Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

1. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
பறவைகளின் கூக்குரல் சத்தம் மணிசத்தத்தோடு போட்டிபோட அள்ளி தூவிய தூப மனமோ நெஞ்சத்தை அவன் புறமாய் இழுத்துக் கொண்டிருந்தது. நெஞ்சமெல்லாம் நிறைந்த அவ்உணர்வு கண்களில் நீராய் பெருக, கற்பூர ஜோதிதனில் திறக்கப்பட்டது ஐய்யன் அவன் கோவில் வாசல். காண கண் கோடி வேண்டும் அவனின் திருமேனியை காண என கண்கள் அலைபாயும் முன்பே எனையன்றி முதலில் யார் தரிசிக்க முடியும் என போட்டி போட்டு வந்து விட்டான் கிழக்கே உதிக்கும் சூரியனவனும்.

நீ மட்டுமா நானும் தான் என அந்த செவ்வொளியோனுக்கு போட்டியாய் கடவுளே என்னைச் சுற்றி என்ன தான் நடக்கிறது.... என தினமும் கோவிலில் கண்ணீர் விடும் கீர்த்தனனின் கேள்விக்கு விடை தேடி நாமும் அவனுடன் தரிசனம் தேடி புறப்படுவோம்.

நேரம் செல்ல செல்ல கூட்டம் அலைமோதி கொண்டிருந்தது கோவிலில். கஷ்டமும் நஷ்டமும் என பல இன்னல்கள் கடந்து போனாலும் இருப்போரும் இல்லாதவர்களும் முதலில் நாடுவது என்னமோ அந்த கடவுளைத் தான். உனக்கான நிம்மதி இதோ என சாந்தம் பொங்கும் அவன் திருமேனியை கண்டாலே இன்னும் எத்தனை வந்தால் என்ன எனவும் தோன்றுகிறது.

இதோ..
கருணையை கடலளவு இல்லாவிட்டாலும் கடுகளவேனும் என்னிடம் காட்ட மாட்டாரா என தினமும் முதல் ஆளாய் கீர்த்தனும் வந்து கொண்டிருக்கிறான் அந்த கோவிலுக்கு.மீண்டும் மீண்டும் அதே கேள்வி. அதே வேண்டுதல். விடை கிடைக்காவிட்டாலும் தத்தளிக்கும் மனம் சற்றே ஆறுதல் அடைந்தது. நீண்ட நேரம் கிடைத்த தரிசனம் முடிந்து வெளியே வந்தவனை,

எதிர்புறமிருந்து வந்து கொண்டிருந்த அவர், தனா, கிளம்பிடாத. நான் வந்துடுறேன்.

சரிங்க மாமா வாங்க. நான் வெளியில நிக்கிறேன்.

வெளியே வந்தவன் அங்கிருந்த வேப்பமரத்தின் அருகிலேயே அமர்ந்து விட்டான். அடுத்து செய்ய வேண்டியவைகளை மட்டுமே நினை என்றாலும் மனமோ மீண்டும் அந்த பழைய நினைவுகளையே அசைபோடத் துவங்கியது.

கீர்த்தனா... கீர்த்தனா...

அன்னையின் அழைப்பு தான் மீண்டும் மீண்டும் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. ம்மா திரும்பவும் அப்பிடி கூப்பிடமாட்டயாம்மா.
ரொம்ப கஷ்டமா இருக்குமா. நீ இருந்தப்போ எதுவும் தெரியல. ஆனா இப்போ... என்ன மட்டும் ஏன் மா இவ்வளவு கஷ்டத்தை அனுபவின்னு விட்டுட்டு போய்ட்டீங்க. முடியலம்மா. கண்ணின் ஓரம் நீர்த்துளிக்க துடைத்தபடி அவனருகில் அமர்ந்தார் அவனின் மாமா வேலவன்.

என்ன தனா இப்பிடி சின்னபுள்ள மாதிரி அழுதுகிட்டு. அதான் மாமா இருக்கேன்ல. அழுகக்கூடாதுப்பா..

முடியல மாமா.

சரி சரி. எழுந்திரு கண்ணை தொடச்சுக்கோ. ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.

தேற்றிக்கொண்டு நிமிர்ந்தவன், சொல்லுங்க மாமா என்ன விஷயம்.

எல்லாம் நல்ல விஷயம் தான் தனா. நேத்து நம்ம விஷயமா என்னோட சிநேகிதன் கிட்ட பேசினேன். அவன் நம்ம ரெண்டு பேரையும் நாளைக்கு அவன் வீட்டுக்கு வர சொல்லி இருக்கான். நாம இன்னிக்கி ராத்திரியே கிளம்பினா தான் அங்க போய் சேர முடியும். சீக்கிரம் வா வீட்டுக்கு போய்ட்டு விவரத்தை சொல்லிட்டு கிளம்பத் தயாராகனும்.

இவங்களாவது நமக்கு நல்ல வழி சொல்லுவாங்களா மாமா. இதுவரை பார்த்த எல்லாரும் காசத்தான் கேக்குறாங்க. ஆனா ஒரு வழியும் கிடைக்கலையே மாமா.

நம்பிக்கையா வா தனா.. எனக்கு என்னமோ நல்லது நடக்கும்னு தோணுது. போய் தான் பார்ப்போமே.

சரிங்க மாமா. ஆனா ஒரு உதவி மாமா.

சொல்லு தனா. நாமளும் வெளிய போறோம். வீட்டுலயும் கவனிக்க ஆள் வேணும். அதனால வேற எங்கயாவது தங்க வச்சு மச்சானை பார்த்துக்க சொல்லுறீங்களா. கேக்க தயக்கமா தான் இருக்கு. ஆனா இப்போதைக்கு உங்களை விட்டா எனக்கு யார் மாமா இருக்கா.

