Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வெள்ளக்கார வேலாயி 4

Jeyalakshmimohan

New member
Member
சூரியனின் வெயில் தாக்கம் தணிந்து மாலைப்பொழுது மலர ஆரம்பித்தது.
கதிரும் ராதாவும் நீரோடையில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு காளியம்மன் கோவிலுக்கு அருகில் வந்து கொண்டிருந்தனர்.
"அண்ணா... நம்ம திவ்யா அம்மா அலறும் சத்தம் கேட்குது ஏதோ பிரச்சனை போல வாங்க சீக்கிரம் போய் பார்க்கலாம்" என பதறினான் ராதா."என்னவாயிருக்கும் அந்த பட்டணத்து பூதம் கவின் ஏதாவது ஏடாகூடமா பிரச்சனை செய்திருப்பானோ"என சொல்லிக்கிட்டே வேகமாக கோவிலை வந்தடைந்தான் கதிர்.
கதிரை பார்த்த மறுகணமே அம்மாவை விட்டுப் பிரிந்த சிறுபிள்ளை போல அழுதுகொண்டே கதிரை வந்து அணைத்துக் கொண்டாள் திவ்யா. கதிருக்கு ஏதோ ஒரு புதுவித உணர்வு தோன்றியது ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போய் விட்டான். கதிர்...கதிர்...என அழுகுரல் கேட்கவே நினைவு திரும்பிய அவன் "ஒன்னும் இல்லை ஏன் அழுவுற பயப்படாதே நான் தான் வந்துட்டேன் இல்ல"என அவள் தலையை வருடி சமாதானம் செய்தான்.
திவ்யா அழுதுகொண்டே அந்த பைத்தியக்காரனை பார்த்து கை நீட்டினாள்.
யாரு அது என அருகில் போய் பார்த்தான். "கந்தசாமி அண்ணே நீங்களா...? எப்படி இருக்கீங்க ஏன் இப்ப வீட்டு பக்கம் வாறதில்லை" என பாசமாக அந்த பைத்தியத்தை பார்த்து விசாரித்தான்.
"கதிர் நீ மட்டும் தான் கோயிலுக்கு வந்து இருக்கேன்னு பார்த்தா ஒரு பைத்தியக்கார அண்ணனையும் கூட்டிட்டு வந்திருக்கியே இவன் வேலாயினு கூப்பிட்டு கிட்டே என் பக்கத்தில் வந்து பயமுறுத்துகிறான்" என கோபமாக திட்டினாள் திவ்யா.
இவர் முதல்ல யாருன்னு தெரியுமா என்றான் .இவரு பெரிய சுதந்திர போராட்ட தியாகியா நான் தெரிஞ்சுக்கிறதுக்கு என கடுப்பானாள்.
"இவரு ஒரு காலத்துல இந்த ஊரு பஞ்சாயத்து தலைவராக இருந்தவர்; என் அப்பா ஏன் உங்க அப்பா பெருமாள் மாமா கூட இவர் வயல்ல தான் கூலி வேலை செஞ்சிட்டு இருந்தாங்களாம்.அவர் மனைவி வேலாயி செத்த பின்னாடி இவர் இப்படி ஆகிட்டாரு இவருக்கு ரெண்டு பசங்க இருக்காங்க அவங்க இருக்கிற சொத்தை எல்லாம் வித்துட்டு இவரை அம்போன்னு விட்டுட்டு பாரின்ல போய் செட்டில் ஆகிட்டாங்க; ஊருல யாராவது பாவம் பார்த்து அப்பப்ப ஏதாவது சாப்பிடக் கொடுப்பார்கள்" என வருத்தமாக
கூறினான் கதிர்.
எதுவும் நடக்காதது போல பின்னாடி போய் பயந்து ஒளிந்து இருந்த கவின் பெரிய வீரன் மாதிரி முன்வந்து என்ன திவ்யா உனக்கு ஒன்னும் ஆகலை இல்ல என்ன அக்கறை காட்டுவது போல பேசினான்.
