Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்) - 15

Advertisement

praveenraj

Well-known member
Member

வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்)

இரவெல்லாம் அவளைப் பற்றிய சிந்தனையிலே உறங்கியவனுக்கு காலை விடிந்தது கூடத் தெரியவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அகல்யா அவனைத் தேடி அவன் அறைக்கே வந்துவிட்டாள். நன்றாக உறங்கியவனின் முகத்தில் சில தண்ணீர்த் துளிகளை அவள் சிந்த விட அதில் பதறி விழித்தவனுக்கு 'மைக்ரைன்' தான் யாரென்று புரியவைத்தது. அப்போது அவன் வீட்டிலிருந்து அவனுக்கு அழைப்பு வர அவர்கள் பத்திரமாக தரையிறங்கிவிட்டார்கள் என்று அறிந்துகொண்டவன் தன்னுடைய வலியை மறைத்தான். ஒருவேளை அவனது தற்போதைய இரிடேஷனை சொல்லியிருந்தால் அடுத்த பிளைட் பிடித்து மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கே பவித்ரா வந்துவிடுவார் என்று அவன் மட்டும் அறியமாட்டானா என்ன?

"அடப்பாவி உன்னை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து உபசரிக்கும் என்னைப் பத்தி ஒரு வார்த்தை கூடச் சொல்லல. அட்லீஸ்ட் அவங்களையாவது எனக்கு இன்றோ கொடுத்திருக்கலாமே?" என்று அகல்யா அவனை பேசியே டார்ச்சர் செய்தாள்.

"அகல், என்னால சத்தியமா முடியல அகல். எனக்கு அப்படியே என் தலையைக் கழட்டி வெச்சிடலாம்னு போல இருக்கு. பேச கூட முடியலடி..." என்றவனின் வலியே அப்போது தான் அகல்யாவுக்குப் புரிய ஆரமித்தது. உடனே மருத்துவரை அழைத்து அவன் நிலை பற்றிச் சொல்ல அவனுக்கான முதலுதவி செய்யப்பட்டது. ஸ்லீப்பிங் பில்ஸ் கொடுத்து உறங்க வைக்கப்பட்டவன் தான் அடுத்த பதினான்கு மணிநேரத்திற்கு அவனொரு கும்பகர்ணனாகவே மாறியிருந்தான்.

யாரோ இருவரின் பேச்சுக் குரலில் கண்விழித்தவன் அதில் ஒரு குரலுக்குச் சொந்தக்காரியான அகல்யாவைக் கண்டுகொண்டான். இன்னொரு குரலோ இன்பத் தேனாக அவன் காதில் பாய்ந்தது.

"இரு ஐவி அவன் எழுந்தானான்னு பார்த்துட்டு வரேன்" என்று அகல்யா அவனை நோக்கி வர பதின் பருவத்தில் நம் மனத்திற்குப் பிடித்த பெண்ணை(ஆணை) தனியே சந்திக்கும் போது ஏற்படும் அந்த ஊக்கிகள்(இயக்குநீர்- hormones) அவன் மேனியெங்கும் சுரந்து படர்ந்துக் கொண்டிருந்தது. அவனுடைய ஒற்றைத் தலைவலி எல்லாம் ஒன்றுமில்லாமல் பறந்து விட அவன் முன் வந்த அகல்யாவைக் கண்டும் காணாதவன் அவளுக்குப் பின்னாலே தன் பார்வை செலுத்த துளியும் தாமதிக்காமல் ஒரு ஃபுல் ஸ்லீவ் டீ ஷர்ட் ட்ராக்கில் பெரிய ஃபிரேம் கண்ணாடியுடன் தன் சுருட்டை முடிகளை தோள்பட்டையில் படரவிட்டு அவன் முன்னே ஒரு வசியக்காரியாகவே காட்சியளித்தாள் ஐவி உத்ரா சுதர்சன். அவன் முகத்தை வைத்தே அவன் எண்ணத்தைக் கண்டுகொண்ட அகல்யா,

"ஐவி வெளியேயிருந்து ஒரு கப் எடுத்துட்டு வா" என்றதும் அவள் வெளியேற அவன் தலையில் நங்கென்று ஒரு கொட்டு வைத்தாள்.

