Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💜20💜 - THE END

Rudhra Vikram

Member
Member
தன் எதிரே நின்ற உருவத்தைப் பார்த்தவள், இரு துளி கண்ணீரைச் சிந்த, அது தரையைத் தொட்டு 'பிளிங்க்' என்ற சத்தத்தோடு விழுந்தது.

கார்த்தி... ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணியுடன் நின்று கொண்டிருந்தான்.

பார்த்ததுமே கார்த்தியைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும் போல் இருந்தது ஏஞ்சலுக்கு. ஆனால் அழவில்லை. 'இத்தனை நாட்களாய் ஏன் வரவில்லை' என்று திட்டி அடிப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவுமில்லை. அதற்கு காரணமும் உண்டு.

" எப்டி இருக்க அண்ணா?" என்றாள் ஒரு வித குரலில். அந்த குரலில் எதைக் கண்டானோ தெரியவில்லை அவளிடம்...

" உன்கிட்ட பேசனும் ஏஞ்சல்... உள்ள வரவா... இவங்களும்..." என்று அந்த பெண்மணியைக் கைக் காட்டினான் கார்த்தி.

அவரை அப்போதே கவனித்தாள் ஏஞ்சல்‌. நாற்பது வயது முகத்தில் வெண்ணிற ‌ஆடையை தலை வரை‌ போர்த்தி மீதம் தெரிந்த அவர் முகத்தில்‌ சாந்தம் மட்டுமே தழுவியிருந்தது.

" உள்ள வாங்க..." என்றாள் அவள்.

உள்ளே வந்தவள் வித்தார்த் அங்கு இல்லாததைக் கண்டு‌ கண்களைச் சுழல விட, பின்னிருந்த கார்த்தி...

" ஏஞ்சல்... யார தேடுற அங்க... ? " என்றான்.

" இல்ல... அது... அது.‌‌... ஜாக்கி...." என்றாதும் ஒரு கர்டைனில் மறைத்துக் கொண்ட தன் உடலை மனமே இன்றி புறம் தள்ளி, அம்மூவருக்கும் காட்சி கொடுத்தது ஜாக்கி.

மூவரும் கிடைத்த இடங்களில் அமர்ந்து கொள்ள, கார்த்தி தொடர்ந்தான்.

" இவங்க தான் மிஸ். சைலஜா, நீ தங்கின ஹோமோட உண்மையான வார்டன். " என்றதும் ஒன்றும் புரியாமல் விழித்தாள் ஏஞ்சல்.

" என்ன அண்ணா சொல்ற? இவங்க சைலஜாவா....? " அவள் குழப்பமடைவாள் என்று நன்றாகவே தெரிந்திருந்தது அவனுக்கு. அவளை பேச விடாமல் கூறத் துவங்கினான்.

" ஹம். மிஸ். சைலஜா தான் உண்மையான வார்டன்" அந்த உண்மையில் அழுத்தம் கூடியிருந்தது இப்போது.
அவன் கண்கள் முழுக்க வலியோடு கூறத் துவங்கினான்.

" உ... உனக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும் ஏஞ்சல். வி.. வித்தார்த்க்கு என்ன ஆச்சுனு. நீயே கண்டுபிடிக்கலனாலும் எதாவது ஒரு வழியில அவன பத்தி உனக்கு தெரிஞ்சிருக்கும்ன்ற நம்பிக்கைல தான் வந்தேன். இப்ப உன் முகத்த பார்த்துமே தெரிஞ்சிருச்சு. இப்ப நான் இங்க உன் அண்ணனா வரல. இன்ஸ்பெக்டர் கார்த்தியா தான் வந்திருக்கேன். "

அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே சில காவலர்கள் உள் நுழைய அதில் ஒருவனை மட்டும் உள்ளே வர சொல்லி விட்டு மற்றவர்களை வெளியே அனுப்பி வைத்தான் கார்த்தி.

" இவர் மிஸ்டர். வருண். என்னோட காலேஜ் மேட் தான். அவர் தான் வித்தார்த்தோட கேஸ ஹேன்டில் பண்றார். அப்பவே என்கிட்ட கால் பண்ணி சொன்னார்... " சிறிது கண் கலங்கி விட்டான் அவன். அடுத்த நடந்தவைகளை கூறும் அளவு அவன் மனம் வலியதாக இல்லை போலும்.

