Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

12. மயங்கினேன் மை விழியிரண்டில்

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
சித்து அவளின் பண்ணை வீட்டிற்க்கு செல்ல பின் தொடர்ந்து வந்த சரண் நிமலனுக்காக காத்திருந்து அவன் வந்ததும் உள்ளே செல்ல இருவரும் கண்ட காட்சியில் உறைந்தே விட்டனர்.

பதட்டத்திலும் பயத்திலும் தன்னிலை மறந்து பண்ணை வீட்டிற்க்கு வந்த சித்து மாடி படி ஏற வேகமாக ஓட கார்பெட் தடுக்கி விழுந்ததில் அவள் தலையின் காதிற்கு சற்று மேலே இருக்கும் பகுதி அங்கிருந்த கண்ணாடி டீப்பாயில் மோதிட அவ்விடமே இரத்த வெள்ளத்தில் விழிகள் திறந்தபடி கீழே விழுந்து கிடந்தாள்.

உள்ளே சென்ற இருவரும் அவளின் நிலையை பார்த்து அங்கேயே நிற்க, நொடியில் சுதாரித்த நிமல் அவளை சரணின் உதவியுடன் மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினான். இரத்தம் அதிகமாக வெளியேறி கொண்டிருக்க நிமலும் சரணும் துரிதமாக செயல்பட்டனர்.

இது தான் மனிதாபிமானம், சித்து எவ்வளவு தான் தீங்கு செய்திருந்தாலும் இரத்த வெள்ளத்தில் கிடந்த அவளை அப்படியே விட்டுச் செல்ல இருவருக்குமே மனம் வரவில்லை. அதிலும் சரண் அவள் மேல் அதிகளவில் கோபத்தில் இருந்தாலும் சிறு வயதிலிருந்து ஒற்றையாய் வளர்ந்தவனுக்கு தங்கை என்னும் பாசத்தை பகிர கிடைத்த உறவு அல்லவா.... அவனும் அந்நிலையில் மருகித்தான் போனான். இருவரும் அவளை மருத்துவமனையில் சேர்த்து விட்டு சித்துவின் அப்பாவிற்கு தகவலை தெரிவித்து விட்டு பத்மாவதி அம்மாவின் இறுதி காரியங்களுக்கு கிளம்பிச் சென்றனர்.

அங்கு இன்னும் நேத்ரா அழுது கொண்டு தான் இருந்தாள். யாராலும் அவளை தேற்ற முடியவில்லை. பின் இறுதி அஞ்சலி முடிந்து அனைத்தையும் நிமலும் சரணுமே முன் நின்று நடத்தி முடித்தனர். ஆனந்தமாய் தொடங்கிய நாள் எல்லோருக்கும் துக்கமாய் முடிந்தது. எல்லோரையும் கட்டாய படுத்தி பாலை குடிக்க வைத்த புகழ், நேத்ராவிடம் செல்ல, அவளோ கண்களை இறுக்க மூடியபடி கட்டிலின் பின்புறம் ஒடுங்கி போய் அமர்ந்திருந்தாள். அருகில் ஒரு கடிதத்துடன்.

நேத்ராவை அந்நிலையில் கண்டதும் பதறிய புகழ் அவளின் தோளை உலுக்கி எழுப்ப அப்படியே சரிந்தாள் அவள் கால்களில். அவளை பிடித்துக் கொண்டே கடிதத்தை படிக்க நேத்ராவின் முட்டாள் தனமான எண்ணத்தையும், அவளின் அன்பையும் எண்ணி உருகிய புகழ் கத்தி நிமலின் அன்னையை அழைக்கவும், எல்லாம் முடித்து நிமல் சரண் வீட்டினுள் நுழையவும் சரியாய் இருந்தது. புகழின் கத்தலில் இவர்களும் உள்ளே ஓட, அங்கு உடல் எல்லாம் சில்லிட மயங்கிக் கிடந்தாள் நேத்ரா. புகழிடம் என்னவென்று விசாரிக்க, அவள் இருந்த நிலையையும் கடிதத்தையும் காட்ட உடனே நேத்ராவை கைகளில் ஏந்திக் கொண்டு காரை நோக்கி ஓடினான் நிமல். சரண் காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கி செல்ல, மடியில் கிடந்தவளின் கன்னம் தட்டி அம்மு.... அம்மு... எழுந்திறிடி..... ஏண்டி இப்பிடி ஒரு முடிவெடுத்த..... பிளீஸ் கண்ண திற அம்மு.... உன் கூட நான் சந்தோசமா வாழணும், தினம் உன்ன என் மடியில தூங்க வைக்கணும், நெறய குழந்தை பெத்துக்கனும்...... உன்ன என் குழந்தையா பார்த்துகிறேண்டி.... அம்மு.... பிளீஸ் எழுந்திரு அம்மு...... தன் அம்முவுக்காக அழுது கரைந்து கொண்டிருந்தான் மங்கையவளின் மை விழிகளில் தன்னை தொலைத்த மன்னன் அவன்.