"ஹஸ்ஸ் ஆஹ்ஹ்..." என்று நிமிர்ந்தவன் அருகிலிருந்த அகல்யாவை முறைத்து,

"இப்படித்தான் வீட்டுக்கு வந்த கெஸ்ட ட்ரீட் பண்ணுவியா அகல்?"

"ஓ சாருக்கு அந்த நெனப்பெல்லாம் இருக்கா? முதல இன்னைக்கு என்ன நாளுன்னு தெரியுதா?"

"நேத்து சிக்ஸ்ட்ரீன் மன்டே. இன்னைக்கு செவென்டீன் டியூஸ் டே" என்று தன் தோளைக் குலுக்கினான்.

"உன் மூஞ்சி! இன்னைக்கு வெட்னெஸ்ட்டே. அண்ட் ஃபார் யுவர் கைன்ட் அட்டேன்ஷன், இன்னைக்கு நமக்கு காலேஜ் ஃபர்ஸ்ட் டே" என்று அகல்யா சொன்னதும் பதறியடித்து அவன் அலைபேசியை எடுத்துப் பார்த்தவன் அது உண்மை என்று அறிந்துகொண்டு,

"ஒரு நாள் முழுக்க தூங்கிட்டா இருந்திருக்கேன்? என் வீட்ல இருந்து கால்" என்று அவன் அலைபேசியை எடுத்துப் பார்க்க ஒருமணிநேரத்திற்கு முன்பு பவித்ராவின் எண்ணில் இருந்து கால் வந்திருந்தது.

"உன்னால என் அப்பா அம்மாவில் இருந்து உன் ஃபேமிலி வரை எல்லோரும் பயந்து போயிட்டோம். உன்னைத் தேடி உன் அப்பாவோட ஃப்ரண்ட் வந்திருக்கார்..." என்னும் வேளையில் பார்த்திபனும் விக்டரும் உள்ளே வர அவர்களுக்குப் பின்னால் ஐவியும் வந்தாள்.

"என்ன நவிரன் விட்டா கும்பகர்ணனுக்கே டப் ஃபைட் கொடுப்பிங்க போல?" என்று கேட்ட பார்த்திபனிடம் அசடு வழிந்தாற்போல் திருதிருவென்று விழித்தான்.

"ஊர்ல இருந்து வந்த ஜெட்லாக், வீட்டைப் பிரிஞ்சோங்கற ஃபீலிங், அன்னைக்கு நைட் சாவி தொலைச்சிட்டோம்னு பதற்றம் கூடவே ஐவியை மீட் பண்ணனும்னு உனக்கிருந்த கியூரியாசிட்டி எல்லாம் ஒன்னு சேர்ந்து உனக்கு தலைவலி கொடுத்து அதுக்கு நாங்க மாத்திரை கொடுத்து நீ நல்லாத் தூங்கி எழுந்து எங்களை கேள்வி கேக்குற நவி. கதை சுருக்கம் போதுமா இல்ல இன்னும் வேணுமா?" என்னும் நேரத்தில் பவித்ரா லைனில் வந்துவிட அவரிடம் நீண்டதொரு பாசப் போராட்டம் நடத்தி அனைத்தையும் சமாளிப்பதற்குள் அவனுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது.

"ஒழுங்கா குளிச்சிட்டு வா. நேரா போய் நீ டிரஸ் மாத்தி ரெடி ஆனதும் காலேஜுக்கு கிளம்புறோம். ஆனாலும் நீ இவ்வளவு சைல்டிஸா இருப்பனு நான் எதிர்பார்க்கல நவி" என்று அகல்யா அவனை வாரினாள்.

"புது நாடு. புது இடம். என்னையெல்லாம் எங்க வீட்ல ரொம்ப பேம்பர் பண்ணி வளர்த்திட்டாங்க. அதான்..." என்று பாவம் போல் அவன் உரைக்க அதில் சுபாஷினியும் அகல்யாவும் சிரிக்க அவர்களுடன் இருந்த ஐவியின் உதட்டிலும் ஒரு சிரிப்புக் கோடு விழுந்தது. அதைக் கண்ட நவிரன் வேகமாக அவனைத் தயார் செய்துகொள்ள கிளம்பிவிட்டான். நமக்குப் பிடித்தவர்களுக்கு முன்பு பல்ப் வாங்குவதைப்போல் ஒரு உச்சகட்ட தர்மசங்கடமான சூழல் வேறு உண்டோ?

கையில் கப் உடன் வந்த ஐவி,"இதை எதுக்குடி எடுத்துட்டு வரச் சொன்ன?"