"ஆமா கந்தசாமி அண்ணே நீங்க யார்கிட்டயும் இப்படி பிரச்சனை பண்ண மாட்டீங்களா ஏன் இந்த பாப்பாவை பயமுறுத்தினீங்க"என சந்தேகமாக கேட்டான் கதிர்.
"தம்பி இது வேலாயி" என பல்லை காட்டி தலையை சொரிந்து கொண்டே சொன்னார் அந்த பைத்தியக்காரர்.
கதிர் சிரிப்பை அடக்கியவாறு சொன்னான் "அண்ணே இது உங்க வேலாயி இல்லை திவ்யா... திவ்யா...என சத்தமாக கூறினான். இல்ல வேலாயி என்றார் அவர்.
"அண்ணே இவ பேரு திவ்யா பெருமாள் இருக்காரு இல்ல அவரு பொண்ணு என்னோட முறைபொண்ணுதான்" என்றான்.
நீ கட்டிக்க போற பொண்ணா மன்னிச்சிடுங்க என்றார் கந்தசாமி. கட்டிக்கப்போற என கடுப்பானாள் திவ்யா.மனசுக்குள்ளே ரொம்ப சந்தோஷப்பட்டு கொண்டு அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் திவ்யாவிடம் சொன்னான் கதிர் "ஏ... கம்முனு இரு அவர் மனைவி வேலாயினு சொல்லாம நான் கட்டிக்கப்போற பொண்ணு என சொல்லுறாரு பரவாயில்லைன்னு சந்தோசப்படுவியா பெருசா சண்டைக்கு வர"

"ஆமா திவ்யா இப்ப இப்ப நமக்கு வேகம் தான் முக்கியம் சீக்கிரம் நாம இந்த இடத்தை விட்டு கிளம்பலாம்" அவசரபடுத்தினாள் கவின்.
என்னால முடியல அப்பா என தலை மேல் கை வைத்தபடி அமர்ந்தான் திவ்யா. "அம்மா இந்தாங்க தண்ணி குடிங்க அப்புறம் கொஞ்சம் தெம்பா ஆயிடுவீங்க"என தண்ணியை திவ்யாவிடம் கொடுத்தாள் ராதா.
எதையும் கண்டுகொள்ளாமல் தேங்காய், இரண்டு வாழைப்பழம், பிரசாதம் கொஞ்சம் எடுத்து கந்தசாமி கிட்ட கொடுத்தான் கதிர். எனக்கு எதுக்கு தம்பி இதெல்லாம் என வாங்க மறுத்தார்."பரவால்ல வாங்கிக்கங்க நீங்க ஒன்னும் சாப்பிட்டு இருக்க மாட்டீங்க" என்ன பரிதாபத்துடன் சொன்னான் கதிர்.
கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும் போல எனஅவனை பார்த்து ரசித்தபடியே சொன்னாள் திவ்யா."என்னமா இந்த ட்ரெஸ் ஈரம் ஆயிருச்சா" என கேட்டாள் ராதா. "ஒன்னும் இல்லை கதிரும் கொஞ்சம் நல்லவன் தான் போல" என புன்னகையுடன் சொன்னாள் திவ்யா. இது இப்போ தான் உங்களுக்கு தெரியுதா சரி இன்னும் நம்பலை காணோம்னு ஐயா கவலை போட்டுட்டு இருப்பாரு வாங்க போலாம் என்றாள் ராதா.

