Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤30.02(இறுதிப்பாகம்)

Advertisement

#TNWcontestWriters
#088
"காதல் மழலை அவள் மணவாளன்"
மணவாளன்(நளன்)... தமயந்தி..
அவனுக்கு இங்கரே.. அவளுக்கு தொரை... எங்க அம்மா எங்க அப்பாவை இப்படித்தான் கூப்பிடுவாங்க "ங்கரேன்" என்று அப்பா அம்மா இரண்டு பேருமே திருநெல்வேலி நாங்க பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை அம்மா இறந்து பத்து வருடம் ஆகிறது ? இந்த கதையை படிக்கும் போது அம்மாவின் ஞாபகம் வந்துவிட்டது இந்த ஒரு வார்த்தையால்.. நானும் அண்ணாவும் பிந்து செய்வோம் அது என்ன ங்கிரேன்.. என்று ?
நளன்.. அக்கா தம்பி தங்கை என அவர்கள் வாழ்க்கையை கரை சேர்த்த விட்டு தன் வாழ்க்கையை பார்க்கும் போது அவருக்கு வயது 45.. தன் வயதிற்கு ஏற்றவாறு பெண் பார்த்து முடித்ததாக நினைத்திருக்க...திருமணம் முடிந்த அன்றே வெடிக்கிறாள் தமயந்தி தனக்கும் அவருக்கும் இருக்கும் வயது வித்தியாசத்தை சொல்லிக் காட்டி தன் வருமையால் இப்படி வயதானவரை மனம் முடிக்க வேண்டிய நிலையை எண்ணி வருந்தி... இவளின் மனநிலையை நன்றாக புரிந்து கொள்ளும் நளன் அவளின் மேல் கோபம் கொள்ளாமல் அவளுக்கு பிடித்த மாதிரியான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கவும் அவள் வயதிற்கு ஏற்ற மாதிரி ஒரு மணமகனை பார்க்கவும் முடிவு செய்கிறான்... இதில் நியாயமாக அவளுக்கு மகிழ்வு வர வேண்டும் ஆனால் அவளுக்கோ கோபமும் எரிச்சலும் வருகிறது.. ஏன் அவளுக்கே புரியாத நிலை அது.. நளன்.. குடும்பத்தின் மேல் கொண்டுள்ள பாசத்தையும் அவளின் மேல் கொண்டுள்ள அக்கறையும் பார்க்கும் தமையந்தி அவரின் நல்ல குணங்களால் கவரப்பட்டு மெது மெதுவாக தன்னையும் அறியாமல் விரும்ப ஆரம்பிக்கிறாள் தன் மணாளனை ? குடும்ப பொறுப்பில் தலைவனாக இருப்பவன் காதலில் மழலையாக இருக்கிறான் ? இதில் பாடம் எடுக்கும் டீச்சராக மாறும் தமயந்தி தங்கள் வாழ்வை எப்படி கொண்டு செல்கின்றாள் என்பதையும் மனைவியின் கனவை கணவனாக எப்படி நளன் நிறைவேற்றுகிறார் என்பதையும் கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள் ? ஆரம்பத்தில் இருவரும் சிறு குறிப்பாக கடிதத்தில் பேசிக்கொள்ளும் நிகழ்வுகள் அழகு ?? சரசு.. நளனின் தாய் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் எதார்த்தவாதியும் நியாயவாதியும் ஒரு தாயாக மகன் இனிவரும் காலமாவது அவன் குடும்பத்தை பார்க்க வேண்டும் என மகனையும் அதே நேரம் மகளையும் கண்டிக்கும் இவரின் குணம் அருமை ??? அதே நேரம் மாமியாராக சில குட்டும் வைக்கிறார்.. இரண்டு மருமகளுக்கும் பேதம் இல்லாமல் ? மருமகள் மகனை தொர என கூப்பிடும் போது என்னமோ வாயில் வந்த பெயரை கூப்பிடுறாளுங்க இந்த பெயரை அவளின் மகனுக்கு வைப்பாளா என புலம்புவது சிரிப்பு ? குடும்பத்தில் நடக்கும் எதார்த்தங்களை அருமையாக சொல்லி இருக்கிறார் எழுத்தாளர் நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ???
Good luck dear ?❤?
Nice review.
 
Top