"ரொம்ப நேரமா இங்க ஒருத்தன் உன்னையே சைட் அடிச்சிட்டு இருந்தானில்ல? அதான் அந்த ஜொள்ள பிடிச்சு வெக்க கப் கேட்டேன்" என்று அகல்யா சொன்னதும் அவள் முழங்கையை நறுக்கென்று கிள்ளி வைத்தாள் ஐவி.

"ஆனா ஐவி நிஜமாலுமே உங்களுக்குள்ள ஒரு வேவ் லென்த் இருக்குடி. இல்லைனா அன்னைக்கு அவன் தன்னோட ஃபேமிலி கூட டின்னர் சாப்பிடும் போதே உனக்கெப்படி அந்தக் குடும்பத்து மேல் ஒரு விருப்பம் வந்தது? நீ ஏன் அவனோட அம்மா பவித்ராவோட தீவிர ஃபேனா இருக்க? அதே மாதிரி உன்னைப் பத்தி நான் சொன்னதும் அவனுக்கும் ஏன் உன்னைப் பார்க்கணுங்கற ஆவல் ஏற்படனும்? ஊருக்குள்ள ஆயிரம் பசங்க இருந்தும் உன் மனசு ஏன் நவி நவினு சொல்லணும்?" என்று ஒரே அடியாக அவளை வம்பிழுத்தாள் அகல்யா.

"ஏய் கத்தாதே! நீ ரொம்ப எக்ஸாகெரேட் பண்ணுற. என் அப்பா ஒரு இந்தியன். அதும் தமிழ் பேசும் இந்தியன். என் அம்மா ஒரு ஆஸ்திரேலியன். நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே ஆஸ்திரேலியாவா இருந்தாலும் எனக்கு தமிழ் மேல ஒரு கிரேஸ். அன்னைக்குக் கூட ஆஸ்திரேலியன் ரெஸ்டாரெண்ட்ல ஒரு தமிழ் குடும்பத்தைப் பார்த்ததும் எனக்குள்ள ஒரு எக்ஸ்டஸி(பரவசம்) அதும் அது நான் விரும்பிப் படிக்கும் ரைட்டரோட ஃபேமிலினு தெரிஞ்சதும் இன்னும் ஹேப்பி ஆகிட்டேன்..."

"சரி, இதெல்லாம் ஓகே. அப்பறோம் ஏன் அன்னைக்கு நவியை அப்படிப் பார்த்த?" என்று புருவம் உயர்த்தினாள் அகல்யா.

"ஏன் சைட் அடிக்குறத என்ன பசங்களுக்கு மட்டுமே இருக்குற உரிமையா என்ன?"

"பார்த்தியா நீயே ஒத்துக்கிட்ட... நீ டீசெண்டா சைட்னு சொன்ன நான் நம்ம விடிவி கணேஷ் ஸ்டைல்ல இங்க என்ன சொல்லுது சும்மா நவி நவினு சொல்லுதான்னு சொல்றேன். பூவை பூவுனும் சொல்லலாம் புஸ்பம்னும் சொல்லலாம். இல்ல புய்ப்பம்னும் சொல்லலாம். எல்லாம் ஒன்னு தானே?"

"போடி ஏதாவது உளறிட்டு..." என்று சென்ற ஐவியைத் தடுத்தவள்,

"சரி எல்லாம் போகட்டும். காலையில எட்டு மணி ஆனா கூட உருண்டு உருண்டு தூங்கும் நீ ஏன் இன்னைக்கு காலையிலே ரெடி ஆகி வந்திருக்க? நேத்து நான் நவியைப் பத்திச் சொன்னதும் உனக்கேன் முகம் அப்படிச் சுருங்குச்சு? என்ன காதல் கோட்டை சூர்யா கமலி மாதிரி நீங்க என்ன காதல் அரண்மனை நவிரன் ஐவியா?" என்று அவள் பேசும் போது ஐவியையும் அறியாமல் அவள் முகம் நாணத்தில் சிவந்தது.

"ஆமா அதென்ன காதல் அரண்மனை?"