அவனைப் புரிந்து கொண்டு வருண் தொடர்ந்தான் " வித்தார்த் அண்ட் தக்ஷன் இரண்டு பேருக்கும் இருந்த க்லாஷ இன்வஸ்டிகேட் பண்ண ஆரம்பிச்சோம். நாங்க இன்வஸ்டிகேட் பண்ணங்குள்ள யாரோ பிரஸ்க்கு அவர் போதை பொருள் கடத்தலுக்கு உடந்தை; தலைமறைவு அது இதுனு கதை கட்டிட்டாங்க. தக்ஷன் கண்ட்ரோல்ல இருந்ததால
எங்களால அப்ப எதுவும் செய்ய முடியல.
இப்ப தான் ஒவ்வொரு முடிச்சா அவிழ்க்க
ஆரம்பிச்சோம்" என்று கார்த்தியை ஒரு முறை ஏறிட்டான்.

" ஒரு பக்கம் அந்த நியூஸ் வெளியானது எப்படி? யாராலனு ஓடுச்சு. இன்னொரு பக்கம் விசாரிக்கும் போது தான் வித்தார்த் அண்ட் தக்ஷன் இறந்த இடத்துலையே புதைக்கப் பட்டிருக்காங்கனு தெரிய வந்துச்சு. அங்க தோண்டும் போது தான் பெரிய அதிர்ச்சி. வித்தார்த் மாதிரி அந்த தக்ஷன் தன்னை எதிர்த்தவன் அத்தனை பேரையும் அந்த மண்ணுக்கடியில தள்ளிட்டான். அத்தனை டெட் பாடிஸ். இதெல்லாம் தக்ஷனுக்கு எதிரானதுன்னு ப்ரூஃப் பண்ணியாச்சு. அப்ப தான் எங்களுக்கு அந்த நியூஸ யார் வந்து கொடுத்தாங்கனு அங்க வேலை செய்ற ஒரு எம்ப்லாயி சொன்னத வைச்சு தேட ஆரம்பிக்க... நீங்க இருந்த ஹோமோட வார்டர்னு தெரிய வந்தது. அது சைலஜா கிடையாது. ஒரு ட்ரக் டீலர். அவளை வச்சு தான் தக்ஷன் ட்ரக் டீலிங் எல்லாம் பண்ணிருக்கான். இன்னைக்கு மார்னிங் தான் அவங்கல வைச்சு பிடிச்சோம். அந்த போலி சைலஜா உங்களோட பொருட்கள்ல வித்தார்த் சாரோட பேர பார்த்ததால உங்ககிட்ட ரூடா நடந்து வெளிய அனுப்ப பார்த்திருக்காங்க. எங்க நீங்களும் எங்கள்ல ஒருத்தரோரு நினைச்சு.
இதெல்லாம் உங்க சிஸ்டர் மேரி சொல்லி தான் தெரியும். வித்தார்த் இஸ் ஆல்சோ எ ஃபிரண்ட் ஆஃப் மைன். இப்ப கேஸ் கம்ப்ளீட்லி சால்வ்டு. அந்த ட்ரக் டீலர என்னென்ன செய்யனுமோ அத்தனையும் செஞ்சு வாழ்க்கை பூரா ஜெயில்லையே போட வேண்டியது தான் மிச்சம்.
பை த வே, இவங்க தான் மிஸ். சைலஜா. இவங்கல கடத்தி வச்சு கொடுமை பண்ணிருந்திருக்கா அந்த
க்ராதகி. இவங்கல முதல் நாள் ஹோம்க்கு வர வழியிலையே கடத்தினதால யாருக்கும் எந்த சந்தேகமும் வரல. எப்படியோ இவங்க இப்ப ஃபைன். " என்று பெருமூச்சு விட்டான் வருண்.

" நீ திரும்ப ஹோம்க்கு வரணும் ஏஞ்சல். இதை சொல்ல தான் நான் இங்க வந்தேன். கேஸ் விஷயமா நானும் கோர்ட் அது இதுனு போக வேண்டி வரும். நீ இருந்தா தான் கரெக்டா இருக்கும்." என்றார் சைலஜா.