ராதா,கவின் இருவரும் கிளம்ப தயாரானார்கள். திவ்யாவால் முடியவில்லை சோர்வாக இருந்தாள் அதனால் நீங்க ரெண்டு பேரும் முன்னாடி போங்க நான் கொஞ்ச நேரம் கழித்து திவ்யாவைப் பார்த்து கூட்டிட்டு வரேன் என்றான் கதிர். சரி பார்த்து வாங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு இல்லைனா நானும் உங்க கூடவே துணைக்கு இருந்து இருப்பேன் என சொல்லிவிட்டு ராதா கவின் இருவரும் கிளம்பிவிட்டனர். கந்தசாமி பிரசாதம் சாப்பிட்டு விட்டு படுத்துக் கொண்டார். சிறிது நேரம் கழித்து சரி ரொம்ப நேரம் ஆகுது போலாம் என்றான் கவின்.சரி என மெதுவாக எழுந்த திவ்யா திடீரென்று ஏதோ உணர்ந்தவளாய் அப்படியே மீண்டும் அமர்ந்துவிட்டாள். வா போலாம் லேட் ஆகுது என்றான் கதிர்.
"அது வந்து அந்த பைத்தியத்தை பார்த்து அப்படியே பின்னாடி பயந்து போகும் போது முள் செடியில் எனது டிரஸ் மாட்டி லைட்டா கொஞ்சம் கிளிஞ்சிடுச்சு போல"என தயங்கியபடியே கூறினாள்.
"சரி இந்தா என் சட்டையை போட்டுகோ"என தன் சட்டையை வேகமாக கழற்றி கொடுத்தான் கதிர்."என்ன செய்யற எனக்கு வேணாம்" என அவனை பார்க்காமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.
"ஏன் வெட்கப்படுற நான் உள்ள பனியன் போட்டு இருக்கேன் வேட்டியும் கட்டி இருக்கேன் ஒன்னும் பிரச்சனை இல்ல இந்த போட்டுக்கோ" என்றான்.
வேணாம்னா விட்டுறேன் என கோவ பட்டாள்.கிழிந்த உடையை போட்டு கொண்டு எப்படி வீட்டுக்கு வருவ? நீ சரிப்பட்டு வர மாட்ட இப்ப எப்படி உன்ன சட்டை போட வைக்கிறேன் பாரேன் என்றவன் அண்ணா கந்தசாமி அண்ணே வேலாயி வந்துட்டாங்க...' என சத்தமாக சொன்னான். படுத்திருந்த கந்தசாமி வேகமாக எழுந்து வேலாயி ... வேலாயி ...எங்க இருக்க சுற்றியும் பார்க்க ஆரம்பித்தார். சரி நான் சட்டையை போட்டுக்கிறேன் அந்த பைத்தியக்காரரை தயவுசெஞ்சி கூப்புடாதே என கூறி சட்டையை அணிந்து கொண்டாள். அண்ணே அது வேலாயி இல்ல வேற யாரோ மன்னிச்சுக்கங்க நீங்க தூங்குங்க என சிரித்தபடி சொன்னான். அவர் மறுபடியும் படுத்து தூங்க ஆரம்பித்தார்.அவன் சட்டையை அணிந்து கொள்வது அவளுக்கு கூச்சமாகவும் ஒரு மாதிரியாக இருந்தது. இருவரும் ஒரு வழியாக கோவிலை விட்டு கிளம்ப ஆரம்பித்தனர்.
சிறிது தூரம் சென்றவுடன் எனக்கு பசிக்குது காலைல பயிறு நடவு செய்யணும் சீக்கிரமாவானு சொன்னதுல சாப்பிடவே இல்ல மதியமும் கோவிலுக்கு போற அவசரத்துல சரியா சாப்பிடலை இருக்குற பிரசாதத்தையும் அந்த பைத்தியக்காரருக்கு எடுத்து குடுத்துட்டுட இப்ப எனக்கு ரொம்ப பசிக்குது'என சிணுங்கிய படி சொன்னாள்.
சரி காட்டுல ஏதாவது பழம் கிடைக்குமானு பாக்குறேன் இரு என சுற்றியும் தேட ஆரம்பித்தான் கதிர். ஒரு கொய்யா மரம் கண்ணில் தென்பட்டது. "காட்டுக்குள்ள யாரு கொய்யா மரம் வச்சிருப்பாங்க... பாரு எவ்வளவு பல நல்ல செழிப்பா இருக்கு" என்றாள்.
