Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

?19?

Advertisement

Rudhra Vikram

Member
Member
' நான் இப்பவே சித்துவ... இல்ல... என் வி... வித்.... வித்தார்த்த பார்க்கனும்... ' என்றவள் விழிகள் ஸ்கூபியைத் தீண்டின.

வீட்டிற்கு வந்தவளின் நினைவுகளில் மொத்தமும் வித்தார்த் மட்டுமே நிரம்பி இருந்தான். அவனும் ரோஷினியும் ஓடித் திரிந்த இடமல்லவா இது... என எண்ணும் போதே, கோடி நினைவுகள் அவளது மனக்கண் முன் தோன்றின.

காதல் வலி உச்சத்தைத் தொட கதறி அழும் மனது, அவன் உயிரோடு இல்லை என்பதை உணர்ந்ததாலோ எண்ணவோ நடை பிணத்தைப் போல உணர்ச்சி துடைத்து எழுந்தாள் அவள்.

" வி... வித்.... வித்தார்த்.... "

அதே உணர்ச்சி துடைத்த ஏஞ்சலின் குரல்.

அந்த அறையிலேயே அருவமாய் நின்றிருந்த வித்தார்த், அவளது குரலில் இருந்த கலக்கம் அவள் தன்னை அத்தனை காதலித்து இருப்பாள் என்று கனவிலும் எண்ணாத ஒரு ஆச்சரியம் அடைந்திருந்தான்.

" இங்க தானே இருக்க... " என்றது தான் தாமதம்... அதை ஜாக்கியும் உணர்ந்து கொண்டது போல இரண்டு முறை குரைத்தது.

கண்ணீர் நான் எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்து விடுவேன் என்று முட்டிக் கொண்டு நின்று பயம் காட்டியது.

உயிரை உரசி தீ மூட்டி அதில் குளிர் காய இவனுக்கு அத்தனை விருப்பமா? என்று எண்ணியவள் தான் காதலித்த குற்றத்திற்காக அவன் ஏன் கல்லறை செல்ல வேண்டும் என்று தன் மேல் பலி போட்டுக் கொண்டிருந்தாள்.

அவளது பிதற்றல் மொழிகள் யாவும் தனது செவியைத் தீண்டி, இல்லாத இதயத்தை நொறுக்குவது போல இருந்ததை அவனால் தடுக்க முடியவில்லை. அவள் முன் தோன்றியே ஆக வேண்டும் என்று எவரோ கட்டளை பிரபித்து போல ஏஞ்சல் முன் வந்து நின்றான் வித்தார்த்.

விழியோரம் வழியும் கண்ணீர் துளிகள் சொல்லும் கதைகள் கண்முன்னே உ(அ)ருவமாய் நின்றிருக்க....

ஒரு முறையேனும் அவனைப் பார்த்துவிட துடித்தவளின் இதயம் இப்போது நின்று விட கூடாதா என கெஞ்சுவதை அவள் விழி வழியே உள்வாங்கியவன்....

அவள் கண்ணீரைக் கூட துடைத்து விட முடியாமல் மௌனமாய் கதறினான்...

கண்களில் எழுதப்படாத கவிதையாக வலி நிறைந்த அவள் கண்ணீருக்கு காரணம் அவன் தான் என மொழிவது போல அதில் தெரிந்த தன் பிம்பத்தை வெறித்தான்... அவன்...

நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு நின்றவள், அவனைக் கண்ட நொடியே கேள்விகள் மனம் கேட்க, உதடுகள் மௌனமாக விடைகள் விழிகளில் உறைந்தன.

"நான் உன்னை எவ்ளோ விரும்பினேன் தெரியுமா டா உனக்கு? அதை நீ உணரலனாலும் பரவாயில்லை... என்ன விட்டு ஏன்டா போன... என்ன இப்டி தனியா விட்டுட்டு ஏன்டா போன..." என கதறி அழுதவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

சிலை போல நின்றிருந்தவள் வெடித்து அழத் துவங்கினாள்.

