Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வெள்ளக்கார வேலாயி 3

Advertisement

Jeyalakshmimohan

Member
Member
ராதா காலையில் வாசலுக்கு சாணி தெளித்து கொண்டிருந்தாள் சொன்ன மாதிரியேஒரு பசுமாட்டை பிடித்து வந்திருந்தான் கதிர்.
"பெருமாள் மாமா இல்லையா பால் கறக்கின்ற பசு மாடு ஒன்னு கேட்டாங்க கொண்டு வந்திருக்கேன்" என ராதாவிடம் கதிர் விசாரித்தான் .
"இன்னைக்கு வயலில் பயிறு நடுகிறார்கள் இல்ல அதான் ஐயா வயலுக்கு சீக்கிரமா போய் இருக்கார்".
"உங்க திவ்யாமா என்ன செய்யறாங்க?"
"தூங்குறாங்க"

"மணி ஏழாவது இன்னும் என்ன தூக்கம்... இரு வரேன்"என வேகமாக திவ்யா அறைக்குசென்றான் கதிர். திவ்யா நன்றாக ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்."தூங்கும் போது கூட கொள்ளை அழகு... இவளை கட்ட போறவன் கொடுத்து வச்சவன்"என தனக்குள் பேசிக் கொண்டான் கதிர். திவ்யா... திவ்யா...என எழுப்பினான். "ராதா போய் காபி கொண்டு வா' என சொல்லிக்கொண்டே போர்வையை தலை வரை இழுத்துப் போர்த்தி தூங்கினாள் திவ்யா".
நான் ராதா இல்லை கதிர்... கதிர்... வந்திருக்கேன் என்றான் .போர்வையை விலக்கிப் பார்த்த திவ்யா "நீ எதுக்கு இங்க வந்த" என்றாள்.
" நல்லா இருக்குஉங்க வயல்ல பயிர் நடறாங்க சீக்கிரம் வா.. நீதான் சாமி கும்பிட்டுதொடங்கி வைக்கணும் நான் முன்னாடி போறேன் பத்து நிமிஷத்தில் ரெடி ஆகி வர சரியா"
ஓகே என தூக்க கலக்கத்துடன் எழுந்து அமர்ந்தாள் திவ்யா.

