுமாறனும் வீட்ல இல்லாத நேரமா... நான் அவங்க வீட்டுக்குள்ள போய் ஏதாச்சும் தகவல் கிடைக்குமா ன்னு தேட ஆரம்பிச்சேன். அப்போ சுகுமாறன் அறைக் குள்ள... சந்தேகத்துக்கு உண்டான பொருட்கள் நிறைய இருந்துச்சு. அதுல பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்களை தான் பெரும்பாலும் இருந்துச்சு. சுகுமாறன் வீட்டுக்குள்ள யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி.. சிறிய அளவுல இருக்க நவீன குரல் பதிவு சாதனம் (digital voice recorder device) ஒன்னு வச்சுட்டு வந்தேன். அதேமாதிரி கட்டபொம்மன் வீட்டுக்கும் அவருக்கே தெரியாம... போய் தேடிப் பார்த்ததுல தான் எனக்கு இந்த கேஸ் ல அவரும் சம்பந்தப்பட்ட இருக்காரு' னு ஆதாரம் கிடைச்சது. கட்டபொம்மன் வீட்டிலேயும் இதே மாதிரி ஒரு சாதனத்தை பொறுத்திட்டு வந்தேன். அதோட உதவியால் தான் இவங்க ரெண்டு பேரும் நடுராத்திரில... பூவிலாங்குடிக்கு போறது எனக்கு தெரிஞ்சுது. முதல் இரண்டு நாள் என்னால அவங்களை சரியா பின்தொடர முடியல. மூன்றாவது நாள்... சுகுமாறன் தேவிகா புதைக்கப்பட்ட இடத்தில் இருக்கிறதை பார்த்தேன். அதை சுகுமாறனுக்கு தெரியாம படமும் பிடித்தேன். இதே மாதிரி அவங்க ரெண்டு பேரையும் தொடர்ந்து கண்காணிச்சதால... ஒரு நாள் அவங்க ரெண்டு பேரும் முழுசா பேசறதை கேட்டேன். அப்போதான் சுகுமாறன் அப்பா காளியை பத்தி எனக்கு தெரிய வந்துச்சு. அதுமட்டுமில்லாம அவருடைய உடலை பதப்படுத்தி... அந்த கிணற்றுக்கு வெகு அருகில் வெச்சுட்டு இருக்க உண்மையும் தெரிய வந்துச்சு. அதை பலமுறை தோண்டி எடுக்க முயற்சி பண்ணேன்.... ஆனா முடியல. அத்தோட இதுல பரசுராம் சம்பந்தப்பட்டு இருப்பதற்கான ஆதாரம் ரொம்ப குறைவா இருந்துச்சு. அவரயும் தகுந்த ஆதாரத்தோட சிக்க வைக்கனும்னு தான்.... பொறுமையா அவங்கள பின்தொடர்ந்துகிட்டு இருந்தேன். இதுக்கு நடுவுல தான் மகேஷ் , செந்தூரன் ரெண்டு பேரும் அங்க வந்தது. நானும் அவங்கள எதிர்பார்க்கல. உடனடியா நான் போனா இத்தனை நாள் பட்ட கஷ்டம் வீணா போயிடும்னு மறைந்து நின்று அத்தனையும் பதிவு பண்ணேன். ஒரு கட்டத்துல ரெண்டு பேரும் தனித்தனியாக பிரிந்து.. மகேஷ், செந்தூரன் ரெண்டு பேரையும் கொலை பண்ண பார்த்தாங்க. அப்போதான் நான் செந்தூரனை காப்பாற்றினேன். அவன் கிட்டயும் இந்த உண்மையை யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்'னு சொன்னேன். செந்தூரன் சுகுமாறனை அடிச்சு போட்டுட்டு மகேஷை அங்க இருந்து காப்பாத்தி கூட்டிட்டு போனான். அதுக்கப்புறம் சுகுமாறனும் கட்டபொம்மனும்... அங்கிருந்து கிளம்ப நான் உடனடியாக மருத்துவமனைக்கு தகவல் சொல்லி மகேஷ், செந்தூரன் ரெண்டு பேரையும் மருத்துவமனையில சிகிச்சைக்கு அனுப்பி வைச்சேன். இதுல காவல்துறை உதவியை நாடாம இருந்ததற்கு காரணம் கட்டபொம்மன். கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் இந்த கேஸ் வேற மாதிரி திசைதிருப்பி இருக்கும். அதனால தான் இதுல நான் மட்டுமே துணிந்து இறங்கினேன். மூணு பேரும் கடைசியா பேசிக்கிட்டத வச்சி... தேவிகா ஓட சடலத்தை 30வது நாள் எடுக்கப் போறத தெரிஞ்சுக்கிட்டேன். அதனால தான் அவங்களுக்கு முன்னாடி... தேவிகா ஓட உடலை தோண்டி எடுத்து அத வேற இடத்துல புதைச்சு வச்சிட்டேன். எப்படியா இருந்தாலும் தேவிகா உடலை தேடி தான் மூணுபேரும் வருவாங்கன்னு... தெரிஞ்சி தான் அங்க வேற ஒரு பொம்மை உடலை வச்சி காத்துட்டு இருந்தேன். அதே மாதிரி அவங்களும் வந்தாங்க.... மகேஷ், செந்தூரன், கயல்விழி மூணு பேர் உதவியோட நானும் அவங்கள பிடிச்சுட்டேன்." என்று கடந்த ஒரு மாத காலமாக.... தான் கண்காணித்து சேகரித்து வைத்த அனைத்து தகவலையும்... மாநில சிறப்பு புலனாய்வு அமைப்பிற்கு தந்துவிட்டு எப்பொழுது வேண்டுமானாலும் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவேன் என்ற வாக்குறுதியும் கொடுத்துவிட்டு புறப்பட தயாரானாள் ஆரதி....

