Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

?எனதுயிரே ?

Advertisement

Nilan

New member
Member
???எனதுயிரே ???

நான் முதன் முதலாக தொடர்கதை எழுத ஆரம்பிக்கிறேன், இது என் முதல் கதை
இதனுடைய முன்னுரையாக...... இந்த கதையில் இரண்டுஜோடிகள்....இந்த ஜோடிகளின் காதல் எப்படிப்பட்டது
காதலா ? மோதலா பார்க்கப்போகிறோம்
நான்கு பேரும் தங்கள் உயிரை கண்டுகொண்டார்களா.......? இல்லையா...? என்று காணப்போகிறோம் ஏதேனும் தவறுகள் இருப்பின் பெரிய மனது பண்ணி மன்னிக்கவும் உங்களின் ஆதரவுகளை என்றுமே வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.......

முதல் அத்தியாயம்

முதல் ஜோடி அனழேந்தி
சுபாலெட்சுமி
இரண்டாவது ஜோடி விஸ்ணு வர்தன்
சாதனலெட்சுமி

ஹீரோவின் தந்தை பரசுராம் தி கிரேட் மில்லியன் ஓனரின் ஒரே வாரிசு ஆதித்ய குரூப்ஸ் பல நிறுவனங்களை
உள்ளடக்கிய மிக பெரிய நிறுவனம் எந்திர உதிரிபாகங்களை மையமாக கொண்டு இன்போர்ட், எஸ்ப்போர்ட் என்று விற்பனையில் அயல்நாடுகளில் வரை......தரமான உதிரிப்பாகங்களை கிடைப்பதால்..... அவர்களின் நிறுவனம் நன்மதிப்பில் உயர்ந்து நிற்கிறது,...... பரசுராமின் குடும்பம் பற்றி சிறிது காண்போம் பரசுராம் விசாலாட்சி தம்பதியினர்க்கு மூன்று ரெத்தினங்கள் நெடுஞ்செழியன், அனழேந்தி, சாதனலெட்சுமி....
முதல் மகன் அக்ரி படிப்பு முடித்து விட்டு விவசாயத்தில் புதிய புதிய பயிர்களை இட்டு ஆராய்ச்சி செய்து அதனால் சிலருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கிறான்..... அவனின் மனைவி குணவதி பெயருக்கு ஏற்றாற்போன்று குணமும் இவர்களுக்கு இரண்டு முத்துக்கள் ஒன்று ராகவன், ராகவி ஒரு வயது வித்தியாசம் தான்.....
அடுத்து நம் ஹீரோ அனழேந்தி ஆஸ்திரேலியா வில் MS படித்து விட்டு அங்கேயே விஷ்ணுஆலன் என்ற நிறுவனத்தின் உரிமையாளராக ஒன் ஆஃப் தி பார்ட்னர்ச்சிப் சூப்பர் கம்ப்யூட்டர் சம்மந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளான் அட்வான்ஸ் டு மாடல் பார்ட்ஸ் உருவாக்கும் முயற்சியில் இருக்கிறான்....
ஹீரோவை பற்றி இவ்வளவுதான என்று கேட்பது புரிகிறது... முறுக்கேறிய புஜங்கள் ஆண்மையின் மிடுக்கோடு நடந்து சென்றால் அவன் பின் சுற்றும் பெண் ரசிகைகள் ஏராளம் ஆனால் அவனோ கருமமே கண்ணாக தன் ஓட்டத்தை அதாவது அவன் நடக்கும் நடையில் வேகம் ஸ்டைல் என்று கவர்கின்றன அதிலும் அவனது அலட்சிய பார்வை பெண்களை வசீகரிக்கின்றன...... கோதுமை நிறம் அவனின் தேகத்துக்கு இன்னும் மெருகேற்றுகிறது..... எதையும் ஆழ்ந்து சிந்திக்கும் திறன், நுணுக்கமான அறிவையும் ஆராய்ந்தே முடிவெடுக்கும் திறமையை கண்டு ஒவ்வொரும் வியந்து நோக்கும் வண்ணம் இருக்கும்..... செயல் திறன் மூலம் உயர்ந்து நிற்கிறான் மற்ற துறையில் உள்ளவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்.... அயல்நாடுகளில் அனழேந்தி என்ற பெயரை கேட்டாலே சும்மா கிடுகிடுங்கும் அவனுக்கு தோல்வி என்பதே கிடையாது..... தன் குடும்பத்தின் மீது மிகுந்த பற்றும், அதீத
அன்பு க்கொண்டவன்.....
அடுத்து நம்கதையின் இரண்டாவது ஹீரோயின் சாதனலெட்சுமி என்கிற துறுதுறு அழகி அவள் MCA முதலாமாண்டு படிக்கும் பெண் அழகிய தலைமுடி இடைத்தாண்டி நின்றது கொடிபோன்று உடல்வாகு.....பால் நிறமேனியை உடையவள் சுட்டிப்பெண் மட்டும் இல்லை வால் இல்லாத பட்டாம் பூச்சி அவள் இருக்கும் இடம் சிரிப்பு கும்மாளமும் நிறைந்தே காணப்படும் கோவம் என்றால் அறியாத பாலகி அவளிடம் கோவமாக பேசுவது யார் என்றாலும் கடையில் வயிறு குலுங்க சிரித்துவிடுவார்கள் அவ்வளவு ரகளை பட்டாசு.????
அறிவு அழகும் சேர்ந்த பேரழகு மொத்தத்தில் கடைக்குட்டி புல்புல்.....