" கண்டிப்பா.. " என தலையை ஆட்டினாள் ஏஞ்சல். கார்த்தியும் அவளைப் பார்த்து கையசைத்து பால்கனிக்கு நகர்ந்தான்.

ஏஞ்சலும் எழுத்து வரவே கார்த்தியின் இயல்பு முகம் மாறியது. அவன் முகத்தில் இப்போது முற்றிலும் வலி மட்டுமே நிறைந்திருந்தது. ஏஞ்சல் அறியாததல்ல அவனால் அவ்வளவு நேரம் நடிக்க முடியாது என்பது.

" என்னால தானே ஏஞ்சல்.
நான் சொல்லி தானே அவன் இதுல போய் மாட்டி... அவன் உயிர நானே எடுத்துட்டேன் ஏஞ்சல்... கடைசியா அவன்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல. அவனோட உயிரில்லாத உடம்ப பார்க்கும் போதே.... செ.. செத்துறலாம் போல இருந்துச்சு ஏஞ்சல்... நா... நானே என் ஃபிரண்ட் இறக்க காரணம் ஆகிட்டேன்... " இத்தனையும் அவன் வாய் வழியாய் கூறவில்லை என்றாலும் அவன் முக பாவனைகள் அச்சு அகலாது காட்டின.

கண்ணீரைக் கீழே விழ விடாது இழுத்து பிடித்து நிறுத்தி எங்கோ வெறித்தான் கார்த்தி.

" நீ ரொம்ப லக்கி அண்ணா... " என்றாள் ஏஞ்சல். கார்த்தி புரியாமல் அவளைப் பார்க்க, " என்ன பார்க்கிற. நீ அவனோட ஃபிரண்டா எத்தனையோ வருசங்கள் இருந்திருக்க... ஆனா நான்... " என்று நிறுத்தியவள் அவனிடம் திரும்பி தன் கண்களையும் துடைத்துக் கொண்டு அவனது கலங்கிய விதிகளையும் துடைத்து விட்டாள்.

" அண்ணா... மிஸ். சைலஜா ஹோம்க்கு போகலாம்னு சொன்னாங்கல்ல... வா வா... எனக்கு வந்து ஹெல்ப் பண்ணு... அங்க இருக்க குழந்தைங்க கூட விளையாண்டு பல நாள் ஆகுது... " என அவன் கையை பிடித்து இழுத்து சென்று அவனை வேலை வாங்க தொடங்கினாள்.
போதாததிற்கு வருணையும் உள்ளே இழுத்திருந்தாள்.

எப்படியோ ஒரு வழியாக அனைத்தையும் முடித்துக் கொண்டு கிளம்பி அமர்ந்திருந்தாள் ஏஞ்சல்.
அப்போதே வித்தார்த்தின் நினைவு வந்தது. அவன் எங்கு சென்றான் என்றும் தெரியவில்லை. சுற்றி முற்றி பார்த்து விட்டு தனது கழுத்தில் கிடந்த அந்த செயினைத் திறந்து அதைப் பார்த்த வண்ணம் இருந்தாள்.

அவளது காலில் ஏதோ மோதுவது போல இருக்க ஜாக்கி தான் அவளது காலைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. தன்னை அழைத்து செல்ல தான் வந்திருக்கிறது என புரிந்து கொண்டு ஒவ்வொரு நினைவையும் கண் முன் ஓட விட்டபடி நடக்கலானாள்.

💜💜

பல மாதங்களுக்கு பிறகு....

" டேய் நான் சொன்னா கேட்ப தானே... " என்றவள் தன்னை ரவுண்டு கட்டி உட்கார்ந்திருந்த வாண்டுகளிடம் கேட்க அவர்களோ கோரஸாக
" மாட்டோம் மாட்டோம்... " என அலறினர்.

" டேய்... அப்பறம் உங்க ரேங்க் கார்ட்ல நான் சைன் போட மாட்டேன் பார்த்துகோங்க. " என மிரட்டல் விடுத்தாள் ஏஞ்சல்.

" அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம். போ மா.. " என ஒருவன் நக்கலடிக்க அவனை எட்டி பார்த்தவள் விரல்களால் அழைத்தாள்.