" கூட வாழ்ந்தா தான் காதல்னு இல்ல... நினைச்சிட்டே வாழ்ந்திரலாம்னு நான் தப்பா நினைச்சிட்டேன் டா... நினைச்சிட்டே வாழ்ற வலி... ம்ஹூம்... அப்ப தெரியல... என் கூட இருந்தும் என்னால உன்ன பார்க்க முடியல... உன் கூட சந்தோஷமா வாழனும்னு எவ்ளோ கனவு கண்டேன் தெரியுமா... யார் மேலேயும் வைக்காத அன்பு உன் மேல மட்டும்... உனக்குனு மட்டும் பொத்தி பொத்தி... பாதுகாத்து வச்சேன் டா.. அது உனக்கு தெரியுமா... இப்டி என்ன திரும்ப அனாதையா விட்டுட்டு போய்டீல.... "

அவளது ஒவ்வொரு சொல்லும் நெருஞ்சி முள்ளாய்த் தன்னைக் குத்திக் கிழிப்பதாக உணர்ந்தான் வித்தார்த்.

அவளது அன்பை மட்டுமே சுவாசிக்க நினைத்தவன், காற்றைக் கூட சுவாசிக்கும் திறனற்று அருவமாகிப் போனது விதி செய்த சூழ்ச்சியோ...

" கடல் அளவுக்கு என் மேல அன்பு வைச்சவ நீ என்றால், வானம் அளவு நான் வைச்ச காதல் உன் மேல ஏஞ்சல்... "

அவனது குரலில் இப்போது கலக்கத்தைத் துடைத்தெறிந்தாற் போல ஒலித்தது.

ஏஞ்சல் அவனை விசித்திரமாக பார்த்தாள்.

" உன் பார்வையோட அர்த்தம் புரியிது. எனக்கு எப்படியா இருந்தாலும் ஆயுசு முப்பதைத் தாண்டாதுனு எனக்கு நல்லா தெரியும்... மொதல்ல நீ விளையாட்டா தான் அப்டி பேசிட்டு இருந்தியோனு நினைச்சேன்... எனக்காக கண்ணீர் வடிச்சு வாழ்க்கைய தொலைக்கிற அளவு நான் வொர்த் இல்ல ஏஞ்சல். என்ன பத்தி நான் சொல்லாததுக்கும் காரணம் இது தான். வித்தார்த்த அதவாது, என்னை நீ மறக்கனும்னு தான் என் மேல நானே பழி போட்டுக்கிட்டேன். அப்பவும் நீ மாறுறதா இல்லனு தெரிஞ்சப்போ ஒரு பொண்ணு வாழ்க்கைய அழித்கிறோமோன்னு தோணுச்சு... நான் பண்ணது தப்பு தான் என்ன மன்னிச்சு.... "

அவன் தன் பேச்சிற்கு இடையில் எதையோ உணர, திரும்பி பார்த்தவன் அதிர்ச்சி அடைந்தான்.

அழுது அழுது வடிந்தவள் முற்றிலுமாய் வடித்து எடுக்கப் பட்டது போல தரையில் சரிந்து கிடந்தாள்.
***

அன்று காலை நன்றாகவே புலர்ந்திருந்தது. மேகம் மூடிய வானத்தில் இருந்து முகம் காட்ட துடித்தவனாய் ஆதவன் தோன்றி இருந்தான்.

சூரிய ஒளி ஜன்னலினூடே முகத்தில் பட்டு தூக்கத்தைக் கலைக்க, விடிந்து கொண்டிருந்ததை உணர்ந்த ஏஞ்சல் மெதுவாக கண்களை கசக்கினாள்.

கண்ணிற்கெதிரே அமர்ந்திருந்தவனைப் பார்த்து, " குட் மார்னிங் வித்து... " என்றாள் புன்னகையுடன்.

பின்னரே நடந்த சம்பவங்கள் அனைத்தும் கண் முன் நிழலாட, துள்ளி எழுந்தவள் அவனை முறைக்கத் துவங்கினாள்.

" இப்போ ஏன் என்ன முறைக்குற? போய் ப்ரஷ் பண்ணு முதல்ல... "
அவன் அவளைத் துரத்துவதிலேயே குறியாய் இருந்தான்.

" ஜாக்கி... நீ வா... " அதன் பிறகு அவள் பேசவே இல்லை.

கண்ணாடி முன் நின்று பல் துலக்கியவள், நன்றாக முகத்தைக் கழுவினாள்.

அவளது பார்வை நிலைக் கண்ணாடியில் விழுந்தது. அதனுள், ஒரு கோர உருவம் பல்லைத் திறந்து உன்மத்த
வெறியில் சிரித்துக்
கொண்டிருந்தது.

எத்தனையோ மாதிரியான கோர உருவங்களைக் கனவிலும், சிற்பிகளின் செதுக்கிவைத்த கற்பனைகளிலும் பார்த்திருக்கிறாள்.

ஆனால் இந்த மாதிரி ஒரு கோரத்தைக் கண்டதே இல்லை.