ஹீரோவின் தாய்மாமன் குடும்பம் முதலில் பரசுராமின் தொழித்துறை நண்பரான அருணன் என்பவர் இவரின் சொந்த மச்சானும் கூட சர்மா குரூப்ஸ் என்ற மென்பொருள் நிறுவனம் சிறப்பாக நடத்தி வருகிறார் அருணன் அருள்விழி பிள்ளைகள் ஆநிரன் ஆருத்ரா இவர்கள் குடும்பம்... தந்தையோடு சேர்ந்து நிறுவனத்தில் புதிய முயற்சிகள் புகுத்தி அவர் பல வருடங்களாக உழைத்ததை சர்வசாதாரணமாக மூன்ரே வருடத்தில் லாபத்தை ஈட்டினான் என்ற பெருமை உடையவன்... ஆநிரன் ஆருத்ரா பற்றி சொல்ல வேண்டும் என்றால் எதிலும் பிடிவாதம் குணம் தான் நினைத்ததை சாதித்து நடத்தி முடிக்கும் குணம் உடையவள்...
அமெரிக்காவில் மேற்படிப்புக்கு சென்றவள் அங்கே நல்லா வேலையுடன் கூடிய படிப்பையும் படிக்கிறாள்...இவரை பற்றி பிறகு காண்போம்.. முக்கிய கதாபாத்திரம் இந்த ஆருத்ரா.... போக போக தெரியும்...
இந்த இரு குடும்பத்துக்கு பொதுவான எதிரி M.L.A., ஏகாம்பரம் இவரின் தொழில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து பல இல்லீகல் தொழிலாக சட்டத்துக்கு புறம்பாக நடத்தி வருகிறார்...

இவரின் புதல்வன் பரதன், வரதன்...
வரதன் அமைதியான குணம் கொண்டவன் சொந்தமாக மில் தொழில் நடத்தி வருகிறான் ....நேர்மையானவன்...

பரதன் அமெரிக்காவில் வில் படித்துவிட்டு அங்கேயே பிஸ்னஸ் என்ற பெயரில் எல்லா நிறுவனங்களின் தன் கைகுள் அடக்கி ஆளும் சர்வாதிகாரம் படைத்தவன்... கிரிமினல் மைன்ட் அதே நேரம் அதிபுத்திசாலியும் கூட...
அவன் நல்லவனாக இருந்தால் அவனை போன்ற சிறந்த மனிதனை பார்க்க முடியாது.....

ஆனால் தன் தொழிலை உயர்த்த குறுக்கு வழியில் செல்பவன்...தந்தை எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயுமாம்... இவன் அதையும் தாண்டும் வல்லமை படைத்தவன்....