அவள் செல்வதை அறிந்த அதிகாரி ஒருவர் ஆரதியை அழைத்து.... "பரவால்ல ஒரு பொண்ணா இருந்துட்டு இவ்வளவு துணிச்சலோட உண்மையை கண்டுபிடித்து இருக்கீங்க வாழ்த்துக்கள்" எனக்கூற,


பொறுமையாக அவர் புறம் திரும்பிய ஆரதி.... "அது என்ன சார் ஒரு பொண்ணா இருந்துட்டு...... முதல்ல இந்த வார்த்தையை மாத்தணும் சார். பிரச்சனையோட ஆரம்பப் புள்ளியே இதுதான். உண்மையைக் கண்டுபிடிக்க தைரியம் இருந்தா போதும் சார்.
ஆணா தான் இருக்கணும்னு அவசியம் இல்ல. பெண்களை அழிக்கணும்னு நினைக்கிற அத்தனை ஆண்களுக்கும் முடிவு பெண்கள் கையால தான் இருக்கும். அதற்கு இன்னொரு சாட்சி தான் இந்த வழக்கு." என்று சிறு சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தால் ஆரதி.



*********************************

இந்த சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு முடிவடைந்து விட்டது.



நிழல் கரம் பத்திரிக்கை சார்பாக பூவிலாங்குடி கிராம மக்களின் மன மாற்றங்களையும், அனுபவங்களையும் பேட்டி எடுப்பதற்காக இருவர் வந்திருந்தனர்.




கடந்த ஓராண்டில் பல நல்ல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டது இந்த கிராமத்தில். அந்த மூவர் மீதான வழக்குகள் இன்னும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. தகுந்த ஆதாரங்களும் சாட்சிகளும் இருந்தாலும் கூட உடனே நீதி கிடைக்காத... சட்டங்கள் நம் நாட்டில். அம்மூவருக்கும் வாதாட ஒரு வழக்கறிஞர் வேறு....
முதல் குற்றவாளி சுகுமாறன், இரண்டாம் குற்றவாளி கட்டபொம்மன், மூன்றாம் குற்றவாளி பரசுராம். குற்றம் நடந்த இடத்தில் பரசுராம் இல்லை என்ற காரணத்திற்காக... அவரது வழக்கறிஞர் பரசுராமருக்கு மட்டும் ஜாமீன் பெற்று தந்திருந்தார். ஆனால் பரசுராம் பூவிலாங்குடி கிராமத்திற்கு வரவில்லை. வந்திருந்தால் தெரிந்திருக்கும் அவரின் நிலைமை என்னவென்று. தண்டனைக்கு காத்திருக்கும் மூவரும்... இன்னமும் செய்த தவறை உணரவில்லை.