தானாக வந்த பயத்திற்கு நடுவே, உதித்தது அந்த எண்ணம்.

" என்ன செய்ற வி... சி... சித்து... எனக்கு இது பிடிக்கலை. இரிட்டேடிங்கா இருக்கு! " என்றாள் பயத்தை வெளிக் காட்டாமல்.

" அப்டியா? எனக்கு தெரிஞ்ச வரை ஏஞ்சல் இப்டி பேசியதே இல்ல... பேசவும் மாட்டா... " என்றான் அமைதியாய்.

" நான் ஏஞ்சல் இல்ல... " வெடுக்கென்று பதில் வந்தது அவளிடம் இருந்து.

அவள் பேசும் விதத்திலேயே அவள் எந்தளவு காயப்பட்டிருக்கிறாள் என்பது அவன் அறியாமல் இல்லை.

" சரி சரி... நேத்து நீ சரியாவே சாப்பிடலை. இப்ப வந்து சாப்பிடு... " என்றான் கட்டளையாய்.

" எனக்கு பசிக்கல... " என்றவள் அவனிடம் முகம் காட்டாது கீழிறங்கி வந்து சோஃபாவில் அமர்ந்தாள்.

" ம்ம்... ஹா.... என்ன வாசனை இது... செம்மையா இருக்கு... மேரி ஏதும் சமைச்சு வச்சிருப்பாலோ... " என்றபடி கிட்சனுள் நுழைந்தவள் சமைந்து நின்றாள்.

ஏற்கனவே சமைத்து வைக்கப்பட்டு இருந்தன பல வகை உணவுகள்.
அதிலும் குறிப்பாக, அவளுக்கு பிடித்த பிரியாணி...

" ஐஐஐஐ.... " என அதனருகில் ஓடியவளின் முன் வந்து நின்றான் வித்தார்த்.

அவனின் புருவத்தை உயர்த்தி பார்க்க, அவளோ எதுவும் பேசாமல் வந்து அமர்ந்தது கொண்டாள்.

" ஜாக்கி, எனக்கு ஒன்னும் அவங்க சமைச்சதெல்லாம் வேணாம்... " என்றவள் சிறிது இடைவேளைக்கு பிறகு,

" ஆனா... பிரியாணி மட்டும் வேணும்... " என்று ஒரு நிமிடமும் தாமதிக்காது, தட்டில் எடுத்து வைத்து உண்ணத் துவங்கினாள்.

எங்கே அவன் பிடுங்கி விடுவானோ என்ற பயத்துடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தவளை இதழோரம் அடக்கிய சிரிப்போடு பார்த்தான் அவன்.

ஜாக்கியோ "இவளைப் போய் வேற ரேஞ்சுல நினைச்சேனே" என்பதைப் போல ஒரு ரியாக்சன் கொடுத்தது.

வித்தார்தும் சிரித்து விட்டு அவள் உண்பதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

" அப்டி பார்க்காத... எனக்கு தான் வயிறு வலிக்கும்..." என்று முறைத்தாள்.

" அப்படியா? "

" ம்ம்... ம்ம்... " என வாயில் இருந்ததை மென்று கொண்டே கூறினாள் அவள். ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தாகியும் விட்டது.

வெளியே இருந்து திடீரென காலிங் பெல்லின் ஒலி காதைத் துளைக்க, யார் இத்தனை அவசரமாக வந்திருப்பது என்ற எண்ணத்தோடு கதவைத் திறக்கச் சென்றாள் ஏஞ்சல்.

அவளைத் தடுத்து, " வேண்டாம் ஏஞ்சல். கதவை திறக்காத." என்றான் வித்தார்த்.

அவனை ஏற இறங்க பார்த்தவள், " நான் திறப்பேன்... " என்று கூறி விட்டு கதவருகில் சென்றாள் ஏஞ்சல்

" ஹம். நான் இப்ப கிளம்புறேன்... " அவன் விளையாட்டாக கூறுகிறான் என்று நினைத்து சிரித்து விட்டு வந்து கதவைத் திறந்தாள் ஏஞ்சல். தன் எதிரே நின்ற உருவத்தைப் பார்த்தவள், இரு துளி கண்ணீரைச் சிந்த, அது தரையைத் தொட்டு 'பிளிங்க்' என்ற சத்தத்தோடு விழ, அருவமாய் இருந்த வித்தார்த்தின் மனமோ இறுகிப் போனது. அவனும் மறைந்து போனான்.
 
Top