திவ்யா வயலுக்கு வந்தடைந்தாள். பல வகையான பறவைகளின் சத்தம் கீச்.. கீச்...கூ ...குக்கு ..ஒரு இன்னிசைமெட்டு போல இருந்தது. கதிர் இரண்டு காளை மாடுகளை வைத்துக் கொண்டு வயலை ஓட்டிக் கொண்டிருந்தான். மாநிறம், உழைத்து உரமேறிய தோள்கள் தினமும் உடற் பயிற்சி செய்வோருக்கு கூட இவ்வளவு கட்டான உடலமைப்பு இருக்காது. ஆணழகன் மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் கலந்து கொண்டால் வின் பண்ணிடுவான் போல என திவ்யா மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
"திவ்யா நேரமா எழுந்துட்டியா... காபி குடிச்சியாமா.."என பாசமாக விசாரிக்க ஆரம்பித்தார் அப்பா.
"ஆமா டிராக்டர் வச்சு வயலில் உழுது பிறகும் ஏன்பா மாட்டை வைத்து உழவு செய்றீங்க?" என கேட்டாள்.
"கடைசியா மாட்டை வெச்சு உழுதாதான் வயல் சமமாக இருக்கும் இதை பறம்பு அடிக்கறதுனு என்று சொல்லுவாங்க" என்றார் பெருமாள்.
மாட்டை ஓரம்கட்டிய கதிர் "என்ன திவ்யா மேடம்வயலில் இறங்குங்க எல்லோரும் உங்களுக்குத்தான் வெயிட்"என்றான்.
மெதுவாக வயலில் இறங்கினாள்; புதிதாக சேற்றில் அவ்வளவு லாவகமாக இறங்கி நடக்க முடியவில்லை.திவ்யா கடவுளை வேண்டி விட்டு பயிர் நடுவதை தொடங்கி வைத்தால் கூட நான்கு கூலிவேலை பெண்களும் பயிர் நட்டனர். ஐயா.. உங்க பொண்ணு பட்டணத்தில் படித்திருந்தாலும் நல்லா பயிறு நடவு செய்யுறாங்க என கூலிக்கார பெண் கூறினாள்.
"அது மட்டுமா திவ்யா இந்த வரிசை முழுவதும் அவங்கதான் நடுவாங்க"என அவளை வசமாக மாட்டி விட்டான் கதிர்.
திவ்யா எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு வரிசையை நட்டு விட்டாள். போதுமா புதுசா சேத்துல நிறைய நேரம் நின்னு சளி பிடிச்சிட போகுது நீ வீட்டுக்குப் போ' என்றார் பெருமாள்.
மணி மதியம் மூன்றிற்கும் இருக்கும் பெருமாள் எவ்வளவு சொல்லியும் காட்டு பக்கம் இருக்க காளியம்மன் கோவிலுக்கு செல்வேன் என அடம் பிடித்தாள் திவ்யா.
சரி விடு அட நம்ப கதிர் வாரான் ... உங்களுக்கு துணையா கதிரை அனுப்புறேன் என பெருமாள் கூறினார்.
திவ்யாவை பார்த்ததும் கதிர் அப்படியே உறைந்து போய் விட்டான் கோவிலுக்கு செல்வதால் திவ்யா புடவை அணிந்திருந்தாள் சிவப்பு நிற புடவை ஜிமிக்கி தோடு அவளுக்கு எடுப்பாக இருந்தது பார்க்க தேவதை மாதிரி இருந்தாள்.
என்ன மாமா ஏதாவதுவிசேஷமா என கதிர் கேட்டான் .
"காட்டு பக்கம் இருக்கிற காளியம்மன் கோயிலுக்கு இன்னைக்கே போகணும்னு திவ்யா அடம்பிடிக்கிறாள் எனக்கு வேற வயல்ல வேலை செஞ்ச களைப்பு ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது இவர்கள் கூட துணைக்குபோய்ட்டு வரியாப்பா" என்றார்
"கரும்பு தின்ன கூலி வேண்டுமா"என முணுமுணுத்தான்
நல்லவேளை அந்தப் பட்டணத்து பூதம் வரல என கதிர் சந்தோசப்பட்டான்
"பட்டணத்து பூதமா... யாரு அண்ணா அது?" என யோசித்தாள் ராதா.
"அதான் நேத்து ஒருத்தன் வெள்ளையா கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டுட்டு கோமாளி மாதிரி வந்தானே கவின் அவன் தான்"கடுப்பானான் கதிர்.
உனக்கு நூறு ஆயுசு கவின்...வா...என வரவேற்றாள் திவ்யா.
.
திவ்யா,ராதா,கவின்,கதிர் நாலுபேரும் கோவிலுக்கு கிளம்பினர் ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக இருந்தது; மரங்கள் அடர்ந்து இருந்தது; காளியம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு முடித்தனர்.தாகமா இருக்கு ஒரு அடி கூட எடுத்து வைக்கமுடியலனு திவ்யா அமர்ந்துவிட்டாள். சரி இங்கேயே இருங்க பக்கத்துல ஒரு நீரோடை இருக்கு நான் போய் தண்ணி கொண்டு வாரேன் என்றான் கதிர்.
நான் திவ்யாவிற்கு துணையாய் இங்கேயே இருக்கேன் என நழுவினான் கவின். நான் துணைக்கு வரேன் என ராதா கதிருடன் தண்ணி எடுக்க சென்று விட்டாள்.
காட்டிற்குள் தனியாக இருப்பது திவ்யாவுக்கு பயமாக இருந்தது திடீரென்று ஒரு பைத்தியம் திவ்யாவின் முன் குதித்து 'என்ன வேலாயி ... இத்தனை நாளா எங்க போன நல்லா இருக்கியா..?' என சிரித்தான். பற்கள் எல்லாம் கருப்பா கரையா இருந்தது;அவன் ஆடைகள் கிழிந்து இருந்தது; தலைமுடி சடை பிடித்து இருந்தது.
என்னை ஒன்றும் செய்யாதே என அலறினாள் திவ்யா. கொஞ்சம் எட்டி நின்று பயந்தபடியே கவின் போடா.. போடா... என அந்த பைத்தியக்காரனை விரட்ட முயற்சி செய்தான்.
"என் பொண்டாட்டிய விட்டுட்டு தள்ளிப்போடா... என்ன வேலாயி என்ன
மறந்துட்டியா" என திவ்யா அருகில் வந்தான் பைத்தியக்காரன்; என்ன செய்வது என்று
தெரியாமல் பதறிய திவ்யா என்னை ஏதும்செஞ்சிடாதே என கண்ணீருடன் கதறினாள்.
வருவாள் வேலாயி ....
 
Top