மறைக்கப் பட்டிருந்த வேலிகள் அனைத்தும் தகர்த்தெறிய பட்டிருந்தது. பல உயிர்களைக் காவு வாங்கிய அந்த கிணறு
... தூர்வாரப்பட்டு விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது. தரிசாய் போன நிலங்களில் பாதி இடம் விவசாயத்திற்கும்... மீதி இடத்தில் ஒரு பாதி 50 பேர் தங்கக்கூடிய ஒரு கட்டிடமாக மாறி இருந்தது. அதில் கயல்விழி தன் முதுகலை பட்ட படிப்பை தொலைதொடர்பு கல்வியாக மாற்றிவிட்டு... பூவிலாங்குடி கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் தற்காப்புப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாள். மற்றொரு இடம் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு இடமாக மாற்றப்பட்டுள்ளது.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த இடம் முற்றிலுமாக மாறி.... மினி பேருந்து வந்து செல்லும் அழகிய தார் சாலையாக மாறி இருந்தது. அந்த இடம் முழுவதையும் கண்காணிக்கும் பொறுப்பை முத்துவேல் ஏற்றிருந்தார். பூவிலாங்குடி கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக குமரேசன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இப்பொழுதெல்லாம் பூவிலாங்குடி கிராமத்தில் இரவு நேரத்திலும் தெருவிளக்கின் வெளிச்சம் அழகாக தெரிகிறது. செந்தூரன் மகேஷ்.. இருவரும் தங்கள் படிப்பிற்காக கல்லூரியிலேயே தங்கியிருக்க.. ஆரதி உதவியோடு பூவிலாங்குடி கிராமத்தில் ஒரு அழகிய நூலகம் கட்டப்பட்டு வருகிறது.

ஊரை நோட்டமிட்டுக் கொண்டே வந்த இருவரையும் ஐம்பது வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர் வழிமறித்து... "யாரு நீங்க ? எதுக்கு வந்திருக்கீங்க? உங்க பார்வையே சரியில்லையே..."

"பாட்டி நாங்க நிழல் கரம் பத்திரிக்கை நிருபர்கள். கடந்த ஆண்டு இங்க.. நடந்த சம்பவங்களை எங்க பத்திரிகையில வேலை செஞ்ச ஆரதி தான் கண்டு பிடிச்சாங்க. அந்த சம்பவம் நடந்து ஓராண்டு முடிஞ்சிருச்சு. அதான் நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க . இந்த கிராமம் எந்த அளவுக்கு முன்னேறி இருக்குன்னு ஒரு பேட்டி எடுக்கலாம்னு வந்திருக்கோம்.