இந்த ஏகாம்பரம் செய்யும் தொழில்கள் அயல் நாடுகள் வரை தன் தொழில் நீண்டு உள்ளது மிகுந்த வரவேற்பு இருப்பதால் நானே ராஜா நானே மந்திரி என்ற கர்வம் கொண்டவன்... இறுமாப்போடு என் தொழிலையும் எவனாலும் முறியடிக்க முடியாது....

என்று மார்தட்டி கூறுகிறான் அவனிடம் மாட்டிய ஒரு பழி ஆட்டிடம்... சிறிது நேரத்தில் உயிர் பரிதாபமாக அரக்கன் கையால் சிதைய போவது தெரியாமல் மயக்க நிலையில் கிடந்தது... தலையில் இருந்து வடியும் இரத்தம் முழுவதும் முகத்தை மறைக்க விழுந்து கிடந்தான்... யார் அவன்??......

இவங்க யார் னு உங்களுக்கு தெரியும் சிறிய ஒரு அறிமுகம் சுபாலெட்சுமியை பார்க்கப்போனால் சுருண்ட கேசம் இடைவரை.... ஒல்லியான சிவந்தநிறதேகம் உடையவள் ஆழ்ந்து அறியும் ஆற்றல் கொண்டவள்அமைதியான குணம் சீண்டாத வரை..... அப்புறம் நான் சொல்லமாட்டேன் ????? MBA முதலாமாண்டு முதுகலை பயிலும் பெண் தன்னை வளர்த்தவரின் மேல் அதீத பாசமுடையவள் அவர் சொல்லே வேதவாக்கு அன்புக்கு எப்போதும் அடிமை அவளின் குணம்....

விஷ்ணுவர்தன் நம்ம கதையின் இரண்டாவது ஹீரோ... இவரைப்பற்றி கூற போனால் கிரேக்க சிற்பம் தோற்று விடும்... அளவிற்கு ஆணழகன்.......பெண்களை பார்வையால் விலக்கி நிற்க வைப்பவன்
முகம் மிகவும் கடுமையான மருந்துக்கும் புன்னகை என்பது கிடையாது, கோவத்தின் மறு உருவம்... விஷ்ணுவர்தன் such a wonderfull பிசினஸ் மேன்.... தன் நண்பனின் வெற்றிக்கு இவன் வித்திடுவான்... அவன் யார்?...
வேற யாரும் இல்லை அனழேந்தியேதான்...நல்லா நண்பர்கள்...

விஷ்ணுவின் தந்தை தாய் அவனது பன்னிரண்டாவது வயதில் ஒரு விபத்தில் இறந்து போகின்றனர்.. தனி மரமாக நிற்கும் அவனுக்கு தூரத்து உறவான பரசுராம் மாமாவின் வீட்டிற்கு தஞ்சம் புகுகிறான்...

நன்முறையில் படித்துவிட்டு மேற்படிப்புக்கு ஆஸ்திரேலியா சென்று படித்து அங்கே அவனுக்கு என்று பெரிய நிறுவனத்தை ஏற்படுத்தி தன் அடையாளத்தை நிலை நிறுத்துகிறான் தனி ஒருவனாக!!!!
தொடரும்.... ?

சிறு முன்னோட்டம் :எம். எல். ஏ ஏகாம்பரத்தை உளவு பார்த்த ரகசிய நபரை கொலை செய்கிறான்.........
தன்னை எதிர்க்க இந்த உலகத்தில் எவனும் இல்லை என்று சவால் விடுகிறான்... இரண்டாவது நம்ம ஹீரோ அனலேந்தி சர்ப்ரைஸ் ஆக தனது சொந்த மண்ணில் கால் வைத்த உடன் மகிழ்வுடன் மூச்சை இழுத்து சுவாசிக்கிறான்.... இனிmel தான் ஆட்டம் ஆரம்பம்....
 
:D :p :D
உங்களுடைய "எனதுயிரே"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
நிலன் டியர்
 
Last edited:
Top