"காட்டுக்குள்ள உங்க தாத்தா வா மரம் வைத்திருப்பார் பறவை மிருகம் ஏதாவது கொய்யாப்பழம் சாப்பிட்டு மீதி போட்டிருக்கும் அது இயற்கையாக செடி முளைத்து மரமாகி இருக்கும்' என்றான் . ஆனால் பாரேன் நாம விலைக்கு வாங்கி வைத்து உரம் போட்டு மருந்து அடிச்சு கூட இவ்வளவு செழிப்பா வராது ஆனால் இயற்கையாக முளைச்சு இலை, தழை, விலங்கு கழிவு எல்லாம் எல்லாம் செடிக்கு உரம் மாறி அப்போப்போ பெய்த மழையில செடி வளர்ந்து எவ்வளவு செழிப்பா இருக்கு பாரேன் அதுதான் இயற்கை"என வியந்து கூறினான் கதிர். சரி கருத்து சொன்னதெல்லாம் போதும் மரத்துல ஏறி நாலு கொய்யாக்கா பறிச்சி போடு என்றாள்.
மரம் ஏறி பழங்களைப் பறித்தான். தூரமாக இருந்து ஏதோ புகை வந்து கொண்டிருந்தது என்னவாய் இருக்கும் என சுற்றி உற்றுப் பார்த்தான் நான்கைந்து பேர் ஒரு பெரிய புதருக்கு அருகில் சுத்தம் செய்து கள்ள சாராயம் காட்சி கொண்டிருந்தனர்;அருகில் பெரிய பெரிய பீப்பாய்களை அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
"பழம் பறிக்க சொன்னா என்ன வேடிக்கை பார்த்துட்டு இருக்க சீக்கிரம் வா" என்றாள் திவ்யா, சத்தம் போடாதே என பழங்களை பறித்துக் கொண்டே கீழே இறங்கினான்."பழம் எவ்வளவு டேஸ்டா இருக்கு பாரேன் இந்த மாதிரி பழத்தை நான் சாப்பிட்டதே இல்லை" என அதை சுவைத்துக் கொண்டே சொன்னாள் திவ்யா.யோசித்துக்கொண்டிருந்த கதிர் போன் இருந்தா கொடு என்றான். எதுக்கு கேக்குற என்றபடி போனை நீட்டினாள்.
போனை வாங்கிய கதிர் "ஹலோ மணக்காடு போலீஸ் ஸ்டேஷன் இங்க இருக்க காட்டு பகுதியில் காளியம்மன் கோவிலுக்கு பக்கத்துல ரகசியமா கள்ளசாராயம் காசுரங்க சீக்கிரம் வாங்க" என புகார் செய்தான்.
"கதிர் என்ன கள்ளசாராயமா இந்த காலத்துலயா"என வியப்பாக கேட்டாள்."எப்பவும் எல்லாம் சாராயம் காய்ச்ச மாட்டாங்க லாக்டோன் போட்டதால டாஸ்மாக் எல்லாம் இருக்காது இல்ல நம்ம நாட்டு குடிமகன்கள் எல்லாம் சரக்கு கிடைக்காமல் தவிப்பாங்க இந்த டைம்ல கள்ளசாராயத்தின் டிமாண்ட் அதிகமாயிருக்கும் என கதிர் தெளிவு படுத்தினான்.அதான் போலீஸ் கிட்ட சொல்லியாச்சி இல்ல அவங்க வந்து பாத்துப்பாங்க நாம சீக்கிரமா இந்த இடத்தை விட்டு போய்விடலாம் என்றாள்.