"இந்தியாவுக்குள்ள நடந்தாலே அது வெறும் காதல் கோட்டை. ஆனா இது கண்டம் விட்டு கண்டம் மாறி நடக்குறதால காதல் அரண்மனை காதல் மாளிகை அப்படினு எப்படி வேணுனாலும் சொல்லிக்கலாம்"

"ஸீ இன்னும் நானும் அவரும் ஃபார்மலா இண்ட்ரடியூஸ் கூட ஆகுல. இன்னைக்கு உன் டைம் பாஸுக்கு நாங்க தான் கிடைச்சோமா?"

"ஐவி, என்னைப் பாரு. ஜோக்ஸ் அபார்ட். நவிரனைப் பத்தி என்ன நெனைக்குற?"

"ஹே அகல், சும்மா ஒருத்தரை சைட் அடிச்சது தப்பா டி? இன்னும் அவர் என் க்ரஷா கூட ஆகல டி. முதல நாங்க ரெண்டுப் பேரும் பரஸ்பரம் அறிமுகம் ஆகணும். எங்களுக்குள்ள ஒரு பாண்டிங் வரணும். ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கணும். எங்களோட டிஃப்ரென்ஸ நாங்க ரெஸ்பெக்ட் பண்ணனும். அப்பறோம் அது மியூச்வல் அண்டர் ஸ்டேண்டிங்குக்கு வந்து லவ்வா மாறி கடைசியா மேரேஜ்ல நிக்கணும். அண்ட் அந்த மேரேஜ் கடைசி வரை எந்தச் சிக்கலும் இல்லாம கரை சேரனும். அண்ட் இப்போ நான் என் காலேஜுக்கு போய் ஒழுங்கா டிக்ரீ முடிக்கணும். சோ நான் கீழ வெய்ட் பண்ணுறேன் பை..." என்று விளையாட்டாக அவள் மனதில் இருப்பதை எல்லாம் கொட்டிவிட்டுச் சென்றாள் ஐவி. இது அவள் நெருங்கிய தோழியான அகல்யாவுக்கு மட்டும் புரியாமல் போகுமா?

அப்போது குளித்து முடித்து வெளியே வந்த நவிரன் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்த அகல்யாவைக் கண்டு அவன் கையிலிருந்த நீர்துளிகளை அவள் முகத்தில் சிதறவிட்டான். அதன் சுயம் பெற்றவள்,

"என்ன சாரே, தலைவலி எல்லாம் எப்படி இருக்கு?"

"நவ் ஐ ஃபீல் பெட்டர் அகல். ஆமா அந்தப் பொண்ணு யாருனு நீ சொல்லவே இல்லையே?" என்று நவரச நாயகன் கார்த்திக் போல் இடைவெளி விட்டு இழுத்து இழுத்துப் பேசினான் நவிரன்.

"எந்தப் பொண்ணைக் கேக்குறீங்க?"

"பாரு இப்போ தான் ஒரு தலைவலி வந்து ஓஞ்சிருக்கு. ஐவி சுதர்சன் பத்திச் சொல்லு?"

"நீ ஏன் ஐவியைப் பத்தி தெரிஞ்சிக்க அவ்வளவு ஆவல் காட்டுற நவி? டூ யூ லவ் ஹெர்?"

"லவ்வா? பார்த்ததுமே எப்படி டி லவ் வரும்? அண்ட் அது எப்படி நிலைக்கும்?"

"ஓ சாரே, நீங்க ராமாயணம் சீரியல் பார்த்ததில்லையா? கொறஞ்சது அந்தக் கதையைக் கேட்டது கூடவா இல்ல? சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது கோதையின் காதல் இன்று செவி வழி புகுந்தது...'

"எனக்கு ஐவியைப் பத்தி தெரிஞ்சிக்கணும்னு ஒரு கியூரியாசிட்டி இருந்தது உண்மை. அண்ட் அவளும் பார்க்க உன்னை மாதிரி இல்லாம கொஞ்சம் அழகா இருந்தா..." என்று நவி சொன்னதும் அவன் முதுகில் ஒன்று வைத்தவள்,

"உன்னைலாம் அன்னைக்கு மெல்போர்ன் நகரை நாய் மாதிரி சுத்த விட்டிருக்கனும்..." என்று பொய்யாகச் சலித்துக் கொண்டாள் அகல்யா.