என் உயிர் காதலை உந்தன்
காதோரம்
ஒரு முறையாவது சொல்ல நீ வேண்டும் எந்தன் ஆசை முத்தங்கள் உன்னை
சேருமோ
இல்லை காதல் யுத்தங்கள் இன்னும்
நீளுமோ

உந்தன் கண்ணில் நீ சிந்தும் ஈரம்
ஏனடி
நெஞ்சில் பாரம் வேண்டாமே என்னை
பாரடி

என்னை கொள்ளாதே தள்ளி
போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி....

என்னை கொள்ளாதே தள்ளி
போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி....


அவளின் நெற்றியில் முத்தமிட்டு நீ என்ன விட்டு போனா நானும் உன் கூடவே வந்துடுவேன்டி அம்மு........ இது என் மேல சத்தியம்..... அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு அழுதிட மருத்துவமனை வந்தது.

அவசர சிகிச்சை பிரிவில் நேத்ரா கிடத்தப்பட்டிருக்க, உயிரை அவளுடன் இருக்க வைத்து விட்டு, அறையின் வாசலில் அமர்ந்திருந்தான் நிமலன்......


என்னுயிர் கணவனுக்கு,

என் முகம் காணாமல், விழிகளை மட்டுமே கண்டு என் மேல் காதல் கொண்ட என் அன்பு காதலன், அன்பு கணவன் நிமலிற்க்கு, வாய் பேசா உன் அம்மு எழுதுவது. இனியும் என் குரல் உனக்கு கேட்க போவதில்லை. உன் ஆனந்த அம்மு என்ற அழைப்பும் இனி நான் கேட்க போவதில்லை. ஆம் நான் போகிறேன், உங்கள் நலனுக்காக, என் ஆசை நிமலுக்காக, என் அன்பு உறவுகளுக்காக. என் பயத்திற்காக......

போதும் என்னால் நீங்கள் எல்லோரும் அடைந்த கஷ்டங்கள். இனியொரு கஷ்டம் என்னால் யாருக்கும் வேண்டாம். மீண்டும் யாரையும் இழப்பதற்கு நான் தயாராக இல்லை. என் இழப்பும் சிறிது காலத்திற்கு பின் மாறிவிடும். மீண்டும் ஒருமுறை நான் பிறந்தால் உன் முழு காதலையும் பெற்று எந்த பிரிவும் இன்றி, எல்லா உறவுகளோடும் எதையும் சந்திக்கும் தைரியத்தோடு பயம் இன்றி பல நாள் வாழ வேண்டும். இதுவே என் கடைசி ஆசை.

நிமல் உன் அன்பை முழுசா அனுபவிக்க முடியா விட்டாலும் இதுவரை நான் பெற்ற உன் காதல் போதும் என்று போகிறேன்.

எல்லோரின் அன்பையும் பாசத்தையும் விட்டு நான் போகிறேன். சரண்,நீ தான் நிமல பார்த்துக்கணும்......உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன்........ சரண் அண்ணா........

நீங்க எல்லாரும் எப்போவும் சந்தோசமா இருக்கணும்.


என் முத்தங்களுக்காக காத்திருக்கும் நிமலுக்கு ஆயிரம் முத்தங்களுடன் நிமலின் அம்மு.