சாராய கும்பலில் இருந்த ஒருவன் இவர்களை பார்த்துவிட்டு இங்க ரெண்டு பேர் இருக்காங்க என கத்தினான். இவன் யாரு இவனும் இந்த கூட்டத்தில் ஒருத்தனா இருப்பானோ என்றாள்.ஆமா இந்த கும்பலுக்கு இன்பாமரா இருப்பான் போல போலீஸ் வந்தா கள்ளசாராய கும்பலுக்கு தெரிவிப்பார்கள் அப்புறம் அவங்க எல்லாத்தையும் படிச்சிட்டு எஸ்கேப் ஆகும் இல்ல என்றான் கதிர்.
கும்பலில் வந்த ஒரு தடியன் காட்டுக்குள்ள என்ன செய்றீங்க அதும் பார்க்க ஏதோ இளம் காதல்ஜோடி மாதிரி இருக்கீங்க வீட்டிலிருந்து ஓடி வந்துட்டீங்களா என்றான். என்ன சொன்னீங்க என கதிர் கேட்டான். "இளம் காதல்ஜோடி" இன்னொரு முறை சொல்லுங்க என்ன திவ்யாவை பார்த்து சிரித்தபடியே கேட்டான்." இளம் காதல்ஜோடி"
"என்ன லூசா டா நீ நாம நல்லவசமாய் மாட்டிகிட்டோம் ஆனா நீ என்ன இப்ப ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க " என கோவை பட்டாள்.
இவங்க எங்க ரெண்டு பேரையும் இழுத்துட்டு வாடா என்றான் தடியன்.அண்ணன் வேணாம் நாங்களே வரோம் என கள்ளசாராயம் காசுல இடத்துக்கு சென்றனர். அந்த கும்பலில் இருந்த ஒருவனிடம் போய் காதோரம் ஏதோ சொன்னான் அவன் பார்ப்பது கொஞ்சம் பயமாக இருந்தது அவனைப் பார்ப்பதற்கு கொஞ்சம் பயமாக இருந்தது பெரிய உருவம் கருமை நிறம் சுருட்டை முடி இருக்கும் முறுக்கு மீசையுடன் இருந்தான் அவன்தான் இந்த கூட்டத்திற்கு தலைவனாய் இருப்பான் போலும் சரி இரண்டு பேரும் இப்படி வாங்க என்றான் மணி பாட்டை போடு டா ரெண்டு பேரும் டான்ஸ் ஆடும் நமக்கும் கொஞ்சம் டைம் பாஸ் ஆகும் இல்ல என மீசையை முறுக்கியபடி சிரித்துக்கொண்டே கூறினான். போனில் பாட்டு போட்டார்கள்
"செல்லக்குட்டி ராசாத்தி போகாத சூடேத்தி கண்ணே உன் காதல் கதவை சாத்தி வைக்காதே சாத்தி வெள்ளை கட்டி நீ அத்தி வெட்கம் என ஏமாத்தி எட்டி எட்டி போகாதடி என்னை மல்லாத்தி உன்னை நான் நெஞ்சுக்குள்ள தொட்டில் கட்டி வச்சேன் காப்பாத்தி" என பாட்டு ஒலிக்க கதிர் திவ்யாவுடன் சந்தோசமாக உற்சாகத்துடன் பாட்டுக்கு வாய் அசைத்துக் கொண்டே அவள் அழகை ரசித்தபடியே அவளுடன் ஆடினான்.
இப்படி சந்தோசமா டான்ஸ் ஆடிட்டு இருக்க அவங்க எல்லாத்தையும் அடிச்சு போட்டுட்டு என்ன காப்பாற்றுவனு பாத்த இவங்களோட சேர்ந்து நீயும் கூத்தடிக்க போறியா என முறைத்தாள் திவ்யா.
ஏய் சும்மா இரு இன்னும் கொஞ்ச நேரம் தான் அப்புறம் போலீஸ் வந்து இவங்களை பிடிச்சிட்டு போயிடும் அதுவரைக்கும் சமாளி என மெதுவாக கூறினான் கதிர்.