"அகல் நீ என் ஃப்ரண்ட் டி. ஃப்ரண்ட்ஷிப் அழகு நிறம் இதெல்லாம் பார்க்காது. அநேகமா நமக்குள்ள முன் ஜென்மத்துல ஏதோ ஒரு தொடர்பு இருந்திருக்கும்னு நினைக்குறேன். உன் கிட்டப் பேசும் போது என்னமோ வருஷ கணக்கா பழகிய ஒருத்தி கிட்டப் பேசுறது போல தான் நான் உணருறேன். இட் ஆல் ஹேப்பண்ஸ். எங்கெங்கே கட்டுப்பாடுகள் அதிகமா இருக்கோ அங்கங்க தான் அத்து மீறல்களும் அதிகமா இருக்கும். நீ அந்தப் பொண்ண பத்தி எதையுமே சொல்லாம போயிட்ட. நான் அதைத் தெரிஞ்சிக்க நெனச்சு நெனச்சு நெனச்சு தலைவலி வாங்கிக்கிட்டேன். ஈவினிங் என் வீட்டை உனக்கு அறிமுகப்படுத்தி வெக்குறேன். என் அப்பா அண்ணா அண்ணி நத்து எல்லோரும் செம ஜாலி கேரெக்டர்ஸ். அம்மா மட்டும் கொஞ்சம் கண்டிப்பு. ஆனா அது கூட என் விஷயத்துல கிடையாது. பசிக்குது. பயங்கரமா பசிக்குது. போலாமா?" என்று நவிரனும் அகல்யாவும் கீழே சென்றனர்.

பொல்லாத என் இதயம்
ஏதோ சொல்லுதே நில்லாத என்
உயிரோ எங்கோ சொல்லுதே
நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கைதீண்டி கரைகிறேன்
நினைவுகளை மறக்கிறேன்
நிகழ்கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனது மறக்கிறேன்...
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே
சின்னஞ்சிறு விரல் கொடு
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு இடம் கொடு
சின்னஞ்சிறு ஆசைக்குப் பொய் சொல்ல தெரியாதே...

இருவருக்குள்ளும் இருவரும் அறியாமலே காதல் சடுகுடு தொடங்கிவிட்டது. எதிரெதிரே அமர்ந்து உணவுண்ணும் வேளையில் ஐவியும் நவிரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க அவ்விருவரையும் அறிமுகப் படுத்தினாள் அகல்யா.

காதலால் நிறைப்பாள்...
 
நான் எதும் எப்பி மிஸ் பண்ணிட்டேனா இல்ல இந்தக் கதை இப்படித்தான் போகும்ன்றதால இப்படி இருக்குதா ???செக் பண்ணிட்டு வர்றேன் ??
 
நான் எதும் எப்பி மிஸ் பண்ணிட்டேனா இல்ல இந்தக் கதை இப்படித்தான் போகும்ன்றதால இப்படி இருக்குதா ???செக் பண்ணிட்டு வர்றேன் ??
எபிசோட் 7 படிங்க. அதுல நவி குடும்பம் ஒரு ரெஸ்டாரெண்ட்ல சாப்பிடுறதா சொல்லியிருப்பேன். இந்தக் கதையை நான் கோர்வையா கொடுத்தா அவ்வளவு சுவாரசியம் இருக்காதுன்னு தான் இப்படி non lineara கொடுக்குறேன். இந்தக் கதையோட timeline,

1- நவி இந்தியாவில் கல்லூரி முடித்து பி.ஜி பண்ண ஆஸ்திரேலியா போறான். நற்றிணை ஒரு வருட குழந்தை. நவி ஐவி லவ்.

2- அஞ்சு லண்டன்ல படிச்சிட்டு சென்னையில் பிஜியில் தங்கி வேலை செய்யுறா. கவியுடன் அவளுக்கு பிரேக் அப்.

3- நவி அஞ்சு ரெண்டு பேரும் ஒரு மேரேஜ்ல் மீட் பண்ணுறாங்க. நற்றிணைக்கு ஆறு வயது. நிலன் பிறக்கிறான்.

4- நவி அஞ்சு ரெண்டுப் பேருக்கும் கல்யாணம் ஆகியும் தனியா இருக்காங்க. ஷில்லாங் ட்ரிப் போகப்போறாங்க. பவி உடல்நிலை சரியில்லை.

இது போக சில பிளாஷ் பேக்கும் வரும். இப்போ ஓகேவா?? கதை இன்டெர்வல் தாண்டிடுச்சு. இன்னும் பதிமூணு - பதினஞ்சு எபிசோட்ல முடிஞ்சிடும்.
 
Top