அவனும் அதே மாடுலேஷனில் வந்து நின்று," என்ன? " என்றான்.

அவன் காதைப் பிடித்து திருகியவள், " ஏன்டா, ஏபிசிடி கூட ஒழுங்கா சொல்ல தெரியாதவன் என்ன கலாய்க்க வரியா... என் ரேஞ்ச் என்ன ஆகுறது ... போடா போய் லைன்ல நில்லு டா... நான் வரிசையா கலாய்க்கிறேன்." என்று அவனைத் துரத்தி விட இவளின் அராஜகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சைலஜா குச்சியுடன் உள்ளே நுழைந்து அவளது காதைத் திருகினார்.

மற்ற குள்ள வாண்டுகள் எல்லாம் அவளின் நிலையைப் பார்த்து சிரிக்க அவர்களுக்கே டஃப் கொடுப்பது போல சிரித்துக் கொண்டிருந்த ஜாக்கியை ஓரக் கண்ணால் முறைத்து விட்டு அவருடன் நடந்தாள்.

" ஐயோ... அம்மா வலிக்குது.... " என்றபடியே ஓடி வர அவளை தனது அறைக்கு அழைத்து வந்து நிறுத்தியவர் அவளைப் பார்த்து முறைத்தபடி நின்றார்.

" ஏன் டா முறைக்கிறாங்க? " என ஒன்றும் அறியாத ஜாக்கியிடம் கண்ணால் வினவ அதுவோ திருதிருவென விழித்து பார்த்து சைலஜாவைக் கண் காட்டியது.

" விளையாட்டு தனமாவே இருக்க ஏஞ்சல் நீ. இன்னைக்கு என்ன
நாள்? " என்று சிறிது வருத்தம் கலந்த குரலில் கேட்டார் அவர்.

அவளுக்கும் தெரியாமல் இல்லை. அவர் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மலர் கொத்தை எடுத்துக் கொண்டு,

" அழகா இருக்கே எங்க வாங்குனிங்க மா? " என்றாள்.

வலித்தாலும் சிரித்துக் கொண்டே கேட்டால் அவள். வலியை வெளியில் காட்டிக் கொள்ளாமல் எப்போதும் சிரித்த முகமாக இருக்க நினைக்கும் அவளைப் பற்றி நன்றாக அறிந்தவர் சைலஜா.

அவள் மெதுவாக நடந்தபடி அவ்விடத்திற்கு வந்திருந்தாள்.

ஆம். அது வித்தார்த்தின் கல்லறை தான்.

அந்த மலர் கொத்தை வைத்து விட்டு அங்கேயே அமர்ந்து கொள்ள அவள் வந்திருப்பாள் என தெரிந்ததும் கார்த்தி, மேரி, ஜான்சன் அனைவரும் தங்கள் மலர் வளையங்களை வைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தனர். ஏஞ்சலுக்கும் அது தேவைப்பட்டதாக இருந்தது.

ஜாக்கியை தடவிக் கொடுத்தவாறே அக்கல்லறையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
கடைசியாக அவன் அங்கிருந்து மாயமானது நினைவில் வந்தது. தனது கழுத்தில் இன்னமும் அந்த 'பளிச்' மாறாமல் மின்னிக் கொண்டிருந்த செயினை முத்தமிட்டாள்.

எங்கோ ஒரு மூலையில் இருந்த அவனும் அந்த முத்தத்தைப் பெற்றுக் கொள்வான் என நம்பினாள் அவள்.

ஆம். ஆனால், அவனும் அவ்விடத்திலேயே இருந்தான். ஆனால் அவள் தன்னை அழைப்பால் என்ற நம்பிக்கையில் காத்திருந்தான். அவளும் அவ்வாறே.

எப்பொழுதாவது அவன் வருவான் என அவளும் ஒவ்வொரு முறையும் வந்து அங்கே அமர்ந்து விடுவாள்...

வருவான் என அவளும்...

அழைப்பால் என அவனும்... என்று...

💜அழைப்பாயா💜 முடிவடைகிறது.

முற்றும்...

Thank you so much..

With Luv❤, Rudhra.
 
Top