"செம செம சூப்பர்டா.... பாப்பா ரொம்ப அழகா இருக்கே இப்ப நான் பாப்பா கூட ஜோடி சேர்ந்து ஆட போறேன் என்ன பாப்பா ரெடியா..." என திவ்யாவை நெருங்கினான் அந்த சுருட்டை முடி தடியனை
வேணாம் என கதிர் தடுத்தான் போடா என அவனைக் கீழே தள்ளி விட்டு திவ்யா மேல் கை வைக்க முயன்றான் கதிரவனை ஓங்கி ஒரு உதை விட்டான். ஆ... என கத்திக் கொண்டே வேகமாக கீழே விழுந்தான் தடியன்.
வேணாம் வேணாம்னு சொன்னா கேக்க மாட்டீங்களா தடிபயலுகளே என தன் கையிலிருந்த காப்பை சரிசெய்துகொண்டு வேட்டியை மடித்து கட்டி சண்டைக்கு தயார் ஆனான். என் தலைவன் மேலயே கை வச்சிட்டியா என மற்றொருவன் கதிரை தாக்க முயன்றான்.
மாறி மாறி கதிர் அந்த தடியன்களை பந்தாடுவதை பார்த்த திவ்யா இவனுக்கு நல்லா சண்டை போட கூட தெரியுமா என அவனை பார்த்து ரசித்தபடியே சொன்னாள்
"அந்த சுருட்டை முடி காரனை விட்டுவிடாதே தடியா தடியா என் கூடவா ஜோடி போட நினைக்கிற என பல்லை கடித்தாள் திவ்யா" சாராய கும்பலில் இருந்த அனைவரும் அடிபட்டு கீழே விழுந்தனர். பின்னாடி பாரு என திவ்யா சொல்லி முடிப்பதற்குள் கதிர் பின் இருந்த ஒருவன் கத்தியால் தாக்க முயன்றான் லேசாக கதிர்முதுகில் காயம் பட்டது சுதாரித்த கதிர் திரும்பி அவன் கையை மடக்கி ஓடித்தான்." அண்ணே இப்ப சொல்லுங்க" என கதிர் கேட்டான்.
இனிமே சாராயம் காய்ச்ச மாட்டோம் எந்த பெண்களையும் தொந்தரவு செய்ய மாட்டோம் எங்களை மன்னிச்சிடுங்க தம்பி என்றான் அந்த தடியன். அதில்ல முதல்ல சொன்னிங்களே இளம் காதல்ஜோடி அது சொல்லுங்க என்றான்.
உங்கள பார்த்தா அப்படியே இளம் காதல்ஜோடி மாதிரி இருக்கீங்க தம்பி என்றான். இன்னொரு முறை சொல்லுங்க என்றான் கதிர். "இளம் காதல்ஜோடி". இன்னொரு முறை சொல்லுங்க பல்லால் கடித்துக்கொண்டே வெட்கப்பட்டுக் கொண்டு கேட்டான் கதிர் .உங்களை பார்க்க அப்படியே இளம் காதல் ஜோடி மாதிரி இருக்கு தம்பி என்றான் தடியன். ஏய் என்ன பண்ற இந்த ரணகளத்திலும் உனக்கு கிளுகிளுப்பு கேட்குதா என கடுப்பானாள் திவ்யா. தம்பி தம்பி ரெண்டு அடி வேணுமா சேர்த்து அடிச்சுக்கோங்க ஆனால் திரும்ப திரும்ப அதை சொல்ல சொல்லாதீங்க முடியள வாய் எல்லாம் வலிக்குது என நொந்தபடி சொன்னான் அந்த தடியன். போலீஸ் வண்டி வேகமாக வந்து நின்றது. கள்ள சாராய கும்பல் அனைவரையும் கைது செய்தனர். ஆமா நீங்கரெண்டு பேரும் இந்த காட்டுல தனியா என்ன செய்றீங்க என சந்தேகமாக கேட்டார் போலீஸ்காரர் . இருவரும் திரு திருவென விழித்தனர் .

வருவாள் வேலாயி....
 
Top