Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

?16?

Advertisement

Rudhra Vikram

Member
Member
" வா மா ஏஞ்சல்... " ஜான்சனின் குரல் உள்ளிருந்த அறையில் இருந்து ஒலிக்க, ஏஞ்சலுக்கு ஒரு நொடி இதயம் துடிப்பதை நிறுத்திக் கொண்டது போல இருந்தது.

" தவறா எதுவும் நடந்துற கூடாது கடவுளே... மேரி எனக்காக எவ்வளவோ செஞ்சுட்டா... இனிமேலும் வேணாம்... ப்ளீஸ்... " பிரார்த்தனை பலிக்குமா இல்லையா என்பது தெரியாவிடினும், தன்னால் மேரிக்கும் அவளது தந்தைக்கும் இடையில் பிளவு ஏற்படக் கூடாது என்பதை ஜபம் போல ஓயாது முணுமுணுத்தபடி இருந்தாள்.

அறையிலிருந்து வெளிபட்ட ஜான்சன் அவளிடம் தான் மட்டும் பேசுவதாக கூறி விட, மேரி உள் அறையில் இருந்ததால் அங்கு சென்றான் ஜோசஃப்.

" எந்த தைரியத்துல நீ இங்க தங்கி இருக்க... எல்லாத்தையும் தங்க வைக்க இது என்ன சத்திரமா? "

மௌனம் காத்தாள் ஏஞ்சல். அவரோ மேலும் பேசிக் கொண்டே போக, பர்ஸை மறந்து வைத்துவிட்டு வந்தது நினைவு வந்தவனாய் மீண்டும் வந்தான் வித்தார்த்.

மற்ற விடங்களில் எவ்வளவு விளையாட்டுத் தனம் இருந்தாலும், ஜான்சன் விவகாரத்தில் அது தலைகீழாக மாறி விடும்.

அவர் பேசுவதை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த ஏஞ்சலை புரியாது நோக்கினான் வித்தார்த்.

மேரியிடம் ஏஞ்சல் வந்துவிட்டதாக தெரிவித்த ஜோசஃப்பை முறைத்தவள், ஏஞ்சல் மீது கோபம் இருந்தாலும் சாப்பிட்டாலோ என்னவோ என்று ஒரு கப் காஃபியுடன் வந்து நிற்க, இங்கு பேசிக் கொண்டிருந்த ஜான்சன், பிடித்து வைத்த பிள்ளையார் போல நின்ற ஏஞ்சலால் கடுப்பானார்.

அந்த காஃபி கப்பை கையில் எடுத்து அதிலிருந்த காஃபியை அவள் முகத்திவேயே ஊற்ற, கோபம் சுர்ரென்று ஏற, வித்தார்த் அவரை அடிக்க கை ஓங்கினான்.

அவனை சற்றும் எதிர்பாராத ஏஞ்சல், அவன் அவரை அடிக்க வருவதைப் பார்த்து பயந்து, அவனைத் தடுத்து வந்த கோபத்தில் அவனை அறைந்து விட்டாள்.

கண்கள் சிவக்க ஏஞ்சலைப் பார்க்க அவளோ, " அவர் எனக்கு அப்பா மாதிரி... நீ இதுல தலையிடாத சித்து... " என்க அவளின் நிலை சற்று புரியத் துவங்கியது.

வித்தார்த் மௌனமாக, ஜான்சன், " மேரி... இதுக்கு மேல இங்க நான் இருக்க போவதில்லை... ஒன்னு இவ இருக்கனும்... இல்ல நான் இருக்கனும்... "

சட்டென பதிலளித்தாள் மேரி.

" ஏஞ்சல் இங்க தான் இருப்பா... நீங்க கிளம்பலாம்... "

அவளை ஓடிச் சென்று தடுத்தாள் ஏஞ்சல். எது நடக்கக் கூடாது என்று தன் கஷ்டங்களைப் புதைத்து வைத்தாளோ அதுவே நடந்து விட்டது.

" மேரி.. அவர் உன் அப்பா.. அப்டிலா சொல்லாத.. நீ மொதல்ல அவர
கூப்பிடு... "

மேரியை எவ்வளவோ தடுக்க முயன்றும் அவள் கேட்பதாக இல்லை.

" இப்ப நீங்களா போனிங்கன்னா நல்லா இருக்கும்... அப்பறம்... " மேரி வாயில் கை வைத்த ஏஞ்சலின் கரம் நடுங்குவதை மேரியால் உணர முடிந்தது.