இது தான் நேத்ராவின் கடிதம். அன்னை தந்தையை இழந்து, காதலனை பிரிந்து, இன்று அரவணைத்த அன்னையையும் இழந்து..... இனியொரு இழப்பு வேண்டாம் என்று அவளையே இழக்க முடிவெடுத்து வேண்டும் என்றே மூச்சு திணறும் போது இன்ஹெலரை தூக்கி எறிந்து அப்படியே அமர்ந்து விட்டாள்.( இந்த இன்ஹெலர்... எப்பிடின்னு டவுட் வரணுமே..... ஆங்....அது அந்த சித்து அடிக்கடி மிரட்டும் போது, அழுகும் போது மூச்சு திணறுமா.... அதுக்காக)

தன் நிலையை தவறாய் புரிந்து கொண்ட நேத்ரா, கொஞ்சம் பயமின்றி முடிவெடுத்திருந்தால் அவளுக்கும் நிமலிற்க்கும் இந்நிலை வந்திருக்காது. அனைத்திற்கும் காரணம் தேவையற்ற பயம் தான். இன்று ஒற்றை பிள்ளையாய் வளரும் பலரும் அதீத பாதுகாப்பு என்ற பெயரில் வெளியுலகம் தெரியாமல் பயத்தோடு தான் வளர்க்க படுகின்றனர். எதையும் துணிவோடு எதிர்க்கும் திறன் யாருக்கு முக்கியமோ இல்லையோ பெண் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியம். வெளியுலகம் கற்று தனியாய் எதையும் சந்திக்கும், சாதிக்கும் படி தான் இருக்க வேண்டுமே தவிர, பயத்துடன் துணிச்சலின்றி இருக்க கூடாது. நேத்ரா கொஞ்சம் துணிவோடு இருந்திருந்தால், அன்றே ரகுவை பொருட்படுத்தாமல் நிமலுடன் சேர்ந்திருப்பாள். வீண் பயம் கொண்டு ஓடி ஒளிந்திருக்க மாட்டாள். சித்து தன்னை மிரட்டும் போது பயந்து நடுங்காமல் எதிர்த்து நாலு அறை விட்டிருப்பாள். ஆனால் அவள் வாழ்ந்த சூழ்நிலை இப்போது இப்படியொரு நிலைக்கு ஆளாக்கி விட்டது.

இங்கு நிமலின் நிலை தான் மிகவும் மோசமாக இருந்தது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நேத்ரா நான்கு நாட்கள் கழித்து தான் கண்விழித்தாள். அவள் கண் விழிக்க அவள் முன் தவிப்புடன் நின்றிருந்தான் நிமல். நான்கு நாட்கள் அவன் கொண்ட வலிகள் கொஞ்சம் நஞ்சமல்ல, ஆனால் அவை அனைத்தும் அவள் விழிகளை கண்டதுமே பறந்தோடியது. அந்நிலையில் அவ்விருவரின் மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்லிட முடியாது. போன தன் உயிர் மீண்டும் தன்னிடம் வந்து சேர்ந்த மனநிலையில் இருந்தான் நிமல்.

இந்த நான்கு நாட்களில் அவன் எங்கும் செல்லவில்லை. எப்போதடா தன்னவள் கண் விழிப்பாள் என்று மருத்துவமனையையே கதி என்று கிடந்தான். ஆனால் புன்னகை முகமாய் நின்றிருந்த நிமல் திடீரென கோபம் கொண்டு நேத்ராவை நெருங்கி அவள் கன்னத்தில் அறையவும் சரண் உள்ளே வரவும் சரியாய் இருந்தது.

அவன் அடியை எதிர் பாரா நேத்ரா கண்களில் கண்ணீருடன் பார்த்திருக்க, உள்ளே நுழைந்த சரணோ அடக்க மாட்டா சிரிப்புடன் அவளை பார்த்திருந்தான். பின்னே நம் நண்பேன்டா யார்கிட்டயாவது அடிவாங்கினா... முதல்ல கோபம் வருதோ இல்லையோ..... அப்பாடா அடி வாங்கிட்டா அப்பிடின்னு சிரிப்பு தான் வரும். அந்த கொடுமை தான் அங்கையும்...... சரண் சிரிச்சா நேத்ரா என்ன செய்வானு எல்லாருக்கும் தெரியும்.....





தொடரும்........prabhaas ???
 
  • Like
Reactions: Ums
Top