சரிதான் தனா... ஆனா அந்த வீட்டுக்கு..... யாராவது... போய்ட்டா?

சாரி மாமா... கேட்டது தப்பு தான்.

அட என்ன தனா நீ. வேணும்னா ஒன்னு செய்யலாம்... எல்லாரையும் நம்ம மச்சு வீட்டுக்கு அனுப்பி அங்க தங்கவச்சுடலாம். பெரியவன் இல்லைனாலும் சின்னவன் உதவியா இருந்துக்கிடுவான். இந்த வீட்ட பூட்டி நாமளே சாவிய கொண்டு போய்டலாம். சரிதானே தனா.

சரி மாமா. நாம போய் அந்த வேலைய பார்க்கலாம் வாங்க.

அவனது வண்டியில் இல்லம் வந்து சேர, குழந்தைகள் அழும் சத்தம் தான் முதலில் கேட்டது. கலங்கிய மனதை தேற்றியபடி உள்ளே வந்தவன் நேரே சமையலறைக்கு சென்று பாலை காய்ச்சி புட்டிகளில் எடுத்து வந்தான். நேரே முதல் அறைக்கு சென்றவன் அங்கு அழுது கொண்டிருக்கும் குழந்தையை தூக்கி கொண்டு மீண்டும் மூன்றாவது அறையில் மற்றொரு குழந்தையையும் தூக்கிக் கொண்டு வந்து அமர்ந்தான். இரு குழந்தைகளையும் மடியில் வைத்து பாலை புகட்ட, பரிதவிப்பாய் பாலை குடித்தன அந்த சிசுக்கள். பசியில் அழும் குழந்தைகளை கூட கவனிக்க முடியா சூழ்நிலை.

அதை நினைத்தே தாங்க முடியாத வேதனை கீர்த்தனனுக்கு. இந்நிலையில் எப்படி இவர்களை விட்டு விட்டு செல்ல என்று யோசித்தாலும் தீர்வை அடைவதே முக்கியம் என கிளம்ப தயாரானான்.

ஊரில் தனக்கு வேண்டப்பட்ட இரு பாட்டிகளை குழந்தைகளை பார்த்துக் கொள்ள அழைத்து வந்தான். மற்றவர்களையும் தயார்படுத்தி மச்சு வீட்டில் தங்கவைத்தான். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கி கொடுத்து விட்டு.. இரவு வேலனின் மகனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு வேலனுடன் பயணத்தை தொடங்கினான் தனா.

இவர்கள் கிளம்பி சென்ற சில மணி நேரங்களில் கீர்த்தனனின் வீட்டுக்குள் நுழைந்த அவன் சுற்றிலும் உள்ள அறைகளை நோட்டமிட்டபடி கீர்த்தனனின் அறைக்குள் நுழைந்து கொண்டுவந்திருந்த சாவியை வைத்து அந்த கதவை திறந்து சில ரூபாய் நோட்டு கட்டுகளை எடுத்துக் கொண்டு மீண்டும் பூட்டி விட்டு கிளம்பினான்.

இரண்டு நாள் சென்றது. வழி தெரியா அலைந்தவனுக்கு கிடைத்த சிறு புள்ளி வெளிச்சமாக தனாவின் கேள்விக்கு விடை காண சிறு வழி கிடைத்த நிம்மதியில் வேலனும் தானாவும் ஊர் நுழைய. அன்று கீர்த்தனனின் வீட்டில் நுழைந்து பணத்தை எடுத்தவன் தூக்கத்திலேயே உயிரை விட்டிருந்தான்.

நிம்மதியாய் வந்து சேர்ந்த வேலனுக்கும் தனாவுக்கும் அந்த நிம்மதி போன இடம் தெரியவில்லை. காரணம் இறந்து கிடந்தவன் வேலனின் மூத்த மகன் திருக்குமரன். மேலும் தனாவின் மூத்த அக்காவின் கணவனும் அவனே.

நேரம் கூடி விட்டதாய் நினைத்து பணத்தை எடுத்த குமரன், மரணம் கூடி வருமென கனவா கண்டான்.

அவனுக்கு தான் தெரியாது. ஆனால் காயமின்றி காரணமின்றி இறந்தவனை பார்த்ததும் விவரமறிந்த இருவரும் ஓடி சென்று பார்க்க அவர்களுக்கு புரிந்து போனது. இது அவனாக தானே தேடிய மரணம் என்று.

காரணம் அறிந்த தனாவும் வேலனும் அதிர்ந்து போனார்கள். அடுத்தடுத்த மரணங்கள். வழி அறிந்தும் போக முடியா சூழ்நிலை என இருவரும் அமைதியாய் அமர்ந்து விட்டனர். அதிலும் புத்திரனை இழந்த சோகம் வேலனை வெகுவாய் தாக்க... மீண்டவனாய் காரியம் அனைத்தையும் தனா தான் செய்தான்.

அக்காவின் கண்ணீரும் புலம்பலும் அவனுக்கும் கண்ணீர் சுரக்க வைத்தது. இரு பிள்ளைகளோடு இனி அக்கா என்ன செய்வாள். நம் குடும்பத்திற்கு இனி இது தான் நிலையா?.... போதும் சாமி இனியொரு மரணம் வேண்டவே வேண்டாம். தாங்க என் மனதுக்கும் சக்தியில்லை. உடலுக்கும் சக்தியில்லை என நினைப்பவனுக்கு இன்னுமொரு பெரும் இடி காத்துக் கொண்டிருப்பதை யார் சொல்வது.

ஆறாவது மரணம் யாருக்கு?... குமரனுக்கு முன் இறந்து போன அந்த நான்கு பேர் யார் யார்?



விடை தேடி பயணம் தொடரும்....

Prabhaas..
 
Top