அடுத்த நொடியே எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வெளியே சென்ற ஜான்சனைச் சமாதானம் செய்ய சென்ற ஏஞ்சலைக் கையைப் பிடித்து இழுத்து வந்தாள் மேரி.

" என்ன ஏஞ்சல்... இது நீயானே எனக்கு சந்தேகமா இருக்கு... உனக்கு பிடிச்ச மாதிரி தானே இருப்ப... அந்த ஆளுகிட்ட போய் கெஞ்சுற... " மேரி உச்சஸ்த்தானியில் கத்தினாள்.

" மேரி... ப்ளீஸ்... நான் அனாதையா பொறந்தா அப்டியே செத்துட்டு போறேன்... நீ எனக்காக ஒரு நல்ல அப்பாவ ஒதுக்குற... அவருக்கு என் மேல வெறுப்பு தானே தவிர உன் மேல பாசம் அதிகம்... அவர் எவ்ளோ உடைஞ்சவரா இங்க இருந்து போனாருனு நீ பார்க்கலையா... "

ஏஞ்சல் விறுவிறுவென வெளியே சென்று விட்டாள். இன்னமும் தன் தந்தைக்காக பேசும் ஏஞ்சலை கண் கலங்க பார்த்தாள் மேரி.

முகத்தை கழுவி விட்டு, ஏஞ்சல் செல்வதைப் பார்த்த வித்தார்த் அவள் பின்னால் போக, ஏஞ்சல் சந்தர் மாமாவின் கடையில் இருந்தாள்.

கவலையை மறைத்து, முகத்தில் சிரிப்போடு அவருடன் பேசிக் கொண்டிருந்தவளைப் பார்த்ததும் வித்தார்துக்கே என்னவோ போல் இருந்தது.

இத்தனை சந்தோஷமான சிரிப்புக்கு பின்னால் அழுகையும் வேதனையும் முடங்கி கிடப்பதை எண்ணி மனம் வலித்தது.

மெதுவாக அவள் அருகே வந்து அமர்ந்தான் வித்தார்த்.

ஏஞ்சலோ அவன் கோபமாக இருப்பானே என்று எண்ணி, " சித்து... ஐ அம் சோ சாரி... அங்க உன்ன சரியா ரிசீவ் கூட பண்ணல... அங்க நடந்ததெல்லாம் சும்மா... இப்ப அடிச்சுகிட்டா நாளைக்கு எல்லாரும் சேர்ந்திருவோம்... நீ பெருசா எடுத்துக்காத என்ன... என்கிட்ட தானே அடி வாங்கின... வேணும்னா என்ன ஒரு அடி அடிச்சுக்க.... "

செயற்கை சிரிப்போடு பிசுறு இல்லாத தனது சாதாரண குரலில் கூறினாள் ஏஞ்சல்.

உண்மையில் அவள் சிரிப்பது தான் இப்போது அவனுக்கு அதிகமாக வலித்தது. எதையும் காட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தான் அவன்.

" சரி... சரி... உன் கோபத்தை பொறுமையா காமி... உன்கிட்ட ஒன்னு சொல்லனும்னு
இருந்தே... சந்தர் மாமா நீங்களும் வாங்க..."

அவரையும் வேலை செய்ய விடாமல் இழுத்து அமர வைத்து, காலையில் ஜோசஃபுடன் நடந்த அடாவடித்தனத்தைக் கூறினாள். 'வித்தார்த்' என்றதும் தான் நிமிர்ந்தான் அவன்.

" ச்சே... வித்தார்த் என்ன பத்தி என்ன நினைச்சுருப்பான்... ஏன் சந்தர் மாமா... என் லவ்ல மட்டும் இப்டி நடக்குது... "

இப்போது தான் சற்று புன்னகைத்தான் வித்தார்த். ஏஞ்சல் திரும்பி அவனிடமே கேட்க, என்ன சொல்வதென தெரியாமல் விழித்தவன் பின்...

" குரங்கு மாதிரி காம்பவுண்ட் மேல ஏறி குதிச்சிருக்க... அவன் தான் பாவம்... " என்க அவனைக் கர்ணக் கொடூரமாக முறைத்தாள் ஏஞ்சல்.

" உனக்கு தான்டா இப்டி தோணும்... நீ எங்க...(என முகம் சுழித்து கூறிவிட்டு) என் டார்லிங் எங்க ( என ஆகாயத்தைப் பார்த்து சிரித்தாள் அவள்) "

" ம்கும்... இரண்டு பேருமே இங்க தான்... " என முணுமுணுத்தான் அவன்.