"ஆரதி பொண்ண மறக்க முடியுமா.... அந்தப் பெண்ணால தான இன்னைக்கு இந்த ஊரு இப்படி நிம்மதியா இருக்கு. அந்த அயோக்கியனுங்க இந்த ஊரை என்னென்னலாம் பண்ணிட்டு போய்ட்டானுங்க. ஆனாலும் அவங்களுக்கு எந்த தண்டனையும் கிடைக்கலை. இன்னமும் கேஸ் நடந்து கிட்டே தான் இருக்கு. அப்பவே எங்ககிட்ட விட்டிருந்தா நாங்க அடிச்சே கொன்னு இருப்போம் மூணு பேரையும். அது நடந்து கொஞ்ச நாள் யார் யாரோ வந்தாங்க பேட்டி எல்லாம் எடுத்தாங்க. ஒரே பரபரப்பா இருந்துச்சு எங்க கிராமம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அந்த பரபரப்பு அடங்க ஆரம்பிச்சது ‌. அப்போதான் ஊரே ஒன்று கூடி அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சோம். கயல்விழி சொன்ன யோசனை தான் அந்த இடத்தை... இப்படி மாத்தி இருக்கு. மொதல்ல அந்த பக்கம் போகவே எல்லாருக்கும் ஒரு நடுக்கம் இருந்துச்சு. ஆனால் இனியும் அப்படி இருக்கக் கூடாதுன்னு எல்லாருமே முடிவு பண்ணி ஒன்னா போனோம். அந்த கிணத்து தண்ணியை தூர்வாரும் போதெல்லாம் எங்களுக்குள்ள அவ்வளவு நடுக்கம். எத்தனை பொண்ணுங்க ரத்தம் இதுல கலந்து இருக்கும்'னு.
இந்தக் கட்டடம் எல்லாம் கட்ட... குமரேசன் தான் உதவி செஞ்சது. நடந்த விஷயங்களை நாங்களும் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வாழ பழகிட்டு வரோம். இப்போலாம் ராத்திரி நேரத்தில எந்த பயமும் இல்லை. இந்த கிராமமே இப்போ ரொம்ப நல்லா இருக்குயா... அந்த ஆரதி பொண்ணு கிட்ட சொல்லிடுங்க." என்றபடி புகைப்பட கருவிக்கு சிரித்த முகமாக ஒரு புகைப்படத்தை கொடுத்துவிட்டு அழகாக நடந்து சென்றார் அந்த பாட்டி. அவரின் வார்த்தைகளே பூவிலாங்குடி கிராமத்தின் முன்னேற்றங்களை விவரிக்க...அவர் சென்றதும் அந்த கிராமத்தையே விதவிதமாக புகைப்படம் எடுத்துவிட்டு... அவ்விருவரும் கிளம்பினர் நம்மோடு.




ஒரு புதையலுக்காகவா இத்தனை கொலைகளை பண்ணாங்க நம்பவே முடியல'ன்னு ஆச்சர்யமா இருக்கா. இது உண்மை சம்பவம். நான் பள்ளிக்கூடம் படிக்கிற சமயத்துல இந்த நியூஸை கேட்டிருக்கேன். கொஞ்ச நாளுக்கு முன்னாடி கூட பெத்தவங்களே இரண்டு பெண்களை கொலை பண்ணலையா...
போன வாரம் கூட திருப்பதில புதையலுக்காக ஒரு சுரங்கம் தோண்டப்படலையா...
புதையலுக்காக இந்த மாதிரி நடந்த கொலைகள் உண்மை ஆனா அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியாது. இந்த நியூஸ் என் மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு. அதனால தான்... இதை சம்பந்தப்படுத்தி எழுதினேன்.

என்னோட கதைகளைப் படிச்சிட்டு உற்சாகம் அளித்த தோழமைகளுக்கு நன்றி.

ஆரதியை மறந்துடாதீங்க. அவங்க தான் அடுத்த கதையோட கதாநாயகி.

அம்மு...
 
Very nice interesting story. Unmaiyana kadhai ninakarcha manasu ku rombave varuthama irrukku. Nama evalavuuuuu padichalum sila loosu thanamana vellaigal indrum seiykurom. Nama yarayum thirutha mudiyadhu atleast try pannalam endha madiri vizhayangala stop pannalam.
 
புதையல்ன்னு ஒரு வார்த்தை சொன்னா போதும் என்ன வேணா செய்யலாம்ன்னு நெனைக்கிறவங்க இப்பவும் இருக்காங்க.... என்ன செய்றது ??

ரொம்ப சூப்பரா த்ரிலிங்கா சஸ்பென்ஸ் குறையாம கதைய நகர்த்தினீங்க சிஸ் ??????

புதிய கதையோட சீக்கிரம் வாங்க.... வாழ்த்துக்கள் ???
 
Nice ud sis..kutravaligaluku thandanai kidaithuvitadhu..giraamam nalla develop ayduchu..super..unga narration semaya iruku.. waiting for nxt story?
 
Top