அவனை முறைத்துவிட்டு,
" உனக்கு பொறாமை... போ... " என்று அங்கிருந்து கிளம்பினாள் ஏஞ்சல். அவளின் சிரிப்பின் உள் இருந்த வலி ஏனோ தனக்கு மட்டும் தெரிவதாகத் தோன்றியது
வித்தார்த்திற்கு.

தனது கழுத்தில் கிடந்த 'V' எழுத்து கொண்ட செயினைக் கழற்றி, அதைப் பார்த்தவன் அவளுக்கு நான் இருக்கிறேன் என்று கூறி அணிவிக்க தோன்ற, எழுந்து ஏஞ்சலுடன் இணைந்து கொண்டான்.

" ஏஞ்சல்... "

" ஆ... " கண்களில் இருந்த கண்ணீரை தடைத்து விட்டு திரும்பினாள் ஏஞ்சல்.

" மேரிய பார்க்கனும். நானும் கூட வரேன்... " என அவளுடன் நடக்க துவங்கினான். இருவருமே எதுவும் பேசாமலேயே நிமிடங்கள் கழிய, ஏஞ்சல் ஆரம்பித்தாள்.

" நான் நாளைக்கு ஹோம்க்கு போய்ருவேன் சித்து... உனக்கு பேச தோணலேனா பேசாத... நான் கோசிக்க மாட்டேன்.
உன்கிட்ட அவ்வளவு ரோசம்லா எனக்கு இல்லை... எதாவது சொல்றதுனா சொல்லு டா... " வீட்டின் முன் நின்று அவன் கண்களைப் பார்த்தாள் ஏஞ்சல்.

அவளுக்கு சட்டென வித்தார்தின் அந்த கண்களைப் போல தெரிந்தது.

சித்து எதுவும் இல்லை என தலையாட்டினான்.

" ஓ... சரி பாய்... " என புன்னகை உதிர்த்து விட்டு உள்ளே சென்றாள் ஏஞ்சல்.

வித்தார்த் மேரியிடம் தனியாக பேச வேண்டும் என அழைத்து அவளிடம் அந்த செயினை ஒப்படைத்து...

" ஏஞ்சல பத்தி எனக்கு ஓரளவு தெரியும் மேரி... அவள் ஹோம்க்கு எப்படியும் போவானு தான் என் மனசு சொல்லுது... உன்ன கஷ்படுத்திட்டு இருக்குறதா அவ நினைக்கிறா... அவ போறத பார்க்கிற சக்தி எனக்கு இல்லை... இதை அவள்கிட்ட எப்ப கொடுக்கனும்னு தோணுதோ அப்ப கொடு... அவளே என்னை தேடி வந்தா... "

" வந்தா... சரி... வரலேனா உன் லவ்வ மறைச்சிருவ... அப்டி தானே... "

கண்களில் வலியுடன் மேரியைப் பார்த்தான் வித்தார்த்.

" நீ என் அப்பாவ அடிக்க வரப்பவே தெரிஞ்சிருச்சு... அந்த லூசுக்கு தான் புரியல... அவ எனக்காக எவ்வளவோ செஞ்சுட்டா நான் இதை கூடவா செய்ய மாட்டேன்... " என அதை வாங்கிக் கொண்டாள.

மறந்தும் கூட எவ்வழியிலும் அவளுக்கு தான் வித்தார்த் என்பது தெரியக் கூடாது என்று நினைத்தான்.

ஏனோ தான் நெருங்கி பழகும் அனைவரும் விலகி செல்வது போன்ற பிரம்மை தோன்றியது. அவளுக்காக தோன்றும் போது வருவாள். அப்போது சந்திப்போம்... என்று நினைத்தான், பின்நாளில் அதற்காக வருந்த போவதை அறியாமல்.

மறுபுறம் ராம்குமார் அந்த எவிடென்ஸை அந்த சேனலின் எம்.டியிடம் கொடுத்து செல்ல, அவரோ தக்ஷனிற்கு அழைப்பு விடுத்து இன்னதென்று தெரிவித்தார்.

ராம்குமார் வீட்டை அடைந்ததும் ரூபி அழைக்க, உறங்குகிறாள் போலும் என்றெண்ணி, கட்டில் அறையில் பார்க்க அவள் அங்கு இல்லை.

" ரூபி... ரூபி கண்ணா... "

வீடு முழுக்க அலசி ஆராய
ரூபி இருப்பதற்கான அடையாளமே அங்கு இல்லை.

" ரூபி..... " கதறி அழுதபடி சுவரில் சாய்ந்தார் ராம்குமார்.
 
Top